பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, March 14, 2014

அத்தஹிய்யாத்துக்குப் பின் விரும்பிய துஆவைச் செய்யலாமா?

அத்தஹிய்யாத்துக்குப் பின் விரும்பிய துஆவைச் செய்யலாமா?
அத்தஹிய்யாத்து அமர்வில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதிய பிறகு நாம் விரும்பிய துஆக்களைச் செய்யலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151
1266حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود
ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.
அபூதாவூத் (1266)
அத்தஹிய்யாத்ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்குப் பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரிவஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-வஅஊது பி(க்)க  மின் ஃபித்னத்தில் மஹ்யா,வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திஇருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
நூல்: புகாரி 832
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையைக் கற்றுத் தாருங்கள்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன்வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம் இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர வேறெவரும்  பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்!'' என்றார்கள்.
நூல்: புகாரி 834,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதியாக அத்தஹிய்யாத்துக்கும் சலாமுக்குமிடையே "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ மா அக்கர்த்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்த்து வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு லா இலாஹ இல்லா அன்த்த'' (அல்லாஹ்வே! நான் முந்திச் செய்த பிந்திச் செய்கிறஇரகசிமாகச் செய்த,பகிரங்கமாகச் செய்தவரம்பு மீறிச் செய்தஎன்னைவிட நீ அறிந்துள்ள (இன்னபிற) பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே முன்னேறச் செய்பவன். பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவார்கள்.
முஸ்லிம் (1419)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த துஆக்களின் ஏதேனும் ஒன்றை ஓதிய பின் நாம் விரும்பும் தேவைகளை இருப்பில் இருந்து கொண்டே அல்லாஹ்விடம் கேட்கலாம்.

அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா

அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது �


தொழக் கூடாத பள்ளிகள் என்று குர் ஆனில் கூறப்பட்டதை காரணமாக வைத்து அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?

குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும்நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும்இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் (9 : 107)
மேற்கண்ட வசனத்தில் இறை மறுப்புக் காரியம், பிறருக்கு தீங்கிழைத்தல், முஸ்லிம்களிடையே பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குப் போகக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணைவைப்பு என்ற பெரும்பாவம் ஒரு பள்ளியில் அரங்கேறினால் இந்த ஒரு காரணம் இருந்தாலே அது பள்ளி என்ற அந்தஸ்தை இழந்து விடும். இது பற்றி விரிவாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.
*************
1. http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/thozakuutatha_pallivasal/
2. http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/shrkana_palliyi_thozalama/
3. http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thanipali_thevaya/
4. http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thozakudatha_palli_undaa/
5. http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thozakkootatha_palli_ethu/
***************
இந்த நான்கு குற்றங்களும் நடத்தப்படாத பள்ளிகள் எத்தனையோ தமிழகத்தில் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட பள்ளிகள் அல்ல. இவற்றுக்குச் சென்று தொழுதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
27 மடங்கு நன்மைகள்
"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),
நூல் : புகாரி (645)
ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்
உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதுஅவரது வீட்டிலோகடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்.  ஏனெனில்அவர் உளூச் செய்து,அதை அழகுறச் செய்துபிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது.   மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆச் செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்துஉளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை.  "இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!'' என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (2119)
எவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டுபிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது.  ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (1059)
அன்சாரிகளில் ஒருவர் இருந்தார்.  பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது.  "கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் வழங்குவானாக!'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி)
நூல் : முஸ்லிம் (1065)
பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் காலியாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர்.  இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும்அவர்களை நோக்கி, "நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!'' என்று வினவினார்கள்.  அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸலமா கிளையினரே!  உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன'' என்று கூறினார்கள்.  உடனே சலமா கிளையினர் "நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'' என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் 1068, புகாரி (656)
யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு.  யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (651)
மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவதுஅல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும்.  நல்ல சொல்லும்தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும்(வழி தெரியாதவருக்கு) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (2891)
இரவு முழுவதும் தொழுத நன்மை
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா
நூற்கள் : முஸ்லிம்அபூதாவூத்
சொர்க்கத்தில் வீடு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் பள்ளிவாசலுக்கு  (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
புகாரி (662)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பள்ளிக்குச் சென்று ஜமாஅத் தொழுகையைப் பேணி நன்மைகளை அடைவோமாக! பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் இந்த நன்மைகளை இழக்க நேரிடும்.
அதே நேரத்தில் முழுக்க முழுக்க நபிவழி அடிப்படையில் செயல்படக்கூடிய பள்ளி ஒன்று இருக்கும் பட்சத்தில் மற்ற பள்ளிகளை விட்டுவிட்டு நபிவழி அடிப்படையில் நடக்கும் பள்ளிக்குச் செல்வதைத் தவறு என்று கூறக் கூடாது. மாறாக நபிவழி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும்.
எனவே நான்கு காரணங்களும் இல்லாத ஒரு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அல்லது முழுமையாக நபிவழியில் நமது தொழுகைகளை அமைத்துக் கொள்ள பள்ளிகளை மர்கஸ்களை உருவாக்கி இந்த நன்மையை அடைய வேண்டும்

