பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, November 17, 2017

வித்ர்_குனூத்தில்_கைகளை_உயர்த்த_வேண்டுமா

#தொழுகை

#வித்ர்_குனூத்தில்_கைகளை_உயர்த்த_வேண்டுமா?

#பதில்_இல்லை.

குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

#வித்ர்_மூன்றாம்_ரக்அத்திற்கு_கைகளை_உயர்த்த_வேண்டுமா?

#பதில்_ஆம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : நாஃபிவு
புகாரி 739

No comments:

Post a Comment