பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, October 28, 2020

கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா

*கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா❓*

பெண்களின் திருமணத்துக்கு முன்னால் அவர்களின் *தந்தையர்களின் இன்ஷியலே அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படும்*. 

திருமணம் ஆன பின் அவர்களுடைய *கணவனின் இன்ஷயல் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் போடப்படும்.* நவீன காலத்தில் இப்படி ஒரு நடைமுறை மக்களிடையே இருந்து வருகின்றது.

திருமணத்துக்குப் பிறகு கணவனின் இன்ஷியலைப் போடுவது கணவன் தந்தையாகி விடுகிறான் என்ற பொருளில் இல்லை. மாறாக அவளுக்கு அவனே முழு பொறுப்பாளியாக இருக்கின்றான் என்ற கருத்தில் இவ்வாறு போடப்படுகின்றது.

இந்த செயல்பாட்டில் மார்க்கத்திற்கு மாற்றமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை.

*ஆயிஷா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்களைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் போது தந்தையின் பெயரைக் கூறாமல் நபியின் மனைவி என்றே குறிப்பிடட்டுள்ளனர்*. 

பார்க்க *புகாரி 103, 184, 248, 327, 328, 334, 382, 467, 513, 515, 833, 902,*

புகாரியில் ஆயிரம் ஹதீஸ்களில் மட்டும் தேடிப் பார்த்த வகையில் ஆயிஷா ரலி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா இடங்களிலும் தந்தையின் பெயர் கூறாமல் கண்வர் பெயரே கூறப்பட்டுள்ளது. 

இது போல் மைமூனா (ரலி) அவர்கள் சில இடங்களில் தந்தையின் பெயருடன் கூறப்பட்டாலும் 183, 249, 333, 337 ஆகிய ஹதீஸ்களில் நபியின் மனைவி என்றே கூறப்பட்டுள்ளனர். 

இது போல் பரவலாக இந்தப் பழக்கம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது

*எனவே உலகத் தேவைக்காக இவ்வாறு செய்வது தவறல்ல.*

ஏகத்துவம்

No comments:

Post a Comment