*⚔🛡பத்ரு தோழர்கள் Q & A வழங்கும்*🛡⚔
*கண் திருஷ்டி சூனியம் உண்டா❓*
*இதை இஸ்லாமியர்கள் நம்பலாமா❓*
*கண்திருஷ்டி சூனியம் இல்லை என்றால் குர்ஆன் வசனங்களில் சூனியம் பற்றிய செய்திகளும் 114* *வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் இடம்பெற்றுள்ளதே முழுமையான விளக்ககம் தரவும்*
சூனியம் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது.,
முதலில் சூனியம் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.,
சூனியம் என்பது ஒருவரிடம் உள்ள பகையின் காரணமாக அவர்களை அழிக்க,கெடுக்க கையாளும் ஒரு கண் கட்டி வித்தையாகும்,.
நன்றாக பகுத்தறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் ஆக்கலும், அழித்தலும் ஏக இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றல் ஆகும்.,இந்த சக்தி ஒரு மனிதனுக்கு இருக்கும் என நம்பினால் அவர் நிச்சயமாக இணை வைத்தவர்களில் ஒருவராகி விடுவார்.,
சூனியம் பற்றி குரானிலும்,ஹதீஸ்களிலும் பல இடங்களில் வருகிறது,பின் வரும் ஹதீஸிலும் சூனியம் பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது,
இதன் விளக்கம் என்னவென்றால், கற்சிலைகளை வணங்குவது(இணை வைப்பு) பற்றி பல இடங்களில் அல்லாஹ் வன்மையாக கண்டித்திருக்கிறானல்லவா? ஆனால் கற்சிலைகளுக்கு ஒரு சக்தியும் இல்லை என நாம் விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? அது போல் தான் சூனியம் என்ற இல்லாத விஷயத்தை செய்யும் சூனியக்காரர்களைப் பற்றியும்,சூனியத்தை பற்றியும் அல்லாஹ் கூறியிருக்கிறான்,.
மூஸா(அலை) நபி கைத்தடியை கீழே போட்டு அது பாம்பாக மாரிய பொழுது அனைத்து சூனியக்காரர்களும் சஜ்தாவில் விழுந்தனர்,ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் மனிதனால் இதை செய்ய முடியாது என்று.,இது இறைவனின் செயல் தான் என்று.,
இதில் ஒரு சிலர் அல்லாஹ்வின் நாட்டப்படி சூனியம் பலிக்கும் என்று வாதிடுகின்றனர்,இது எப்படி சாத்தியப்படும்., அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆற்றலை அல்லாஹ் எப்படி மனிதர்களுக்கு நாடுவான்?சிந்தித்து பார்க்கவேண்டும்.,
சூனியம் என்று செய்யப்பட்டு வரும் வித்தைகள் எல்லாம் தந்திர செயல்தானே தவிர மந்திரச் செயல் அல்ல,
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன,இது அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக உள்ளதால்,அதை எடுத்துக் கொள்ளக் கூடாது,.உதாரணமாக முஸ்லிம் ஒரு செய்தி உள்ளது, அதில் அல்லாஹ் பூமியை 7 நாட்களில் படைத்ததாக உள்ளது,ஆனால் குரானில் வானம் பூமியை 6 நாட்களில் படைத்துள்ளான் என உள்ளது,எனவே அந்த செய்தியை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது,குரானைத்தான் நம்ப வேண்டும்,அது போல் குரானுக்கு முரணாக வரும் சூனியம் பற்றிய செய்திகளை புறந்தள்ளி விட வேண்டும்.,
மேலும் நபி(ஸல்) அவர்கள் எந்த வித மனக்கோளாறுக் கொண்டவர் அல்லர் என குரானில் அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான்,அப்பொழுது எப்படி நபி(ஸல்) அவர்கள் பிரம்மை பிடித்து 6 மாத காலம் இருந்திருக்க முடியும்?
