பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II

திருக்குர்ஆன் கேள்வி - பதில் -- II


கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)

கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?

பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)

கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?

பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)

கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?

பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)

கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?

பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)

கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?

பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)

கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?

பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)

கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரரி) (ஆதாரம் : புகாரி 2997)

கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?

பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)

கேள்வி : இப்னு உமர் (ரரி) அவர்களின் மனைவி பெயர் என்ன?

பதில் : ஸஃபிய்யா பின் அபீ உபைத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3000)

கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?

பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)

கேள்வி : பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?

பதில் : வேதனையின் ஒரு பங்கு (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?

பதில் : பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)

கேள்வி : பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

பதில் : உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும் (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : பால் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது. (அல்குர்ஆன் 16:66)

கேள்வி : தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?

பதில் : கூடாது (ஆதாரம் : புகாரி 3002)

கேள்வி : தேன் எங்கு உற்பத்தியாகிறது?

பதில் : தேனியின் வயிற்றிரிருந்து (அல்குர்ஆன் 16:69)

கேள்வி : நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : அலீ (ரரி), மிக்தாத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?

பதில் : கூடாது (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : மக்காவில் கடிதம் கொண்டு சென்றபெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

பதில் : ரவ்ளத்துக்காக் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?

பதில் : கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். (அல்குர்ஆன் 16:77)

கேள்வி : மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?

பதில் : ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி). (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?

பதில் : நிம்மதியடைவதற்கு. (அல்குர்ஆன் 16:80)

கேள்வி : உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி) அவர்களை என்ன செய்வதாக உமர் (ரரி) கூறினார்கள்?

பதில் : அவரின் கழுத்தை வெட்டிவிடுவதாக கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?

பதில் : தெளிவாக எடுத்துச் சொல்வதே! (அல்குர்ஆன் 16:82)

கேள்வி : ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரரி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?

பதில் : பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?

பதில் : வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 16:85)


-->  Dheengula Penmani Jan 2010

திருக்குர்ஆன் கேள்வி பதில்

திருக்குர்ஆன் கேள்வி பதில்


கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?

பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?

பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?

பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?

பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?

பதில் : வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?

பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?

பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?

பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?

பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?

பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?

பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?

பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?

பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?

பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?

பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?

பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?

பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?

பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?

பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?

பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?

பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?

பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன் 16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?

பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)

--> Q/A Dheengula Penmani Feb 2010

அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது ??

? அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும்போது குறைகளை தெளி வுபடுத்தினால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர் கள். ஆனால் நீங்கள் சில அறிவிப்பாளர்களை பற்றி கூறும்போதும் காரணம் கூறாமல் பலவீனமானது என்று கூறியுள்ளீர்களே?


ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டுமானால் அவரை நம்பகமானவர் என்று அதற்கு தகுதியானவர் கூற வேண்டும். ஒரு அறிவிப் பாளரைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லையானால் அவர் அறிவிக்கும் எந்த செய்தியும் ஆதாரமாக கொள்ளக்கூடாது. இதைப் போன்று ஒரு அறி விப்பாளரைப் பற்றி குறையும் நிறையும் இருக்குமானால் அவரைப் பற்றி குறை கூறுபவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தினால் அந்த காரணம் ஏற் றுக் கொள்ளும் வகையில் இருந்தால் குறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரின் செய்திகள் நிராகரிக்கப்படும். நிறை இருக்கும்போது குறை கூறியவர்கள் காரணத்தை தெளிவுபடுத்தவில்லையானால் நிறையை எடுத் துக் கொண்டு அவரின் செய்திகள் ஆதாரமாகக் கொள்ளப்படும்.

இதைப் போன்று ஒரு அறிவிப்பாளரை அனைத்து அறிஞர்களும் குறைமட்டும் கூறியிருந்தால் அந்த குறைக்கு காரணம் கூறவில்லையானா லும் குறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை.

நாம் சில அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதும்போது விரிவஞ்சி சுருக்க மாக சொல்வோம். அப்போது குறைகளை தெளிவுபடுத்தாமல் சுருக்கமாக சொல்லியிருப்போம். சில நேரங்களில் அவரைப்பற்றி அனைவரும் குறை களை கூறியிருக்கும் போதும் காரணம் கூறாமல் சொல்வோம். குறையும் நிறையும் வரும்போது குறைக்குரிய காரணம் சொல்ல வேண்டும் என்று அடிப்படையிலிருந்து நாம் மாறவில்லை. ஒருவரைப் பற்றி குறைமட்டும் இருந்தால் அதற்கு காரணம் கூறத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்க!

--> Q/A Dheengula Penmani Feb 2010

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும்??

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

யார் முஃமினா இருக்கும் நிலையில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அது அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அல்லு அஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 324

இச்செய்தில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் பின் அபீ மலீக்கா என்பவர் பலவீனமானவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஹாமீன் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் ஓதுவாரோ மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலைநேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலைவரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (2804)

இந்த ஹதீஸ் தாரமி (3252) ஷுஅபுல் ஈமான் (பாகம் 2, பக்கம் :483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள் ளது.

இந்த செய்தி பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ்கலை அறிஞர்க ளில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ் மான் பின் அபீ பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும். இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீ னமானவர் என்றும். இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக் கப்பட்டவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்: 4, பக்கம்: 263

யார் குர்பானி அறுக்கும் நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று இரண்டு ரக்அத் தொழுது, ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹா பதி னைந்து தடவையும் குல்ஹுவல்லாஹு அஹத் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பில் பலக் பதினைந்து தடவையும் குல் அவூது பிரப்பிந் நாஸ் பதினைந்து தடவையும் ஓதி ஸலாம் கொடுத்த பின்னர் ஆயத்துல் குர்ஸியை மூன்று தடவை ஓதினால் அல்லாஹ் பதினைந்து தடவை மன் னிப்பு வழங்குவான். அவருடை பெயரை சொர்க்கவாதிகளில் ஆக்குவான். வெளிப்படையான அந்தரங்கமான பாவங்களை மன்னிப்பான். அவர் ஓதி ஒவ்வொரு ஆயத்துக்கு ஹஜ், உம்ரா செய்த நன்மையை பதிவு செய்வான், இஸ்மாயீல் (அலை) அவர்களின் குழந்தைகளில் அறுபது நபர்களை விடு தலை செய்தவர்களைப் போன்று ஆக்குவான். மேலும் அவர் இதை செய் ததிலிருந்து அடுத்த ஜுமுஆக்கிடையில் இறந்தால் அவர் ஷஹீதாக மர ணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்மவ்லூஆத் - இப்னுல் ஜவ்ஸி, பாகம் : 2, பக்கம் : 134

இச்செய்தியில் அஹ்மத் பின் முஹம்மத் பின் காலிப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது.

கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார் என்ற கருத்தில் அலீ (ரலி), ஜாபிர் (ரலி), முஃகீரா பின் ஷுஃபா (ரலி), அபூ உமாமா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களின் தரங்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி :

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, பாகம் : பக்கம் : 2, பக்கம் : 458

இச்செய்தியில் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

இமாம் அபூதாவூத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவர் பொய்யர் என்றும் இப்னு மயீன் இவர் நம்பகமானவர் இல்லை என்றும். இமாம் அபூஸர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும். இமாம் அபூஹாத்திம் அவர்கள் இவர் பலம்வாய்ந்தவர் இல்லை என்றும் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர் என்றும். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர்கள் அறிவிக்காத ஹதீஸ்களை அவர்கள் அறிவித்ததாக கூறுபவர், இவருடைய செய்திகளை ஆச்சரிய மான செய்திகள் என்பதற்காகவே தவிர ஹதீஸ் நூல்களில் எழுதுக் கூடாது என்றும். இவர் லஹ்ஹாக் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறி விப்பவர் என்று நுக்காஸ் அவர்களும் கூறியுள்ளனர். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 427

மேலும் இச்செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களும் அந்த செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைப் போன்று ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் (பாகம் :2, பக்கம் : 76) இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் உமர் அர்ரிகாஷி என்பவர் யாரென அறியப்படாதவர்.

