#ஹஜ்_உம்ரா
#இஹ்ராம்_ஆடை_அணியும்_முன்பாக_குளித்துவிட்டு_நறுமணம்_பூசுவதற்குப்_பெண்களுக்கும்_அனுமதி_உண்டா?
#பதில்_ஆம்
பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.
பெண்கள் நறுமணம் பூசுவது சம்பந்தமான குறிப்பு
நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment