ஹய்யாலஸ்ஸலாத் சரியா ஸலாஹ் சரியா
ஹய்ய அலஸ்ஸலாத் என்பது சரியா ஹய்ய அலஸ்ஸலாஹ் என்பது சரியா?
அரபு மொழியில் ة (குண்டு தா) என்ற எழுத்து ஒரு சொல்லின் இறுதியில் இருந்தால் அதற்கு இரண்டு விதமான உச்சரிப்பு உண்டு.
அதாவது அதைத் தொடர்ந்து வேறு சொல்லைச் சேர்க்காமல் அதுவே அந்த வாக்கியத்தின் கடைசியாக இருந்தால் அதை ஹ் என்று உச்சரிக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து வேறு சொற்கள் சேர்க்கப்பட்டால் அப்போது த் என்ற சப்தம் வருமாரு உச்சரிக்க வேண்டும்.
உதாரணமாக الصلاة جامعة அஸ்ஸலாது ஜாமியா(ஹ்) என்பதைக் கவனியுங்கள். இதில் அஸ்ஸலாது என்பதிலும் ஜாமிஆ என்பதிலும் அரபு மூலத்தில் ة என்ற எழுத்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் சொல்லுடன் வாக்கியத்தை முடிக்காமல் அத்துடன் ஜாமிஆ என்ற சொல்லை இணைப்பதால் அதை தா உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். அஸ்ஸலாது என்று கூற வேண்டும்.
ஆனால் ஜாமிஆ என்பதற்குப் பின் வேறு சொல்லைச் சேர்க்காமல் அதுவே கடைசியாக இருப்பதால் ஜாமிஅது எனக் கூறாமல் ஜாமிஆ(ஹ்) என்று கூற வேண்டும்.
பெண்களின் பெயர்களின் கடைசியில் பெரும்பாலும் இந்த எழுத்து இருக்கும்.
عائشةஆயிஷது என்று கூறாமல் ஆயிஷா(ஹ்) என்று கூறுவது இதன் அடிப்படையில் தான்.
ஹய்ய அலஸ்ஸலா(ஹ்) என்று முடிப்பதால் அதன் பின் வேறு சொல்லைச் சேர்க்காததால் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறுவது தான் சரி.
இதே சொல்லை இன்னொரு சொல்லுடன் சேர்த்து الصلاة والسلام
அஸ்ஸலாது வஸ்ஸலாமு என்று கூறினால் அஸ்ஸலாது உச்சரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment