பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, November 1, 2014

பெருநாள் தினத்தில் கூட்டாகவும் சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா?


கவனமற்ற காயல் ஃபத்வா

பெருநாள் தினத்தில் கூட்டாகவும் சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் சில ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த செயல்களை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் குர் ஆன் ஹதீஸை வளைத்து தவறான ஃபத்வா அளித்து மக்களை குர் ஆன் ஹதீஸ் என்ற பெயரில் வழி கெடுக்க முயன்றுள்ளனர் என்பது இவர்களின் ஃபத்வாவில் இருந்து தெளிவாகிறது. இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஆய்வு செய்து இந்த ஃபத்வா எவ்வளவு அபத்தமானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த ஃபத்வாவையும் அதற்கு அப்துன்னாசர் அளித்த மறுப்பையும் இங்கே இடம்பெறச் செய்துள்ளோம்.

http://www.onlinepj.com/kelvi_pathil/ithara_vanakangal/kavanamatara_kayal_fathava/#.U-n9LuOSxds

பெருநாளில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா?

நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும்இறைவனை பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீதுகடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லவேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய்ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்யவேண்டுமெனக்கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப்பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர்சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்தநாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.
 அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி) நூல் : புகாரி (971)

பெருநாள் அன்று தக்பீர் கூறவேண்டுமென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்கட்டளையாகும். இதனைப் பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
தக்பீர் கூறுதல் என்றால் ''அல்லாஹூ அக்பர்’’ என்ற வாசகத்தைக் கூறுவது தான்.
''கப்பர” என்ற அரபி வார்த்தைக்கு ''அல்லாஹூ அக்பர்” என்று கூறினான் என்பது தான்பொருளாகும்.
நபியவர்களும் இந்தப் பொருளில்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
பெருநாளன்று ''அல்லாஹூ அக்பர்” என்ற வாசகத்தை விட அதிகப்படியானவாசகங்களைக் கொண்டு நபியவர்கள் தக்பீர் கூறினார்கள் என்பதற்கு எந்த விதமானஆதாரமும் கிடையாது.
மேலும் இந்த தக்பீர் வாசகத்தைப் பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்என்பதற்கோ, அல்லது மக்களுக்கு சப்தமிட்டுக் கூறுமாறு கட்டளையிட்டார்கள்என்பதற்கோ ஆதாரப் பூர்வமான எந்த நபிமொழிகளும் கிடையாது.
 பொதுவாக இறைவனை நினைவு கூறும் போது சப்தமிட்டுச் செய்வது கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآَصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ (205) سورة الأعراف
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும்,அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராகஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7 : 205)

இறைவனை நினைவு கூறும் போது உரத்த சப்தமின்றி நினைவு கூற வேண்டும் என்பதுஇறைவனின் கட்டளையாகும் என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்துதெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
2992  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ  رواه البخاري
அபூமூசா  அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்)ஏறும் போது,''லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை)'' என்றும் ”அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)''என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போதுநபி (ஸல்) அவர்கள், ”மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.(அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காதுகேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன்உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன்.(இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்றுகூறினார்கள். நூல் : புகாரி (2992)

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான்சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால்இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.
நாம் சப்தமில்லாமல் இறைவனை நினைவு கூறும் பொழுது தான் இறைவன் நம்மோடுஇருக்கிறான். நாம் கூறுவதைச் செவியேற்றுக் கொண்டிருக்கின்றான்,அருகிலிருக்கின்றான் என்பதை நம்பிய மக்களாக நாம் ஆக முடியும்.

எனவே பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது மேற்கண்ட இறை வசனம் மற்றும்நபிமொழிக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது கூடாது.அது நபிவழிக்கு எதிரானதாகும் என்று நாம் கூறி வருகிறோம்.
ஆனால் மேற்கண்ட எந்த அடிப்படைகளையும் கவனத்தில் கொள்ளாமல்காயல்பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி சார்பாக ஒருகவனமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்குரிய எந்தஅடிப்படைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
சில ஸஹாபாக்களின் சுயமான செயல்களைக் குறிப்பிட்டு விட்டு, பெருநாள் அன்றுசப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கும், ''அல்லாஹூ அக்பர்” என்ற வாசகத்தை விடஅதிகப்படியான வாசகங்களைக்  கூறுவதற்கும் அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் கூறும்காரணத்தைப் பாருங்கள்.

