பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 24, 2020

ஜஸாக்கல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்❓சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் *ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே❓* 

*அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா?*

*ஜஸாக்கல்லாஹு கைரா* என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் *உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக* என்பது பொருள்.

ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் *ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக)* எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : *திர்மிதீ 1958*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். 

நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்தக் கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது *ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக)* நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : *அஹ்மது 25108*

பேச்சை முடிக்கும் போதும், எழுத்தை முடிக்கும் போதும் இதைக் கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. மாறாக பிறருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறுவது நபிவழியாகும்.

*ஏகத்துவம்*

https://eagathuvam.com/ஜஸாகல்லாஹ்-என்று-எப்போது/

Sunday, August 23, 2020

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

ஒருவரின் குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அன்னியர்களாக இருந்தாலும் ஒரே சட்டம் தான். குழந்தை இல்லாதவர்கள் அன்பைப் பொழிவதற்கும், தள்ளாத வயதில் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் எந்தக் குழந்தையையும் எடுத்து வளர்க்கலாம்.

ஆனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், அன்னியரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும் அவர்கள் சொந்தப்பிள்ளைகளாக மாட்டார்கள். இது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். இது குறித்து நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விளக்கியதை தருகிறோம். அதுவே உங்கள் சந்தேகங்களைப் போக்கும்

317. தத்துப் பிள்ளைகள்

இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக முடியாது என்று கூறப்படுகிறது.

இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்துகொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இது மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி போலித்தனமான எல்லா உறவுகளையும் இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

அக்குழந்தை உருவாகுவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலிஉறவை ஏற்படுத்தும் செயலாகும்.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர்தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

நூல் ; புகாரி 4782

குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்துவிட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா இல்லாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா

*உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா❓*

*நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகிறோம்.*

*அங்கே எங்களுடன் வசிக்கும் இந்து நண்பர் ஒருவர் இந்து தெய்வங்களின் உருவப் படங்களை மாட்டிவைத்து உள்ளார்.*

*இந்நிலையில் அவ்விடத்தில் தொழுதால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா*❓ 

அல்லது அப்படங்களை நம் கண்ணில் படாதவாறு துணியினால் மறைத்து வைத்து தொழலாமா?*

சாமி சிலைகள் மட்டுமல்ல; பொதுவாக உருவப்படங்கள் முன்னாலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு ஒரு திரைச் சீலை இருந்தது. அதை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது திரைச்சீலையை அப்புறப்படுத்து, அது என் தொழுகையில் கவனத்தை திருப்பி விட்டது* என்று கூறினார்கள்.

நூல்: *புகாரி 374, 5959*

உயிருள்ளவற்றின் உருவப்படங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்து விட்டதால் இது உயிரற்றவைகளின் ஓவியமாகத் தான் இருக்க வேண்டும். 

*பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உருவங்களுக்கு இந்த நிலை என்றால் தடுக்கப்பட்ட உயிருள்ளவைகளின் உருவப்படங்கள் அதை  விட கடுமையானதாகும்*. 

*தெய்வங்களாக கருதப்படும் உருவங்கள் இன்னும் கடுமையானதாகும்.*

அதை அப்புறப்படுத்தி விட்டுத் தான் தொழ வேண்டும் என்றாலும் நமக்கு உரிமையான அல்லது நமது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் இது சாத்தியமாகும். 

மற்றவர்களுக்கு உரியது அல்லது மற்றவர்களுக்கும் உரிமை உள்ள இடங்களில் இது சாத்தியமாகாது.

நீங்கள் எடுத்திருக்கும் அறையில் முஸ்லிமல்லாதவருக்கும் உரிமை உள்ளதால் அதை அப்புறப்படுத்துவது சாத்தியமாகாது. 

*எனவே உருவம் கண்ணில் படாத இடங்களில் அல்லது நீங்கள் கூறியது போல் மறைத்துக் கொள்வதுதான் சாத்தியாமாகும்*. எனவே அவ்வாறு தான் தொழ வேண்டும்.

ஆனால் உங்கள் மீது இன்னொரு குற்றம் உள்ளது. *உருவப்படங்கள் உள்ள வீடுகளில் வானவர்கள் வரமாட்டார்கள்* எனும் போது சாமிபடங்கள் இருக்கும் இடங்களில் *நிச்சயம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வாரும் வானவர்கள் வர மாட்டார்கள்*.  

இது தொழும்போது மட்டும் உள்ள சட்டம் அல்ல. பொதுவாக எந்த நேரத்திலும் இதுபோல் உருவப்படம் இருக்கலாகாது.

முஸ்லிமல்லாதவர்களுடன் கூட்டாக வாடாகைக்கு இடம் பிடிக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள் அறைகள் இருந்தால் நம்முடைய அறையில் இது போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 

ஒற்றை அறையாக இருக்கும் கூட்டாகா வடாகைக்குப் பிடித்தால் முஸ்லிமல்லாதாவர்கள் இது போல் படங்களை மாற்றுவார்கள் என்பதால் அவர்களுடன் கூட்டாக அறை பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்பி கூட்டாக இடம் பிடித்தபின் இது தெரிய வந்தால் நீங்கள் வேறு அறையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 

*அல்லாஹ்வின் அருள் இருக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அங்கே இருப்பது கூடாது*.

