Monday, May 25, 2020
உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.?
Thursday, October 17, 2019
ஜும்மா முபாரக்
*🌹மறு பதிவு🌹*
*👉👉👉ஜும்மா நினைவுட்டள்👈👈👈*
📣📣📣📣📣📣📣📣📣📣
*ஏன் " ஜும்மா முபாரக் " எனக் கூறக்கூடாது?*
*வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.*
*பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.*
*உண்மையில்*
*வெள்ளிக்கிழமையில்* *‘ஜும்மா முபாரக்”*
*என்ற வாசகத்தை* *சொல்வதற்கு குர்ஆனிலோ,*
*ஆதாரப்பூர்வமான*
*ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும்*
*கிடையாது.*
*மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னா) இருக்க வேண்டும்.*
*அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.*
*இதோ :- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :*
😡😡😡😡😡😡😡😡😡😡
❌❌❌❌❌❌❌❌❌❌
*இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.(புகாரி # 2697)*
*என் கட்டளை இன்றி யார் செய்யும் எந்த செயலும் ( அமலும்) நிராகரிக்கப்படும்!( முஸ்லிம் # 3243 )*
*யார் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்ப நடக்கிறார்களோbஅவர்கள் அந்த மதத்தை சேர்ந்தவரே!( அஹ்மது # 4868)*
*A.செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!*
*B.நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!*
*C.காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!*
*D.புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!*
*E.ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*
*F.ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!*
*நஸயீ # 1560*
*ஜாபிர் ரலி.*
*ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!*
*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.*
*இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .*
*அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!*
*குர்ஆன் சொல்படி வாழ்வோம்!*
*கோமான்நபி வழி நடப்போம்!!*
*தொகுப்பு :*
*இஸ்லாமிய மகளிர் தாவா குழு*
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
📖📖📖📖📖📖📖📖📖📖
வெள்ளிக்கிழமை தொழுகையில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது
*🌙🌙🌙மீள் பதிவு🌙🌙🌙*
*📚📚📚வெள்ளிக்கிழமை தொழுகையில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது❓❓❓📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*
*📚📚📚ஸஹீஹ்யான ஹதீஸ் 📚📚📚 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇*
✍✍✍வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நபிமொழியில் *குறிப்பிடப்படும் நேரம் எது❓*
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.✍✍✍
*1409* و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم
✍✍✍அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் *அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி)* அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி கூறியதாக *உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா❓''* என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்* கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.✍✍✍
*👆👆👆பார்க்க 📚📚📚நூல்📚 முஸ்-லிம்📚 (1546)👈👈👈*
✍✍✍இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது. *இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா❓* அல்லது *இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா❓* அல்லது
*அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா❓* என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
*இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது;* பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது *உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது.* அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் *இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை* என்பது தெளிவாகிறது. எனவே *இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.*
இரண்டு குத்பாக்களுக்கு இடையே இமாம் அமர்வது சிறிதளவு நேரம் தான். அமர்ந்து உடனே எழுந்து விடுவதாலும் அதன் பின்னர் இரண்டாம் உரையும் அதைத் தொடர்ந்து தொழுகையும் ஆரம்பமாகி விடும். எனவே *இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்க முடியாது.* ஏனெனில் இமாம் இடையில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபடும் அவசியம் உள்ளது.
