பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, February 24, 2011

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா
ஹஜ்ஜு
அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா ?ஹதீஸைக் குறிப்பிடவும்
:
ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழ முடியும். இதைத் தவிர உள்ள மற்ற அனைத்துப் பயணங்களிலும் தொழுகையை நான்காகத் தான் நிறைவேற்ற வேண்டும் என்று ஹனஃபீ மத்ஹப் நூற்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்ப்பு குர்ஆன் வசனத்துக்கும் பல நபிமொழிகளுக்கும் எதிராக அமைந்துள்ளது. ஹஜ் பயணம் மட்டுமின்றி பொதுவாக ஒருவர் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களிலும் பயணத்துக்கான காரணம் எதுவாக இரந்தாலும் அவர் தனது பயணத்தில் சுருக்கித் தொழலாம் என்றே மார்க்கம் கூறுகின்றது. இவர்கள் கூறுவது போன்று ஹஜ் பயணத்தில் மட்டும் தான் இச்சட்டம் என மார்க்கம் வேறுபடுத்தவில்லை. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنْ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمْ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا(101)4
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் (4 : 101)
பொதுவாக பூமியில் பயணம் மேற்கொண்டால் இச்சலுகை பயணம் செய்வருக்கு உண்டு என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ள பின்வரும் செய்தியும் இதையே உறுதிப்படுத்துகின்றது.
1108 عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنْ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمْ الَّذِينَ كَفَرُوا فَقَدْ أَمِنَ النَّاسُ فَقَالَ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا رواه مسلم
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :    
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறை மறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும் போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை'' (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே? என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது "(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (1222)
அனைத்துப் பயணங்களுக்கும் இச்சலுகை பொருந்தும் என்றே பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
1109 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَبُو الرَّبِيعِ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ اللَّهُ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً روا ه مسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும் போது நான்கு ரக்அத்களாகவும், பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்."
முஸ்லிம் (1223)
ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்தை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்  நூல்: முஸ்லிம் 1230
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் அன்றி வேறு பயணம் செய்தவர்களுக்கும் இச்சலுகையை வழங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
2233 أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ عَنْ أَبِيهِ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا تَنْتَظِرُ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ قُلْتُ إِنِّي صَائِمٌ فَقَالَ تَعَالَ أُخْبِرْكَ عَنْ الْمُسَافِرِ إِنَّ اللَّهَ وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ رواه النسائي
அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ;
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகை தந்தேன். அவர்கள் என்னிடம் அபூ உமய்யாவே காலை உணவு உமக்குத் தேவையில்லையா? என்று கேட்டார்கள். நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் எனப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் பயணியைப் பற்றி(ய சட்டத்தை) உனக்கு நான் விவரிக்கின்றேன். பயணத்தில் உள்ளவர் நோன்பை விடுவதற்கும் தொழுகையில் பாதியைக் குறைத்து (சுருக்கி)த் தொழுவதற்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.
நஸாயீ (2233)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த நபித்தோழர் நபியவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவிற்கு வருகிறார். இவருக்கு தொழுகையைச் சுருக்கித் தொழ அனுமதியுண்டு என்ற விபரத்தை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போர்ப் பயணங்களில் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
1046 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ قَالَ أَبُو دَاوُد غَيْرُ مَعْمَرٍ يُرْسِلُهُ لَا يُسْنِدُهُ رواه أبو داود
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கியிருந்த போது (நான்கு ரக்அத்) தொழுகையை (இரண்டு ரக்அத்களாக) சுருக்கித் தொழுதார்கள்.
அபூதாவுத் (1046)
1042 حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ عَامَ الْفَتْحِ خَمْسَ عَشْرَةَ يَقْصُرُ الصَّلَاةَ قَالَ أَبُو دَاوُد رَوَى هَذَا الْحَدِيثَ عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَأَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ وَسَلَمَةُ بْنُ الْفَضْلِ عَنْ أَبِي إِسْحَقَ لَمْ يَذْكُرُوا فِيهِ ابْنَ عَبَّاسٍ رواه أبو داود
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தர்கள். அப்போது அவர்கள் சுருக்கித் தொழுதார்கள்.
அபூதாவுத் (1042)
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொள்வதற்காக செல்கிறார்கள். நபியவர்கள் ஹஜ் செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. ஆயினும் மக்காவில் தங்கியிருந்த நாட்களில் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள்.
எனவே பொதுவாக அனைத்துப் பயணங்களிலும் இச்சலுகையை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகின்றது. ஹஜ் பயணத்திலும் இச்சலுகையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
நூல் முஸ்லிம் (2268?), அபூதாவூத் (1646), அஹ்மத் (4659)
எனவே ஹஜ் பயணம் உட்பட எல்லாப் பயணங்களுக்கும் இச்சலுகை உரியதாகும். ஹஜ் பயணத்துக்கு மட்டும் உரியது எனக் கூறுவது குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிரான கூற்றாகும்

