பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, January 12, 2020

பெண்களுக்கான - 2

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 2* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள்.*

 இந்த நான்கு காரியங்களை மாதவிடாயிலிருந்து தூய்மையானப் பிறகே அவர்கள் செய்ய வேண்டும். 

 *1. தொழுகையை விட்டுவிட வேண்டும்* 

மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (228)* 

மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று பெண்கள் கேட்டார்கள். "பெண்கüன் சாட்சியம் ஆண்கüன் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?'' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், "ஆம் (பாதியளவுதான்)'' என்று பதிலüத்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதுதான் அவளது அறிவின்ர் குறைபாடாகும்:'' என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?'' என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் "ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)'' என்று பதிலüத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்'' என்று கூறினார்கள்

 *அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)* 
 *_நூல் : புகாரி (304)_* 

 *மாதவிடாயின் போது விட்டத் தொழுகைகளை* 
*திரும்பத்தொழவேண்டியதில்லை* .

எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய் நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை. 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (508)* 


 *2. நோன்பு  கூடாது* 

மாதவிடாயின் போது நோன்பு நோற்பதை விட்டுவிட வேண்டும். கடமையான நோன்புகளை விட்டிருந்தால் மாதவிடாய் முடிந்த பிறகு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்  அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.

 *அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)* 
 *நூல் : புகாரி (1951)* 

எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய் நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை. 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (508)* 


 *3. தவாஃப் செய்வது கூடாது* 

நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண்மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவைத் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்துகொள் என்று சொல்லிவிட்டு தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள். 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (294)* 


 *4. உடலுறவு கொள்வது கூடாது* 

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! 

 *அல்குர்ஆன் (2 : 222)* 

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்துவிட்டவனாவான். 
 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : அஹ்மத் (9779)* 

மாதவிடாயின் போது அனுமதிக்கப்பட்டவை
    மாதவிடாயின் போது எவற்றை செய்யக்கூடாது என்பதை முன்பு தெரிந்துகொண்டோம்.

 இவற்றைத் தவிர சாதாரண நேரத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றக் காரியங்களை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. உடலுறவைத் தவிர தான் விரும்பும் எதை வேண்டுமானாலும் கணவன் மனைவி செய்துகொள்ளலாம். 
அறியாமைக் காலத்தில் தான் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை அசுத்தம் என்று கருதி அவர்களைர்க ஒதுக்கிவைத்திருந்தார்கள். 

பல மதங்களில் மாதவிடாய் ஏற்பட்டப் பெண்களை தொடக்கூடாது என்றும் அவர்களுக்கென்று தனி தட்டு பாய் தலையணை ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போன்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் இதையெல்லாம் தகர்த்து எரிகிறது. 

கணவனுக்குப் பணிவிடை செய்யலாம்
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ பள்üவாச-ல்) இஃதிகாஃப் இருந்துவிட்டு  கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகி-ருக்கும் அறையி-ருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள்.

 மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (301)* 

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும்  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (295)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, "(அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு'' என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றேன். அப்போது அவர்கள் "மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (502)* 

 *முத்தமிடலாம்* 

நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப்போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது .மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக போர்வைக்குüருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக்கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது *என்னை முத்தமிடுவார்கள்.* நானும் நபி (ஸல்) அவர்களும் (ஒருமித்து) தஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் மொண்டு) பெருந்துடக்கின் (கடமையான) குலியலை நிறைவேற்றுவோம். 

 *அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)* 
 *நூல் : புகாரி (322)* 

கட்டியணைக்கலாம்
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்துகொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக்கொள்வார்கள்.

 *_அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)_* 
 *நூல் : புகாரி (300)* 

 *மடியில் படுக்கலாம்* 

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும்போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

 *_அறிவிப்பர் : ஆயிஷா (ரலி)_* 
 *நூல் : புகாரி (297)* 

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பெருநாள் 
திடலுக்கு வர வேண்டும்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழ தடுக்கப்பட்டிருந்தாலும் பெருநாள் அன்று திடலுக்குச் சென்று தொழிகையைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களிலும் பங்கேற்பது கட்டாயமாகும். 