*இமாம் உரையாற்றும் போது அவருடைய உரையை கவனமாக கேட்பது மக்களின் பொறுப்பாகும்.* உரையில் கவனம் செலுத்தாமல் வேறு விசயத்தில் கவனம் செலுத்தினால் அந்த விசயம் நல்ல விசயமாக இருந்தால் கூட ஜ‚ம்ஆவின் நன்மையை இழக்க நேரிடும் என்று *நபி (ஸல்)* அவர்கள் கூறியுள்ளார்கள்.✍✍✍
*883* حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى رواه البخاري
*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* ஜுமுஆ நாளில் ஒருவர் *குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார்.* தம்மிடமுள்ள *எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார்.* அல்லது தம் *வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார்.* பிறகு புறப்பட்டு *(நெரிசலை உருவாக்கும் விதமாக)* இருவரை பிரித்துக் கொண்டு வராமல் *(பள்ளிக்கு)* வந்து *தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார்.* பிறகு இமாம் *உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார்* . எனில் அவருக்கு *அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.✍✍✍*
*👆👆👆அறிவிப்பவர் : சல்மான் அல்ஃபார்சீ (ர-லி),* *பார்க்க 📚📚📚நூல் : 📚புகாரி📚 (883)👈👈👈*
*934* حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري
*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்* : *ஜுமுஆ வில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகி-லிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.✍✍✍*
*👆👆👆அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி),* *பார்க்க 📚நூல் :📚📚📚 புகாரி📚 (934)👈👈👈*
*✍✍✍இமாம் உரையாற்றத் தொடங்கிவிட்டால் வானவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடாமல் அந்த உரையை கேட்பதில் கவனம் செலுத்துகிறார்கள்✍✍✍.*
*929* حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري
*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* *ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலி-ன் நுழைவாயி-ல் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும்* *அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கüன் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். நேரத்தோடு*
*(ஜு முஆவுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும்.* *அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர்* *ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள்.* *இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி* *(வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.✍✍✍*
*👆👆👆👆அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி),* *பார்க்க📚 நூல் :📚📚📚 புகாரி 📚(929)👈👈👈*
✍✍✍இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம்
இருக்க வேண்டும். *இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.*
*இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை உள்ள நேரமே அந்த நேரம் என்ற கருத்தே சரியாக உள்ளது.*
அத்தஹிய்யாத்து அமர்வில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதிய பிறகு நாம் விரும்பிய துஆக்களைச் செய்யலாம். *இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.*
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது *அத்தஹிய்யா(த்)து -லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்''* என்று *நபிகள் நாயகம் (ஸல்* ) அவர்கள் கூறினார்கள்.✍✍✍
*👆👆👆 அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) பார்க்க 📚நூல்: 📚நஸயீ📚 1151👈👈👈*
*1266* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود
✍✍✍ *ஃபளாலா பின் *உபைத் (ர-லி)* அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது *தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும்* பிரார்த்தனை செய்ததை *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்* செவியுற் றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி *அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.* அவரிடம் அல்லது மற்றவரிடம் *உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முத-லில் மாண்பும் வலி-மையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும்* . பிறகு (உங்கள்) *நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும்.* இதற்குப் பிறகு *அவர் விரும்பியதை வேண்டலாம்* என்று கூறினார்கள்.✍✍✍
*👆👆👆அறிவிப்பவர்:ஃபளாலா பின் உபைத் (ர-லி)*
*பார்க்க 📚நூல்📚📚📚 அபூதாவூத் 📚(1266)👈👈👈*
*👆👆👆இந்தக் கருத்து தான் சரியானது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது.👇👇👇*
و حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك ح و حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه زاد قتيبة في روايته وأشار بيده يقللها
*✍✍✍அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது* : *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில்* "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்-லிலிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
*இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.*
அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் *"அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்* '' என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.✍✍✍
*👆👆👆அறிவிப்பவர் அபூஹுரைரா (ர-லி)*
*பார்க்க📚 நூல் :📚📚 முஸ்லி-ம்📚 (1543)👈👈👈*
*✍✍✍துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.* *தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன.* *ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த* *ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது.* *இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே* *அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.*
அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்
*ஜஸாகல்லாஹ் ஹைரன்*
Tuesday, July 12, 2011
ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?
வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?
ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.
அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)
ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)
ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)
நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)
பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.
சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.
