மவ்லித் என்பதின் பொருள் என்ன?
மவ்லிது எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும்.
(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)
ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லிதை கல்விக் கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம்என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை.
(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)
மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் :
இஸ்லாம் என்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்தவைதான். மவ்லித் என்பது அல்லாஹ்வோ, நபியவர்களோ காட்டித் தந்த ஒன்றல்ல. மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத, தவறில்லாத கவிதைகளை படித்தால் தவறில்லை என்ற அளவிற்குத்தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது.
ஆனால் மவ்லித் என்ற அனாச்சாரத்தை உருவாக்கி அதை மார்க்கமாக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களைப் பற்றி கூறப்பட்ட வசனங்களையும், நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும், இணைவைப்பில்லாமல் சில ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மௌதை ஓதலாம் என பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில் மவ்லித்) நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர்.
ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவரவர் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனோ உருவாக்கியவற்றை அவர்கள் எழுதிவைத்துப் படிக்கவில்லை.
ஸஹாபாக்கள் போர்க்களங்களிலும், யதார்த்தமான நிலையில் இருக்கும் போது மட்டுமே சில கவிதைகளைக் கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாகச் செய்யவில்லை
ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, தோரணங்கள் கட்டி வழிபாடாகச் செய்கின்றனர்.
ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதிலுள்ள தவறுகளைத் திருத்தியுள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபியவர்கள் திருத்தவில்லை.
திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அது போன்று ஸஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும் இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.
விபச்சாரியோடு செய்வதைத்தானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப் படுத்த முடியாதோ அது போன்றே ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளைக் காட்டி இவர்கள் ஓதும் மௌதை நியாயப் படுத்த முடியாது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
ஏகத்துவம்
No comments:
Post a Comment