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கண்ணிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை கேட்டுக்கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் எவருக்கேனும் தலையில் அணியும் முக்காடு இல்லையானால் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) முக்காட்டை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும் என பதிலளித்தார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல் : புகாரி (351)*    

    பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தஆவுடன் அவர்களும் தஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல் : புகாரி (971)* 

 *மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடை* 

மாதவிடாய் இரத்தம் பட்டை இடத்தை நீரால் கழுவிவிட்டு அதையே அணிந்து கொள்ளலாம். அதிலே தொழுதும் கொள்ளலாம்.
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கüல் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெüத்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுதுகொள்ளலாம்'' என்று கூறினார்கள். 


 *அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)  நூல் : புகாரீ (307)* 

    எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக்கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்)ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக்கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யமாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக்கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுதுகொள்வார்கள்.
 
 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : தாரமீ (995)* 

 *தொடர் உதிரப்போக்கு* 

    சில பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் பல நாட்கள் தொடர்ந்து  இரத்தம் வந்துகொண்டிருக்கும். இது ஒரு நோய். ஆனால் இதை சிலர் மாதவிடாய் என கணித்து தொழமாமல் இருந்துவிடுகின்றனர்.

 இது தொடர்பாக இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் என்னவென்பதைக் காண்போம். 

    வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகை நோன்பு உடலுறவு போன்ற விஷயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகும் இரத்தம் தொடர்ந்து வருமானால் அப்போது குளித்துவிட்டு மாதாவிடாய் ஏற்படாத பெண் எவ்வாறு நடந்துகொள்வாளோ அதுபோன்று தொடர் உதிரப்போக்கு ஏற்படுபவர்கள் நடந்துகொள்ள வேண்டும். 

இவர்கள் தொழுகையையும் நோன்பையும் விடுவதற்கு அனுமதியில்லை. 
    நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்துகொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)* 
 *நூல் : நஸயீ (351)* 

பாத்திமா பின்த் அபீஹுபைஷ்  என்ற பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை! (தொழுகையைவிட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு ; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்!'' என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மனியிடம்) "பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கசுத்தி (உளூ) செய்துகொள்!'' என்றும் சொன்னார்கள்.

    *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (228)* 

     மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் மாதவிடாய் நாட்கள் முடிந்தவுடன் குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்துகொள்ள வேண்டும். அல்லது முடியுமானால் பின்வரும் முறையை கடைபிடிக்கலாம். 

    ஒரு பெண்ணிற்கு தொடர்உதிரப்போக்கு ஏற்படுகிறது. (அவள் என்ன செய்ய வேண்டும்?) என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் (தொழாமல் நோன்பு நோற்காமல்) இருப்பாள். (மாதவிடாய்க் காலம் முடிந்த உடன்) குளித்து விட்டு லுஹரை அதன் கடைசி நேரத்திலும் அஸரை அதன் ஆரம்ப நேரத்திலும் அவள் தொழ வேண்டும். பிறகு மீண்டும் குளித்துவிட்டு மஃரிபை அதன் கடைசி நேரத்திலும் இஷாவை அதன் ஆரம்ப நேரத்திலும் தொழுது கொள்ள வேண்டும்.  பின்ப ஃபஜர் தொழுகைக்காக (மீண்டும்) குளித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)* 
 *நூல் : நஸயீ (358)* 

தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படாத பெண்களைப் போன்று நடந்துகொள்வார்கள். எனவே இவர்கள் தொழுக வேண்டும். நோன்பு நோற்க வேண்டும். இவர்கள் கணவனுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு தடை ஏதுமில்லை. 
ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை
    கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் வெளிப்படுதல் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகிவிடும். 
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (521)* 

மாதவிடாய் ஏற்பட்டால் குளிக்க வேண்டும்
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குüத்துவிட்டு  தொழுதுகொள்!'' என்றார்கள்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (228)* 