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா


ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?
:
ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உ' எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர்' என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)
நூல்: புகாரி 6124
"அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி             ( 
நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513
3725 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا  رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (3995)
3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே இதைப் பருகுவது கூடாது. ஆனால் இந்த பானம் உடலில் பட்டாலோ ஆடையில் பட்டாலோ அல்லது இதை நுகர்வதாலோ போதை ஏற்படாது.
மேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசணைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.
எனவே ஆல்கஹால் கலந்த வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை மார்க்கம் தடை செய்யவில்லை

ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா??

ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா
நான் அமெரிக்காவில் இருக்கிறேன். எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்மாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்மா
ஜும்மா பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும்.
ஒரு பள்ளியில் இரண்டு ஜமாஅத் நடத்துவது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியம். ஒரு பள்ளியில் ஒரு ஜமாஅத்தைத் தவிர அடுத்த ஒரு ஜமாஅத் நடத்துவது எந்தச் சூழ்நிலையிலும் கூடாது  என்று பொதுவாக பலர் மறுத்து வருகின்றனர்.
ஆனால் இது பற்றி நாம் ஆய்வு செய்யும் போது இரண்டாவது ஜமாஅத்தை முறையாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் அனுமதிப்பதையும் இதை முறைகேடாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் தடை செய்வதையும் அறிய முடிகின்றது.
சரியான அடிப்படையில் ஒரு நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சீர்குலைப்பதற்காகவும் போட்டிக்காகவும் ஜமாஅத் நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். இது போன்ற தவறான நோக்கமின்றி இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கின்றது.
அனுமதிக்கப்பட்ட இரண்டாவது ஜமாஅத்
முதலவாது ஜமாஅத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்தடுத்து கூட்டாகத் தொழுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
10596 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ ثُمَّ جَاءَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ قَالَ فَصَلَّى مَعَهُ رَجُلٌ رواه أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யார்?'' என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி), நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596
ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரைத் தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவரை அவருக்கு ஜமாஅத் நடத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.  அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள்.  "இவருக்கு தர்மம் செய்பவர் யார்?'' என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.
அதாவது ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் நன்மையை தர்மம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.                                                   
ஏற்கனவே தொழுத நபித்தோழர் தனியாகத் தொழுத மனிதருடன் சேர்ந்து கொள்வதால் அந்த மனிதர் ஜமாஅத்துடைய நன்மையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். எனவே இவரை தர்மம் செய்யக் கூடியவர் என்றும் அந்த மனிதரை தர்மத்தைப் பெறக் கூடியவர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுத் தொழுகையால் இருவருக்கும் நன்மைகள் கிடைத்து விடுகின்றன.
எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது
646 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தனியாகத் தொழுவதை விட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் : புகாரி (646)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது அவர் தனியே தொழுவதை விடச் சிறந்ததாகும். ஒருவர் இரு மனிதர்களுடன் சேர்ந்து தொழுவது அவர் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விடச் சிறந்ததாகும். (ஜமாஅத்தில் கலந்து கொள்ளும்) நபர்கள் அதிகமானால் அது மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்விற்கு விருப்பமானதாகும்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நூல் : நஸாயீ (834)
முதலாவது ஜமாஅத் தவறிப் போனால் அடுத்தடுத்து வருபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டாகத் தொழுது கொள்ளலாம் என்றும் அவ்வாறு தொழவதே சிறந்தது என்றும் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
