பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, February 21, 2018

ஹேர்ஆயில்_தைலம்_டைகர்_பாம்_போன்றவை_நறுமணம்_பூசுவதில்_அஅட்ங்குமா

#ஹஜ்_உம்லா

#ஹேர்ஆயில்_தைலம்_டைகர்_பாம்_போன்றவை_நறுமணம்_பூசுவதில்_அஅட்ங்குமா?

வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா?

#பதில்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1839

இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம்.

நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் “அல்மலல்’ எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் “அர்ரவ்ஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) “இஹ்ராம்’ கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2089

இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment