பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 18, 2018

குர்ஆனின்_சஜ்தா_செய்ய_வேண்டிய_சஜ்தாவுக்குப்_பின்_சலாம்_உண்டா

#மார்க்க_சட்டங்கள்

#குர்ஆனின்_சஜ்தா_செய்ய_வேண்டிய_சஜ்தாவுக்குப்_பின்_சலாம்_உண்டா?

#இல்லை

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரமற்றதாகும். அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி 1067, 1070

இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, “இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,

நூல் : புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்), ஸாத் (38வது அத்தியாயம்), இன்ஷிகாக் (84வது அத்தியாயம்), அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தா செய்து கொள்ளலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

’நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),

நூல் : புகாரீ 1072. 1073

ஒருவர் குர்ஆனில் உள்ள வசனங்களில் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையுள்ள எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.

’ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : முஸ்லிம் (133), இப்னுமாஜா (1042), அஹ்மத் (9336)

ஸஜ்தா திலவாத் துஆ

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.

பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)

இந்த சஜ்தாவிற்குப் பின்னால் சலாம் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே சஜ்தா மட்டும் செய்து கொள்ள வேண்டும்.

Saturday, May 12, 2018

முதல்_வரிசையில்_சிறுவர்கள் #நிற்கலாமா?

#முதல்_வரிசையில்_சிறுவர்கள் #நிற்கலாமா?

சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் நிற்க பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா?

ரஸ்மின்

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس وأبو معاوية ووكيع عن الأعمش عن عمارة بن عمير التيمي عن أبي معمر عن أبي مسعود قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا فتختلف قلوبكم ليلني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم قال أبو مسعود فأنتم اليوم أشد اختلافا

பருவமடைந்தவர்கள் எனக்கு அடுத்து நிற்கட்டும். அதற்கடுத்த வயதினர் அடுத்து நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ மஸ்வூத் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே பருவமடைந்தவர்கள் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.

பருவமடைந்தவர்களே வரிசையை நிரப்பும் அளவுக்கு இருந்தால் தான் இந்த நிலை. பருவமடைந்தவர்கள் வரிசையில் நின்ற பின்னர் இடம் இருந்தால் அல்லது சிறுவர்கள் மட்டுமே இருந்தால் அவர்கள் முதல் வரிசையில் தான் நிற்க வேண்டும். காலதாமதமாக வருபவருக்காக இடத்தை முன்பதிவு செய்து வைத்தல் இஸ்லாத்தில் இல்லை.

صحيح البخاري

76 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَيَّ»

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில் மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன்.-அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்று கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.

நூல்: புகாரி 76

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பருவமடையாதவராக இருந்த போதும் முன் வரிசையில் காலியாக இருந்த இடத்தில் நின்றுள்ளனர் என்பதை இதில் இருந்து அறியலாம்.

صحيح البخاري

380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயை நோக்கி எழுந்தேன். அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்தது. ஆகவே அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

நூல்: புகாரி 380

பெரியவர்கள் யாரும் இல்லாத போது சிறுவர்களே முதல் வரிசையாக நின்றுள்ளனர் என்பதற்கு இது சான்றாக உள்ளது. #எனவே_இடம்_காலியாக #இருந்தால்_சிறுவர்களை_முன்_வரிசையில் #நிற்பதை_யாரும்_தடை_செய்யக்_கூடாது.

தொழுகையில்_தமிழில்_துஆ_செய்யலாமா

#மார்க்க_சட்டங்கள்

#தொழுகையில்_தமிழில்_துஆ_செய்யலாமா?

#பதில்_செய்யலாம்

தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: நஸயீ 1151

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் 1266

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 832

ஒருவருக்குத் தமிழ் மொழி மட்டும் தெரியுமானால் அவர் தான் விரும்பிய பிரார்த்தனைகளை அந்த மொழியில் தான் செய்ய முடியும். அவரவருக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலே விரும்பிய பிரார்த்தனையைச் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைச் செயல்படுத்த முடியும். எனவே தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்வது தவறல்ல.

குர்ஆனில் இறைவன் கற்றுத்தரும் துஆக்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபு மொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபு மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல. அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வார்த்தையையும் அப்படியே கூற வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். குர் ஆன் ஹதீஸில் உள்ள துஆக்களை அரபு மொழியில் அதற்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தினால் அந்த துஆக்களை ஓதியதாக ஆகாது.

அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் அரபுமொழியில் இருப்பதால் அதை அப்படியே தொழுகையில் ஓதினால் தான் நாம் இறைவனுடைய வார்த்தைகளைக் கூறியவர்களாக முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகள் அரபு மொழியில் அமைந்துள்ளது. இந்தப் பிரார்த்தனைகளை நபியவர்கள் கூறிய வார்த்தை மாறாமல் அப்படியே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

247حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபி’யை நான் நம்பினேன்.” என்று பிராத்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!

இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். “நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்’ என்ற இடத்தை அடைந்ததும் (“உன் நபியை’ என்பதற்கு பதிலாக) “உன் ரசூலை’ என்று (மாற்றிச்) சொல்லி விட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்” என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

நூல் : புகாரி 247

Friday, May 11, 2018

துஆவின்_போது_கைகளை_வைக்கும்_முறை_என்ன

#மார்க்க_சட்டங்கள்

#துஆவின்_போது_கைகளை_வைக்கும்_முறை_என்ன?

#பதில்

கைகளை உயர்த்துவதாக இருந்தால், தோல்களுக்கு நேராக உயர்த்துவது, உள்ளங் கைகளை வானத்தை நோக்கி வைப்பது அதன் முறையாகும்.

கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْكُرَاعُ وَهَلَكَ الشَّاءُ فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا فَمَدَّ يَدَيْهِ وَدَعَا رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்து விட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

புகாரி (932)

4339 حَدَّثَنِي مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ ح و حَدَّثَنِي نُعَيْمٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்கப்படி)” “ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறி விட்டோம்” என்று சொல்லலானார்கள். உடனே காலித் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை சொன்னார்கள்.

புகாரி (4339)

பிரார்த்தனையின் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. இனி கைகளை உயர்த்தும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். கைகளை இரு தோல்பட்டைகளுக்கு நேராக இருக்குமாறு வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

1274حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا وُهَيْبٌ يَعْنِي ابْنَ خَالِدٍ حَدَّثَنِي الْعَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ الْمَسْأَلَةُ أَنْ تَرْفَعَ يَدَيْكَ حَذْوَ مَنْكِبَيْكَ أَوْ نَحْوَهُمَا وَالِاسْتِغْفَارُ أَنْ تُشِيرَ بِأُصْبُعٍ وَاحِدَةٍ وَالِابْتِهَالُ أَنْ تَمُدَّ يَدَيْكَ جَمِيعًا حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ وَالِابْتِهَالُ هَكَذَا وَرَفَعَ يَدَيْهِ وَجَعَلَ ظُهُورَهُمَا مِمَّا يَلِي وَجْهَهُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ عَنْ أَخِيهِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَذَكَرَ نَحْوَهُ رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

உனது கைகளை உனது தோல்களுக்கு நேராக உயர்த்துவது பிரார்த்தனையின் ஒழுங்காகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (1274)

உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

1271حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْبَهْرَانِيُّ قَالَ قَرَأْتُهُ فِي أَصْلِ إِسْمَعِيلَ يَعْنِي ابْنَ عَيَّاشٍ حَدَّثَنِي ضَمْضَمٌ عَنْ شُرَيْحٍ حَدَّثَنَا أَبُو ظَبْيَةَ أَنَّ أَبَا بَحْرِيَّةَ السَّكُونِيَّ حَدَّثَهُ عَنْ مَالِكِ بْنِ يَسَارٍ السَّكُونِيِّ ثُمَّ الْعَوْفِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَأَلْتُمْ اللَّهَ فَاسْأَلُوهُ بِبُطُونِ أَكُفِّكُمْ وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا قَالَ أَبُو دَاوُد و قَالَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ لَهُ عِنْدَنَا صُحْبَةٌ يَعْنِي مَالِكَ بْنَ يَسَارٍ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது உங்களது உள்ளங்கைகளை கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்களது கைகளின் மேற்புறத்தைக் கொண்டு அவனிடம் வேண்டாதீர்கள்.

இதை மாலிக் பின் யசார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவுத் (1271)

பிரார்த்தனையின் போது கைகளை அக்குள் தெரிகின்ற அளவிற்கு நன்கு உயர்த்துவதற்கும் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

2597 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي قَالَ فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا رواه البخاري

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் “இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த “ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

புகாரி (2597)

6383 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ بِهِ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ فَقَالَ اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنْ النَّاسِ رواه البخاري

அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன்.

புகாரி (6383)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளை அக்குள் தெரிகின்ற அளவுக்கு உயர்த்தி பிரார்த்தனை செய்தது சில நேரங்களில் தான். அதிகமான நேரங்களில் தோல்பட்டைக்கு நேராக வைத்தே பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

1031حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்த மாட்டார்கள் (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) தமது அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள்.

புகாரி (1031)

நபியவர்கள் கற்றுக் கொடுத்த முறைகளில் எதைக் கடைப்பிடித்தாலும் சரிதான்.