பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, November 21, 2017

பெண்கள் எப்படி ஹிஜாப் போட வேண்டும்?


பெண்கள் எப்படி ஹிஜாப் போட வேண்டும்? ஹிஜாப் கருமை நிறத்தில்தான் இருக்க வேண்டுமா?நாம் கரும்காக்கை போல் தோற்றம் அளிக்கனுமா?பல வண்ணங்களில் மக்கனா அணியலாமா?

🌹பதில்:🌹

ஹிஜாப் என்பது அன்னிய ஆடவர்களின் பார்வைகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அல்லாஹ் அளித்த ஒன்றாகும்,. இதில் முகம்,முன்னங்கை, அதிகபட்சமாக கால் பாதங்களை தவிர ஏனைய இடங்களை கட்டாயம் மறைக்க வேண்டும். ஹிஜாப் என்ற பெயரில் அணியக்கூடிய ஆடைகள் இறுக்கமாகவோ, மெல்லியதாகவோ, அடுத்தவர்களை தன் பக்கம் இழுக்கக்கூடியதாகவோ இருக்கக்கூடாது.

இது கருமை நிறத்திலும் இருக்கலாம்,மற்ற நிறங்களிலும் இருக்கலாம், ஆனால் அந்த நிறம் மற்றவரை கவரும் விதமாக இருக்கக்கூடாது., அதே போல் மக்கனாவும் அடுத்தவரை கவரும் விதமாக இல்லாமல் இருக்க வேண்டும். கரும் காக்கை போல்தான் இருக்க வேண்டும் என்பதில்லை., அப்படி இருந்தாலும் அது தவறில்லை.

🍁ஆதாரங்கள்:🍁

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்  33:59

📘4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

உருவ பொம்மையை ஷோகேசில் வைக்கலாமா?


உருவ பொம்மையை ஷோகேசில் வைக்கலாமா?
வீட்டின் அறையினுள் வைக்கலாம் என சொல்கின்றார்கள்?
விளக்கம் தரவும்..

🌹பதில்:🌹

உருவ சிலைகளை பொறுத்தவரை மார்க்கம் தடைசெய்திருந்தாலும் பொம்மை வடிவில் குழந்தைகள் வைத்து விளையாடும் பொருட்களுக்கு மார்க்கம் அனுமதியளிக்கிறது! அத்தகையை குதிரை பொம்மை, யானை பொம்மை.. போன்றவற்றை வைத்து விளையாடுவது தவறல்ல..

தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

இதே போன்று மதிப்பு கொடுக்கும் விதமாக உள்ள ஷோக்கேஷில் வைத்து அழகுபார்க்கப்படும் பொம்மைகளும் வைக்கக்கூடாது. இத்தகைய தேவையற்ற செயல்களை செய்வதை காட்டிலும்.. ஷோக்கேஷில் திருக்குர்ஆன்,நபிமொழி.. போன்றவற்றை வைப்பதன் மூலம் தானும் அதை படித்து பிறரையும் படிக்க தூண்டும்படியான நன்மை மிக்க காரியங்களை செய்யலாம்..

🍁ஆதாரங்கள்:🍁

3225حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ رواه البخاري

"எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்' என்பது நபிமொழி. அபுதல்ஹா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3225), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

6130حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي رواه البخاري

"நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களை திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

இது புகாரி (6130), முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

4284حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில்  கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அபூதாவூதில் (4283) இது இடம் பெற்றுள்ளது.

6109حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ فَقَالَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு "ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, (6109) முஸ்லிம், முஅத்தா, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உருவப்படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

2479حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا رواه البخاري

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

புகாரி (2479), முஸ்லிம் அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.

3627حَدَّثَنَا أَبُو صَالِحٍ مَحْبُوبُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَقَ عَنْ مُجَاهِدٍ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ لِي أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي فِي الْبَيْتِ يُقْطَعُ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآَنِ وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِذَا الْكَلْبُ لِحَسَنٍ أَوْ حُسَيْنٍ كَانَ تَحْتَ نَضَدٍ لَهُمْ فَأُمِرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو دَاوُد وَالنَّضَدُ شَيْءٌ تُوضَعُ عَلَيْهِ الثِّيَابُ شَبَهُ السَّرِيرِ رواه أبو داود

"சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்'' என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் (3627), திர்மிதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

3935حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ سَتَّرْتُ عَلَى بَابِي دُرْنُوكًا فِيهِ الْخَيْلُ ذَوَاتُ الْأَجْنِحَةِ فَأَمَرَنِي فَنَزَعْتُهُ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ ح و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ عَبْدَةَ قَدِمَ مِنْ سَفَرٍ رواه مسلم

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது முஸ்லிமில் (3935) இடம் பெற்றுள்ளது

நபிமொழி அறிவோம் – 374. “ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இத கண்ட நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் “உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன“ என்று கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

நபிமொழி அறிவோம் – 2479. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின் உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

Friday, November 17, 2017

பெல்ஜியம்_நாட்டவர்_நேரத்தைக்_கணித்து_தொழுவது_சரியா

#தொழுகை

#பெல்ஜியம்_நாட்டவர்_நேரத்தைக்_கணித்து_தொழுவது_சரியா?

நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன். இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம், இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி நேரத்தைப் பின்பற்றி நோன்பு திறத்தல் மற்றும் மக்ரிப் தொழுகையை அமைத்துக் கொள்கிறார்கள். ரமலான் அல்லாத நேரத்தில் கோடையில் மக்ரிப் தொழுகையை இரவு பத்து மணிக்கும, மக்ரிப் முடிந்த உடனே இஷா தொழுகையையும் நடத்துகிறார்கள். குளிர் காலம் என்றால் மக்ரிப் தொழுகை மாலை நான்கு மணிக்கும், இஷா இரவு ஏழு மணிக்கும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இவர்கள் செய்வது சரியா? இது போன்ற நாடுகளில் தொழுகை மற்றும் நோன்பை எந்த நேரப்படி பின்பற்றுவது? தெளிவான விளக்கம் தேவை.

#ஆதம் முஹம்மத்.பெல்ஜியம்.

#பதில் :

தொழுகை, நோன்பு ஆகிய இரு வணக்கங்களையும் எந்த நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் தெளிவாகக் கூறியுள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கம் கூறியுள்ள நேரங்களைத் தவிர்த்து நமது வசதிக்கேற்ப வேறு நேரங்களைத் தேர்வு செய்யக் கூடாது.

தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا(103)4

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

தொழுகையைப் பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும், கடமையான தொழுகைகளை குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1027 حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “தொழுகையை அதன் நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். நான் (அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1340

தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்.

528حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள்.

நூல் : புகாரி 527

தொழுகை நேரங்கள்

சுப்ஹுத் தொழுகையின் நேரம்

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரத்திலிருந்து சூரியன் உதிக்கத் துவங்கும் வரை உண்டு.

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1075

லுஹர் தொழுகையின் நேரம்

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு. அதாவது சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் வரை லுஹர் நேரம் நீடிக்கும்.

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகி அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1075

அஸ்ர் தொழுகையின் நேரம்

அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து அதாவது சூரியன் உச்சி சாய்ந்து 80 நிமிடங்கள் கடந்துவிட்டால் அப்போதிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை அஸர் நேரமாகும்.

ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 138

அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1076

மக்ரிப் தொழுகையின் நேரம்

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1076

இஷா தொழுகையின் நேரம்

சூரியன் மறைந்து செம்மேகமும் மறைந்துவிட்டால் இஷாத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகி விடுகின்றது.

இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1074

தினமும் பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிக்கிறது. ஆறுமாதம் பகலாகவும் ஆறுமாதம் இரவாகவும் உள்ள பகுதிகளில் தான் கணித்துக் கொள்ளலாம். பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிப்பது, மறைவது, உச்சி சாய்வது ஆகிய நிலைகளை வைத்து தொழுகை நேரங்களை முடிவு செய்ய முடியும். ஒரு பருவத்தில் தொழுகை நேரம் நீண்ட நேரம் நீடிப்பதாலும், மற்றொரு பருவத்தில் குறைந்த நேரம் இருப்பதாலும் பிரச்சனை இல்லை. மேற்கண்ட நேரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இதற்கு மாற்றமாக சவூதி நேரங்களை அடிப்படையாகக் கொண்டு தொழுகை முறைகளை அமைத்துக் கொள்வது குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் எதிரான போக்காகும்.

நோன்பின் நேரம்

சுப்ஹ் நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் முழுமையாக மறைகின்ற வரை நோன்புடைய நேரமாகும். பெல்ஜியம் நாட்டில் சுப்ஹ் நேரம் எப்போது வருகின்றது? சூரியன் எப்போது மறைகின்றது? என்பதைக் கவனித்து நோன்பு நோற்க வேண்டும்.

குளிர் காலங்களிலும் கோடை காலங்களிலும் இரவு பகலுடைய நேரங்கள் வித்தியாசப்படும். கோடை காலங்களில் பகற்பொழுது 14 மணி நேரமாக இருந்தாலும் 14 மணி நேரம் நோன்பு நோற்க வேண்டும்.

நேரம் கூடுகிறது என்பதற்காக சூரியன் மறைவதற்கு முன்பே நோன்பு திறந்துவிட்டால் அந்த நோன்பு ஏற்கப்படாது. அதே போன்று குளிர் காலங்களில் பகற்பொழுதின் நேரம் குறையும். இதற்காக சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் தாமதப்படுத்துவது கூடாது. பகல் நீண்டாலும் சுருங்கினாலும் சூரியன் மறைவதைக் கணக்கில் கொண்டு நோன்பு துறக்க வேண்டும். இதற்கு மாற்றமாக சவூதியில் சூரியன் மறையும் நேரத்தைக் கணக்கில் கொண்டு நோன்பு துறந்தால் அது நோன்பாக அமையாது.

துருவப்பிரதேசத்தில் ஆறுமாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். இவர்கள் தினமும் சூரியன் உதிப்பதையோ, மறைவதையோ, உச்சி சாய்வதையோ காண முடியாது.

இவர்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிட்டு அந்த நேரத்துக்குள் ஐந்து நேரத் தொழுகைகளைக் கணித்துக் கொள்ளலாம். அது தான் அவர்களுக்குச் சாத்தியமாகும்.

ஆறு மாதம் இரவாக இருக்கும் போது இரவிலேயே அவர்கள் லுஹர், அஸர் தொழுகைகளைத் தொழுவார்கள். ஆறு மாதம் பகலாக இருக்கும் போது பகலில் அவர்கள் சுப்ஹு, மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுவார்கள்.

இதற்கான ஆதாரம் வருமாறு

….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும், ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்கள் ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது.

அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.

சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான்.

இது போன்ற நிலை பெல்ஜியத்தில் இல்லாத போது சவூதி நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வணக்கங்கள் செய்தால் அவை இறைவனால் ஏற்கப்படாது.