மேலும் ஒரு ஹதீஸ் உள்ளது, அதில் அஜ்வா பேரீச்சை ஏழு சாப்பிட்டால் எந்த வித விஷமோ,சூனியமோ சாப்பிட்டவர்கள் மீது தாக்கப்படாது என்று, இதை நாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு விஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அஜ்வா பேரீச்சையை கொடுத்தால் அவர் காப்பாற்றப் படுவாரா? நன்றாக சிந்தித்து பாருங்கள், இதிலிருந்து இந்த செய்தி பொய்யானது என தெளிவாகத் தெரிகிறதல்லவா❓
மேலும் பொறாமையால் ஏற்படும் கண் திருஷ்டி என்பதும்,நம்பக் கூடாத விஷயம்,.ஒருவர் பார்க்கும் பார்வையால் யார்க்கும் எந்த தீங்கும் செய்து விட முடியாது,குரானில் அல்லாஹ் பொறாமைக்காரர்களிடம் பாதுகாப்பு தேட சொல்வது,அவர்கள் கைகளாலோ, சொற்களாலோ நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி,.
நபி(ஸல்) உண்மையில் ஒரு விஷயத்தை சொன்னால் அந்த செய்தியை கேட்கும்போது நம் உடல் நடுங்கும்,மயிர் கூச்செரிக்கும்,
இது போன்ற சந்தேகத்திற்குரிய அல்லாஹ்விற்கு இணையான ஒரு காரியத்தை ஒரு மனிதன் செய்வான் என்று ஒரு போதும் கூறியிருக்க வாய்ப்பில்லை,
எனவே சூனியத்தையும்,கண் திருஷ்டியையும் நம்பி இணைவைப்பவர்களில் ஒருவராக ஆகி விடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
*குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் 👇👇👇👇👇👇*
قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
இன்று ஒரு குர்ஆன் வசனம் – فَذَكِّرْ فَمَا أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ ﴿52:29﴾
52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
இன்று ஒரு குர்ஆன் வசனம் – مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ﴿68:2﴾
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
இன்று ஒரு குர்ஆன் வசனம் – وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ الْحَقُّ ۚ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ ۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ ﴿6:73﴾
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
இன்று ஒரு குர்ஆன் வசனம் – هُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ ﴿40:68﴾
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.
இன்று ஒரு குர்ஆன் வசனம் – قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ ﴿10:77﴾
10:77. அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
நபிமொழி அறிவோம் – 2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
*ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்*
இன்று ஒரு குர்ஆன் வசனம் – أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿2:258﴾
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
நபிமொழி அறிவோம் – 5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
*ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்*
5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார் மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) “குபா“வில்ழூழூ தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது“ எனக் கூறப்பட்டுவந்தது.
*ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 71. அகீகா*
*குறிப்பு👇👇👇👇👇*
புகாரி முஸ்லிமில் பதிவு
செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும்
*ஆதாரப்பூர்வமானதா❓*
புகாரியில் பதிவு செய்யப்பட்ட
ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை
என்று இன்றைக்குப் பெரும்பாலான
மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறாரகள்.
மத்ரஸாக்களில் படித்த மார்க்க
அறிஞர்களும் இவர்களைப் போன்றே
நினைக்கிறார்கள்.
இதனால் தான் புகாரி முஸ்லிமில்
இடம் பெற்ற ஹதீஸ்களை நாம்
விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற
விமர்சனம் *சரியா தவறா❓*
என்று
பார்க்காமல் புகாரியில் பதிவு
செய்யப்பட்டு விட்டாலே அதை
விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.
புகாரி முஸ்லிமில் உள்ள
ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான
அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற
மாட்டார்கள். மாபெரும் அறிஞரான
இமாம் தாரகுத்னீ அவர்கள் புகாரி இமாம்
பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம்
செய்துள்ளார்கள்.
புகாரிக்கு விரிவுரை எழுதிய
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த
விமர்சனங்களுக்கு சரியான பதிலைக்
கூறினாலும் சில இடங்களில்
சொல்லப்பட்ட குறையை ஏற்றுக்
கொள்கிறார். அந்தக் குறைகளுக்கு
பதில் இல்லை என்றும் ஒத்துக்
கொள்கிறார்.
சில நேரத்தில் புகாரியில் பதிவு
செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை
அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது
அந்த விமர்சனத்திற்கு முறையான பதில்
ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல
முடிவதில்லை. இந்த இடத்தில் இவரிடம்
இமாம் புகாரி அவர்கள் குறைவாகத்
தான் ஹதீஸ்களைப் பதிவு
செய்துள்ளார்கள் என்பதை மட்டும் தான்
இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.
புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய
மாபெரும் மேதை இப்னு ஹஜர்
அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும்
ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக்
கொள்ளாத போது இவர்கள் புகாரியில்
உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள்
வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.