ஆட்சேபணை இல்லாவிட்டால் வணக்கமாகுமா
பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக்கூடாது என்பதற்கு ஹதீஸில் எந்தத்தடையும் காணப்படவில்லை. பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லலாம் என்பதற்குநபி (ஸல்) அவர்களின் நேரடி ஹதீஸ் இல்லாவிட்டாலும் மூல ஆதாரமாக எடுக்கமுடியாத சஹாபாக்களின் மேற்கண்ட செயல்களுக்கு ஏனைய எந்த சஹாபியும்ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் முழு வழிகாட்டுதலோடு தான் செய்திருப்பார்கள். வழிகாட்டல் இல்லையென்றால் எந்த ஸஹாபியாவது ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த அடிப்படையில் தான் நாமும் பெருநாளன்று தக்பீரை சப்தமிட்டுகூறுகிறோம்.
(
ஃபத்வா பக்கம் : 4)

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட ஃபத்வாவாக இது தெரிகின்றதா? குர்ஆன் ஹதிஸில் இல்லாவிட்டாலும் இருக்கிறது என்று மனமுரண்டாகச் சாதிக்கும் ஃபத்வாவாக உள்ளதா என்று சிந்தித்துப் பாருங்கள்.
மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியவர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய மனோஇச்சையைப் பின்பற்றியுள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதியுள்ள வாசகங்களேதெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
.
ஒரு ஸஹாபி ஒரு செயலைச் செய்து அதற்கு வேறு எந்த ஒரு ஸஹாபியும்ஆட்சேபனை தெரிவிக்கவில்லையென்றால் அது மார்க்கச் சட்டமாகி விடும், இறைச்செய்தியாகிவிடும்  என்று இவர்கள் எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்.?
இந்த ஃபத்வா பெருநாள் தக்பீருக்கு மட்டுமா? அல்லது அனைத்து சட்டங்களுக்குமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனெனில் நபித்தோழர்களின் செயலை எந்த நபித்தோழரும் ஆட்சேபிக்காவிட்டால் அது மார்க்கமாகி விடும் என்ற இவர்கள் கண்டுபிடித்த நவீன விதிமுறை நூற்றுக்கணக்கான சட்டங்களை இவர்களே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டு தக்பீர் கூறியிருந்தால், கடைவீதியிலேகத்தியிருந்தால் அது பல்லாயிரக்கணக்கான நபித் தோழர்களுக்குத் தெரிந்திருக்குமே?அது ஒளிந்து கொண்டு செய்யக்கூடிய காரியம் அல்லவே? அப்படியென்றால் ஏன் ஒரேஒரு நபித்தோழர் கூட நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று அறிவிக்கவில்லை?.
பல ஆண்டுகள் இரு பெருநாள் தொழுகைகளையும் பல்லாயிரக் கணக்கானநபித்தோழர்களுக்கு மத்தியில் நபியவர்கள் நடத்திக் காட்டியுள்ளார்கள். பெருநாள்திடலிலும், கடைவீதியிலும், வீடுகளிலும், பாதைகளிலும் சப்தமிட்டு தக்பீர்கூறியிருந்தால் அந்த சுன்னத் எப்படி மறைக்கப்பட்டதாக ஆகியிருக்கும்?
இவற்றையெல்லாம் இந்தத் தீர்ப்பு வழங்கியவர்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?
நபியவர்கள் சப்தமிட்டுக் கூறியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை, நபித்தோழர்களின்செயல்கள் மூல ஆதாரமாக ஆகாது என்பதையெல்லாம் இந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள்விளங்கி வைத்திருக்கும் போது பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில்ஒரு சிலர் மட்டும் சில வாசகங்களைச் சப்தமிட்டுக் கூறியுள்ளார்கள் என்றால் அதைஅவர்களின் தனிப்பட்டகருத்தாகும். அது நமக்கு மார்க்கச் சட்டமாகாது. நாம் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்குத்தடையாக இருப்பது எது?
நாளை அல்லாஹ் என்னுடைய இறைச் செய்தியை ஏன் பின்பற்றவில்லை என்றுநம்மிடம் கேள்வி கேட்பானா? அல்லது இறைவனல்லாதவர்களின் செய்தியை ஏன்பின்பற்றவில்லை? என்று கேள்வி கேட்பானா?