 *பிரசவத்தீட்டு ஏற்பட்டால் குளிக்க வேண்டும்* 

பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் போது அசுத்தம் வெளிப்படும். இதற்கு பிரசவத் தீட்டு என்று தமிழில் சொல்வார்கள். அரபியில் நிஃபாஸ் என்று சொல்வார்கள். இது ஏற்பட்ட பெண்கள் குளித்து தூய்மையடைய வேண்டும். 
துல்கஃதா மாதத்தில் எஞ்சிய ஐந்து நாட்கள் இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் செய்வதற்காக) புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். துல்ஹ‚லைஃபா என்ற இடத்தை வந்தடைந்த போது உமைஸ‚டைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அபூபக்ரின் மகன் முஹம்மத் என்பாரை பெற்றெடுத்தார். நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுவருமாறு அஸ்மா (ரலி) தூது அனுப்பினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ குளித்துக்கொண்டு மறைவிடத்தில் துணியை கட்டிக்கொள் என்று கூறினார்கள். 

 *அறிவிப்பவர் ; ஜாபிர் (ரலி)* 
 *நூல் ; நஸயீ (289)* 

    குழந்தையை பெற்றெடுத்த உடனே குளித்துக்கொள்ள முடியாவிட்டால் தன்னால் எப்போது இயலுமோ அப்போது குளித்து தூய்மையாகிக்கொள்ள வேண்டும். அதுவரைக்கும் மாதவிடாய் ஏற்பட்டப் பெண்களைப் போன்றே தொழுகைûயும் நோன்பையும் விட்டுவிட வேண்டும். தூய்மையானப் பிறகு விடுபட்ட நோன்பை மாத்திரம் திரும்ப வைத்தால் போதும். 
உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்
உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகிவிடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும் பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குüயல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : புகாரி (291)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (291)* 

குளிப்புக்கடமையானவர்கள் தொழக்கூடாது
குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள்.

 *அல்குர்ஆன் (4 : 43)* 

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை
பெண்கள் மார்க்கத்தை பேணுகிறோம் என்ற எண்ணத்தில் மார்க்கம் கட்டளையிடாத பல காரியங்களை செய்கின்றன.

 கடமையான குளிப்பை நிறைவேற்ற நிய்யத் அவசியம் அதில் நவைத்து அனிஃதஸல குஸ்லன் மினல் ஹைலி வதஹாரத்தன் லில் பதனி வ இஸ்திஹ்பாபன் லிஸ்ஸலாத்தி என்று கூறி குளித்தால் தான் குளிப்பு நிறைவேறும் என்றும் எண்ணுகின்றனர். இது தவறாகும். 

 *நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை* . 
குளிக்கும் போது சில வாசகங்களை கூற வேண்டும் என்றும் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் என்றும் பலவிதமான நடைமுறைகள் சில ஊர்களில் உள்ளன. இதற்கும் நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை. 

    முதலில் இரு கைகளைக் கழுவிய பின்னர் மர்மஸ்தானத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்ய  உளு செய்ய வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். 

நான் நபி (ஸல்) அவர்கள் குலிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பüத்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.

 *அறிவிப்பவர் : மைமூனா (ரலி)* 
 *நூல் : புகாரி (259)* 

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குüயலைக்) குüக்கும்போது (முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குüத்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.

 *அறிவிப்பவர் : மைமூனா (ரலி)* 
 *நூல் : புகாரி (260)* 

    அஸ்மா பின்த் ஷகல் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். 

பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (552)* 

சடைபோட்டுள்ள பெண்கள் 
சடையை அவிழ்க்க வேண்டியதில்லை
    சடைபோட்டுள்ள பெண்மணிகள் அதை அவிழ்த்துத் தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

    அல்லாஹ்வின் தூதரே நான் அதிகம் சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு தேவையில்லை. உன் தலைக்கு இரு கையளவு தண்ணீரை எடுத்து மூன்று முறை உன் தலையில் ஊற்றிக் கொள். பின்னர் உன் (உடல்) மீது ஊற்றிக்கொள். நீ தூய்மையடைந்து விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
    
*அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (497)* 

 *நிர்வாணமாக குளிக்கக்கூடாது* 

    ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிக்கக்கூடாது.  அவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

    உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள். 