3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373
Thursday, October 21, 2010
வேலைப் பழுவினால் ஜும்மா தொழாதது
நாங்கள் பிரான்சில் வசித்து வருகிறோம் இங்கே பெரும்பாலான முஸ்லிம்கள் ஜும்மா தொலுகையை வேலையின் நிர்பந்தத்தின் காரணமாக தொழ முடியவில்லை .இது எங்கள் மீது குற்றம் ஆகுமா? குரான் சுன்னா அடிப்படையில் விளக்கம் தேவை
ஜும்ஆத் தொழுகை நம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
901حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوْ امْرَأَةٌ أَوْ صَبِيٌّ أَوْ مَرِيضٌ قَالَ أَبُو دَاوُد طَارِقُ بْنُ شِهَابٍ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَسْمَعْ مِنْهُ شَيْئًا رواه أبو داود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடிமை பெண் சிறுவன் அல்லது நோயாளி ஆகிய நான்கு பேரைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜமாஅத்துடன் ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும்.
இதை தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : அபூதாவுத் (901)
ஜும்ஆ நடைபெறும் நேரத்தில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நமது பணிகளை விட்டுவிட்டு ஜும்ஆவிற்கு விரைய வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)62
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
''(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' என கூறுவீராக!.
அல்குர்ஆன் (62 : 9)
ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக வியாபாரத்தை விட வேண்டும் என்றும் ஜும்ஆ முடிந்த பிறகு வியாபாரம் செய்யலாம் என்றும் இவ்வசனம் கூறுகிறது. எனவே நமது வேலையை காரணம் காட்டி ஜும்ஆத் தொழுகையை விட முடியாது.
ஜும்ஆவை விடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
1432و حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ عَنْ زَيْدٍ يَعْنِي أَخَاهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مِينَاءَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ رواه مسلم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி)ஆகியோர் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ''மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிரி¬ருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்'' என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
முஸ்லிம் (1570)
நாம் வேலை பார்க்கும் நிறுவனம் இக்கடைமையை நிறைவேற்ற நமக்கு தடைவிதித்தால் அந்த வேலையை விட்டுவிட்டு இக்கடமையை செயல்படுத்த வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் வேலை பெற முயற்சிக்க வேண்டும்.
பிரான்ஸை சொந்த ஊராக ஆக்கிக்கொண்டவர்களுக்கே இச்சட்டம் உரியது. அந்நாட்டில் பயணிகளாக இருப்பவர்கள் ஜும்ஆவை விட்டால் அது குற்றமாகாது. ஏனென்றால் கடமையானத் தொழுகைககளை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளூர்வாசிகளுக்கே இடப்பட்டுள்ளது. பயணித்தில் உள்ளவர்கள் லுஹ்ர் தொழுகையை அஸருடன் சேர்த்துத் தொழ அனுமதியுள்ளது.
எனவே பிரான்ஸில் இருப்பவர்கள் பயணிகளாக இருந்தால் அவர்கள் ஜும்ஆவை விடுவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அஸர் தொழுகையுடன் லுஹரையும் அவர்கள் சேர்த்துத் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் இருந்த போது ஜும்ஆவுடைய நாள் வந்தது. அப்போது அவர்கள் ஜும்ஆ நடத்தவில்லை. மாறாக அன்றைய தினம் லஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுதார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளது.
45 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ رواه البخاري
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி)அவர்களிடம் ''இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் மூமினீன்!) நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்'' என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ''அது எந்த வசனம்?'' எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், ''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்திவிட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்)கொண்டேன்'' (5:3) (என்பதே அந்த வசனமாகும்)'' என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ''இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகைநாள்தான்)'' என்றார்கள்.
புகாரி (45)
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காக புறப்பட்ட போது வெள்ளிக்கிழமையன்று அரஃபா நாள் வந்தது என இந்த செய்தி கூறுகின்றது.