இந்தத் தவறான தீர்ப்பை வழங்கியவர்கள் இதற்கெல்லாம் பதில் கூறக்கடமைப்பட்டுள்ளனர்.
110 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ  رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோஅவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (110)
என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் போது சிலர் செய்த செயல் நபியவர்களின்வழிகாட்டுதல் பிரகாரம் தான் செய்யப்பட்டது என்று யூகத்தின் அடிப்படையில்தீர்மானிப்பதற்கு என்ன காரணம்?
இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம். இந்த இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிரவேறு யாரும் சட்டம் கூற முடியாது. மார்க்கம் என்ற அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்)அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தும் இறை வழிகாட்டுதல்களின் பிரகாரம்உள்ளதாகும். இறைவனுடைய வஹிச் செய்தியைத் தவிர ஸஹாபாக்கள், இமாம்கள்,அறிஞர்களின் சொந்தக் கூற்றுகளை மார்க்கம் எனக் கருதுபவர்கள் இஸ்லாத்தில்இல்லாத மூன்றாவது ஒரு அடிப்படையை உருவாக்கி விட்டனர் என்பதேஉண்மையாகும். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனைவிடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவேபடிப்பினை பெறுகிறீர்கள்!
(அல்குர்ஆன் 7 : 3)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர்  (ஏக இறைவனை)மறுப்பவர்கள்.
(அல்குர்ஆன்  5 : 44) 
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்
(அல்குர்ஆன் 5 : 45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.
அல்குர்ஆன் 47:5
இறைவனிடமிருந்து வந்த வஹிச் செய்தி மட்டும்தான் இஸ்லாம் என்பதை மேற்கண்டவசனங்கள் அனைத்தும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. குர்ஆன் ஹதீஸ் மட்டும்போதாது. ஸஹாபாக்கள் மற்றும் முந்தைய கால அறிஞர்கள் தம்முடைய சுயக் கருத்தாக கூறியுள்ளவற்றையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒருவன்கூறினால் அவன் இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாம் என்பதை மறுத்தவனாவான்.இது நம்மை இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவத்தின் பக்கம் கொண்டு போய்ச்சேர்த்து விடும்.
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின்மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.
(அல்குர்ஆன் 9 : 31)

யகூதிகளும், நஸராக்களும் இறைச் செய்தியை மட்டும் பின்பற்றாமல் இறைச்செய்தியை மறுத்து தங்களுடைய அறிஞர்கள் மற்றம் மதபோதகர்களின் கருத்தைப்பின்பற்றிய காரணத்தினால் அவர்கள் காஃபிர்களாகிவிட்டார்கள் என்பதை மேற்கண்டவசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். இத்தகைய நிலைக்குச் செல்வதைவிட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

இஸ்லாத்தில் எந்த ஒரு சட்டத்தைக் கூறுவதாக இருந்தாலும் இறைச் செய்தியாககுர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தான்கூறவேண்டும்.
தடையில்லாவிட்டால் மார்க்கமா?
பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது  என்பதற்கு  எந்தத்  தடையுமில்லை  எனவே சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என  ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத்தீர்ப்பு வழங்கியவர்கள்  குறிப்பிட்டுள்ளார்கள்.

இறைவனை சப்தமிட்டு திக்ர் செய்வது எவ்வளவு பெரிய பாவம்,
 வரம்பு மீறுதல்என்பதற்கான குர்ஆன் வசனம் (7 :  205)  மற்றும் நபிமொழியை (புகாரி 2992) நாம் மேலேகுறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையிலே சப்தமிட்டு தக்பீர் சொல்வதற்கு நேரடியானதடை உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் இல்லையென்றாலும்அமல்கள் விசயத்தில் தடையில்லா விட்டால் செய்யலாம் என்பது அறியாமையாகும்.
இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளுக்கும் உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தனித்தனி நிலைபாடுகள் உள்ளன. உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளதா என்று பார்க்க அவசியம் இல்லை. தடை உள்ளதா என்று பார்த்தால் போது. தடை இல்லாவிட்டால் அனுமதிக்கப்பட்டது என்று தான் அர்த்தம்.
ஆனால் இபாதத் எனும் வணக்கவழிபாடுகளைப் பொருத்தவரை தடை உள்ளதா என்று பார்க்கக் கூடாது. அனுமதியோ கட்டலையோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். இது தான் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கொள்கையில் உள்ள ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

மிஃராஜ் நோன்பு வைக்கலாமா? பராஅத் நோன்பு வைக்கலாமா என்று கேட்டால் அதற்கு தடை இல்லை என்று காரணம் கூறி அதை அனுமதிக்க இவர்கள் பாதை அமைக்கிறார்கள். இப்படி ஒரு நோன்பு இருந்தால் அதை நபிகள் நாயகம் செய்திருப்பார்கள் அல்லது சொல்லி இருப்பார்கள் என்ற அடிப்படையில் தான் அதை நாம் பித்அத் என்று கூறி வருகிறோம்.

வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை நபியவர்கள் செய்திருந்தால் மட்டும் தான்அதைச் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்யாத ஒன்றைச் செய்தால் அது நம்மைநரகத்தில் தள்ளுகின்ற பித்அத் ஆகிவிடும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்துநாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
3243 عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ   رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாம் கட்டளையிடாத ஒரு அமலை யார் செய்கிறாரோஅது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்.
நூல் : முஸ்லிம் (3541)

பெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கு நபியவர்கள்எந்த கட்டளையும் இடாத காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது பித்அத் ஆகும்.இங்கு தடையில்லாவிட்டால் செய்யலாம் என்று கூறுவது அறியாமையாகும்.
தவறான ஆதாரங்களும் தக்க விளக்கங்களும்
சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற செய்திகளின்நிலைகளைக் காண்போம்.
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا  (صحيح البخاري (ج 2 ஃ ص 383)
இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவரும் பத்து நாட்களும் கடைவீதிக்குச்சென்று தக்பீர் கூறுவார்கள். மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறுவார்கள்.
(புகாரி) 

இதனை புகாரி இமாம் அவர்கள் பாடத் தலைப்பில் தான் கொண்டு வருகிறார்கள்.இமாம் புகாரி அவர்கள் பாடத் தலைப்பில் கொண்டு வரும் செய்திகள் பலவீனமாகவும்இருக்கலாம். இந்தச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் ''முஅல்லக்”” (அறிவிப்பாளர்தொடர் இல்லாத)  செய்தியாகத் தான் பதிவு செய்துள்ளார்கள்.  ஆனால் இந்தப்பலவீனத்தைக் கூட  கவனிக்காமல் ஏதோ புகாரியில் இடம்பெற்ற ஆதாரப்பூர்வமானஹதீஸைப் போன்று ஆதாரம் காட்டியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.நபித்தோழரின் சுயமான செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடுமட்டுமல்லாமல் இந்தச் செய்தி அறவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகும்.
இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூலிலேதெளிவுபடுத்தியுள்ளார்கள்.
لم أره موصولا عنهما وقد ذكره البيهقي أيضا معلقا عنهما وكذا البغوي   فتح الباري (ج 2 ஃ ص 458)
இப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவர் வழியாக முழுமையானஅறிவிப்பாளர் தொடர் கொண்டதாக இதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பைஹகிஅவர்களும் இந்த இருவர் வழியாக (''முஅல்லக்”) அறிவிப்பாளர் தொடர் இல்லாதசெய்தியாகத் தான் கூறியுள்ளார்கள். இவ்வாறு தான் பகவீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
நூல் : ஃபத்ஹூல் பாரி பாகம் : 2 பக்கம் : 458)

நபித்தோழர்கள் கூற்று மார்க்க ஆதாரம் என்று கூறுபவர்கள் கூட இதனை ஆதாரம்காட்ட முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.
மேலும் இந்தச் செய்தியில் பெருநாள் திடலில் தக்பீர் கூறுவார்கள் என்று எங்கே இடம்பெற்றுள்ளது ?  என்பதை இதனை ஆதாரம் காட்டுவோர்  நிரூபிக்கக்கடமைப்பட்டுள்ளனர்.

மேலும் துல்ஹஜ் பிறை முதல் பத்து நாட்களில் தக்பீர் கூறியதாகத் தான் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து நோன்புப் பெருநாளைக்கு சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்றசட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? துல்ஹஜ் மாதத்தில் கூறிய ஒன்றிலிருந்துஇரமலான் மாதத்திற்கு எப்படி சட்டம் எடுத்தார்கள்?
துல்ஹஜ் பத்து நாட்கள் கடைவீதியில் தக்பீர் சப்தமிட்டு கூறியதாகத் தான் மேற்கண்டபலவீனமான செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெருநாள் திடலில் கூறியதாகக்கூறப்படவில்லை. 
இந்தச் செய்தியை மிகப்பெரிய சான்றாகக் காட்டுவோர் ஆண்களும்பெண்களுமாகச் சேர்ந்து கொண்டு கடைவீதிக்குச் சென்று ஏன் தக்பீர் கூறிசப்தமிடுவதில்லை? இதனை நபிவழியாகக் கருதினால் இதனைச் செய்வதற்கு அவர்கள்ஏன் வெட்கப்பட வேண்டும்? என்பதைத் தெளிவுபடுத்துவார்களா?