*இப்னு ஹஜரின் விளக்கம்*
இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு
எழுதிய விரிவுரையின்
முன்னுரையை முறையாகப்
படித்தவர்கள் புகாரியில் உள்ள
அனைத்துச் செய்தியும் சரியானது
என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﻮﻟﻪ ﻓﻲ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻭﻗﺪ ﺃﺟﻴﺐ ﻋﻦ ﺫﻟﻚ ﺃﻭ ﺃﻛﺜﺮﻩ ﻫﻮ ﺍﻟﺼﻮﺍﺏ ﻓﺈﻥ
ﻣﻨﻬﺎ ﻣﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻏﻴﺮ ﻣﻨﺘﻬﺾ
இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் :
புகாரியில் சொல்லப்பட்ட
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்க
ு பதில் தரப்பட்டு விட்டது என்று
முஸ்லிமுடைய விரிவுரையில்
முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான்
சரியானதாகும்.
ஏனென்றால் இந்த
விமர்சனங்களில் சிலவற்றிற்கு பதில்
(இன்னும்) கிடைக்கவில்லை.
*நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346*
ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 385
ﻭﻗﺪ ﺗﺸﺘﺪ ﺍﻟﻤﺨﺎﻟﻔﺔ ﺃﻭ ﻳﻀﻌﻒ ﺍﻟﺤﻔﻆ ﻓﻴﺤﻜﻢ ﻋﻠﻰ ﻣﺎ ﻳﺨﺎﻟﻒ ﻓﻴﻪ ﺑﻜﻮﻧﻪ
ﻣﻨﻜﺮﺍ ﻭﻫﺬﺍ ﻟﻴﺲ ﻓﻲ ﺍﻟﺼﺤﻴﺢ ﻣﻨﻪ ﺍﻻ ﻧﺰﺭ ﻳﺴﻴﺮ
இப்னு ஹஜர் கூறுகிறார் : சில வேளை
அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக
முரண்பட்டு அறிவிப்பார்கள். அ;ல்லது
(அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி
விடும். இந்நேரத்தில் (தன்னை விட
வலிமையானவர்களுக்கு) மாற்றமாக
அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர்
(மறுக்கப்பட வேண்டியது) என்று
முடிவு கட்டப்படும். இது போன்ற
செய்தி புகாரியில் குறைவாக தவிர
(அதிகமாக) இல்லை.
*நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 385*
ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﺪ ﺗﻌﺮﺽ ﻟﺬﻟﻚ ﺑﻦ ﺍﻟﺼﻼﺡ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﺇﻻ ﻣﻮﺍﺿﻊ ﻳﺴﻴﺮﺓ ﺍﻧﺘﻘﺪﻫﺎ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ ﻭﻏﻴﺮﻩ ﻭﻗﺎﻝ ﻓﻲ ﻣﻘﺪﻣﺔ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻟﻪ ﻣﺎ ﺃﺧﺬ ﻋﻠﻴﻬﻤﺎ ﻳﻌﻨﻲ
ﻋﻠﻰ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻣﺴﻠﻢ ﻭﻗﺪﺡ ﻓﻴﻪ ﻣﻌﺘﻤﺪ ﻣﻦ ﺍﻟﺤﻔﺎﻅ ﻓﻬﻮ ﻣﺴﺘﺜﻨﻰ ﻣﻤﺎ
ﺫﻛﺮﻧﺎﻩ ﻟﻌﺪﻡ ﺍﻹﺟﻤﺎﻉ ﻋﻠﻰ ﺗﻠﻘﻴﻪ ﺑﺎﻟﻘﺒﻮﻝ ﺍﻧﺘﻬﻰ ﻭﻫﻮ ﺍﺣﺘﺮﺍﺯ ﺣﺴﻦ
தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம்
செய்த சில இடங்களைத் தவிர (மற்ற
செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம்
உண்டு) என்ற கருத்தையே
இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர்
முஸ்லிமுடைய விரிவுரையின்
முன்னுரையில் இவ்வாறு
கூறுகிறார் : புகாரி மற்றும்
முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர்
ஒருவர் குறை கூறினால் (அனைத்து
சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு
உண்டு என்று நாம் முன்பு)
கூறியதிலிருந்து (குறைகூறப்பட்ட)
இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும்.