பாத்திஹா அத்தியாயமும் ஆயத்துல் குர்ஸியும் ஆலு இம்ரானில் ஷஹி தல்லாஹு அன்னஹு லாயிலாஹா இல்லா ஹுவ என்ற ஆயத்தும் குலில்லாஹும்ம மாலிகுல் முல்கி என்ற ஆயத்தும் (அர்ஷின் கீழ்) தொங்க விடப்பட்டவைகளாகும். அல்லாஹ்வுக்கும் அதற்கும் மத்தியில் எந்த தடை யும் இல்லை. அல்லாஹ் இவைகளை பூமியில் இறக்குவதற்கு நாடிய போது அவை களை அர்ஷோடு தொங்கி கொண்டு, இறைவா! நீ எங்களை பூமியின் பக்கமும் உனக்கு மாறு செய்பவர்களின் பக்கமும் அனுப்புகிறாயே என்று கேட்டது. என்மீது சத்தியமிட்டு கூறுகிறேன்: என்னுடைய அடியார்களில் யார், ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னும் அதை ஓதுவாரோ அவருக்கு சொர்க்கத்தை அவர் தங்குமிடமாக நான் ஆக்குவேன். அல்லது பரிசுத்த மான இடத்தில் தங்க வைப்பேன். அல்லது மறைத்துவைக்கப்பட்ட தன் கண்களால் ஒவ்வொரு நாளும் எழுபது தடவை அவரைப் பார்ப்பேன். அல்லது ஒவ்வொரு நாளும் எழுபது தேவைகளை பூர்த்தி செய்வேன். அல்லது ஒவ்வொரு விரோதிகளிடமிருந்தும் நான் பாதுகாப்பு அளிப்பேன். அவர்களிடமிருந்து உதவிபுரிவேன். அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்: அமலுல் யவ்மி வல் லைலா, பாகம்: 1, பக்கம்: 238

இந்த செய்தியில் இடம் பெறும் அபூ ஜஅஃபர் பின் பக்ர் என்பவர் பற்றி குறிப்புகள் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை. இதில் இடம் பெறும் முஹம்மத் பின் ஸன்பூர் என்பவரைப் பற்றி குறையும் நிறையும் கூறப்பட் டுள்ளது. குறிப்பாக இவர் அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாக அடிப்படை யில்லாத மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று மஸ்லமா அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தி அல்ஹாரிஸ் பின் உமைர் வழியாகவே முஹம்மத் பின் ஸன்பூர் என்பவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இடம் பெறும் அல்ஹாரிஸ் பின் உமைர் என்பவரை பலர் நம்பக மானவர் என்று கூறிப்பிட்டிருந்தாலும் இவரின் இந்த செய்தியை குறிப் பிட்டு எழுதும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் நம்பகமானவர் கள் பெயரை பயன்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி குறிப்பிட்டு இது அடிப்படையில்லாத இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சனம் செய்துள்ளார்கள். (நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம் : 223)

இதே கருத்தில் சில வாசகங்கள் மாற்றத்துடன் லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதுவும் தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

இது தொடர்பு அறுந்த செய்தியாகும் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்காமில் லி இப்னி அதீ, பாகம் : 7, பக்கம் : 90)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மூலம் அறிவிப்பட்ட செய்தி :
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது. அவர் மரணித்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : ஹில்யாத்துல் அவ்லியா, பாகம் :3, பக்கம் :221

இச் செய்தியில் உமர் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப்பற்றி அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

உமர் பின் இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் (நூல் : அல்முக்னீ ஃபீ லுஅஃபா, பாகம் :2, பக்கம் :279)

இவருடைய ஹதீஸ்களுக்கு ஒத்ததாக யாருடைய அறிவிப்பும் இருக்காது. (நூல் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் :279)

ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி:
யார் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸியை தொடர்ந்து ஓதிவந்தால் மரணத்திற்குரிய வானவர் வந்து அவருடைய உயிரை கைப்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் அவரை சொர்க்கம் செல்வதை தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : அல்காமில் லி இப்னு அதீ, பாகம் : 3, பக்கம் : 40

இச்செய்தியில் இடம் பெறும் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவரை இச்செய்தியை பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வரு மாறு கூறியுள்ளார்கள்:

இவரை யாஹ்யா பின் மயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பான்மையான செய்திகள் பலவீனமானவர்கள் மூலமாகவும் யாரென அறியப்படாதவர்கள் மூலமாக இடம்பெற்றுள்ளது. நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இதே செய்தி காமில் ஃபீ லுபாயிர் ரிஜால் (பாகம் 3 பக்கம் 40) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூஜுனைத் காலித் பின் ஹுஸைன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அறிஞர் யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும். இப்னு அதீ அவர்கள் இவருடைய பெருபான்மையான ஹதீஸ்கள் பலவீன மானவர்கள் மூலமாகவும் யாரென்று அறியப்படாதவர்கள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 3, பக்கம்: 40

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
யார் ஆயத்துல் குர்ஸியை ஐவேளைத் தொழுகைக்கு பிறகு ஓதுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : ஜம்ஹரத்துல் அஜ்ஸாயில் ஹதீஸிய்யா, பாகம் :1, பக்கம் : 20)

இச் செய்தியில் பக்கிய்யா பின் வலீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள்.

அபூமுஸ்ஹிர் அவர்கள் இவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறியுள்ளார்கள் : பக்கிய்யா உடைய ஹதீஸ்கள் தூய்மையானவை அல்ல! அவருடை ஹதீஸ்களிலிருந்து நீ தவிர்ந்து கொள் என்று கவிதை நடையில் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் , பாகம் : 2, பக்கம் :46)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸர் பின் அல்ஹஸன் என்பவரை இமாம் நஸயீ, அல்ஜவ்ஸஜானீ ஆகியோர் பலவீனமானர் என்று கூறியுள்ளார்கள். இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 2, பக்கம் : 123)

அபூ உமாமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி :
அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக தப்ரானி அவர்களின் அல்முஃஜ முல் அவ்ஸத் (பாகம் : 8, பக்கம் : 92) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (பாகம்:8, பக்கம் : 114) இடம் பெற்றுள்ளது. இந்நூல்களில் ஹாரூன் பின் தாவூத் அந்நகார் என்பவர் இடம் பெற்றுள்ளளார். அவரின் நம்பகத்தன்மை பற்றி விவரங்கள் கிடைக்க வில்லை.

இதே போன்று முஸ்னதுஸ் ஷாமீன் என்று நூலில் (பாகம் : 2, பக்கம்:9) இடம் பெற்றுள்ளது. இதிலும் ஹாரூன் பின் தாவூத் அந்நக்கார் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

இதே செய்தி அமலுல் யவ்மி வ லைலா, பாகம் : 1, பக்கம் :237) இடம் பெற்றுள்ளது. இதில் அல்யமான் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். (மஜ்மவுஸ் ஸாவயித், பாகம் : 3, பக்கம் : 167)

இதே செய்தி அஹ்பார் உஸ்பஹான் என்ற நூலில் (பாகம் :5, பக்கம் : 189) இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் ரிழ்வான் பின் ஸயீத் என்ப வரின் நம்பத்தன்மை அறியப்படவில்லை.

தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி ஆதாரப்பூர் வமானதாக உள்ளது.

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30

சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம் மத் பின் ஹிம்யர் என்பவரைப்பற்றி விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அது சரியில்லை.