இருவர் இருந்தாலும் அது ஜமாஅத் ஆகிவிடும். தனியாகத் தொழுவதை விட இருவராகத் தொழுவது சிறந்தது. ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இதன் சிறப்பும் அதிகமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது
எனவே முதல் ஜமாஅத்தைத் தவற விட்டவர்கள் தனியாகத் தொழ வேண்டும் என்று யாரேனும் கூறினால் அவர்கள் மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை.
ஒரு ஜும்ஆ முடிந்து ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு ஜும்ஆ நடத்துவது கூடுமா என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.  முதலாவது ஜும்ஆவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் தாங்களாகக் கூடி இரண்டாவதாக ஜும்ஆ நடத்தினால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் அது அனுமதிக்கப்பட்டதுமன்றி வரவேற்கத்தக்கதுமாகும்.
ஒரு மணி நேரம் கழித்துத் தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதல்ல. முதலாவது ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டால் இதன் பிறகு வருபவர்கள் உடனே ஜமாஅத் நடத்த விரும்பினால் அவ்வாறு செய்வது தவறல்ல.
தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தான் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை மார்க்கம் அனுமதிக்கின்றது.
முதலாவது நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? அடுத்து நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? என்று நாம் யோசித்தால் முதலாவது ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.
முதல் ஜமாஅத்தே சிறந்தது
பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன.  ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு.  என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : புகாரி 644, 7224
இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள்.  பள்ளியில் இஷா தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும்.  ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார்.  அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள்.  மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார்.  "நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை!  நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார்.  நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),நூல் : அஹ்மத் 10980
பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள்.  ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை.  இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.
ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.  முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும்.  இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும்.  எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.
மேலும் அதிகமான நபர்கள் கூடி நடத்தப்படும் ஜமாஅத் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்று ஹதீஸ் கூறுகின்றது. குறித்த நேரத்தில் முடிவு செய்யப்பட்ட முதல் ஜமாஅத்திற்கே அதிகமான நபர்கள் வருகை தருவார்கள். எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.
அதே சமயத்தில் இணை வைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழ விடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை.  இது போன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேண்டுமென்றே புறக்கணிக்கலாகாது?
மார்க்க அடிப்படையில் நியாயமான காரணங்கள் இல்லாமல் முதலாவது ஜமாஅத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் போட்டிக்காக இன்னொரு ஜமாஅத் உருவாக்குவதும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய ஜமாஅத் தொழுகையை எவரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒருவர் புறக்கணிப்பதை நாடாவிட்டாலும் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காரியத்தைச் செய்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
848أَخْبَرَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ مِحْجَنٍ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ قَالَ بَلَى وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார்.  அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள்.  மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார்.  "நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை!  நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார்.  நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,நூற்கள் : நஸயீ 848, அஹ்மத்
ஜமாஅத் நடைபெறும் போது தொழாமல் இருப்பது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல. "நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து இதை அறியலாம். எனவே ஜமாஅத்தை நியாயமின்றி புறக்கணிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
203حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيُّ عَنْ أَبِيهِ قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ قَالَ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَانْحَرَفَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ عَلَيَّ بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا قَالَ فَلَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ رواه الترمذي
யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்  .
திர்மிதீ (203)
பள்ளியில் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது தொழாமல் இருந்தால் அந்த ஜமாஅத்தைப் புறக்கணிக்கும் தோற்றம் ஏற்படும் என்பதற்காக ஏற்கனவே தொழுதிருந்தாலும் ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.
214حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ قَالَ أَبُو عِيسَى و سَمِعْت الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ رواه الترمذي
வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் ஸஃப்புக்குப் பின்னால் (மக்களுடன் சேர்ந்து நிற்காமல்) தனியாகத் தொழுதார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை மீண்டும் நிறைவேற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.
திர்மிதீ (214)
இந்தச் செய்தியில் அந்த மனிதர் ஜமாஅத்துடன் தொழுவதையே நாடியுள்ளார். ஆனால் மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லை. இது ஜமாஅத்தைப் பிளவுபடுத்தும் செயல் என்பதால் அவருடைய தொழுகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே முதல் ஜமாஅத்தைத் திட்டுமிட்டு அநியாயமாக புறக்கணிப்பது தவறு என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
நியாயமான காரணங்களுக்காகப் புறக்கணிக்கலாம்
முதலாவது ஜமாஅத்தைப் புறக்கணிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அது தவறல்ல. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
6106حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا سَلِيمٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا رواه البخاري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) "அல்பகரா' எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது (விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று) விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)'' என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) "அல்பகரா'வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்'' என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்கüடம், "முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?''  என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், "(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!'' என்றும் சொன்னார்கள்.
புகாரி (6106)
ஜமாஅத்தைப் புறக்கணிப்பது நயவஞ்சகின் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்கள் தவறிழைத்து அதனால் ஒருவர் அந்த ஜமாஅத்தைப் புறக்கணித்தால் இப்போது புறக்கணித்தவர் மீது குற்றமில்லை. இவர் ஜமாஅத்தைப் புறக்கணித்தவராக ஆகமாட்டார்.
மாறாக அவரை இந்த நிலைக்குத் தள்ளிய ஜமாஅத்தின் பொறுப்பாளர்களே கண்டனத்திற்குரியவர்கள். இதை மேற்கண்ட சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
எனவே நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு ஜமாஅத்தைப் புறக்கணிப்பது தவறல்ல. உதாரணமாக இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. முதலவாது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர் இணைவைப்பவராக இருந்தால் இப்போது இந்த ஜமாஅத்தை நாம் புறக்கணித்தாக வேண்டும்.
அதே போன்று நபிவழியில் தொழுபவர்கள் முதலாவது ஜமாஅத்தில் கலந்து கொண்டால் துன்புறுத்தப்படுவார்கள் என்றால் அதை விட்டுவிட்டு தனியே அவர்கள் ஜமாஅத் நடத்த அனுமதியுள்ளது.
தங்களுடைய தவறான நோக்கத்தை அடைவதற்காக ஜமாஅத் தொழுகையை ஒருவர் ஆயுதமாக ஆக்கினால் இப்போது இவர்களைப் புறக்கணிக்கலாம். இதனால் ஜமாஅத்தைப் புறக்கணித்த குற்றம் ஏற்படாது. பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர் களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் (9 : 107)
நன்மையான காரியத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம். இதனால் அந்த நன்மையான காரியத்தை நாம் புறக்கணித்தவர்களாக மாட்டோம் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது
இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம். ஒரு பள்ளியில் இரண்டு ஜும்ஆக்கள் நடப்பதாக நீங்கள் கூறினீர்கள். இந்த ஜும்ஆக்கள் ஒன்றையொன்று புறக்கணிக்கும் வகையில் நடத்தப்படுமேயானால் இவையிரண்டில் எவை மார்க்க அடிப்படையில் நடைபெறுகின்றது. எந்த சாராரின் பக்கம் நியாயங்கள் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து சரியாகச் செயல்படுபவர்கள் நடத்தும் ஜும்ஆவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அநியாயம் புரிபவர் நடத்தும் ஜும்ஆவை புறக்கணிக்க வேண்டும்.
புறக்கணிக்கும் எண்ணம் இன்றி ஒரு சாராருக்கு ஜும்மாவுக்காக கிடைக்கும் இடைவேளையும் மற்றொரு சாராருக்கு கிடைக்கும் இடைவேளயும் வேறு வேறாக இருந்தால் அவரவருக்கு வசதியான நேரத்தில் இப்படி இரண்டு ஜும்மா நடத்தப்பட்டால் அவ்விரண்டுமே சமமானது தான். அதில் குற்றம் இல்லை
மேலும் விபரம் அறிய
 பார்க்க

இரண்டாம் ஜமாஅத்

இரண்டாம் ஜமாஅத்
ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஏற்கனவே ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை தேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.
மார்க்கத்தில் எந்த ஒரு விஷயம் குறித்து ஆய்வு செய்வதாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதில் இருந்து சட்டங்களை எடுக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கேற்ப சட்டங்களை வளைக்கக் கூடாது. இலங்கை நவ்பர் என்பவரிடம் இந்தத் தன்மையைக் காண முடியவில்லை.
இவர் வாதமே ரொம்ப டேஞ்சராக ஆரம்பிக்கிறது.

உதாரனமாக இஷா தொழுகையை ஒருவர் ஐம்பத்தியேழாவது ஜமாஅத்தாக தொழ முடியுமா? எனக் கேட்டால் இரண்டாவது ஜமாத்தை அனுமதிப்பவர் ஆம் எனக் கண்டிப்பாகக் கூறியே ஆக வேண்டும். இல்லை எனக் கூறினால் ஐம்பத்தியேழாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு என்ன ஆதாரமோ அவைகள் தான் ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்;ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு எவைகள் ஆதாரங்களோ அவைகள் தான் ஐம்பத்திஐந்தாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்.இவ்வாறே குறைந்து கொண்டே வந்து ஒரு ஜமாஅத்தா அல்லது அதற்கு மேற்பட்டதா என்ற சரியான கேள்வி பிறக்கும்.
எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிப்பவர் உன்மையில் மறைமுகமாக எத்தனை ஜமாஅத் வேண்டுமெண்றாலும் தொழுது கொள்ளலாம் என்ற இஸ்லாம் வலியுறுத்தும் ஒரே ஜமாஅத் தொழுகை எனும் கோட்பாட்டை தகர்த்தெறியும் அனுமதியையே வழங்குகிறார் என்பதுதான் யதார்த்தமாகும்.

ஹதீஸ்களின் அடிப்படையில் வாதத்தை எடுத்து வைக்கும் முன் இரண்டாம் ஜமாஅத் என்பது எவ்வளவு பாரதூரமானது என்ற கருத்தை மேற்கண்டவாறு விதைக்கிறார். ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தலாமா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டால் ஆய்வு செய்யும் திறன் இல்லாத பொது மக்கள் அது தவறு என்று நினைத்து விடுவார்கள். அதாவது ஹதீஸின் துணையுடன் கருத்தை நிறுவுவதை விட மனோ இச்சையின் அடிப்படையில் கருத்தை நிறுவ அடித்தளம் போடுகிறார்.
ஒரு ஜமாஅத் முடிந்த பின் இன்னொரு ஜமாஅத் நடத்த அனுமதி இருந்தால் ஐம்பத்தி ஏழு என்ன ஐயாயிரம் ஜமாஅத் நடத்துவதும் சரியானது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்ய வேண்டும். ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தும் நிலைக்கு ஹதீஸில் அனுமதி இருந்தாலும் என் மன இச்சை அதை ஏற்றுக் கொள்ளாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒரு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவர் மற்றொரு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்குச் சென்றால் அதிலும் பங்கெடுக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் அனுமதி உள்ளது. இந்த அனுமதியிலும் மேற்கண்ட கேள்வியைக் கேட்க முடியும். ஐம்பத்தி ஏழாவது பள்ளிக்குச் சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீஸில் உள்ளதை மறுப்பார்களா? இந்த ஐம்பத்தி ஏழு மேட்டரை நூற்றுக் கணக்கான சட்டங்களில் கேட்க முடியும்.
ஹதீஸில் அந்த அனுமதி பெறப்பட்டால் அதில் எந்தப் பாரதூரமும் இல்லை. மனோ இச்சையை மார்க்கமாக்குவதற்கே இவர்கள் புறப்பட்டுள்ளனர் என்பது இந்த வாதத்தில் இருந்து தெரிகிறது.

இனி இது குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம்.
204 حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ رواه الترمدي
204 حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ رواه الترمدي
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி) நூல் திர்மிதி (204) அபூதாவூத் 487
மேற்கண்ட ஹதீஸில் ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாக தொழுகை நடத்தி முடிந்த பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதராமாகும்.
இந்தத் தெளிவான ஆதாரத்துக்கு கட்டுப்படுவதற்கு பதிலாக பயங்கரமான தத்துவங்களைக் கூறி ஹதீஸை அர்த்தமற்றதாக்குகிறார்.

தத்துவம் 1
1.நாம் முன்னர் குறிப்பிட்ட காரணங்களுக்காக(தூக்கம்,மறதி,வாடைவீசும் உணவு) ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூண்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெரவில்லை.
என்னே தத்துவம் பாருங்கள்! ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதைப் பார்த்துக் கொண்டே எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால இது ஹதீஸ் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅத்தோ மூன்றாம் ஜமாஅத்தோ நடந்ததாக வந்தால் தான் ஏற்றுக் கொள்வாராம். இவருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை. ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லை.
அடிக்கடி நிகழும் வணக்க முறைகள் பற்றி ஒரே ஒரு ஹதீஸ் மட்டுமே ஒரே ஒருவரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதைப் பரவலாகக் காண்கிறோம். அடிக்கடி நடந்ததாக ஹதீஸில் இல்லை என்று கூறி அவற்றை எல்லாம் மறுப்பாரா?

