பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Athan. Show all posts
Showing posts with label Athan. Show all posts

Thursday, March 26, 2020

வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால்

*

*தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா?*

பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபிமொழிகள் வலியுறுத்துகின்றன.
இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும்.

ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக வந்த நபித்தோழரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருடன் இன்னொருவரை சேர்ந்து தொழுமாறு கட்டளையிட்டார்கள். இன்னொரு பாங்கு சொல்லுமாறு கட்டளையிடவில்லை.

இதுபோல் ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் தாமதமாகத் தொழும் போது அல்லது வீட்டில் தொழும் போது மீண்டும் பாங்கு சொல்லும் அவசியம் இல்லை.

அப்பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும், தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

صحيح البخاري رقم فتح الباري (4/ 28)
2848 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٍ لِي: «أَذِّنَا، وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல் : புகாரி 2848

கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

1017حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் பாங்கு சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.  ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அபூதாவூத் 1017

3667حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ وَعَبْدُ الْوَهَّابِ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْفِطْرَةِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ النَّارِ قَالَ فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا رواه أحمد

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : அஹ்மது 3667

Thursday, October 10, 2019

முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும்

*பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா?*

பதில்:

இருபுறமும் பிலால் (ரலி) திரும்பியதாக ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸையும், அதன் விளக்கத்தையும் காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 777

பிலால் (ரலி) அவர்கள் வலப்புறமும், இடப்புறமும் திரும்பியதால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று புரிந்து கொள்வதா? அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்வதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினார்கள் என்று ஹதீஸ் இருந்தால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒருவர் வணக்கத்தை ஒரு முறையில் செய்யும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை மறுக்காமல் இருந்தால் அது அனுமதிக்கப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இரு புறமும் திரும்புமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதனடிப்படையில் பிலால் அவ்வாரூ செய்ததாக எநத அறிவிப்பிலும் நாம் காணவில்லை.

மேலும் பிலால் (ரலி) அவர்கள் எப்போது பாங்கு சொன்னாலும் இவ்வாறு திரும்புவார்கள் என்றும் ஹதீஸில் கூறப்படவில்லை. ஒரு திறந்த வெளியில் பிலால் பாங்கு சொல்லும் போது ஒரு தடவை அவர் இரு புறமும் திரும்பியதைப் பார்த்ததாக அபூஜுஹைஃபா என்ற நபித்தோழர் அறிவிப்பதை மட்டுமே இதற்கு அறிஞர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

எனவே ஒருவர் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினால் அது தவறல்ல என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவதால் மக்களுக்கு கேட்காது என்றால் திரும்பாமல் இருப்பது தான் மக்கள் தெளிவாகக் கேட்க உதவும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தூய இஸ்லாத்தை அறிந்திட..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Friday, July 30, 2010

பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் ??

? பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன்படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒருவர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கான அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 577

இந்த ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள கஅப் பின் அல்கமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று தக்க காரணங்களுடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும், இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று தஹபீ கூறியுள்ளதாலும், இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும், பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர்.

கஅப் பின் அல்கமா என்பவரது நம்பகத்தன்மை குறித்து இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்தால், வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

ஆனால் கஅப் பின் அல்கமா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. புகாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து, அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.

ஹதீஸ்களைப் பதிவு செய்வதில் ஒவ்வொரு இமாமும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுத்துள்ளனர். இதில் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும், ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று தங்கள் அளவில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே அவரது ஹதீஸைப் பதிவு செய்வது என்பதை விதிமுறையாகக் கொண்டுள்ளனர்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.

புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து, மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி, அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.

கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது

--> Q/A Ehathuvam Magazine Jun 2009

Wednesday, July 28, 2010

பாங்கு சொல்வதற்கு முன்னால் ஸலவாத் ??

? பாங்கு சொல்வதற்கு முன்னால் ஸலவாத் சொல்லலாம் என்று பி.ஜே. கேள்வி நேரத்தில் பதில் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு இந்த விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்படி இருந்தது? பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழியா?



பாங்குக்கு முன் ஸலாவத் சொல்வது பித்அத் என்று தான் அன்றும் இன்றும் கூறி வருகிறோம். பி.ஜே. கேள்வி நேரத்திலும் அப்படி எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை.

பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாங்கு முறைக்கு மாற்றமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்).

பின்னர் மீண்டும், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.

