பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, November 17, 2017

தஹஜ்ஜத்_தொழுகையின்_நேரம்_எது

#தொழுகை

#தஹஜ்ஜத்_தொழுகையின்_நேரம்_எது?

#பதில்

#இஷாக்கு_பிறகு_பஜர்_முன்னர்_வரை

வித்ர் பஜ்ருக்கு பிறகும்.

ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸாயீ 1588

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216

இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது. எனவே இரவு முழுவதும் இரவுத் தொழுகை தொழுவதற்கான நேரங்களாகும். நாம் விரும்பிய நேரத்தில் தொழுது கொள்ளலாம்.

வித்ர் தொழுகையை பஜ்ருக்கு பிறகும் தொழலாம்.

”நபியவர்கள் (வித்ரு தொழாமல்) உறங்கி விட்டால் சூரியன் உதயமான பின்னரும் தொழுவார்கள்”
நஸயீ 1667

No comments:

Post a Comment