இது முஸ்லிம்களில் தர்கா படங்களை மாட்டிவைப்பவருக்கும் பொருந்தும். *அத்தகையவர்களுடன் ஒற்றை அறைகளைக் கூட்டாக பாகிர்ந்து கொள்வது உங்களை அல்லாஹ்வின் அருளில் இருந்து அப்புறப்படுத்தி விடும்*

Thursday, August 20, 2020

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா❓

*ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா❓*

அல்லது

*பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா❓*

ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை *9 & 10 அல்லது 10 & 11* வது நாளிலும் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்."*

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: *அஹ்மத் 2047, பைஹகீ* 

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் 
*இப்னு அபீ லைலா* என்பவர் இடம் பெறுகிறார். 

 இவர் *மனன சக்தியில் மிக மோசமானவர்* ஆவார். 

மேலும் இவரை *அறிஞர்கள் பலவீனமானவர்* என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

*முஹர்ரம் 9 & 10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும்* என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும்.

எனவே,

முஹர்ரம் 10 & 11வது நாள் *நோன்பு நோற்பது கூடாது, அது நபிவழிக்கு மாற்றமானதாகும்.*

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், *அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?''* என்று வினவினர். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *இன்ஷா அல்லாஹ்  (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்போம்''* என்று கூறினார்கள். 

ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

[நூல் : *முஸ்லிம் 2088*

*அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்பேன்* என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.

நூல் : *முஸ்லிம் 2089*

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காமல் இறந்து விட்டாலும் அவர்கள் நம்மை நோக்கி ஒன்பதாவது நாளும் சேர்த்து (9&10) நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால்,

நாம் முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்.
அது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையாகும்!

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

ஒருவரின் குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அன்னியர்களாக இருந்தாலும் ஒரே சட்டம் தான். குழந்தை இல்லாதவர்கள் அன்பைப் பொழிவதற்கும், தள்ளாத வயதில் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் எந்தக் குழந்தையையும் எடுத்து வளர்க்கலாம்.

ஆனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், அன்னியரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும் அவர்கள் சொந்தப்பிள்ளைகளாக மாட்டார்கள். இது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். இது குறித்து நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விளக்கியதை தருகிறோம். அதுவே உங்கள் சந்தேகங்களைப் போக்கும்

317. தத்துப் பிள்ளைகள்

இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக முடியாது என்று கூறப்படுகிறது.

இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்துகொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இது மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி போலித்தனமான எல்லா உறவுகளையும் இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

அக்குழந்தை உருவாகுவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலிஉறவை ஏற்படுத்தும் செயலாகும்.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர்தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

நூல் ; புகாரி 4782

குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்துவிட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா இல்லாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

Saturday, August 8, 2020

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா என்பது சரியா

*மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா என்பது சரியா❓*

*பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள்.*

*இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்குக் காரணம் கூறுகிறார்கள். இது சரியா❓*

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பனை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே வரதட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.

*உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை*. 

அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்குத் திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். 

*அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூப்பெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.*

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். கொடுத்த அன்பளிப்பைத் திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா?

பதில் :

திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும். திருமணம் நடந்த அன்றே கொடுக்கலாம். ஓரிரு நாட்கள் கழித்தும் கொடுக்கலாம். உடலுறவு நடப்பதற்கு முன்னரும் கொடுக்கலாம். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِلَالًا بِالْأَنْطَاعِ فَبُسِطَتْ فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ قَالُوا إِنْ حَجَبَهَا فَهِيَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ وَمَدَّ الْحِجَابَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வலீமா – மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (மக்களுக்கு விருந்தளித்தார்கள்.)

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4213

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறான புரிதலாகும்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي وَانْظُرْ أَيَّ زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا قَالَ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ لَا حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعٍ قَالَ فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ قَالَ ثُمَّ تَابَعَ الْغُدُوَّ فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ قَالَ نَعَمْ قَالَ وَمَنْ قَالَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீவு (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். என் மனைவியரில் ஒருத்தியை (விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன் என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள் என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்ன விசேஷம்? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்? என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்று பதில் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2048, 2049

ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன் என்று கூறிய நபித்தோழரிடம், நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா? என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மணவிருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

திருமணமான பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவதால் தாம்பத்தியத்தில் நிச்சயம் ஈடுபட்டிருப்பார். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாயா என்று கெட்கவில்லை என்று சிலர் கூறும் பதில் ஏற்கத்தக்கதல்ல.

மாதவிடாய் நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் அறிவோம். ஒருவர் திருமணம் செய்த நேரத்தில் அவரது மனைவிக்கு மாதவிடாயாக இருந்தால் அப்போது இல்லறத்தில் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். அல்லது இருவரிடமோ இருவரில் ஒருவரிடமோ இல்லறம் பற்றிய பய உணர்வு காரணமாகவும் சிலர் உடனடியாக இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை இருக்கும். இப்படி இருந்தும் திருமணம் முடித்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் தம்பத்தியம் நடந்ததா என விசாரிக்காமல் வலீமா விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடுகிறார்கள்.

எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.

ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து, மணவிருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15.08.2009. 10:12 AM