பின்னர் "ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("ஹய்ய அலல் ஃபலாஹ்' என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)
நூல்: முஸ்லிம் 623

பாங்கு சொல்வதை அல்லாஹு அக்பர் என்று தான் துவக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் சான்றுகள் உள்ளன. பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழி என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது "ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 628

பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் என்று பாங்கைத் துவக்க வேண்டும் என்று கூறியிருக்க, அதற்கு முன் ஸலவாத் சொல்லி விட்டு பாங்கைத் துவக்குவது பித்அத் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத செயலாக இருப்பதால் தான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பித்அத்தைச் செய்கின்றனர். சில இடங்களில், இன்னல்லாஹ மலாய்கத்தஹு... என்ற வசனத்தை ஓதி, ஸலவாத் சொல்லி விட்டு பாங்கு சொல்வதும், வெவ்வேறு திக்ருகளைக் கொண்டு பாங்கைத் துவக்குவதும் நடைமுறையில் உள்ளது.

மொழி, இன பேதமின்றி அனைவருக்கும், உலகம் முழுமைக்கும் பொதுவான தொழுகை அழைப்பாக உள்ள பாங்கிலும் இது போன்ற பித்அத்துக்களால் வேறுபடுத்தி வைத்துள்ளது வேதனைக்குரியது.

--> Q/A Ehathuvam Magazine July 2008

Tuesday, July 27, 2010

பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும் பெண்கள் தலையில் துணி??

? பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா? விளக்கவும்.




அந்நிய ஆண்களுக்கு முன்னால் முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குக்காகவோ அல்லது உளூ, குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களுக்காகவோ பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராத நடைமுறைகள், நிபந்தனைகள் நமது சமுதாயத்தில் குறிப்பாக தமிழக முஸ்லிம்களிடம் வேரூன்றிப் போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று!

எந்த அளவுக்கென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் சர்வ சாதாரணமாகக் காட்சி தரும் பெண்கள் கூட பாங்கு சொல்லும் போது தலையில் மட்டும் துணியைப் போட்டுக் கொள்கின்றனர்.

சில இடங்களில் பாங்கு சொல்லப்படும் போது பெண்கள் சிறிய துண்டுப் பேப்பர் அல்லது வேறு ஏதேனும் குச்சியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கின்றனர். மார்க்கத்தைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம்.

--> Q/A Ehathuvam July 2007

Saturday, July 24, 2010

? பாங்கில் 'ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்' என்று சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றோமே அது நபிவழியா?






நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்... அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், 'ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 777

பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்பியதாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றுள்ளதால் இது அனுமதிக்கப் பட்ட செயல் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

--> Q/A Ehathuvam Feb 07

Monday, July 19, 2010

குழந்தையின் காதில் பாங்கு ?

குழந்தையின் காதில் பாங்கு ?

பாங்கு என்பது தொழகைக்கான அழைப்பு என்பதால் பிறந்த குழந்தையின் காதில் பாங்கு கூறக் கூடாது என்று கூறி வருகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பஜ்ருக்கு ஒரு பாங்குஇ சஹருக்கு ஒரு பாங்கு கூறப்பட்டது என்றும் கூறுகிறீர்கள். அப்படி யானால் சஹருக்குச் சொல்லப்பட்ட பாங்குக்கு தொழுகை எங்கே?

! மார்க்கத்தில் எந்த ஒன்றையும் கூடும் என்றோ கூடாது என்றோ கூறுவதாக இருந்தால் தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றைச் செய்யுமாறு நமக்கு வழிகாட்டினால் அதைக் கூடும் என்று கூற வேண்டும். அவ்வாறு வழி காட்டாவிட்டால் அதைக் கூடாது என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சஹர் செய்வதற்காக மக்களை எழுப்புவதற்கு ஒரு பாங்கும், பஜ்ரு தொழுகைக்கு ஒரு பாங்கும் சொல்லப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. (பார்க்க : புகாரி 5299, 7247, 621)


சஹர் செய்வதற்காக மக்களை எழுப்பி விடுவதற்கு ஒரு பாங்கு சொல்ல வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஏற்பாடு செய்துள்ளதால் அதற்கான தொழுகை எங்கே என்று கேள்வி கேட்க முடியாது.

 பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. திர்மிதி உள்ளிட்ட நூல்களில் இது பற்றி இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை. எனவே இது கூடாது என்கிறோம்.

தொழுகைக்கான அழைப்புதான் பாங்கு எனும் போது பிறந்த குழந்தையின் காதில் அதைக் கூறுவதாக இருந்தால் சஹர் பாங்குக்கு இருப்பது போல் அதற்குத் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும்

Tuesday, July 13, 2010

ஹய்யாலஸ்ஸலாத் சரியா ஸலாஹ் சரியா


ஹய்ய அலஸ்ஸலாத் என்பது சரியா ஹய்ய அலஸ்ஸலாஹ் என்பது சரியா?



அரபு மொழியில் ة (குண்டு தா) என்ற எழுத்து ஒரு சொல்லின் இறுதியில் இருந்தால் அதற்கு இரண்டு விதமான உச்சரிப்பு உண்டு.

அதாவது அதைத் தொடர்ந்து வேறு சொல்லைச் சேர்க்காமல் அதுவே அந்த வாக்கியத்தின் கடைசியாக இருந்தால் அதை ஹ் என்று உச்சரிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து வேறு சொற்கள் சேர்க்கப்பட்டால் அப்போது த் என்ற சப்தம் வருமாரு உச்சரிக்க வேண்டும்.

உதாரணமாக الصلاة جامعة அஸ்ஸலாது ஜாமியா(ஹ்) என்பதைக் கவனியுங்கள். இதில் அஸ்ஸலாது என்பதிலும் ஜாமிஆ என்பதிலும் அரபு மூலத்தில் ة என்ற எழுத்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் சொல்லுடன் வாக்கியத்தை முடிக்காமல் அத்துடன் ஜாமிஆ என்ற சொல்லை இணைப்பதால் அதை தா உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். அஸ்ஸலாது என்று கூற வேண்டும்.

ஆனால் ஜாமிஆ என்பதற்குப் பின் வேறு சொல்லைச் சேர்க்காமல் அதுவே கடைசியாக இருப்பதால் ஜாமிஅது எனக் கூறாமல் ஜாமிஆ(ஹ்) என்று கூற வேண்டும்.


பெண்களின் பெயர்களின் கடைசியில் பெரும்பாலும் இந்த எழுத்து இருக்கும்.

عائشةஆயிஷது என்று கூறாமல் ஆயிஷா(ஹ்) என்று கூறுவது இதன் அடிப்படையில் தான்.

ஹய்ய அலஸ்ஸலா(ஹ்) என்று முடிப்பதால் அதன் பின் வேறு சொல்லைச் சேர்க்காததால் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறுவது தான் சரி.

இதே சொல்லை இன்னொரு சொல்லுடன் சேர்த்து الصلاة والسلام

அஸ்ஸலாது வஸ்ஸலாமு என்று கூறினால் அஸ்ஸலாது உச்சரிக்க வேண்டும்.

பாங்குக்கு உளு அவசியமா

பாங்குக்கு உளு அவசியமா


கேள்வி:-- ஆடு,மாடுகளை அறுப்பதற்கும் பாங்கு சொல்வதற்கும் உளு செய்வது அவசியமா?



பதில்:- ஆடு,மாடுகளை அறுப்பதற்கு உளு அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம்.

பாங்கு சொல்வதற்கு உளு அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.( பார்க்க திர்மிதி 201,202)

பாங்குக்கு உளு அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை.

பாங்கு சொல்வதைக் கேட்டால் நீங்களும் அவர் சொல்வதைப் போல் கூறுங்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் :அபூஸயீத் (ரலி)

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பாங்கு சொல்வதைக் கேட்பவர்கள் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கட்டளையிடுகின்றது. பாங்கைக் கேட்கக்கூடியவர்களில் சிலர் உளுவுடன் இருக்கக் கூடும் என்றாலும் அதிகமானவர்கள் உளூ இல்லாமல் தான் இருப்பார்கள். பாங்குக்கு உளூ அவசியம் என்றால் உளூ இல்லாதவர்கள் திருப்பிச் சொல்ல வேண்டாம் என்று நபிகல் நாயகம் ஸல் அவர்கள் சொல்லி இருப்பார்கள். அப்படி சொல்லாததால் உளு உள்ளவர் மட்டுமின்றி உளு இல்லாதவரும் அதைத் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. இதிலிருந்து பாங்கு சொல்வதற்கு உளு அவசியமில்லை என்று கருதுலாம்

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?




நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொன்னால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது

இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

626-حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن للإقامة

626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

• ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(- தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

புஹாரி 626

இந்த ஹதீஸின் தமிழாக்கத்தில் தெளிவு இல்லாமல் உள்ளது. சரியாக மொழி பெயர்த்தால் தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.

• وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்பது தான் மேற்கணட் வாசகத்தின் சரியான பொருளாகும்.

பாங்கு சொல்லி முடியும் வரை படுத்துக் கிடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லி முடித்தவுடன் எழுந்துள்ளதால் படுத்துக் கிடப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அதே நேரம் பாங்கு சொல்லும் போது அதே போல் நாமும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற கட்டளை உள்ளது.

611 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 611

அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களை திக்ருகளை படுத்துக் கொண்டு எப்படி சொல்ல முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தக் கருத்து விதைக்கப்படுகின்றது.