இமாம் அபூஹாதம் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும். இமாம் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள், இவரிடத்தில் நல்லதை தவிர வேறு எதையும் அறியவில்லை என்றும்.இமாம் இப்னு மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் இவரை உறுதியானவர் என்றும். இமாம் நஸயீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலமானவர் என்றும். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவரிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும். இப்னுல் கானிஃ என்பவர் இவர் நல்லவர் என்றும். சான்று அளித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 117

பொதுவாக ஒருரைப்பற்றி குறையும் நிறையும் வரும்போது குறை தெளிவாக இருந்தால் குறையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கார ணம் பலருக்கு தெரியாத குறை சிலருக்கு தெரிந்திருக்கும் என்ற அடிப்ப டையில்.

அதே நேரத்தில் குறை கூறியவர்கள், காரணத்தை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் குறையை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. நிறையையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பாளரின் மீது விமர்சனம் செய்த அறிஞர்கள் காரணத்தை சமர்ப்பிக்கவில்லை. ஏன் இவர் பலவீனமானவர்?. இவருடைய செய்திகளை ஏன் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கடாது.? என்ற கேள்விக்கு பதில் அவர்கள் கூறவில்லை. எனவே இந்த அறிஞர்க ளின் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர் புகாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நதாயிஜுல் அஃப்கார் (பாகம் 2 பக்கம் 279) ல் யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் செய்த விமர்சனம் கார ணம் கூறப்படாதது. தெளிவில்லாதது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னுல் ஜவ்ஸி இந்த ஹதீஸை மவ்லுஆத் (இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்க ளின் தொகுப்பு) என்ற கிதாபில் சேர்த்ததற்காக ஹாபிழ் லியாவுல் மக்தஸி மற்றும் இப்னு அப்தில் ஹாதி ஆகியோர் கண்டித்துக் கூறியுள்ளார்கள்.

மேலும் இவரை விமர்சனம் செய்யும் அறிஞர்களின் விமர்சனத்தையும். இவரை நல்லவர் என்று சொல்லக்கூடிய அறிஞர்களின் கருத்தையும் எழுதி விட்டு இமாம் தஹபீ அவர்கள் இவருடைய செய்திகள் ஹஸன் தரத்தில் கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா (பாகம் 9 பக்கம் 234)

எனவே தொழுகைக்குப்பின்னால் ஆயத்துல் குர்ஸி ஓதுவது சிறப்பிற் குரியதுதான் ஓதலாம். அல்லாஹ் மிகஅறிந்தவன்.

ஆயத்துல் குர்ஸி தொடர்பான மேலும் விபரங்களுக்கு தீன்குலப் பெண்மணி ஜனவரி 2008, மார்ச் 2008, மே 2008 ஆகிய இதழ்களை பார்வையிடுக!

--> Q/A Dheengula Penmani Feb 2010

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?
இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.
முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408, ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201.

இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார். (ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் இவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார். (இந்த செய்தியும் அவர் தந்தை வழியாகவே இடம்பெற்றுள்ளது) இச்செய்திகள் நம்பகமானவை அல்ல! உறுதியான செய்திகளில் உள்ள வையும் அல்ல! என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லுஅஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 279)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி களைப் போன்று எவரும் அறிவித்ததில்லை என்று இப்னுல் அதீ அவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி கள் எந்த மதிப்பும் அற்றது என்று இப்னுல் ஜனீத் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லிஸானுல் மீஸான், பாகம் : 4, பக்கம் : 516)

இதே கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் (பாகம் : 6, பக்கம் : 457) ல் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஈஸா பின் அப்துல்லாஹ் பின் சுலைமான் அல்குறைஷீ என்பவர் பலவீனமா னவர்.

இவரைப்பற்றி இதை பதிவு செய்த இமாம் இப்னு அதீ அவர்களே இவர் பலவீனமானவர் ஹதீஸை திருடுபவர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்கள். (அல்காமில், பாகம் : 6, பக்கம் : 454)

அல்காமில், லுஅஃபாவுல் உகைலீ ஆகிய நூல்கள் அல்லாவற்றில் இடம் பெற்றிருக்கும் செய்தியில் மூன்று குறைகள் இடம்பெற்றுள்ளனர்.

முதலாவது: அதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவி யுற்றதில்லை.

இரண்டாவது : இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.

மூன்றாவது : முஹம்மத் பின் ஹஸன் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள் ளார்கள்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.

--> Q/A Dheengula Penmani Mar 2010

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?
(சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இவர்களின் வாதங்களையும் அதற்குரிய பதிலையும் கேள்வி பதில் முறையில் இங்கு வழங்குகிறோம்.)

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக் இவ்வாறு ஓதக்கூடாது என்று கூறியுள்ளார்களே இதில் எது சரி?


பதில் : சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதே சரியாகும்.

கேள்வி : அது எப்படி சரியாகும்? இமாம்களின் கூற்றை விட இக்கருத்து சரியானதா?

பதில் : சூரிய சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் சரியானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரிய, சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதியதாக புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தைதான் அலீ பின் அபீதாலிப், அப்துல்லாஹ் பின் யஸீத், பரா பின் ஆஸிப், ஸைத் பின் அர்க்கம், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, இப்னு முன்திர், அபூயூஸீப் (அபூஹனிபாவின் மாணவர்), முஹம்மத் பின் ஹஸன் (ஹனபி மத்ஹப்) தாவூத் லாஹரி ஆகியோர் (நபிவழியின் கருத்தையே) தேர்ந்தெடுத்துள்ளார்கள். நூல்: அல் மஜ்மூவ், பாகம் : 5, பக்கம் : 58

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகை பகல் தொழுகையாகும். பகலில் தொழும் தொழுகையான லுஹர், அஸர் தொழுகையில் சப்தமின்றிதான் ஓதுகிறோம். எனவே பகலில் தொழும் சூரிய கிரணத் தொழுகை சப்தமின்றி ஓத வேண்டும். இரவு நேரத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுகிறோம். இதைப்போன்று சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சில கூறுகின்றனரே?

பதில் : பகல் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதில்லை என்பதால் சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்பது சரியான கருத்தாக இருந்தால் பகலில் தொழும் ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை போன்றவற்றிலும் சப்தமில்லாமல்தானே ஓத வேண்டும்? இதற்கு என்ன பதில் சொல்வோம்? நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும், மழைத் தொழுகையிலும் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் அதனால் இவற்றில் மட்டும் சப்தமிட்டு ஓதுவோம் என்று கூறுவோம். இதைப்போன்று சூரிய கிரகணத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதி உள்ளதால் நாமும் சப்தமிட்டே ஓத வேண்டும்.

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வில்லை என்ற கருத்தை தரும் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற் றுள்ளதே!

இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் (ஜமாஅத்தாக கிரகணத் தொழுகை) தொழுவித்தார்கள். அத்தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயம் போன்றதை ஓதும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூச் செய்தார்கள் அந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாக இருந்தது. பின்னர் சஜ்தாச் செய்தார்கள். பிறகு (சஜ்தாவிருந்து) எழுந்து (இரண்டாவது ரக்அத்தில்) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையை விட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து வெகு நேரம் நிலையில் நின்றார் கள். இது முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண் டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிருந்(தப் பழத்தி ருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரக வாசிகல் அதிகமாகப் பெண்களையே கண்டேன் என்று கூறினார்கள்.

மக்கள், ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பெண்கன் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை என்று சொல்விடுவாள் என்று பதிலத்தார்கள்

நூல் : புகாரி 1052

கேள்வி : நபி ஸல் அவர்கள் சப்தமிட்டு ஓதியிருந்தால் அதை நமக்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்திருப்பார்களா இல்லையா? இந்த நபிமொழியில் அவ்வாறு கூறப்படாததால் நபிகளார் சப்தமில்லாமல்தான் ஓதியுள்ளார்கள் என்று விளங்க முடியகிறதே?