ஏனெனன்றால் இந்த விமர்சிக்கப்பட்ட
ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல்
போய்விட்டது.
இப்னு ஹஜர் கூறுகிறார் : இவ்வாறு
விதிவிலக்கு கொடுப்பது
அழகானதாகும்.
*நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346*
ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 383
ﻭﻟﻴﺴﺖ ﻛﻠﻬﺎ ﻗﺎﺩﺣﺔ ﺑﻞ ﺃﻛﺜﺮﻫﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻇﺎﻫﺮ ﻭﺍﻟﻘﺪﺡ ﻓﻴﻪ ﻣﻨﺪﻓﻊ
ﻭﺑﻌﻀﻬﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻣﺤﺘﻤﻞ ﻭﺍﻟﻴﺴﻴﺮ ﻣﻨﻪ ﻓﻲ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﺗﻌﺴﻒ
இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில்
சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களும்
(புகாரியில்) குறை ஏற்படுத்தக்
கூடியதாக இல்லை. மாறாக இந்த
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு தெளிவாக பதில் உள்ளது. அந்த
விமர்சனத்தில் குறை சொல்ல
முடியாது. சில விமர்சனங்களுக்கு தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது.
சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது
கடினம்.
மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு
கவனிக்க வேண்டும்.
புகாரியில்
விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு
பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய
கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே
சில விமர்சனங்களுக்குப் பதில்
சொல்லமுடியவில்லை என்று ஒத்துக்
கொண்டு அதைத் தன் நூலில்
எழுதியிருக்கும் போது புகாரியில்
உள்ள அனைத்துச் செய்தியும்
சரியானது தான் என்று
அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?
புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய
கூற்றுக்கள் மட்டும் பதிவு
செய்யப்படவில்லை. நபித்தோழர்களின்
கூற்று நபித்தோழர்களுக்குப் பின்னால்
வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக
பின்வரும் சம்பவத்தை எடுத்துக்
கொள்ளலாம்.
*அம்ர் பின் மைமூன் என்பார்கூறியதாவது :*
அறியாமைக்
காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்
குரங்கொன்றைக் குரங்குகள் பல
சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து
தண்டிப்பதை நான் கண்டேன். நானும்
அவற்றுடன் சேர்ந்து கொண்டு
கல்லெறிந்தேன்.
அறிவிப்பவர் : அமர் பின் மைமூன்
*நூல் : புகாரி (3849)*
இது போன்ற சம்பவம் நடந்தது என்று
அறிவுள்ளவர்கள் யாரும் கூற
மாட்டார்கள்.
குரங்குகளுக்கு திருமணம் உட்பட எந்த
பந்தமும் கிடையாது. மனிதர்களுக்கு
சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு
நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு
மிருகங்களுக்கு அல்லாஹ்
கட்டளையிடவும் இல்லை.
மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை
குரங்குகள் நடைமுறைப்படுத்தியது
என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
தெளிவாகப் பொய் என்று தெரியும்
இந்தச் சம்வத்தை இமாம் புகாரி அவர்கள்
பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம்
*ஏற்றுக் கொள்ள முடியுமா❓*
ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த
நூற்கள் என்று முதலாவதாக
புகாரியையும் இரண்டாவதாக
முஸ்லிமையும் கூறலாமே தவிர
குர்ஆனைப் போன்று ஒரு தவறும்
இல்லாத நூல் என்ற சிறப்பை
இவைகளுக்குத் தர முடியாது.
இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கும்
மட்டும உரியதாக்கியுள்ளான்.
புகாரி மற்றும் முஸ்லிமில்
பலவீனமான அறிவிப்பாளர்களும்
அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக
இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில்
இருப்பதைப் போல் மோசமான கருத்தைக்
கொண்ட செய்தியும் இவற்றில்
குறைவாக இடம்பெற்றுள்ளது.
எனவே மற்ற புத்தகங்களில் இடம்பெற்ற
செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு
அனுகுவதைப் போல் புகாரி
முஸ்லிமில் உள்ள செய்திகளையும்
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
புகாரி இமாம் பதிவு செய்த
ஹதீஸ்களை பல அறிஞர்கள் ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டு *அது சரியானதா❓*
*தவறானதா❓* என்பதைத்
தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்
*ஜஸாகல்லாஹ் ஹைரன்*