பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 2, 2010

கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப்பொருட்கள்...??


கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப்பொருட்கள்(பலூன் ,கிறிஸ்மஸ் மரம் ,லைட் செட் ,செண்டா மாஸ்க்,மரத்தில் தொங்கவிடக்கூடிய போல் ,பெல் ,சின்ன செண்டா )இப்படியான பொருட்கள் விற்பனை செய்வது கூடுமா ? கூடாதா 

   

மாற்று மதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.
13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَنَازِيرِ وَبَيْعَ الْمَيْتَةِ وَبَيْعَ الْخَمْرِ وَبَيْعَ الْأَصْنَامِ رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பன்றிகளை விற்பது இறந்தவற்றை விற்பது மதுவை விற்பது சிலைகளை விற்பது ஆகியவற்றை தடைசெய்துவிட்டனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13971)

சிலைகளை விற்பனை செய்வது கூடாது என இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் இவற்றை வணங்கிவந்த காரணத்துக்காகவே இவற்றை விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளில் அதில் உள்ள தன்மையைத் தாண்டி வெறோரு தெய்வீகத் தன்மை இருப்பதாக மக்கள் நம்பினால் அந்தப் பொருளும் சிலையுடைய அந்தஸ்துக்கு வந்துவிடும் 
.
5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري
''நபி(ஸல்) அவர்கள் தமது வீட்டில் 'சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி,(5952) அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது 
.''
ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இதை விற்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
கிரிஸ்தவர்கள் கிரிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்துவதாக நீங்கள் குறிப்பிட்ட பொருட்களான பலூன் லைட் செட் கிரிஸ்துமஸ் மரம் போல் பெல் ஆகியவற்றை அவர்கள் வணங்கவில்லை. இதில் புனிதம் இருப்பதாக அவர்கள் நம்பவுமில்லை.
மேலும் இப்பொருட்கள் மத விழா அல்லாத வேறு நிகழ்சிகளுக்கும் பயன்படக்கூடியவையாக இருக்கின்றன. இப்பொருட்களை அவர்களுக்கு விற்பதால் நாம் தீமைக்கு துணைபோனதாகவும் ஆகாது.  இவற்றை இலவசமாகவோ அல்லது இவ்விழாவிற்காக விலையில் சலுகை செய்தோ கொடுத்தோல் அப்போது தான் தீமைக்கு துணைபோன குற்றம் ஏற்படும். எல்லா பொருட்களையும் விற்பது போல் இவற்றையும் விற்றால் அதில் தவறேதுமில்லை. எனவே இதை விற்பனை செய்வதை தவறு என்று கூற முடியாது.

அதிகமாக தர்க்கம் புரிவது..????

அதிகமாக தர்க்கம் புரிவதுஇருட்டறையில் தூங்குவது போன்ற பல காரணங்களினால் ஒருவருக்கு அறிவு குறைவடையும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையா?விளக்கம் தேவை??  




அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்கமுடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்த செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள்.
இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. 

ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகின்றது.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125)16
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் (16 : 125)

இறைத்தூதர்கள் இறைமறுப்பாளர்களிடம் விவாதம் செய்த வரலாறுகளை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. எனவே அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் வந்து ஒருவர் அதிகமாக விவாதம் செய்தால் அது நன்மையான காரியமே.
மேலும் ஒருவர் முறையான அடிப்படையில் விவாதம் செய்தால் அதன் மூலம் அவருடைய அறிவு அதிகரிக்கும் என்பது தான் சரியானக் கருத்து.
எனவே அதிகமாக விவாதம் செய்தல் கூடாது குறைவாக விவாதம் செய்யலாம் என்று முடிவெடுக்காமல் அழகிய விவாதம் செய்யலாம் தேவையற்ற விவாதம் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதே சரியானது.
அடுத்து இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்தும் தவறானதே. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. 

ஹதீஸ்களை ஆராயும் போது நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறிய முடியும்.
5624 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْه رواه البخاري
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.
நூல் : புகாரி (5624)

எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்துவிடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள் விடி பல்புகள் ஆகியவை இல்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.

அன்றைக்கு விளக்குகளை அணைத்துவிட்டால் எந்த வெளிச்சமும் இன்றி இருட்டு அறையில் தான் உறங்க வேண்டிவரும். இருட்டு அறையில் உறங்குவதால் அறிவு குறையும் என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்கமாட்டார்கள். எனவே இருட்டில் உறங்குவதற்கும் அறிவு குறைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிய முடிகின்றது. விஞ்ஞான ரீதியிலும் இக்கருத்து சரியானதல்ல.