1634 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَقَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ غَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِنًى حِينَ صَلَّى الصُّبْحَ صَبِيحَةَ يَوْمِ عَرَفَةَ حَتَّى أَتَى عَرَفَةَ فَنَزَلَ بِنَمِرَةَ وَهِيَ مَنْزِلُ الْإِمَامِ الَّذِي يَنْزِلُ بِهِ بِعَرَفَةَ حَتَّى إِذَا كَانَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ رَاحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَجِّرًا فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ ثُمَّ خَطَبَ النَّاسَ ثُمَّ رَاحَ فَوَقَفَ عَلَى الْمَوْقِفِ مِنْ عَرَفَةَ رواه أبو داود
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவி¬ருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும் இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர் அஸர் தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.
அபூதாவுத் (1634)
நபி (ஸல்) அவர்கள் அரஃபா நாளன்று லுஹ்ரையும் அஸரையும் சேர்த்துத் தொழுததாக இந்த செய்தி கூறுகின்றது.
எனவே ஹஜ் பயணத்தில் நபியவர்கள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழாமல் லுஹ்ரை தொழுதுள்ளார்கள். லுஹ்ரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். ஆகையால் பயணிகளுக்கு ஜும்ஆ கடமையில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது.
இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா
ஜும்மா உரை கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா?
பதில் :
883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாளில் ஒருவர் குளித்து, தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொண்டு. தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் : புகாரி (883)
934حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (934)
1419و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும் போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளையாடி)க் கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டு விட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (1557)
மேற்கண்ட செய்திகள் இமாம் உரையாற்றும் போது மௌனமாக இருப்பது அவசியம் என்ற கருத்தைக் கூறுகின்றன. இந்த ஹதீஸ்களைக் கவனித்தால் இமாம் உரையாற்றுகையில் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக் கூடாது என்றும் எதையும் பேசக் கூடாது என்றும் தெரிகின்றது.
எனவே சில அறிஞர்கள் இமாம் உரையாற்றும் போது ஒருவர் நமக்கு சலாம் கூறினால் அந்த சலாத்திற்கு பதிலுறைக்கக் கூடாது என்றும் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லக் கூடாது என்றும் அப்படி ஒருவர் சொன்னால் அவருக்கு யர்ஹமுகல்லாஹ் என சொல்லக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
இதற்கு மாற்றமாக இவற்றைக் கூறலாம் என்ற கருத்துடைய அறிஞர்களும் இருக்கின்றனர்.
1448و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّهُ قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَكَعْتَ رَكْعَتَيْنِ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْهُمَا رواه مسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டீரா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை' என்றார். "அவ்வாறாயின் தொழுவீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் (1586)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்'' என்றார்கள். பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுது கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1589)
இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நாம் வந்தால் முதலில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிடுகிறார்கள். இவ்வாறு நாம் தொழும் போது இமாம் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருப்பார். இமாமுடைய உரையை நாம் கேட்க முடியாத நிலையும் குர்ஆன் வசனங்களையும் தக்பீர்களையும் ஓதும் நிலையும் இப்போது ஏற்படும். இந்நிலையில் அமைதியை நாம் கடைப்பிடிக்க முடியாது.
ஆனால் நபியவர்கள் இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வாறு செய்வதை அனுமதிக்கின்றார்கள். அமைதியாக இருக்க வேண்டும் என்ற பொதுவான உத்தரவிலிருந்து இது விதிவிலக்கு என்று சிலர் கூறுகின்றனர்.
இது விதிவிலக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தால் அவர் இரண்டு ரக்அத் தொழாமல் இருந்தால் தொழுது விட்டு அமர வேண்டும். அப்போது இமாமின் உரையைக் கேடக முடியாத் நிலை ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இது போல் எல்லா வணக்கங்களையும் செய்யலாம். இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாம்; குர் ஆன் ஓதலாம் எம்றெல்லாம் கூற கூடாது. விதி விலக்கு என்பது குறிப்பாகச் சொல்லப்பட வேண்டும். ஒரு விதி விலக்கில் இருந்து இன்னொன்றுக்கு விதி விலக்கை விரிவு படுத்தக் கூடாது.
இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாம் எனக் கூறுவோர் மற்றொரு ஆதாரத்தையும் காட்டுகிறார்கள்.
