*உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா❓*
*நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகிறோம்.*
*அங்கே எங்களுடன் வசிக்கும் இந்து நண்பர் ஒருவர் இந்து தெய்வங்களின் உருவப் படங்களை மாட்டிவைத்து உள்ளார்.*
*இந்நிலையில் அவ்விடத்தில் தொழுதால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா*❓
அல்லது அப்படங்களை நம் கண்ணில் படாதவாறு துணியினால் மறைத்து வைத்து தொழலாமா?*
சாமி சிலைகள் மட்டுமல்ல; பொதுவாக உருவப்படங்கள் முன்னாலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு ஒரு திரைச் சீலை இருந்தது. அதை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது திரைச்சீலையை அப்புறப்படுத்து, அது என் தொழுகையில் கவனத்தை திருப்பி விட்டது* என்று கூறினார்கள்.
நூல்: *புகாரி 374, 5959*
உயிருள்ளவற்றின் உருவப்படங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்து விட்டதால் இது உயிரற்றவைகளின் ஓவியமாகத் தான் இருக்க வேண்டும்.
*பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உருவங்களுக்கு இந்த நிலை என்றால் தடுக்கப்பட்ட உயிருள்ளவைகளின் உருவப்படங்கள் அதை விட கடுமையானதாகும்*.
*தெய்வங்களாக கருதப்படும் உருவங்கள் இன்னும் கடுமையானதாகும்.*
அதை அப்புறப்படுத்தி விட்டுத் தான் தொழ வேண்டும் என்றாலும் நமக்கு உரிமையான அல்லது நமது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் இது சாத்தியமாகும்.
மற்றவர்களுக்கு உரியது அல்லது மற்றவர்களுக்கும் உரிமை உள்ள இடங்களில் இது சாத்தியமாகாது.
நீங்கள் எடுத்திருக்கும் அறையில் முஸ்லிமல்லாதவருக்கும் உரிமை உள்ளதால் அதை அப்புறப்படுத்துவது சாத்தியமாகாது.
*எனவே உருவம் கண்ணில் படாத இடங்களில் அல்லது நீங்கள் கூறியது போல் மறைத்துக் கொள்வதுதான் சாத்தியாமாகும்*. எனவே அவ்வாறு தான் தொழ வேண்டும்.
ஆனால் உங்கள் மீது இன்னொரு குற்றம் உள்ளது. *உருவப்படங்கள் உள்ள வீடுகளில் வானவர்கள் வரமாட்டார்கள்* எனும் போது சாமிபடங்கள் இருக்கும் இடங்களில் *நிச்சயம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வாரும் வானவர்கள் வர மாட்டார்கள்*.
இது தொழும்போது மட்டும் உள்ள சட்டம் அல்ல. பொதுவாக எந்த நேரத்திலும் இதுபோல் உருவப்படம் இருக்கலாகாது.
முஸ்லிமல்லாதவர்களுடன் கூட்டாக வாடாகைக்கு இடம் பிடிக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள் அறைகள் இருந்தால் நம்முடைய அறையில் இது போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஒற்றை அறையாக இருக்கும் கூட்டாகா வடாகைக்குப் பிடித்தால் முஸ்லிமல்லாதாவர்கள் இது போல் படங்களை மாற்றுவார்கள் என்பதால் அவர்களுடன் கூட்டாக அறை பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்பி கூட்டாக இடம் பிடித்தபின் இது தெரிய வந்தால் நீங்கள் வேறு அறையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
*அல்லாஹ்வின் அருள் இருக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அங்கே இருப்பது கூடாது*.
இது முஸ்லிம்களில் தர்கா படங்களை மாட்டிவைப்பவருக்கும் பொருந்தும். *அத்தகையவர்களுடன் ஒற்றை அறைகளைக் கூட்டாக பாகிர்ந்து கொள்வது உங்களை அல்லாஹ்வின் அருளில் இருந்து அப்புறப்படுத்தி விடும்*
No comments:
Post a Comment