பதில் : இந்த ஹதீஸில் சப்தமிட்டு ஓதவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சூரியகிரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள் என்றோ அல்லது சப்தமில்லாமல் ஓதினார்கள் என்றோ எந்த தகவலும் இல்லை. எனவே இதை வைத்துக் கொண்டு சப்தமில்லாமல் ஓதினார்கள் என்று கூறமுடியாது.

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சூரிய கிரணத் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து எந்த சப்தத்தையும் செவியுறவில்லை என்ற செய்தி அஹ்மத், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதே? மேலும் இதை பதிவு செய்த இமாம் ஹாகிம் இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லியுள்ளார்களே?

பதில் : அல்லாஹ் அருள் புரியட்டும், ஹாகிம் அவர்கள், நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் அலட்சியப்போக்கு உள்ளவர். பல பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள். எனவே இவர் ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதை மட்டும் வைத்து அது நம்பகமான செய்தி என்று முடிவு செய்யக் கூடாது. இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து இடங்களிலும் ஸஅலபா பின் இபாத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் புகாரி, முஸ்லிமின் அறிவிப்பாளரில் உள்ளவர் இல்லை. எனவே இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாது.

கேள்வி : புகாரி, முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாவிட்டால் அதை ஆதாரமாக கொள்ளக்கூடாதா?

பதில் : ஆதாரமாகக் கொள்ளலாம். அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக இருந்தால். ஆனால் ஸஅலபா பின் இபாத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் முதைனி, இப்னு ஹஸ்ம், இப்னுல் கத்தான், இஜ்லி, தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். இவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது. மேலும் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, இப்னுமுன்திர், இப்னு குஸைமா, ஹாகிம், பைஹகி, இப்னு ஹிப்பான், தப்ரானி கபீர் ஆகிய அனைவர்களும் இந்த செய்தியை ஸஅலபா என்பவர் வழியாகத்தான் பதிவு செய்துள்ளார்கள்.

கேள்வி : நான் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் சூரிய கிரணத் தொழுகைத் தொழுதேன். அவர்களிடமிருந்து ஒரு எழுத் தைக்கூட செவியுறவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர் கள் அறிவிக்கும் செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

பதில் : இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆ என்பவர் பல வீனமானவராவார். எனவே இந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. எனவே சூரிய, சந்திர கிகரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் நபிவழியாகும்.

கேள்வி : சந்திர, சூரிய கிரகணத் தொழுகையின்போது சப்தமிட்டு ஓதுவதற்கு ஹதீஸ்களில் நேரடி ஆதாரம் உள்ளதா?

பதில் : ஆம்! கீழ்க்கண்ட ஹதீஸை காண்க...

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின் னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள், தக்பீர் (தஹ்ரீமா), கூறி / நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர், சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் / ரப்பனா வல(க்) கல் ஹம்து, என்று கூறி (நிமிர்ந்து) விட்டு/ சஜ்தாச் செய்தார்கள். பிறகு இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். அப்போது நான்கு சஜ்தாக் (கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்தற்கு முன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணஙகளைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்)/ (சூரியன், சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீஙகள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்... என்று கூறினார்கள். (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் (எனக்கு இதையறிவித்த) உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்/ மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸுபைர் - ரலி) இரண்டு ரக்அத்களைவிட கூடுதலாக்கா மல் சுப்ஹுத் தொழுகை போன்று தொழுவித்தார்களே... என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்கள்.) அவர் நபி வழியை தவறவிட்டார்... என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அது கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), புஹாரி : 1046

-->யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
--> Dheengula Penmani Feb 2010

தராவீஹ் தொழுகை தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் ??

? தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் தராவீஹ் தொடர்புடையது அல்ல! என்று பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.

தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தில் மட்டும்தான் தொழப்படுகிறதே தவிர மற்ற மாதங்களில் தொழப்படுவதில்லை எனவே இந்த ஹதீஸ் தராவீஹ் தொழு கைக்கு பொருந்தாது. இந்த ஹதீஸ் ஒரு ஸலாமைக் கொண்டு நான்கு ரக்அத் தொழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் தராவீஹ் இரண்டு ரக்அத்க ளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழப்படுகிறது.
இந்த ஹதீஸ் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றியதாகும். ஏனெனில் தஹஜ்ஜத் தொழுகைதான் ரமாளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழப்படு கிறது. இந்த ஹதீஸ் ரமலான் தொடர்புடையது அல்ல! என்பதால் தான் இதை தஹஜ்ஜத் (கியாமுல் லைல்) என்ற தலைப்பில்
ஹதீஸ் நூல் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

! நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களி லும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.(முதல்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்' எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசலமா பின் அப்திர்ரஹ்மான், நூல் :புகாரி (1147)

தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும் தொழுவதால் இந்த ஹதீஸ் தராவீஹ் தொழுகையைப் பற்றி கூறுவதாக சொல்லமுடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்கள் முதலில் தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழவேண்டும் என்பதை முதலில் நிரூபித்து விட்டு இந்த கருத்தை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும். தராவீஹ் தொழுகை (இரவுத் தொழுகை) ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழ வேண் டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோது இந்த வாதம் ஏற்புடையது அல்ல.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தொழுதது ஓரே தொழுகை தான். நேர காலங்களை கவனித்து அதற்கு வெவ்வோறு பெயர்கள் ஹதீஸ் களில் கூறப்பட்டுள்ளது.

இரவில் இந்த தொழுகை நிறைவேற்றப்படுவதால் இதற்கு ஸலாத்துல் லைல், கியாமுல் லைல் (இரவு தொழுகை) என்று கூறப்படுகிறது. உறங்கி எழுந்து இந்த தொழுகை தொழலாம் என்பதால் தஹஜ்ஜத் தொழுகை (இரவில் எழுந்து தொழும் தொழுகை) என்று கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒரே தொழுகையைத்தான் தொழுதார்கள் என்பதற்கு பின்வரும் நபிமொழிகள் தெளிவான சான்றுகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340

நபி (ஸல்) அவர்கள் இரவின் முழுவதும் தொழுத தொழுகை மொத்தம் (8+3) 11 ரக்அத்துகள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படுவது தஹஜ்ஜத் தொழுகை என்று கூறினால். நபிகளார் தொழுத தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களால் பதில் சொல்ல முடியாது. இரண்டும் ஓரே தொழுகை என்றால்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பி னுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவுவரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்கு தொழுதோம்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : நஸயி (1588)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம்வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக் கும்போது மீண்டும் எங்களுக்குத் தொழவித்தார்கள். தம் குடும்பத்தின ரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : நஸயீ இப்னு மாஜா (1317)

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழுவிக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்)இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும்போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்றவரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்தபோது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்க ளுக்கு ஸஹர்( நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அள விற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீத முள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல் : அபூ தாவூத் (1167)

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழு வித்தார்கள். அது எந்த நேரம்வரை என்று மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. மூன்றுநாட்கள் மீதமுள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது இறுதி, ஸஹர் நேரம் இறுதிவரை. ஸஹர் நேர இறுதிவரை நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த இந்த தொழுகை தராவீஹ் என்றால் அவர்கள் தஹஜ்ஜத் எங்கே தொழுதார்கள் என்ற கேள்வி எழும்? தொழுத தஹஜ்ஜத் என்றால் தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்வி எழும்? இரண்டும் வெவ்வேறு பெயர்கள் உள்ள ஒரே தொழுகைதான் என்று கூறினால் மட்டுமே இதற்கு சரியான பதிலை கூற முடியும்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா காலங்களில் இதே எண்ணிக்கையில் தொழு திருந்தால் நீங்கள் மட்டும் ஏன் ரமளான் மாத்ததில் மட்டும் தொழுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

எல்லா காலங்களிலும் இந்த தொழுகையை இந்த எண்ணிக்கையில் தொழலாம் என்றிருந்தாலும் ரமலான் மாத்தில் கிடைக்கும் நன்மையை எண்ணி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நபிகளாரும் இந்த மாதத்தில் இந்த தொழுகைக்க முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான பல சான்றுகள் உள்ளன.

