எச்சரிக்கையூட்டும் நபிமொழி
நபிமொழி-56
மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ: رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ، وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ العَصْرِ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ، وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ: اليَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; பார்க்கவும் மாட்டான் வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக பொய் சத்தியம் செய்தவன். 2. (சந்தை கூடும் நேரமான) அஸருக்குப் பின் ஒரு முஸ்லிடைய செல்வத்தை அபகரிக்க பொய் சத்தியம் செய்தவன். 3. தன் தேவைக்கு மேல் உள்ள தண்ணீரை தடுத்தவன். (மறுமையில்) அவனை நோக்கி, ‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரில் மிஞ்சியதை மக்களுக்கு தடுத்ததைப் போல் இன்று எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்’ என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2369
நபிமொழி-57
அறியாமைக்கால செயல்கள்
حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ، لَا يَتْرُكُونَهُنَّ: الْفَخْرُ فِي الْأَحْسَابِ، وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ، وَالْاسْتِسْقَاءُ بِالنُّجُومِ، وَالنِّيَاحَةُ ” وَقَالَ: «النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا، تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ، وَدِرْعٌ مِنْ جَرَبٍ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தில் உள்ள நான்கு செயல்கள் அறியாமைக் கால செயல்களாகும். மக்கள் அவற்றைக் கைவிட மாட்டார்கள். 1 குலப்பெருமை பேசுவது பரம்பரையைப் பழிப்பது, 3. கிரகங்களால் மழை பொழியும் என கருதுவது 4. ஒப்பாரி வைத்து அழுவது, ஒப்பாரி வைக்கும் பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோராவிட்டால் மறுமையில் தாரில் ஆன கீழாடையும் சொறி சிரங்குச் சட்டையும் அணிந்தவளாக எழுப்பப்படுவாள்
அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-1700
நபிமொழி-58
பூமியில் புதைந்து போன மனிதர்
حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الخُيَلاَءِ، خُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ القِيَامَةِ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒரு மனிதன் தற்பெருமையின் காரணத்தால் தன் கீழங்கியை இழுத்துக் கொண்டே நடந்தான், அவன் (பூமியில்) புதைந்து போனான் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திக் கொண்டேயிருப்பான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி-3485
நபிமொழி-59
தற்பெருமை
عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம்-14
நபிமொழி-60
நரகவாசிகளின் குணம்
قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ: كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் எளியவர்கள் பணிவானவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு கூறினால் அல்லாஹ் அதை நிறைவேற்றுவான். நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தொரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; உடல் கொழுத்தவர்கள், பெருமை அடிப்பவர்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி)
நூல்: புகாரி-6657
No comments:
Post a Comment