ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?
அகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா?
ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.
سنن أبي داود
2838 – حدَّثنا ابنُ المُثنَّى، حدَّثنا ابنُ أبي عَديٍّ، عن سعيدٍ، عن قتادةَ، عن الحسنِ عن سمرةَ بن جُندب، أن رسولَ الله – صلَّى الله عليه وسلم – قال: "كلُّ غلامٍ رَهينةٌ بعقيقتِه: تُذبَح عنه يومَ سابعِه، ويُحلَقُ، ويُسمَّى"
ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்
ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா? ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா? ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் எழலாம்.
இந்த மூன்று காரியங்களில் அகீகா மட்டும் தான் வணக்கம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. எனவே வனக்கத்தை மார்க்கம் குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும்.
மற்ற இரு காரியங்களையும் ஏழாம் நாளில் செய்தால் தான் அது நபி வழியைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். பெயர் சூட்டுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அந்த அவசியம் கருதி மற்ற நாட்களிலும் பெயர் வைக்கலாம். முடியைக் களைவதும் அவசியமான ஒன்று. அதை ஏழாம் நாள் தவற விட்டால் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் ஏழாம் நாளில் செய்த சுன்னத் என்ற நன்மை கிடைக்காது.
குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாட்களில் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.
المعجم الصغير للطبراني
723 – حَدَّثَنَا عَيَّاشُ بْنُ مُحَمَّدٍ الْجَوْهَرِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْخَفَّافُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ: «الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , أَوْ أَرْبَعَ عَشْرَةَ , أَوْ أَحَدَ وَعِشْرِينَ» لَمْ يَرْوِهِ عَنْ قَتَادَةَ إِلَّا إِسْمَاعِيلُ تَفَرَّدَ بِهِ الْخَفَّافُ
அகீகாவிற்காக ஏழாம் நாள், பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், தப்ரானீ-ஸகீர், பைஹகீ
இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார்.
تهذيب الكمال في أسماء الرجال
(483) – ت ق: إِسْمَاعِيل بن مسلم مكي، أَبُو إِسْحَاق البَصْرِيّ
وَقَال عَمْرو بْن علي : كان يحيى وعبد الرحمن لا يحدثان عن إِسْمَاعِيل المكي وَقَال صالح بْن أَحْمَد بْن حنبل ، عَنْ علي ابن المديني: سمعت يحيى، يعني القطان – وسئل عن إِسْمَاعِيل بْن مسلم المكي، قيل لَهُ: كيف كَانَ فِي أول أمره؟ قال: لم يزل مخلطا، قال: يحَدَّثَنَا بالحديث الواحد على ثلاثة ضروب.
وَقَال محمد بن جعفر ابن الإمام (1) . عن إِسْحَاق بْن أَبي إسرائيل: سمعت سفيان يقول: – وذكر إِسْمَاعِيل بْن مسلم – فَقَالَ: كَانَ يخطئ فِي الْحَدِيث، جعل يحدث فيخطئ، أسأله عن الْحَدِيث، من حديث عَمْرو بْن دينار، فلا يدري إن كَانَ علمه أيضا لما سمع منه الْحَدِيث كما رأيته، فما كَانَ يدري شيئا.
وَقَال أَبُو طالب: قال أَحْمَد بْن حنبل: إِسْمَاعِيل بْن مسلم المكي منكر الْحَدِيث. وَقَال عَبد اللَّهِ بْن أَحْمَد بْن حنبل : سمعت أبي يقول: إِسْمَاعِيل بْن مسلم المكي ما روى عن الحسن فِي القراءات، فأما إذا جاء إِلَى مثل عَمْرو بْن دينار، وأسند عنه بأحاديث مناكير، ليس أراه بشيءٍ – فكأنه ضعفه – ويسند عن الحسن عن سَمُرَة بأحاديث مناكير.
وَقَال عَباس الدُّورِيُّ ، عن يَحْيَى بْن مَعِين: إِسْمَاعِيل بْن مسلم المكي ليس بشيءٍ. وكذلك قال عثمان بْن سَعِيد الدارمي ، وأبو يَعْلَى الموصلي ، عن يَحْيَى وَقَال مُحَمَّد بْن أَحْمَدَ بْن البراء وأبو الْعَبَّاس القرشي ، عن علي ابن المديني: إِسْمَاعِيل بْن مسلم المكي لا يكتب حديثه.
وَقَال عَمْرو بْن علي : إِسْمَاعِيل المكي يحدث عنه أهل الكوفة: الأعمش وإسماعيل بْن أَبي خَالِد، وجماعة ، وكَانَ ضعيفا فِي الْحَدِيث، يهم فيه، وكَانَ صدوقا يكثر الغلط، يحدث عنه من لا ينظر فِي الرجال. وَقَال إِبْرَاهِيم بْن يعقوب السعدي : إِسْمَاعِيل بْن مسلم واهي (الْحَدِيث) جدا وَقَال أَبُو زُرْعَة : وهو بصري سكن مكة، ضعيف الْحَدِيث.
وَقَال أيضا : سَأَلتُ أبي عن إِسْمَاعِيل بْن مسلم العبدي، فَقَالَ: هُوَ ضعيف الْحَدِيث مختلط ، قلت لَهُ: هُوَ أحب إليك أو عَمْرو بْن عُبَيد؟ فَقَالَ: جميعا ضعيفان، وإسماعيل هُوَ ضعيف الحديث، ليس بمتروك، ييكتب حديثه.
تركه يحيى وابن المهدي، وتركه ابن المبارك، وربما ذكره
وَقَال النَّسَائي : إِسْمَاعِيل بْن مسلم يروي عن الزُّهْرِيّ. متروك الْحَدِيث. وَقَال فِي موضع آخر: ليس بثقة
இவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்களை எழுதக்கூடாது என்று இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் அதிகமாக தவறாக அறிவிப்பவர் என்று பல்லாஸ் குறிப்பிடுள்ளார்கள். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ குறிப்பிட்டுள்ளார்கள். இவரை யஹ்யா, இப்னு மஹ்தீ ஆகியோர் (பொய்யர் என்பதால்) விட்டு விட்டார்கள் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளளார்கள். இவருடைய ஹதீஸ்கள் பாதுகாப்பானவை அல்ல என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர், அறிவிப்பாளர் வரிசையை மாற்றும் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுல் கமால்
எனவே ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஏழாம் நாள் மட்டுமே அகீகா கொடுக்க வேண்டும்.
அந்த நாளில் கொடுக்க வசதியில்லாமல் போனால் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டியதில்லை. இது கட்டாயமான வணக்கம் அல்ல. வசதி உள்ளவர்கள் செய்ய வேண்டிய சிறந்த வணக்கமாகும்.
வசதியில்லாதவர்கள் இதற்காக சிரத்தை எடுத்து விடக் கூடாது என்பதற்காக ஏழாம் நாளில் கொடுக்க வசதி இருந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேறு நாளில் கொடுக்க அதிக சிரமம் எடுக்காதீர்கள் என்று எளிமையான வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.
இறைவா எனக்கு நீ வசதியைத் தந்து இருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment