பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, February 23, 2018

ஹரம்_பள்ளிவாசலில்_தூங்கலாமா

#ஹஜ்_உம்ரா

#ஹரம்_பள்ளிவாசலில்_தூங்கலாமா

#பதில் :

#தூங்கலாம்

கஅபாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பள்ளிவாசலாக இருந்தாலும், அதில் உறங்குவது தவறான காரியமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

440 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ أَعْزَبُ لَا أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.

புகாரி (440)

441 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ أَيْنَ ابْنُ عَمِّكِ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ قُمْ أَبَا تُرَابٍ قُمْ أَبَا تُرَابٍ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று (மகளிடம்) கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)” என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது தனது மேலங்கி முதுகிலிருந்து (தரையில்) விழுந்து மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அலி (ரலி) ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.

புகாரி (441)

(மேனியில் மண் படிந்திருந்ததால் மண்ணின் தந்தையே என்று செல்லமாக அழைத்தனர்)

571 حَدَّثَنَا مَحْمُودٌ يَعْنِي ابْنَ غَيْلَانَ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي نَافِعٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ رَقَدْنَا ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினர்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர்.

புகாரி (571)

ரமலான் மாதம் பத்து நாட்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருந்துள்ளனர். சில நபித்தோழர்களூம் இஃதிகாப் இருந்துள்ளனர். அவர்கள் தூங்குவது உள்ளிட்ட அனைத்துக் காரியங்களையும் பள்ளிவாசலில் தான் செய்துள்ளனர்.

பள்ளிவாசலில் படுத்து உறங்குவதற்கு இது போல் இன்னும் பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

Wednesday, February 21, 2018

ஹஜ்ஜில்_மார்க்கத்திற்கு_முரணான_விஷயங்களை_சுட்டிக்_காட்டக்கூடாதா

#ஹஜ்_உம்ரா

#ஹஜ்ஜில்_மார்க்கத்திற்கு_முரணான_விஷயங்களை_சுட்டிக்_காட்டக்கூடாதா?

இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா?

#பதில்

முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:197

எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.  எனினும், எதனையும் மிகவும் மென்மையான முறையில் புரியும் படி எடுத்துச் சொல்லித் தடுப்பதே சிறந்த முறையாகும். இல்லையெனில் நன்மைக்கு பதில், தீமையில் தான் முடியும்.

இஹ்ராமின்_போது_தலை_கால்களை_மூடி_போர்வை_போர்த்தலாமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராமின்_போது_தலை_கால்களை_மூடி_போர்வை_போர்த்தலாமா?

இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா?

#பதில்

ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது.

குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதும் ஆகும். எனவே உறங்கும் போது தலையை மறைத்து போர்வை போர்த்துவதில் தவறில்லை.

இஹ்ராமின்போது_மூட்டப்பட்ட_வேட்டி_அணிந்து_குளிக்கலாமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராமின்போது_மூட்டப்பட்ட_வேட்டி_அணிந்து_குளிக்கலாமா?

ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா?

#பதில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பெண்கள்_தலை_சீவும்போது_முடி_கழியும்_என்பதால்_தலைசீவுவது_கூடாதா

#ஹஜ்_உம்ரா

#பெண்கள்_தலை_சீவும்போது_முடி_கழியும்_என்பதால்_தலைசீவுவது_கூடாதா?

பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா?

#பதில்

இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்கüடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.

நூல்: புகாரி 317

இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும்.

பெண்கள்_கால்_பாதங்கள்_திறந்திருக்கலாமா

#ஹஜ்_உம்ரா

#பெண்கள்_கால்_பாதங்கள்_திறந்திருக்கலாமா?

பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா?

#பதில்

பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முகத்தை மூடுவதற்குத் தடை விதிக்கின்றார்கள்.

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838

ஃபேஸ் மாஸ்க் போன்ற முகத்தை மறைக்கும் சாதனங்களைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள் இந்தத் தடையை விதித்துள்ளார்கள் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹேர்ஆயில்_தைலம்_டைகர்_பாம்_போன்றவை_நறுமணம்_பூசுவதில்_அஅட்ங்குமா

#ஹஜ்_உம்லா

#ஹேர்ஆயில்_தைலம்_டைகர்_பாம்_போன்றவை_நறுமணம்_பூசுவதில்_அஅட்ங்குமா?

வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா?

#பதில்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1839

இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம்.

நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் “அல்மலல்’ எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் “அர்ரவ்ஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) “இஹ்ராம்’ கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2089

இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

இஹ்ராம்_ஆடை_அணியும்_முன்பாக_குளித்துவிட்டு_நறுமணம்_பூசுவதற்குப்_பெண்களுக்கும்_அனுமதி_உ

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_ஆடை_அணியும்_முன்பாக_குளித்துவிட்டு_நறுமணம்_பூசுவதற்குப்_பெண்களுக்கும்_அனுமதி_உண்டா?

#பதில்_ஆம்

பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.

பெண்கள் நறுமணம் பூசுவது சம்பந்தமான குறிப்பு

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நிபந்தனையிட்டு_ஹஜ்ஜுக்காக_இஹ்ராம்_கட்டுவது_என்றால்_என்ன

#ஹஜ்_உம்ரா

#நிபந்தனையிட்டு_ஹஜ்ஜுக்காக_இஹ்ராம்_கட்டுவது_என்றால்_என்ன?

ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா?

#பதில்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்” என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று சொல்லிவிடு!” எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5089

ஹாஜிகள்_பிறை_1_க்குப்_பிறகு_நகம்_முடி_களைய்க்_கூடதல்லவா

#ஹஜ்_உம்ரா

#ஹாஜிகள்_பிறை_1_க்குப்_பிறகு_நகம்_முடி_களைய்க்_கூடதல்லவா?

இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா?

#பதில்:

இஹ்ராமிற்கு பிறகிருந்தே முடி களையக் கூடாது.

இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு புறப்பட நேர்ந்தால் அப்போதும் முடி, நகம் களைந்து கொள்ளலாம்.

குர்பானிக்காக முடி, நகம் களையக்கூடாது என்பது ஹாஜி அல்லாதவர்களுக்குரிய சட்டமாகும். ஹாஜிகளுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு தான் இவை தடுக்கப்பட்டுள்ளது.

தல்பியா_சொன்ன_பிறகு_இரண்டு_ரக்அத்_தொழ_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#தல்பியா_சொன்ன_பிறகு_இரண்டு_ரக்அத்_தொழ_வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

#பதில்

துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.
யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ செல்பவருக்கு பொருந்தாது.

நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.

நூல்: புகாரி 1534

இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.

இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா?

#இல்லை

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா’வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, “பைதாஉ’ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 2184

இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின்_நிய்யத்_லப்பைக்க_உம்ரதன்_ஃபீ_ஹஜ்ஜதின்_என்று_சேர்த்து_சொல்லவேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராமின்_நிய்யத்_லப்பைக்க_உம்ரதன்_ஃபீ_ஹஜ்ஜதின்_என்று_சேர்த்து_சொல்லவேண்டுமா? #லப்பைக்க_உம்ரதன்_அல்லது_அல்லாஹும்ம_லப்பைக்க_உம்ரதன்_என்பது_மட்டும்_போதுமானதா?

#பதில்

கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள் “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை – (குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1568

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், “லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்’ என்றோ, “லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்’ என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும்.

தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.