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவரா கவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (37), முஸ்லிம் (1391)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதை மக்களுக்கு ஆர்வமூட்டிவந் தார்கள். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1392)

 மற்ற மாதங்களில் இரவுத் தொழுகையை ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகை அளவுக்கு ஆர்வுமூட்டாத நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை அதிகம் வலியுறுத்தி அதற்கு ஏராளமான நன்மைகள் உள்ளதையும் குறிப்பிட்டதால் நாமும் ரமலான் மாதத்தில் இதற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறோம்.

எட்டு ரக்அத்கள் என்று வரும் ஹதீஸில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தாக வருகிறது. ஆனால் நீங்கள் ஏன் இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்கிறீர்கள் என்ற அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.

அந்த நபிமொழியில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தார்கள் என்று தெளிவாக கூறப்படவில்லை. முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது எத்தனை ஸலாத்தைக் கொண்டு தொழுவார்கள் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டுள்ளார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுபஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (1137)

மற்றவர்களுக்கு இரண்டு ரக்அத்தாக தொழவேண்டும் என்று கட்டளை யிட்ட நபிகளார் இரவில் இரண்டிண்டாகத்தான் தொழுதார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

நான் இப்னு உமர் (ர) அவர்கடம், வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)கல் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ர) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக் அத்களா கத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுத வற்றை) ஒற் றையாக ஆக்குவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் சீரீன், நூல் : புகாரி (995)

முதலில் நான்க ரக்அத்கள் தொழுவார்கள் என்று அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் இப்னுமாஜா (1348) நபிக ளார் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் சொல்வார்கள் என்று அன்னை ஆயிஷா அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இந்த செய்திகளை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் அந்த நபிமொழி யில் நான்கு என்று கூறப்பட்டது. ஒரே ஸலாத்தில் என்று முடிவு எடுக்கக் கூடாது. மற்ற நபிமொழிகளையும் கவனத்தில் கொண்டு இரண்டு ரக்அத்களின் ஸலாம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். நபிமொழி தொகுப்புகளில் இந்த செய்தி தராவீஹ் என்ற தலைப்பில் நபிமொழி தொகுப்பாளர்கள் கொண்டு வரவில்லை எனவே எட்டு ரக்அத் தொடர்பான நபிமொழி தராவீஹ் குறிக்காது என்று வாதிடுகின்றனர்.

நபிமொழி நூல் ஆசிரியர் கொடுக்கும் தலைப்பை வைத்து மட்டும் ஒரு காரியத்தை நிரூபிப்பது நகைப்பிக்குரியதாகும். அந்த ஆசிரியர், நபிமொழியில் என்ன கருத்து இருக்கிறது என்று அவர் எண்ணுகிறாரோ அந்த கருத்தைத் தான் அவர் அதற்கு தலைப்பிடுவார். அதுவே சரியானது என்று கூறமுடியாது. சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நபிமொழியை இமாம் புகாரி அவர்கள் 1147 ஆவது செய்திக்கு ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. என்று தலைப்பிட்டுவிட்டு தராவீஹ் தொழுகை என்ற அத்தியாயத்தின் கீழ் 2013 வது ஹதீஸாக இதே செய்தியை கொண்டு வந்துள் ளார்கள் என்பதையும் பார்வையிடவும்.

--> Q/A Dheengula Penmani Sep 2008

ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா??

? ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா?! நபி (ஸல்) அவர்கள் பித்ரா தொடர்பாக எந்த பொருளைக் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? யார் யார் கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். எவ்வளவு இருந்தால் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை.

பொதுவாக செலவழிக்க வேண்டும் என்று கூறப்பட்டால் அதற்கு வசதியுள்ளவர்கள் செய்ய வேண்டும் என்றே நாம் விளங்கிக் கொள்வோம். அதைப் போன்றுதான் பித்ரா கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அதற்கு அளவு சொல்லாததால் கடன் இல்லாமல் கொடுப்ப தற்கு வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். மனிதன் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் கடனை நபிகளார் கூறியுள்ளதாலும் மிக உயர்ந்த தகுதியுடைய ஷஹீத் கூட கடன்பட்டால் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் கடன் போக பித்ரா கொடுக்க வசதியுள்ளவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

--> Q/A Dheengula Penmani Sep 2008

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள்??

? பெருநாளுக்கு ஆறு தக்பீர்கள் கூடுதலாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?


! பெருநாள் தொழுகையில் கிராத் ஓதுவதற்கு முன்னர் மூன்று தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்களில் கிராத் ஓதியதற்கு பின்னர் மூன்று தக்பீர்களும் சிலர் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக கூறுகின்றனர்.

நான் அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோ ரிடம் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளில் எத் தனை தக்பீர்கள் கூறினார்கள்? என வினவினேன். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறுவதைப் போன்ற நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள் அபூமூஸா உண்மைக் கூறினார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (973)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அவர்கள் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அருகில் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமூஸா (ரலி) அவர்களும் அமாந்திருந்தார்கள். அப்போது ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இவர்களிடம் பெருநாள் தொழுகையின் தக்பீர்களைப் பற்றி கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதை அபூமூஸா (ரலி) அவர் களிடம் கேளுங்கள் என்றார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள் இதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மைவிட முந்தியவர் மேலும் நம்மில் மிகவும் அறிந் தவர் என்று கூறினார்கள். எனவே ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார். பின்னர் கிராத் ஓதுவார். பின்னர் ருகூவு செய்வார். பிறகு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து நின்று கிராஅத் ஓதுவார். கிராஅத்திற்கு பின்னர் நான்கு தக்பீர்கள் கூறுவார் என்று பதிலளித்தார்கள்.
நூல் : அப்துர் ரஸ்ஸாக், பாகம் : 3, பக்கம் : 293

முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஆயிஷா என்பவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளரில் இன்னொரு வரான அப்துர்ரஹ்மான் பின் ஸவ்பான் என்பவரை சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இவர் கடைசி கால கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. அவரின் மனநிலை நல்ல நிலையில் அறிவித்தவை எவை? மனநிலை தடுமாறியபோது அறிவித்தவை எவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது. மேலும் இந்த செய்தியை பதிவு செய்த மற்றொரு இமாமான பைஹகீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் சில நேரங்களில் அப்துல் லாஹ் பின் மஸ்வூத்(ரலி) அவர்களின் கூற்றாகவும் (குழப்பமாக) கூறுகிறார். இந்த சம்பவத்தில் பிரபலியமான கூற்று : இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாக சொல்வதாகும். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதன்படி பத்வா வழங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன்
இக்கருத்தை இணைக்கவில்லை. (ஆதாரம் : பைஹகீ, பாகம் : 3, பக்கம் : 289)

இரண்டாவதாக வரும் செய்தியில் நான்கு தக்பீர் கூறுவார் என்று வரும் செய்தியில் நான்கு தக்பீர் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்று கூறப் படவில்லை. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்ட கேள் விக்கு அவர்கள், நான்கு தக்பீர் கூறுவார் என்று பதிலளித்தார்களேத் தவிர நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று கூறவில்லை. எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது.

மேலும் முதலாவது, இரண்டாவது ஆதாரத்தின்படி நன்கு+நான்கு தக்பீர் கள் கூடுதலாக சொல்வதற்குத்தான் ஆதாரமாக உள்ளதே தவிர மூன்று + மூன்று தக்பீர்கள் கூடுதலாக சொல்வதற்கு ஆதாரமில்லை என்பதையும் விளங்க வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Sep 2008

இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் ??

? இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?


இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:221)

இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை சிலை வணக்க வழிபாடுகளைச் செய்யும் நபர்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்கள் என்று பெயரளவில் தங்களைக் கூறிக் கொண்டு அன்றைய காலத்தில் இணை வைப்பாளர்கள் செய்த காரியத்தை அப்படியே செய்யும் இன்றைய கால முஸ்லிம்களையும் குறிக்கவே செய்யும்.

தடை ஆட்களை வைத்து கூறப்பட்டதல்ல! அவர்களின் செயல்களை வைத்துத் தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே இணை வைக்கும் செயல் யாரிடம் இருந்தாலும் இந்தத் தடை அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (5090)

இந்த நபிமொழியின் அடிப்படையில், திருமணம் செய்பவர்கள் முதன் முதலில் மார்க்கம் உள்ள பெண்ணாகத் தேர்வு செய்யவேண்டும். மார்க்கத்தில் முதலிடம் ஓரிறைக் கொள்கையாகும். அந்த ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் இணை வைப்புக் கொள்கையில் ஒரு பெண் இருந்தாலோ அல்லது ஆண் இருந்தாலோ அவர்களை ஒரு போதும் மணமகளாக அல்லது மணமகனாகத் தேர்வு செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியும் விளக்குகிறது.

--> Q/A Dheengula Penmani May 2008

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ??

? இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளை கட்டி விட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?


ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 1053

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

கைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

? பால்குடிப் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று இறைவன் கூறியிருக்க பெண்கள் தங்கள் அழகு கெட்டு விடும் என்று பால் குடியை விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இது சரியா?

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:233)

இந்த வசனம் பாலுட்டுவதின் முழுமையான காலம் இரண்டு ஆண்டுகள் என்று கூறுகிறது.

குழந்தைக்கு மிக மிகச் சிறந்த உணவு தாய்ப்பாலை விட வேறு எதுவும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் தான் நிறைந்து கிடைக்கிறது. குழந்தையின் மீது அக்கறை உள்ளவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள். தாயின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் குழந்தையின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் பாலூட்டுதலை நிறுத்தினால் தவறில்லை. அழகு கெட்டு விடும் என்று பாலூட்டுதலை நிறுத்தினால் அது குழந்தையின் நலனுக்குச் செய்கின்ற துரோகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வசனம் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர் ஸுஹ்ரி அவர்கள் அழகிய விளக்கத்தைத் தந்துள்ளார்கள்.

ஸுஹ்ரீ அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்:

எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால் தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களை விடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது. (இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும், அவளுக்கு இடரப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது. (புகாரி 5360வது ஹதீஸின் அடுத்து வரும் பாடம்)

--> Q/A Dheengula Penmani May 2008

ஒரு குருவியை ஒருவன் கொல்ல முயன்றால் ??

? ஒரு குருவியை ஒருவன் கொல்ல முயன்றால் கூட அந்தக் குருவி இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனிடம், இவன் என்னைக் கொல்ல முயன்றான் என்று முறையிடும் என்று ஒரு ஹதீஸைக் குறிப்பிட்டு, அநியாயமாக யாரையும் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹதீஸ் சரியானதா?


யாராவது ஒரு மனிதன் ஒரு சிட்டுக் குருவியை அல்லது அதை விடப் பெரியதை நியாயமில்லாமல் கொலை செய்தால் அது பற்றி அல்லாஹ் மறுமை நாளில் விசாரிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, நியாயமான முறை என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதை (முறைப்படி) அறுத்து சப்பிடுவதாகும். அதன் தலையைத் துண்டித்து எறியாமல் இருப்பதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: நஸயீ (4274, 4369), அஹ்மத் (6263, 6666), தாரிமீ (1896)

இதே செய்தி ஹாகிம், பைஹகீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னதுல் ஹுமைதீ, முஸ்னத் தயாலிஸீ உட்பட இன்னும் பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து நூல்களிலும் ஸுஹைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். எனவே இவர் அறிவிக்கும் செய்திகள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது.

எனினும் அநியாயமாக யாரையும் கொல்லக் கூடாது என்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான சான்றுகள் உள்ளன.

--> Q/A Dheengula Penmani May 2008

திருக்குர்ஆனை ருகூவு, ஸஜ்தாவில் ஓதக் கூடாது ???

? திருக்குர்ஆனை ருகூவு, ஸஜ்தாவில் ஓதக் கூடாது என்று ஹதீஸில் தடை இருக்கிறது. திருக்குர்ஆனின் வசனங்களில் இடம் பெற்றிருக்கும் துஆக்களை திருக்குர்ஆன் வசனங்கள் என்று இல்லாமல் துஆ என்று எண்ணி ஓதலாமா?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர் களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்துகொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப் பெற்றுள்ளேன். ருகூஉவில் இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (824)

ஸஜ்தாவில் திருக்குர்ஆன் ஓதுவதைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் துஆ கேட்பதை ஆர்வப்படுத்தியுள்ளார்கள். எனவே ஸஜ்தாவில் அதிகமதிகம் துஆக் கேட்கலாம். திருக்குர்ஆனிலும் ஏராளமான துஆக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை திருக்குர்ஆனுடைய வசனமாக ஓதுகிறோம் என்று இல்லாமல் அதைப் பிரார்த்தனையாக எண்ணி ஓதுவதில் தவறில்லை. அல்லது அந்தப் பிரார்த்தனையில் சில வார்த்தைகளை கூடுதலாகச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் (2:201) என்ற வசனத்தில் இடம் பெறும் துஆவில் அல்லாஹும்ம (அல்லாஹ்வே!) என்ற வாசகத்தை அதிகப்படுத்தி அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் என்று கூறலாம். இவ்வாறு நபி (ஸல்) அவர்களும் பிராத்தனை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் (அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?) எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4522)

--> Q/A Dheengula Penmani May 2008

மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ??

? மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். இது சரியா?


இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (4316)

இதுதான் நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி. இதில் இடம் பெற்றிருக்கும் அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும் என்ற வாசகத்தை வைத்துத் தான் நீங்கள் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

ஒட்டகத்தின் முதுகில் முக்கோண வடிவத்தில் உயர்ந்து இருக்கும் பகுதிக்குத் தான் திமில் (அஸ்மினத்) என்று கூறப்படும். தலையில் கூடுதலான பொருட்களை வைத்து ஒட்டகத் திமில்கள் போல் தலையை ஆக்கிக் கொள்பவர்களை இந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு சிலர், தலையில் திமில்களைப் போன்று கொண்டை வைப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

முடியை வைத்தோ அல்லது வேறு பொருட்களை வைத்தோ ஒட்டகத் திமில்கள் போல் தலையை மாற்றிக் கொள்வதை இந்த நபிமொழி கண்டிக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு கருத்துக்கும் இடமளிக்கும் வண்ணமே இந்த நபிமொழி இருக்கிறது. எனவே அந்நிய ஆண்களை ஈர்க்கும் வண்ணம் தலையை கூடுதலான பொருட்களை வைத்து உயர்த்தி வலம் வருவது தவறாகும்.

சாதாரணமாக தலையில் இருக்கும் முடியை வைத்துக் கொண்டை கட்டினால் ஒட்டகத் திமில் போல் உயரமாக இருக்காது. எனவே இவற்றைத் தடை செய்ய முடியாது. மேலும் சாதாரணமாக கொண்டை போடுபவர்கள் தலையின் பின்புறமே போடுவார்கள். நபிமொழியில் தடை செய்யப்பட்டது, ஒட்டகத் திமில்கள் போல் உள்ளதைத் தான். ஒட்டகத் திமில்கள் வானத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் ஒரு சிலர் உயரமாகக் கொண்டை போடுவதையே இது குறிக்கும்.

--> Q/A Dheengula Penmani May 2008

தீர்மானங்கள் போடும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?

? தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?


மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்.... அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெயே வந்தனர். நபி (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்த போது, முஹம்மதும் (அவரது) படையும் (வந்துள்ளனர்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட (வர்களான அந்தச் சமுதாயத்த) வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (2945), முஸ்லிம் (2793)

நான் நபி (ஸல்) அவர்கடம், தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டீர் களா? என்று (ஒரு சந்தர்ப்பத்தில்) கேட்டேன். அவர்கள், இல்லை என்று பதிலத்தார்கள். நான் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி (6218) அல்லாஹ் (மறுமை நால்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ஆதமே! என்பான். அதற்கு அவர்கள், இதோ! வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்கல் தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்கருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள். அதற்கு அவன், ஒவ்வோர் ஆயிரம் பேரிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை (வெயே கொண்டு வாருங்கள்) என்று பதிலப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும். (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நரகத்திருந்து (வெயே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்கல் யார்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்கல் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திருந்து வெயேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹு அக்பர்-(அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், சொர்க்கவாசிகல் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அவர்கள், சொர்க்கவாசிகல் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். நாங்கள் (இப் போதும்), அல்லாஹு அக்பர் என்று கூறினோம். அப்போது அவர்கள், நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்கல் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத் தான் (மொத்த மக்கல் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ர)

நூல்கள்: புகாரி (3348), முஸ்லிம் (379)

நீங்கள் சொர்க்கவாசிகல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நபிகளார் கூறிய போது, நபித்தோழர்கள் நபிகளார் முன்னிலையில் இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு அல்லாஹு அக்பர் என்று கூறியுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் மார்க்கத்திற்கு உட்பட்டு இயற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரிக்கும் வண்ணம் அல்லாஹு அக்பர் என்று கூறலாம்.

--> Q/A Dheengula Penmani May 2008

சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு 111 தடவை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டில் நான்கு மூலையிலும் ??

? எனக்கு தலாக் சொல்லப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிய நிலையில் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டது. இதையறிந்து எனது உறவினர் ஒருவர் அஜ்ரத்திடம் சென்று பார்த்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த அஜ்ரத்திடம் சென்று பார்த்த போது 65 அத்தியாயத்தின் 2ஆவது வசனத்தை சுப்ஹுத் தொழுகைக்கு பிறகு 111 தடவை தண்ணீரில் ஓதி ஊதி வீட்டின் நான்கு மூலையிலும் தெளிக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் 28ஆவது அத்தியாயத்தில் 6ஆவது வசனம் மற்றும் தலாக் அத்தியாயம் தினமும் காலை சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு 111 தடவை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டில் நான்கு மூலையிலும் தெளிக்கவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பிரச்சனைகள் தீரும். நல்ல கணவர் கிடைப்பார் என்று கூறினார். இது சரியா?


திருக்குர்ஆனின் வசனங்களை மற்ற எவரை விடவும் மிகவும் நன்கு அறிந்து புரிந்து நடந்தவர்களில் முதலிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தான்! ஆனால் நபிகளார் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஓதி வீட்டின் மூலைகளில் தெளிக்கச் சொல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்படும் போது படைத்தவனிடம் முறையிடச் சொல்லியுள்ளார்கள். பொறுமையை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார்கள். தவறுகளை களையச் சொல்லியுள்ளார்கள். நோய்களுக்கு மருத்துவம் செய்யச் சொல்லியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய வசனமும் இறையச்சதுடன் நடந்து கொள்ளுமாறு தான் வழிகாட்டுகிறதே தவிர திருக்குர்ஆனை ஓதி தண்ணீர் தெளிக்கச் சொல்லவில்லை. தலாக் அத்தியாயத்தில் தலாக்கின் வழிகாட்டுதல் இருக்கிறதே தவிர இதை ஓதி வந்தால் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என்பது கூறப்படவில்லை. திருக்குர்ஆன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி மார்க்கம் அங்கீகரிக்காத செயல்களை உருவாக்கி, பணம் பார்க்கும் இவர்களைப் போன்றவர்களிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Apr 2008

குடும்பக் கட்டுப்பாடு ???

? பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். ஆனால் தற்சமயம் மார்க்கத்தில் இது அனுமதி இல்லை என்று தெரிந்த பிறகு மிகவும் வருத்தப்படுவதாக கூறுகிறார். இவர் தவ்பா செய்தால் அவரின் தவறு மன்னிக்கப்படுமா? அல்லது பாவமான காரியத்தை செய்தவராகக் கருதப்படுவரா?


மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களை, அவை பாவம் என்று தெரிந்த பின்னர் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு, தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)

உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 6:54)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான்.அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:119)

? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா? சர்மிளா, மதுரை

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)

அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

--> Q/A Dheengula Penmani Apr 2008

ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா?

? ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா? ஜின்கள் தன்னை மூச்சுத் திணற அமுக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு நடக்குமா?


ஜின் என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள்.

வானங்களுக்குச் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்களாக திருக்குர்ஆன் ஜின்களைப் பற்றிக் கூறினாலும் மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும், அடிக்கும், உதைக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மனிதர்களின் எண்ணங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் இறைக் கடமைகளை நிறைவேற்றா வண்ணம் இடையூறுகளை ஏற்படுத்தும்.

மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டு, மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

(அல்குர்ஆன் 114:1-6)

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காகத் திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்வாசலின் தூண்கல் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (3423), முஸ்லிம் (4862)

மனிதனுக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் தீங்கு செய்யும் என்பதற்கு திருகுர்ஆன், நபிமொழிகளில் ஆதாரங்கள் இல்லை.

--> Q/A Dheengula Penmani Apr 2008

டி.வி.யில் சினிமா, நாடகம், நாட்டியம் ??

? ஒருவர் ஹஜ், உம்ரா செய்துள்ளார். ஐவேளைத் தொழுகைகையும் நிறைவேற்றுகிறார். ஆனால் (டி.வி.யில்) சினிமா, நாடகம், நாட்டியம், ஆடல், பாடல், காமெடி என்று ஒன்று விடாமல் விழித்திருந்து பார்க்கிறார். இவ்வாறு செய்வது கூடுமா?


சினிமா, நாடகங்கள் போன்றவைகளில் ஆபாசமான அருவருக்கத்தக்க ஏராளமான காரியங்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 6:151)

வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருது வதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ் வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 7:33)

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6243)

வெட்கக்கேடான செயல்களைத் தான் முழுக்க முழுக்க சினிமாவும் நாடகங்களும் காட்டுகின்றன. அவற்றை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினால் தான் இறை நினைவுகளில் நாம் இருக்க முடியும். இதில் கொஞ்ச நேரத்தைத் தான் செலவழிக்கிறோம் என்று இறங்கினால் நாம் அதில் மூழ்கி இறுதியில் இறை நினைவை முற்றிலும் இழக்க நேரிடும்.

ஹஜ், உம்ரா போன்ற நற்காரியங்களைச் செய்து பாவக் கறையை நீக்கியவர்கள் மீண்டும் பாவச் சுமையை சுமக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Apr 2008

திருக்குர்ஆன் பகரா அத்தியாயத்தின் 54வது வசனத்தில் ??

? திருக்குர்ஆன் பகரா அத்தியாயத்தின் 54வது வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் கூட்டத்தைப் பார்த்து, உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள் என்று இடம் பெறும் வசனத்தின் விளக்கமாக பி.ஜே. அவர்களின் மொழிபெயர்ப்பில் கடுமையான கோபம் வரும் போது செத்துத் தொலையுங்கள் என்று கூறுவது மனிதரின் இயல்பு! அது போன்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில் பக்கம் 165, 167ல் வேறுவிதமாக இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு ஜரீர், சுயூத்தி, இப்னு இஸ்ஹாக் ஆகியோர் வேறு விதமான விளக்கத்தைத் தந்துள்ளார்களே! இவற்றில் எது சரி?