தத்துவம் 2
2.குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இண்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல்தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.
அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளது. அவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார் என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவர் கண்களுக்குத் தெரியவில்லை.
இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் ஸலஃபி வகையறாக்களை விட மார்க்கத்துக்கு ஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.

தத்துவம் 3
3.நபியவர்களின் அனுமதி ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தை தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடாத்தும் ஜமாஅத்தை அல்ல.
குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத் தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.
ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம். ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின் தொழுதவர்கள் மட்டுமே தான் இருந்தது தற்செயலானது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகம் தான். யார் இவருக்கு தர்மம் செய்வது என்பது தான் அந்த வாசகம். அதாவது தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும். ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்கும். தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார். அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது. தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அக்கரை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.
இந்த இடத்தில் இவர்களின் பாஷையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.
தாமதமாக ஒருவர் வரும் போது ஏற்கனவே தொழுத ஒருவர் அவருடன் சேர்ந்து தொழ அனுமதி உண்டு என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார். ஏற்கனவே ஜமாஅத் தொழுதவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராக 57 பேர் வருகிறார்கள். இப்போது 57 ஜமாஅத் பிரச்சனை வருமே இது பரவாயில்லையா? எதைப் பாரதூரமான காரணம் என்று சித்தரித்தார்களோ அதையே அவர்களும் சொல்லும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் தள்ளிவிட்டான்.

தத்துவம் 4
4.குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இண்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடாத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார் யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.

மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது.
தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்து விடும். இது தான் இங்கே கவனிக்க வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள்.
தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். யாரும், யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை.
தர்மம் என்றாலே அதன் பொருள் என்ன? தேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது.
தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே ஜமாஅத்தாக தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.

தத்துவம் 5
5.எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அணுமதித்த காரனங்களுக்கா) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்டயார் அழ்கிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்.என்ற ஹதீஸின் படி தனியாக தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தை தவறவிடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூண்றாம் ஜமாஅத்தும் அதைத் தவறவிடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற.. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!

மறுபடியும் 57 ஜமாஅத்துக்கு தாவுகிறார். இவர் கூறுகிற வாதத்தின்படியும் 57 ஜமாஅத் வருமே அதற்கு இது ஆதாரமாகுமா?
ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் ஒருவர் வந்தால் ஜமாஅத் முடிந்து விட்டாலும் ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்ற ஹதீஸை இங்கே எடுத்துக் காட்டுகிறார். 

முதலில் இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும். அது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குழப்பம் இல்லை. தாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர் கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும். யாராவது கிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும் என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும்.

தத்துவம் 6
6.எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் நபி (ஸல்) அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன்நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லைஎன்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபியவர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.

இதுவும் அபத்தமான வாதமே. வரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை. வரையரை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார். அது தான் இவரது தடுமாற்றத்துக்குக் காரணம். இவர் வரையரை செய்தது தவறானது என்பதை முன்னர் விளக்கி விட்டோம். தாமதமாக வந்த ஒரு முஸ்லிம் ஜமாஅத்தின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவு படுத்தி இருக்கும் போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.

தத்துவம் 7
7.இதற்கு ஒரு நல்ல உதாரனமாகமறைவான ஜனாஸாத் தொழுகையை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறானநஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம் என்றோ அல்லது குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும்என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த் ஹதீசையும்குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவதுஎன்ற முறையில் மாத்திரம் என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற க்ருத்துக்கே இடமில்லை.

நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்குத் ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத் தான் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானது தான்.
அது போல் ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.

தத்துவம் 8
8.குறித்த வரையறைகளை கவனத்திற் கொள்ளத்தேவையில்லை எனக் கருதுவோர் இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸை வைத்து அனுமதியளிக்க முன்வருவார்கலா என சிந்தித்தாலே இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற க்ருத்து எவ்வளவு தவறானது, பார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.

ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லை. இவர் மனோ இச்சைப்படி தவறாக விளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார். நாங்கள் எங்கள் விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம். ஜும்மாவுக்கும் பெரு நாள் தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம். கூறுகிறோம்.
ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகை நன்மையை அடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கரையுடனும், அவர்களின் அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம். பெருநாள் தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம். ஜும்மாவும் அப்படியே. இன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமது மர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப் பேர் தான் தொழ முடியும். மீதிப் பேர் வெளியே தான் நிற்க வேண்டும் .தொழுது முடிந்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல் நின்றவர்கள் மற்றொரு ஜும்மா நடத்துகிறோம். இடம கிடைக்காவிட்டால் உங்களுக்கு ஜும்மா இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம் பொருந்தும். எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.

மதஹபுவாதிகளின் அறியாமை
இது தவிர இரண்டாம் ஜமாஅத் தொழுகையை மத்ஹப்வாதிகளும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்காகவும் சில விஷயங்களைத் தெளிவு படுத்துகிறோம்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் நபியவர்கள் எங்களுக்கு சுபுஹை தொழவைத்தார்கள். பிறகு இன்னார் வந்துள்ளாரா? எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். இன்னார் வந்துள்ளாரா? என்று வேறொருவரைக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள் (சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெருவதில்) முதல் வரிசையாகிறது மலக்கு மார்களின் வரிசை (இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதைப்) போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதைவிட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகபரிசுத்தமானதாகும். (தொழுகையாளிகளின்) எண்ணிக்கை அதிகரிப்பதுதான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் (467)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (1151)

மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதின் சிறப்புகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
கொஞ்சம் அறிவுப் பூர்வாமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதின் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (647)

பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழவதுச் தான் என்கின்ற காரணத்தினால் தான் நபியவர்கள் வீட்டில், கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள். எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காக பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள் .
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.எனக் கூறியுள்ளார்கள். நபியவர்கள் கூறிய வார்த்தையை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடை, அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள். எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக்கூறவில்லை. ஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவது என்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயே நபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லை. பள்ளிவாசல் என்றாலே அங்கு வரக்கூடியவர்கள் ஃபர்லான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லை. எனவே தான் நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக்கூறியுள்ளார்கள்.
சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹப்வாதிகள் கூறுவதால் அவர்களுக்காகப் பின் வரும் தகவல்கலையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்.
َجَاءَ أَنَسُ بْنُ مَالِكٍ إِلَى مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى جَمَاعَةً (بخاري)
அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
புகாரி பாகம் 1 பக்கம் 505

الأوسط لابن المنذر - (ج 6 / ص 318)

2028 - وحدثنا موسى ، قال : ثنا أبو بكر ، قال : ثنا إسحاق الأزرق ، عن عبد الملك بن أبي سليمان ، عن سلمة 
بن كهيل ، أن ابن مسعود ، دخل المسجد وقد صلوا فجمع بعلقمة ، والأسود ، ومسروق
تحفة الأحوذي - (ج 2 / ص 8)
وهو قول بن مسعود رضي الله عنه قال بن أبي شيبة في مصنفه حدثنا إسحاق الأزرق عن عبد الملك بن أبي سليمان عن سلمة بن كهيل أن بن مسعود دخل المسجد وقد صلوا فجمع بعلقمة ومسروق والأسود وإسناده صحيح
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்
அறிவிப்பவர் : ஸலமா இப்னு குகைல் நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர்
பாகம் : 6, பக்கம் : 318)

وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ مِنْ التَّابِعِينَ قَالُوا لَا بَأْسَ أَنْ يُصَلِّيَ الْقَوْمُ جَمَاعَةً فِي مَسْجِدٍ قَدْ صَلَّى فِيهِ جَمَاعَةٌ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ (الترمدي)
நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். (திர்மிதி) 

وَقَالَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ لَا بَأْسَ بِتَكْرَارِ الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ وَاحِدٍ لِأَنَّ جَمِيعَ النَّاسِ فِي الْمَسْجِدِ سَوَاءٌ وَإِنَّمَا لِإِقَامَةِ الصَّلَاةِ بِالْجَمَاعَةِ وَهُوَ قِيَاسُ الْمَسَاجِدِ عَلَى قَوَارِعِ الطُّرُقِ فَإِنَّهُ لَا بَأْسَ بِتَكْرَارِ الْجَمَاعَةِ فِيهَا المبسوط - (ج 1 / ص 399)
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள்தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத்தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை 

ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத் பாகம் :1 பக்கம் : 39
إلَّا فِي رِوَايَةٍ عَنْ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى قَالَ إنْ وَقَفَ ثَلَاثَةٌ أَوْ أَرْبَعَةٌ مِمَّنْ فَاتَتْهُمْ الْجَمَاعَةُ فِي زَاوِيَةٍ غَيْرِ الْمَوْضِعِ الْمَعْهُودِ لِلْإِمَامِ فَصَلَّوْا بِأَذَانٍ فَلَا بَأْسَ بِهِ وَهُوَ حَسَنٌ . لِمَا رُوِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ فَدَخَلَ أَعْرَابِيٌّ وَقَامَ يُصَلِّي فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَحَدٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا يَقُومُ فَيُصَلِّي مَعَهُ فَقَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَصَلَّى مَعَهُ . المبسوط - (ج 1 / ص 399)
இமாம் அபூ யூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்றுபேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லி தொழுதால் எந்தத் தவறுமில்லை இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்றபோது நபி (ஸல்) அவரகள் உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும் என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.
ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத் பாகம் : 1 பக்கம் : 399)
مَطْلَبٌ فِي تَكْرَارِ الْجَمَاعَةِ وَالِاقْتِدَاءِ بِالْمُخَالِفِ .
( قَوْلُهُ : أَيْ إقَامَةِ إمَامِ مَذْهَبِهِ ) قَالَ الشَّارِحُ فِي هَامِشِ الْخَزَائِنِ : نَصَّ عَلَى هَذَا مَوْلَانَا مُنْلَا عَلِيٌّ شَيْخُ الْقُرَّاءِ بِالْمَسْجِدِ الْحَرَامِ فِي شَرْحِهِ عَلَى لُبَابِ الْمَنَاسِكِ ا هـ وَهُوَ مَبْنِيٌّ عَلَى أَنَّهُ لَا يُكْرَهُ تَكْرَارُ الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ وَاحِدٍ ، وَسَيُذْكَرُ فِي الْأَذَانِ ، وَكَذَا فِي بَابِ الْإِمَامَةِ مَا يُخَالِفُهُ . (رد المحتار - (ج 3 / ص 166)
ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகிய மௌலானா முன்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய கருத்தாகிறது ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின் மீது அமைக்கப்பட்டதாகும்
ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 166)
(مسألة) * (ولا تكره اعادة الجماعة في غير المساجد الثلاثة) معنى اعادة الجماعة انه إذا صلى امام الحي وحضر جماعة أخرى استحب لهم أن يصلوا جماعة وهذا قول ابن مسعود وعطاء والحسن والنخعي واسحق. ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)
மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவது விரும்பத் தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி) அதாவு, ஹஸன், மற்றும இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்
ஆதாரம் : ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா பாகம் : 2 பக்கம் : 7)
மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களைத்தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்
وقال مالك والثوري والليث وابو حنيفة والشافعي لا تعاد الجماعة في مسجد له امام راتب في غير ممر الناس ومن فاتته الجماعة صلى منفردا لئلا يفضي إلى اختلاف القلوب والعداوة والتهاون في الصلاة مع الامام، ولانه مسجد له امام راتب فكره فيه اعادة الجماعة كالمسجد الحرام ولنا عموم عليه السلام صلاة الجماعة تفضل على صلاة الفذ بخمس وعشرين درجة وروى أبو سعيد قال جاء رجل - وقد صلى رسول الله صلى الله عليه وسلم - فقال أيكم يتجر على هذا؟ فقام رجل فصلى معه قال الترمذي هذا حديث حسن ورواه الاثرم وفيه فقال ألا رجل يتصدق على هذا فيصلي معه؟ وروى باسناده عن أبي امامة عن النبي صلى الله عليه وسلم مثله وزاد فلما صليا قال وهذان جماعة ولانه قادر على الجماعة فاستحب له كالمسجد الذي في ممر الناس وما قاسوا عليه ممنوع ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)
ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதைவிட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸம் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்தபோது நபியவர்கள் இந்த இருவரும் ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள.
ஆதாரம் : அஷ்ஷரஹல் கபீர் பாகம் : 2 பக்கம் : 7

பள்ளியில் தாமதமாக வருவதை தடைசெய்யும் மத்ஹபு வாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டும்மல்ல மத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.
எனவே மத்ஹப்வாதிகள் மத்ஹபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்த தடை செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்