 குறைந்த பட்சம்மக்களுக்காவது கடைவீதியில் போகும் போதும் வரும் போதும் ஒன்று சேர்ந்துசப்தமிட்டு தக்பீர் கூறிக் கொண்டே செல்லுங்கள் என்று போதிப்பார்களா?
நபித் தோழர் கூற்று மார்க்கம் ஆகாது என்பதுடன், மேற்கண்ட செய்தி பலவீமானதுஎன்பதுடன், பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு  மேற்கண்டநபித்தோழர்  செயலில் எள்ளவு கூட ஆதாரமில்லை என்பது தான் உண்மையாகும்.பெருநாள் திடலில்  ஆண்களும்  பெண்களும்  ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டுதக்பீர் கூற வேண்டும்  என்று தீர்ப்பு வழங்கியவர்கள் தங்கள் தீர்ப்புக்குச் சான்றாகமற்றொரு செய்தியையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ الْمَسْجِدِ فَيُكَبِّرُونَ وَيُكَبِّرُ أَهْلُ الْأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا وَكَانَ ابْنُ عُمَرَ يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الْأَيَّامَ وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ وَمَمْشَاهُ تِلْكَ الْأَيَّامَ جَمِيعًا وَكَانَتْ مَيْمُونَةُ تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ وَكُنَّ النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ وَعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي الْمَسْجِدِ (صحيح البخاري (ج 2 ஃ ص 384)
உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்தபடிதக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடை வீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினாமுழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர்கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும்  நடக்கும் போதும்அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.
மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

(அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின்உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில்  அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால்” அய்யாமுத் தஷ்ரீக்' (11, 12, 13) நாட்களில்  பள்ளிவாசலில்  ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள் (புகாரி)

நபித்தோழர்களின் செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடு மட்டுமல்லாமல்மேற்கண்ட எந்தச் செய்திக்கும் இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடரைக்குறிப்பிடவில்லை. புகாரி என்று சொன்னால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்றுஎண்ணிக் கொண்டு இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பாடத் தலைப்பில் கூறிய செய்திகளை மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிப்பதற்கு  ஆதாரமாகக்காட்டியுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியைப் பற்றிஇமாம் இப்னு ஹஜர் தன்னுடைய ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்
وكانت ميمونة أي بنت الحارث زوج النبي صلى الله عليه و سلم ولم أقف على أثرها هذا موصولا  (فتح الباري (ج 2 ஃ ص 462)
மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியை முழுமையான அறிவிப்பாளர்தொடருடன் நான் பெற்றுக் கொள்ளவில்லை.
(ஃபத்ஹுல் பாரி பாகம் : 2 பக்கம்  :462)

தாங்கள் செய்து வரும் ஆதாரமில்லாத ஒரு பித்அத்தை நியாயப்படுத்துவதற்காகஇப்படியெல்லாமா மார்க்கத்தில் விளையாடுவார்கள் என்று நமக்கு மிகவும்ஆச்சரியமாக உள்ளது. நாம் ஒரு செய்தியை ஆதாரம் காட்டும் போது அது ஸஹீஹானது தானா என்பதைஆய்வு செய்ய வேண்டாமா?

இதில் நபித்தோழர் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள். நபிகள்நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள்.
மேலும் அபான் பின் உஸ்மான், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோர்நபித்தோழர்கள் கிடையாது. இவர்கள் நபித்தோழர்களின் காலத்திற்கு மிகவும்பிந்தியவர்கள். இவர்களுடைய செயலையும் மார்க்க ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