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா
நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன்.இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம்இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி நேரத்தைப் பின்பற்றி நோன்பு திறத்தல் மற்றும் மக்ரிப் தொழுகையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே ரமலான் அல்லாத நேரத்தில் கோடையில் மக்ரிப் தொழுகையை இரவு பத்து மணிக்குமமக்ரிப் முடிந்த உடனே இஷா தொழுகையையும் நடத்துகிறார்கள். இதுவே குளிர் காலம் என்றால் மக்ரிப் மாலை நான்கு மணிக்கும்இஷா இரவு ஏழு மணிக்கும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இவர்கள் செய்வது சரியாஇது போன்ற நாடுகளில் தொழுகை மற்றும் நோன்பை எந்த நேரப்படி பின்பற்றுவது? தெளிவான விளக்கம் தேவை.
 
ஆதம் முஹம்மத்.பெல்ஜியம்.
பதில் :
தொழுகை நோன்பு ஆகிய இரு வணக்கங்களையும் எந்த நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் தெளிவாகக் கூறியுள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கம் கூறியுள்ள நேரங்களைத் தவிர்த்து நமது வசதிக்கேற்ப வேறு நேரங்களைத் தேர்வு செய்யக் கூடாது.
தொழுகையை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்ற வேண்டும்
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا(103)4
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன் (4 : 103)
தொழுகையைப் பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும் கடமையான தொழுகைகளை குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1027 حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள்அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1340)
தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்.
528حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
புகாரி( 527)
தொழுகை நேரங்கள்
சுப்ஹுத் தொழுகையின் நேரம்
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரத்திலிருந்து சூரியன் உதிக்கத் துவங்கும் வரை உண்டு.
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1075)
லுஹர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு. அதாவது சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் வரை லுஹர் நேரம் நீடிக்கும்.
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகி அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1075)
அஸ்ர் தொழுகையின் நேரம்
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து அதாவது சூரியன் உச்சி சாய்ந்து 80 நிமிடங்கள்க கடந்துவிட்டால் அப்போதிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை அஸர் நேரமாகும்.
 (ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது... ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதீ (138)
அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1076)
மக்ரிப் தொழுகையின் நேரம்
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1076)
இஷா தொழுகையின் நேரம்
சூரியன் மறைந்து செம்மேகமும் மறைந்துவிட்டால் இஷாத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகி விடுகின்றது.
இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1074)
பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிப்பதால் அங்கு இரவு பகலை முடிவு செய்ய முடியும். மேற்கண்ட நேரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இதற்கு மாற்றமாக சவூதி நேரங்களை அடிப்படையாகக் கொண்டு தொழுகை முறைகளை அமைத்துக் கொள்வது குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் எதிரான போக்காகும்.
நோன்பின் நேரம்
சுப்ஹ் நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் முழுமையாக மறைகின்ற வரை நோன்புடைய நேரமாகும். பெல்ஜியம் நாட்டில் சுப்ஹ் நேரம் எப்போது வருகின்றது?சூரியன் எப்போது மறைகின்றதுஎன்பதைக் கவனித்து நோன்பு நோற்க வேண்டும்.
குளிர் காலங்களிலும் கோடை காலங்களிலும் இரவு பகலுடைய நேரங்கள் வித்தியாசப்படும். கோடை காலங்களில் பகற்பொழுது 14 மணி நேரமாக இருந்தாலும் 14 மணி நேரம் நோன்பு நோற்க வேண்டும்.
நேரம் கூடுகிறது என்பதற்காக சூரியன் மறைவதற்கு முன்பே நோன்பு திறந்துவிட்டால் அந்த நோன்பு ஏற்கப்படாது. அதே போன்று குளிர் காலங்களில் பகற்பொழுதின் நேரம் குறையும். இதற்காக சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் தாமதப்படுத்துவது கூடாது. பகல் நீண்டாலும் சுருங்கினாலும் சூரியன் மறைவதைத் தான் கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். இதற்கு மாற்றமாக சவூதியில் சூரியன் மறையும் நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறந்தால் அது நோன்பாக அமையாது.
அதே நேரத்தில் துருவப்பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். இவர்கள் தினமும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ உச்சி சாய்வதையோ காண முடியாது.
இவர்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக்கணக்கிட்டு அந்த நேரத்துக்குள் ஐந்து நேரத் தொழுகைகளைக் கணித்துக் கொள்ளலாம். அது தான் அவர்களுக்கு சாத்தியமாகும்.
ஆறு மாதம் இரவாக இருக்கும் போது இரவிலேயே அவர்கள் லுஹர் அஸர் தொழுவார்கள். ஆறு மாதம் பகலாக இருக்கும் போது பகலில் அவர்கள் சுப்ஹு மக்ரிப் இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுவார்கள்.
இதற்கான ஆதாரம் வருமாறு
....அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும்ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்போதாதுஅதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்
நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது.
அவர்கள் கணித்துக் தான் தொழுகைநோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான்.
இது போன்ற நிலை பெல்ஜியத்தில் இல்லாத போது சவூதி நேரத்தை அடிப்படையாக கொண்டு வணக்கங்கள் செய்தால் அவை இறைவனால் ஏற்கப்படாது.