    *அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (3501)*  

 *குற்றாலத்தில் குளிக்கலாமா?*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 3*

இஸ்லாத்தை அறிந்து - 66

*🍓🍓🍓மீள் பதிவுக்ஷ🍓🍓🍓* 


 *🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 66 👈👈👈* 


     *👉தலைப்பு👇*


 *🌹🕋🌹நபிகளாரின் வஸியத்🌹🕋🌹* 


 *👉👉👉நபிகளாரின் வஸியத்👈👈👈* 


 *✍✍✍அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் உயிரோடு வாழும் போது பல முக்கியமான அறிவுரைகளை செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறுதி நேரத்தில் முக்கியமான சிலவற்றை வஸியத் செய்வான். அதுப்போன்று நபி (ஸல்) அவர்கள் உயிரோட வாழும் போது சஹாபாக்களுக்காக பல செய்திகளை வஸியத் என்று சொல்லி செய்திருக்கிறார்கள்.அதுப்போன்ற செய்திகள் நிறைய ஹதீஸ்களில் காண கிடைக்கிறது. அவற்றை இந்த உரையில் நாம் காண்போம்.✍✍✍* 


 *🕋🕋இரவுத் தொழுகை🕋🕋* 


 *📕📕📕ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற* *தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.📕📕📕* 

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி (1178), முஸ்லிம் (1330)* 


 *✍✍✍இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.* 
 *மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.* *ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவது. வித்ரு தொழுவது.* 
 *இந்த மூன்றும் நபிகளாரால் வலியுறுத்திச்* *சொல்லப்பட்ட, நன்மைகள் அதிகம் கிடைக்கும்* *நல்லறங்களாகும்.மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதன்* *நன்மைகள் மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு* *நோற்ற நன்மைகளைப் பெறலாம்.* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வணங்கு வதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே’’ என்று கேட்டார்கள். நான், ஆம் (உண்மைதான்!) என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்’’ அல்லது ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்’’ என்று சொன்னார்கள்✍✍✍.* 

 *அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் (ரலி) நூல்கள்: புகாரி (3419), முஸ்லிம் (2136)* 


 *🌐ளுஹா தொழுகையின் நன்மைகள்🌎* 


 *📘📘📘தினமும் இரண்டு ரக்அத்கள் ளுஹா தொழுதால் பல நன்மையான காரியங்கள் செய்த கூலியைப் பெற்றுவிடமுடியும்.* 
 *உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.📘📘📘* 


 *அறிவிப்பவர்: அபூதர் (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (1302)* 


 *🔴⚫வித்ரு தொழுதல்🔵🔴* 


 *✍✍✍நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைக்குப் பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த தொழுத தொழுகை இரவுத் தொழுகையாகும்* .
 *ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.✍✍✍* 

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (2157)* 


 *📙📙📙இரவில் தொழும் தொழுகையில் இறுதியாகத் தொழும் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.* *இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.📙📙📙* 


 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (1368)* 


 *🌐🌐தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்🌎🌎* 


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஸிய்யத் செய்த விஷயங்களில் ஒன்று, தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதாகும்.* 
 *என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும், தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். “பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீரர்கள்; அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்’’ என்றும் கூறினார்கள்✍✍✍.* 


 *அறிவிப்பவர்: அபூதர் (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (1142)* 


 *📗📗📗இந்தச் செய்தியில் முதலில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுதல் தொடர்பாக நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். ஆட்சித் தலைவரின் தோற்றங்களைக் கவனிக்காமல் முஸ்லிம்களின் தலைவராக இருப்பதால் அவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். அவ்வாறு நடக்கும் போது தான் நாட்டின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். முஸ்லிம்களுக்கும் வலிமை இருக்கும் என்பதால் இதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.* *இரண்டாவதாக இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகையைப் பற்றி கட்டளையிட்டுள்ளார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுவது கடமையாகும்.ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உள்ளது. எனவே அந்த நேரத்திற்குள் தொழுவது அவசியமாகும். இதையே அல்லாஹ்வும் குறிப்பிடுகின்றான்* .
 *நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.📗📗📗* 