நபித்தோழர்களின் சுயக் கருத்துகளை மார்க்கச் சட்டமாக்க முயன்றவர்கள் மிகவும் தரம்தாழ்ந்து போகிற போக்கில் நபித்தோழர்கள் அல்லாதவர்களின் கூற்றுகளையும் ஆதாரம்போன்று காட்டியிருப்பது இவர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இதில் இன்னும் பரிதாபம் என்னவென்றால் மேற்கண்ட செய்தியும் அறிவிப்பாளர்தொடரில்லாத பலவீனமான செய்தியாகும். இதைத் தெரிந்து கொண்டே தான்மேற்கண்ட செய்தியை ஆதாரம் போன்று காட்டியுள்ளனர்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்திகள் ஆதாரமானவை என வைத்துக் கொண்டாலும்இவை அனைத்துமே மினாவில் தங்கியிருக்கும் போது தக்பீர் கூறியதாகத் தான்வந்துள்ளதே தவிர பெருநாள் திடலில் அதுவும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் திடலில் ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டுதக்பீர் கூறினார்கள் என்று மேற்கண்ட செய்திகளில் எங்கே இடம் பெற்றுள்ளது? என்பதைஇதனை ஆதாரமாகக் காட்டுபவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

மொத்தத்தில் இவர்கள் ஆதாரம் காட்டிய அனைத்தும் பலவீனமானவையாகஇருப்பதுடன் அந்தச் செய்திகளில் பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும்என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மையாகும்.
தக்பீர் வாசகத்திலும் பித்அத்
நபியவர்கள் பெருநாள் அன்று தக்பீர் கூறவேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.தக்பீர் கூறுதல் என்றால் ''அல்லாஹு அக்பர்” என்று கூறுவது தான். ஒரே ஒரு ஹதீஸில்கூட தக்பீர் கூறினார்கள் என்பதற்கு ''அல்லாஹு அக்பர்” என்பதை விட அதிகப்படியானவாசகங்களைச் சேர்த்துக் கூறினார்கள் என்று கிடையவே கிடையாது.

ஆனால் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் மார்க்கம்என்ற பெயரில் விட்டடித்திருப்பதைப் பாருங்கள். இதோ அவர்கள் கூறும் தீர்ப்புவாசகங்களைப் பாருங்கள்.
அல்லாஹ்வை பெருமைப்படுத்துங்கள் நினைவு கூறுங்கள் என்று வருகின்றகாரணத்தினால் அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் நினைவு கூறும் முகமாக
ألله أكبر الله أكبر ألله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد
அல்லாஹு அகபர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து
என்ற வாசகத்தையோ இது போன்ற இறைவனைப் பெருமைப் படுத்தும் நினைவு கூறும்வாசகங்களையோ கூறலாம் என உணர முடிகிறது. (ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்புபக்கம் 5)

இவர்களுக்கு உணர முடிகிறதாம். இவர்களுக்கு தனியாக வஹி வருகிறது போலும்.
இவர்களாக எழுதிய வாசகத்தை மார்க்கமாக்க இவர்களுக்கு அதிகாரம்  கொடுத்தது யார்? இந்த வாசகத்தை இவர்கள் எந்த  நபிமொழியிலிருந்து எடுத்தார்கள்? குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் இவர்கள்  உணர்கின்ற விஷயங்களெல்லாம் மார்க்கஆதாரமாகிவிடுமா?

இவ்வாறு மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை உருவாக்குபவர்கள் அல்லாஹ்விற்குஅஞ்சி இது போன்ற செயல்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.
இவர்கள் எதைக் கூறுகிறார்களோ அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் தடை இல்லாததால் இவர்கள் அதைக் கூறுவார்களாம். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினர் இதை விட அதிகமாக கூறுகிறார்களே அது கூடாதாம். 

ஆதாரம் இல்லாமல் இவர்கள் மட்டும் எதையாவது உணர்வார்களாம். மற்றவர்கள் இப்படி உணர உரிமை இல்லையாம். இவர்கள் எந்த அடிப்படையில் தாங்கள் உண்டாக்கிய தக்பீரை நியாயப்படுத்துகிறார்களோ அதே அடிப்படை இவர்கள் பித்அத் என்று தீர்ப்பளித்துள்ள தக்பீருக்கும் பொருந்தத்தானே செய்யும். இவர்கள் உண்டாக்கிய தக்பிருக்கு தடை இல்லை என்றால் சுன்னத் ஜமாஅத் உண்டாக்கிய  தக்பீருக்கும் தடை  இல்லை தானே? 

இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?
சிரமப்பட்டதினால் தடையா? சப்தமிட்டதினால் தடையா?
புகாரி 2992 ஹதீஸில் ஸஹாபாக்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது நபியவர்கள் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.
இதற்குரிய காரணமாக ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்புவழங்கியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.
மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் إرتفعت أصواتنا  என்பதற்கு மேட்டுப் பகுதியில்ஏறும் சமயம் தங்களை வருத்திக் கொள்ளும் விதமாக தக்பீர் கூறியதைத் தான் நபி(ஸல்) அவர்கள் إربعوا என்று கூறினார்கள். أربعوا என்பதற்கு لا تكلفوا أنفسكم  (உங்களைக்கஷ்டப்படுத்தும் விதமாக உங்களை வருத்திக் கொள்ளும் விதமாக சப்தம் போடாதீர்கள்)என்ற அர்த்தம் ஆகும். எனவே மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி பெருநாள் உடையதக்பீர்களைச் சப்தமிட்டு கூறுவது தடை என பொத்தாம் பொதுவாகக் கூறுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை.
(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் : 6)

இவர்கள் தங்கள் மனோ இச்சைக்குத் தோதுவாக ஹதீஸ்களின்  கருத்தைத் திரிப்பவர்கள்என்பது மேற்கண்ட அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாகிறது. நபியவர்கள் ஸஹாபாக்கள் சப்தமிட்டு  தக்பீர் கூறிய போது ஏன் தடை செய்தார்கள் என்கின்ற காரணத்தையும் சேர்த்தே கூறுகிறார்கள். ஸஹாபாக்கள் சிரமப்பட்டுக்கூறினார்கள் என்பதற்காக நபியவர்கள் தடை  செய்யவில்லை. இதோ நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.
அபூமூசா  அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்)ஏறும் போது, ''லா இலாஹ இல்லல்லாஹ் லிவணக்கத்திற்குரியவன்  அல்லாஹ்வைத்தவிர வேறு யாரு மில்லை'' என்றும் ”அல்லாஹு அக்பர் லி அல்லாஹ் மிகப் பெரியவன்''என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போதுநபி (ஸல்) அவர்கள், ”மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காதுகேட்காதவனையோ, இங்கில்லா தவனையோ அழைக்கவில்லை. அவன்உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்றுகூறினார்கள். நூல் : புகாரி (2992)

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான்சப்பமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால்இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.
நாம் சப்தமில்லாமல் இறைவனை நினைவு கூறும் பொழுது தான் இறைவன் நம்மோடுஇருக்கிறான். நாம் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருக்கின்றான்,அருகிலிருக்கின்றான் என்பதை நாம் ஈமான் கொண்ட மக்களாக ஆவோம். இதன்காரணமாகத் தான் நபியவர்கள் சப்தமிட்டு  தக்பீர் கூறுவதைத் தடைசெய்கின்றார்கள். மேலும் நாம் பார்த்தவரை ''அர்பிஊ”” என்ற  வார்த்தைக்கு ''உங்களைக் கஷ்டப்படுத்தும்விதமாக உங்களை வருத்திக் கொள்ளும் விதமாக சப்தம் போடாதீர்கள”” என்றபொருளை நாம் எங்கும் காணமுடியவில்லை.

எனவே பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது நபியவர்கள் காட்டித்தராத பித்அத்ஆகும். இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும்பாதுகாப்பானாக.

Friday, October 17, 2014

துல் ஹஜ் ஒன்பதாம் நாள் (அரஃபா) நோன்பு.

துல் ஹஜ் ஒன்பதாம் நாள் (அரஃபா) நோன்பு.


“அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?” என்று வினவ, “ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிடவும் தான்; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),        நூல்: புகாரி.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.


நாளைத் தீர்மானிப்பது எப்படி?

சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள். சுபுஹ் தொழுத பின் முஜ்தலிபாவிலிருந்து புறப்பட்டு அரபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மஃரிப் வரை தங்கிவிட்டு மஃரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள். இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது.  ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. 
 தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிக்கும் வழிமுறையைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்? 

எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள் சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். 

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள்  அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.  ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும். 

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா? 

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.
அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மஃரிப் நேரமாகும். மஃரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. 

பெருநாள் தினத்தில் ஹராமான நாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? 
ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. 
அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். 
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம். 
மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில்  ஹாஜிகள் கூடிய செய்தியை தொலைபேசியில் கேட்டோ அல்லது தொலைக்காட்சியில் பார்த்தோ  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை.  தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில்  தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் தென்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

தொலைத் தொடர்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃôபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286)  இந்த மார்க்கத்தில அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்:று சிலர் கூறுகின்றனர்.. மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது. 

)وأخبرنا) أبو عبد الله الحافظ ثنا أبو محمد عبد الله بن جعفر بن درستويه النحوي ببغداد ثنا محمد بن الحسين بن أبي الحنين ثنا عارم أبو النعمان ثنا حماد بن زيد قال سمعت ابا حنيفة يحدث عمرو بن دينار قال حدثني علي بن الاقمر عن مسروق قال دخلت على عائشة يوم عرفة فقالت اسقوا مسروقا سويقا وأكثروا حلواه قال فقلت اني لم يمنعني ان اصوم اليوم إلا اني خفت ان يكون يوم النحر فقالت عائشة النحر يوم ينحر الناس والفطر يوم يفطر الناس - السنن الكبرى للبيهقي - (ج 4 / ص 252 
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள் என்று விளக்கமளித்தார்கள்.
           அறிவிப்பவர் :  மஸ்ரூக்             நூல் :  பைஹகீ 
 மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள்  கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது. அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.

தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது. நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மஃரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மஃரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.
சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மஃரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் மறையும் போது மஃரிப் தொழ முடியாது. எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு  எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை. 
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும். இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்

Written By M.S.M Safwan 


Sunday, October 5, 2014

அரஃபா நோன்பு பிறை ஒன்பதிலா? அல்லது ஹாஜிகள் கூடும் நாளிலா?

அரஃபா நோன்பு பிறை ஒன்பதிலா? அல்லது ஹாஜிகள் கூடும் நாளிலா? 


மாதத்தின் ஆரம்பத்தையும் இறுதியையும் பிறை தென்படுவதை வைத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது. பிறை பார்த்து மாதத்தை முடிவெடுக்க வேண்டும் என்பதை பொதுவாக பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். ரமழான், ஷவ்வால், துல்கஃதா போன்ற எந்த மாதமாக இருந்தாலும் பிறை அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படுகின்றது. 

ஆனால் துல்ஹஜ் மாதம் மாத்திரம் அரபா நோன்பை வைத்து அதாவது ஸவுதியில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் ஹாஜிகள் எப்போது அரபா திடலில் ஒன்று சேர்வார்களோ அத்தினத்தில் ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றார்கள். இந்தக் கருத்துடையோர் தங்களை சர்வதேசப் பிறைவாதிகளாக அடையாளம் காட்டிக் கொள்கின்றார்கள். 


உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் ரமழானை தீர்மானிக்கும் போது எந்த நாட்டில் பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லும் சர்வதேசப் பிறைவாதிகள் துல்ஹஜ் பிறை விஷயத்தில் சவுதிப் பிறையை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் இவர்கள் பின்பற்றுவது சர்வதேசப் பிறையல்ல சவுதிப் பிறை என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும். 


ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள். சுபுஹ் தொழுத பின் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள். இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். 


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் “(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்’ அல்லது “அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்க, “இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம் (2151) 


தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் இருக்கும் போது, அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். 


சவூதியின் பிறைக் கணக்குப்படி 9 ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிறை 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்? எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். 


அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், ஆனால் சர்வதேசப் பிறைவாதிகளின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. 


ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள். 


அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும். 


அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா? 


இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும். அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். 


அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. 


நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. 


அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது. 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். 


மாதத்தை அடைதல். 

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (திருக்குர்ஆன் : 2:185) 

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது. 


தேவையில்லாத ஒரு எழுத்துக் கூட அதில் இடம் பெறாது என்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை. ஃபமன் ஷஹித மின்கும் அல் ஷஹ்ர – உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். 


ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது ஆராய்வோம். இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம். 


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (திருக்குர்ஆன் : 2:184) 


உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது. இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். 


இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும். ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும். 


குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும். இந்த நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம். உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் பொய் சொல்லாதவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும். இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும். 


அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய வேண்டும். *அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார். *ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார். இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும். அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும். மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று கூற முடியாது. 


ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவனைப் பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவனை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது. உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள். நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத் தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா? யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள். அதாவது உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும். ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? அறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது. யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம். 


மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். 


ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள். நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான். தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபாவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா? எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர். மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா? ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா? உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல. மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும். ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் திகதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் திகதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள். ஆனால் ஜனவரி முதல் திகதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள். இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும். நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் – அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா? இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம். அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும். தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது. நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம். சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது. எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை. 


எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும். இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்.



 - See more at: http://rasminmisc.com/arafa-pira-09/#sthash.Vpcd9ceU.dpuf