திருக்குர்ஆனின் பெரும்பான்மையான வசனங்களுக்கு அதன் நேரடிப் பொருளிலேயே நாம் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம். சில வசனங்களுக்கு வேறு சில வசனங்கள் அதற்கு விளக்கமாக அமைந்திருக்கும்.

சொர்க்கத்தில் இருந்த ஆதம் (அலை) அவர்கள் குறிப்பிட்ட மரத்தை நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். ஆனால் ஷைத்தானின் சதிவலையில் சிக்கிய ஆதம் (அலை) அவர்கள் இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்தார்கள். பின்னர் அவர்கள் சில வார்த்தைகளைக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டு இறை மன்னிப்பைப் பெற்றார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:37)

ஆதம் (அலை) அவர்கள், இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட வார்த்தைகள் எவை? என்று இந்த வசனத்தில் கூறப்படவில்லை. அந்த வார்த்தைகளை ஏழாவது அத்தியாயத்தின் 23வது வசனம் தெளிவுபடுத்துகிறது.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)

இதைப் போன்று சில வசனங்களின் விளக்கங்கள் வேறு சில வசனங்களில் இடம் பெற்றிருக்கும்.

சில வசனங்களின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர் (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே! என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் (3834)

இதைப் போன்று நபிகளாரின் விளக்கங்கள் மூலம் தெளிவுபெறும் வசனங்களும் உள்ளன. வேறு சில வசனங்கள் அன்றைய அரபு மக்கள் பயன்படுத்திய முறையை வைத்துக் கொண்டும் விளங்கலாம். ஏனெனில் இது அரபி மொழியில் மக்கள் விளங்குவதற்காக இறக்கப்பட்டுள்ளதால் அந்த மக்கள் ஒரு வார்த்தையை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் விளங்கலாம்.

இந்த அடிப்படையை வைத்து விளங்கும் வசனங்களில் உள்ளது தான் மூஸா (அலை) அவர்கள் பயன்படுத்திய உங்களையே கொன்று விடுங்கள் என்ற வாசகமும்.

பல விரிவுரையாளர்கள் இதற்கு நேரடியான பொருளையே கொடுத்துள்ளனர். பொதுவாக எந்த வசனத்திற்கும் நேரடியான பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்றாலும் மற்ற வசனங்களுக்கு மாற்றமாக வரும் போது இதற்கு வேறு விதமான பொருளை அரபியர்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனம் நேரடியான பொருள் செய்யத் தடுக்கிறது. மேலும் தற்கொலை செய்தால் நிரந்தரமான நரகம் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ் தடை செய்த முறையை இறைத்தூதர் கூற மாட்டார். எனவே இதற்கு வேறுவிதமான பொருள் இருக்கிறதா என்று நாம் பார்க்கும் போது இதற்கு வேறுவிதமான பொருளையும் அரபியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

தப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத் என்ற திருக்குர்ஆன் விளக்கவுரை நூலில் இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதும் போது இதற்கு மூன்று விதமான பொருளைத் தருகின்றனர். 1. அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். 2. அவர்கள் அனைவரும் தாமாகக் கொல்லப்படுவதற்கு முன்வர வேண்டும். 3. அவர்களையே அவர்கள் இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் மூன்றாவது பொருளில் நபிகளார் காலத்தில் மிகப் பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் அவர்களின் கவிதையில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றையும் அந்த நூலாசிரியர் தருகிறார். இந்த மூன்று கருத்துக்களில் இறுதியாகக் கொடுத்த கருத்தே மற்ற திருக்குர்ஆன் வசனங்களுக்கும் நபிமொழிக்கும் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே, உங்களை நீங்களே கொல்லுங்கள் என்பதற்குத் தமிழ் நடையில், செத்துத் தொலையுங்கள் என்ற கருத்து தரப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உட்பட பலர் இதற்கு மாற்றமாக வேறு விதமான கருத்துக்கள் கூறியிருப்பதால் நமது கருத்தைப் புறக்கணிக்க முடியாது. காரணம், ஏராளமான வசனங்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்துக்கு மாற்றமாகப் பல ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். உதாரணமாக 2:44 வசனத்திற்கு கதாதா அவர்கள் ஒரு விளக்கத்தையும், இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு விளக்கத்தையும், அப்துர்ரஹ்மான் பின் அஸ்லம் அவர்கள் ஒரு விளக்கத்தையும் கூறியுள்ளதை தப்ஸீர் இப்னு கஸீரில் (தமிழில்) 148,149வது பக்கத்தில் பார்க்கலாம். இப்படி ஏராளமான சான்றுகளை நாம் எடுத்துக் காட்டலாம். எனவே சரியான கருத்து எது? என்பதைப் பார்த்தே எதையும் முடிவு செய்ய வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Mar 2008

மார்க்கத்தின் அடிப்படையில் பெண் பார்க்கும் போது ??

? பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா? தொழத் தெரியுமா? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?


இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)

இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

... நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள்.

நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உஸாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2953)

--> Q/A Dheengula Penmani Mar 2008

ஃபஜ்ர், அஸர் தொழுகைக்குப் பின்னால் தஸ்பீஹ்...???

? பள்ளிவாசலில் ஃபஜ்ர், அஸர் தொழுகை முடிந்த உடன் துஆ ஓதாமல் தஸ்பீஹ் செய்து விட்டு துஆ ஓதுகிறார்கள். பின்னர் கலிமாவும் ஸலவாத்தும் ஓதுகிறார்கள். ஆனால் மற்ற தொழுகையில் தஸ்பீஹ் ஓதுவதில்லை. இது சரியான முறையா?


ஐவேளைத் தொழுகைக்குப் பின்னால் பல திக்ருகளைக் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் அனைத்தையுமோ அல்லது சிலதையோ நாம் கூறிக் கொள்ளலாம். ஆதாரப்பூர்வமான தொகுப்புகளில் வந்துள்ளவற்றில் சிலதைத் தருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை (அல்லாஹு அக்பர் என்ற) தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம் 1022

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,

(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்

(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 1037

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 1039

அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅதாபில் கப்ர்.

(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் (ரலி), நூல்: புகாரீ 6390, 2822

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்

(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1041

யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறி விட்டு, நூறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1048

மேற்கூறப்பட்ட அனைத்தும் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.

ஆனால் ஃபஜ்ர், அஸர் தொழுகைக்கு என்று தனியான திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.

ஃபஜ்ர், மற்றும் அஸர் தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்ட திக்ருகள் செய்வதற்குப் பின்வரும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கவனத்தில் கொண்டு செய்திருக்கலாம்.

உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும் மாலையிலும் துதிப்பீராக! என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:41)

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகின்றார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகின்றார்கள். பிறகு, அல்லாஹ் -அவனோ மிகவும் அறிந்தவன்- அவர்கடம், (பூமியிலுள்ள) என் அடியார் களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்கடம் நாங்கள் சென்றோம் என்று பதிலப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3223)

திருக்குர்ஆன் காலையிலும் மாலையிலும் திக்ர் செய்யுமாறு கட்டளையிடுவதாலும், பகல் நேர, இரவு நேர வானவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரமாகவும் இறைவன் விசாரிக்கும் நேரமாகவும் ஃபஜ்ர், அஸர் தொழுகைகள் இருப்பதால் இந்த நேரங்களில் திக்ர் செய்தால் இறைவனிடம் நற்பெயர் எடுக்க முடியும் என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம்.

ஆனால் இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யவில்லை. எல்லாத் தொழுகைக்குப் பிறகும் திக்ர் செய்துள்ளார்கள். அவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.

அடுத்து, ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு, சப்தமிட்டு திக்ர் செய்வதற்கும் கூட்டாக துஆச் செய்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லாததுடன், சப்தமிடாமல் திக்ர் மற்றும் துஆச் செய்யவேண்டுமென்றே திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

--> Q/A Dheengula Penmani Mar 2008