 *(அல்குர்ஆன் 4:103)* 


 *✍✍✍தொழுகையைத் தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் தொழுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.* 
‘‘ *நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’’ என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள்✍✍✍.* 


 *அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)* 
 *நூல்கள்: புகாரி (527), முஸ்லிம் (137)* 


 *👨‍👨‍👧👨‍👨‍👧அண்டை வீட்டாரைக் கவனித்தல்👩‍👩‍👦👩‍👩‍👦* 


 *📒📒📒என் உற்ற தோழர் (நபியவர்கள்,) என்னிடம், “நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்து உதவுக!’’ என்று அறிவுறுத்தினார்கள்📒📒📒.*
 

 *அறிவிப்பவர்: அபூதர் (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (5121)* 


 *✍✍✍நாம் வசிக்கும் வீட்டின் அண்டை வீட்டார் விஷயத்தில் நன்மை நாடவேண்டும். அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.* 
 *இந்த நபிமொழியில் நாம் குழம்பு வைத்தால் பக்கத்து வீட்டாருக்கும் பயன்படும் வகையில் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்தாவது பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நபிகளார், அபூதர் (ரலி) அவர்களுக்கு வஸியத்தாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களும் நபிகளாருக்கு இதை அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்* . *நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.✍✍✍* 


 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 
 *நூல்கள்: புகாரி (6014), முஸ்லிம் (5118)* 


 *⚫🌐கோபத்தை கட்டுப்படுத்துதல்🌎⚫* 


 *📓📓📓மனிதன் பெரும் தவறுகள் செய்வதற்குக் காரணமாக அமைவது கோபமாகும். கோபத்தில் நிதானத்தை இழக்கின்றான். அதனால் பல பெரிய, சிறிய தவறுகளைச் செய்துவிடுகின்றான். அதனால்தான் நபிகளார் கோபத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினார்கள்.* 
 *ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.📓📓📓* 


 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6116)* 


 *✍✍✍அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.✍✍✍* 


 *(அல்குர்ஆன்:3:134.)* 


 *🕋🕋அதிகாரம் படைத்தவர்கள் இறைச்சத்தைப் பேணுதல்📓📓* 


 *✍✍✍ஆட்சி, அதிகாரம் வந்துவிட்டால் மனஇச்சையின் அடிப்படையில் ஆணவத்துடன் நடப்பது சாதாரணமாக ஆட்சியாளரிடம் ஏற்படுகிறது. அதிகாரம் வரும் போது அடக்கமும் பணிவும் இறைச்சமும் ஏற்படவேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்✍✍✍* .


 *அறிவிப்பவர்: புரைதா (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் (3566)* 


 *🔴🔵தொழுகைக்குப் பிறகு பிரார்த்தனை⚫🔴* 


 *📔📔📔மறுமையில் சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால் அல்லாஹ் கூறிய அடிப்படையில் அழகிய முறையில் வணக்க வழிபாட்டில் ஈடுபடவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். இதற்கு அல்லாஹ்வின் உதவி நமக்குத் தேவை. இந்த உதவியை அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்* .‘‘ *அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி* *இபாத(த்)திக் (இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி* *செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில்* *வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு* *தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே’’ என்று உனக்கு நான் வஸியத்* *செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📔📔📔* 

 *அறிவிப்பவர்: முஆத் (ரலி)* 
 *நூல்கள்: அபூதாவுத் 1301, அஹ்மத் 21109* 


 *✍✍✍நபிகளார் வலியுறுத்திய இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்வோமாக..!✍✍✍* 


 *🌐🔴🔵ஆட்சியாளர்களை வழிநடத்தும் இஸ்லாம்🌎⚫🔴* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 67