ஆனால் இறைவனை படுத்துக் கொண்டும் திக்ர் செய்யலாம் என்று திருக்குர்ஆனும் நபிவழியும் கூறுகின்றன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும்,படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப் பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)

திருக்குர் ஆன் 3:191

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும்,படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்ச மற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலை நாட்டுங்கள்!127 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர் ஆன் 4:103

297 (நபி ஸல அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

புஹாரி 297

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?



கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.

ஆனால் பிலால் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின் இரு விரல்களயும் இரு காதுகளில் வைத்திருந்ததாக திர்மிதி, அஹ்மத், மற்றும் சில நூல்களில் ஹதீஸ் உள்ளது

مسند أحمد بن حنبل - (ج 4 / ص 308)

18781 - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق أنا سفيان عن عون بن أبي جحيفة عن أبيه قال : رأيت بلالا يؤذن ويدور وأتتبع فاه ههنا وههنا وإصبعاه في أذنيه قال ورسول الله صلى الله عليه و سلم في قبة له حمراء أراها من آدم قال فخرج بلال بين يديه بالعنزة فركزها فصلى رسول الله صلى الله عليه و سلم قال عبد الرزاق وسمعته بمكة قال بالبطحاء يمر بين يديه الكلب والمرأة والحمار وعليه حلة حمراء كأني انظر إلى بريق ساقيه قال سفيان نراها حبرة

تعليق شعيب الأرنؤوط : حديث صحيح رجاله ثقات رجال الشيخين

பிலால் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் போது சுற்றுவார். அவரது வாயை அங்கும் இங்குமாகத் திருப்பியதை நான் பார்த்தேன். அவரது இரு விரல்கள் அவரது காதுகளில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தோலால் ஆன சிவப்பு கூடாரத்தில் இருந்தனர் என்று அபூ ஜுஹைஃபா ரலி அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கட்டளைப்படி பிலால் ரலி அவர்கள் காதுகளில் விரலை வைத்தார்கள் என்று இதில் கூறப்படவில்லை. வேறு எந்த ஹதீஸிலும் அப்படி கூறப்படவில்லை.

கையை இப்படித்தான் வைக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததால் எது நமக்கு வசதியோ அப்படி நடந்து கொள்ளலாம். காதுகளை மூடிக் கொண்டால் தான் ஒருவருக்கு ஈடுபாடு வரும் என்றால் அப்படி செய்து கொள்ளலாம்.

பாங்கு சொல்லும் போது எது ஒருவருக்கு இயல்பானதோ அப்படி இருந்து கொள்ளலாம்.

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்புதல்

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்புதல்

பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்' என்று சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றோமே அது நபிவழியா?




حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَهُوَ بِالْأَبْطَحِ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ مِنْ أَدَمٍ قَالَ فَخَرَجَ بِلَالٌ بِوَضُوئِهِ فَمِنْ نَائِلٍ وَنَاضِحٍ قَالَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ قَالَ فَتَوَضَّأَ وَأَذَّنَ بِلَالٌ قَالَ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا يَقُولُ يَمِينًا وَشِمَالًا يَقُولُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ ثُمَّ رُكِزَتْ لَهُ عَنَزَةٌ فَتَقَدَّمَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لَا يُمْنَعُ ثُمَّ صَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ ثُمَّ لَمْ يَزَلْ يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ إِلَى الْمَدِينَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்.... பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்... அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் 777

பிலால் (ரலி) அவர்கள் வலப்புறமும் இடப்புறமும் திரும்பியதால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று புரிந்து கொள்வதா? அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்வதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது வலப்புறமும் இடப்புறமும் திரும்பினார்கள் என்று ஹதீஸ் இருந்தால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒருவர் வணக்கத்தை ஒரு முறையில் செய்யும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை மறுக்காமல் இருந்தால் அது அனுமதிக்கப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவ்வாறு இரு புறமும் திரும்புமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதனடிப்படையில் பிலால் அவ்வாறூ செய்ததாக எநத அறிவிப்பிலும் நாம் காணவில்லை.

மேலும் பிலால் (ரலி)அவர்கள் எப்போது பாங்கு சொன்னாலும் இவ்வாறு திரும்புவார்கள் என்றும் ஹதீஸில் கூறப்படவில்லை. ஒரு திறந்த வெளியில் பிலால் பாங்கு சொல்லும் போது ஒரு தடவை அவர் இரு புறமும் திரும்பியதைப் பார்த்ததாக அபூஜுஹைஃபா என்ற நபித் தோழர் அறிவிப்பதை மட்டுமே இதற்கு அறிஞர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். எனவே ஒருவர் பாங்கு சொல்லும் போது வலப்புறமும் இடப்புறமும் திரும்பினால் அது தவறல்ல என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவதால் மக்களுக்கு கேஎட்காது என்றால் திரும்பாமல் இருப்பது தான் மக்கள் தெளிவாகக் கேட்க உதவும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.