3582حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَصَابَ أَهْلَ الْمَدِينَةِ قَحْطٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتْ الْكُرَاعُ هَلَكَتْ الشَّاءُ فَادْعُ اللَّهَ يَسْقِينَا فَمَدَّ يَدَيْهِ وَدَعَا قَالَ أَنَسٌ وَإِنَّ السَّمَاءَ لَمِثْلُ الزُّجَاجَةِ فَهَاجَتْ رِيحٌ أَنْشَأَتْ سَحَابًا ثُمَّ اجْتَمَعَ ثُمَّ أَرْسَلَتْ السَّمَاءُ عَزَالِيَهَا فَخَرَجْنَا نَخُوضُ الْمَاءَ حَتَّى أَتَيْنَا مَنَازِلَنَا فَلَمْ نَزَلْ نُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى فَقَامَ إِلَيْهِ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَتْ الْبُيُوتُ فَادْعُ اللَّهَ يَحْبِسْهُ فَتَبَسَّمَ ثُمَّ قَالَ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا فَنَظَرْتُ إِلَى السَّحَابِ تَصَدَّعَ حَوْلَ الْمَدِينَةِ كَأَنَّهُ إِكْلِيلٌ رواه البخاري
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் கால கட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு (நாட்டுப் புற) மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்து விட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழை பொழியச் செய்வான்'' என்று கேட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், தமது கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லாமல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்று திரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளி வாசலிலிருந்து) வெüயே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம். அடுத்த ஜும்ஆ (நாள்) வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. ஆகவே, (மழை பெய்விக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்.... அல்லது வேறொரு மனிதர்.... நபி (ஸல்) அவர்கள் முன் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்தி விடுவான்'' என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், புன்னகை புரிந்து, "(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழி! எங்கள் மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!'' என்று பிரார்த்தித்தார்கள். நான் மேகத்தை நோக்கினேன். அது பிளவு பட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலை போல் வளையமிட்டிருந்தது.
புகாரி (3582)
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் எழுந்து மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறும் மழை அதிகம் பொழிந்த போது அதை நிறுத்து பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டியுள்ளார். தான் உரையாற்றிக் கொண்டிருக்கையில் இடையில் எழுந்து இவ்வாறு பேசியதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. ஆமோதிக்கிரார்கள்.
எனவே ஸலாம் கூறுவது போன்ற காரியங்களை இது போல் செய்யலாம் என்பது இவர்களின் வாதம்.
இந்த செய்தி மக்கள் உரைநிகழ்த்திக்கொண்டிருக்கின்ற இமாமோடு பேசிக்கொண்டதற்குத் தான் ஆதாரமே தவிர மக்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டதற்கு இதை ஆதாரமாக கூற முடியாது.
நபிகள் நாயகம் ஸல் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அந்த நபித்தோழர் மழைக்காக துஆ செய்யச் சொன்னார். மற்ற இமாம்கள் நபிகள் நாயகத்தைப் போன்றவர்கள் அல்ல. மழை வேண்டும் மனிதர் அந்த இமாமை விடச் சிறந்தவராக இருக்கலாம். எனவே இது போன்ற கோரிக்கைகளுக்காகக் கூட இமாமிடம் நாம் பேச முடியாது.
எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸலாம் கூறுவதோ குர்ஆன் ஓதுவதோ கூடாது. இமாம் உரை நிகழ்த்தி முடிக்கும் வரை எந்தப் பேச்சும் பேசக் கூடாது என்பதே சரியானதாகும்.
ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் கேட்பதற்காகத் தான் இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். எனவே அவருடைய உரையை கேட்பதில் தான் நமது கவனம் செல்ல வேண்டும். இந்த இடத்தில் பிறரை சீர்திருத்தும் செயலில் நாம் ஈடுபடக்கூடாது. பிறர் பேசும் போது நாம் பேசாதே என்று கூறினால் நாமும் பேசி விடுகின்றோம். எனவே இதை நபியவர்கள் தடை செய்கிறார்கள்.
www.onlinepj.com

