பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, October 28, 2010

கிறிஸ்துவ பெண்களை திருமணம் செய்யலாமா?

கிறிஸ்துவ பெண்களை திருமணம் செய்யலாமா?இன்றுள்ள கிறிஸ்துவ பெண்களை திருமணம் செய்யலாமா? குரானில் கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் மணமுடிக்கலாம் என்று உள்ளது என்கிறார்கள்? விளக்கவும்.


:

الْيَوْمَ أُحِلَّ لَكُمْ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنْ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنْ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنْ الْخَاسِرِينَ(5)5

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக் கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.

அல்குர்ஆன் (5 : 5)

இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. பொதுவாக யூத, கிறித்தவப் பெண்களை அவர்கள் யூத கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்ய இவ்வசனம் அனுமதிப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.

இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோரில் சேர மாட்டார்கள்.

இஸ்ரவேல் சமுதாயப் பெண்களை மணக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவப் பெண்களை மணக்க அனுமதி இல்லை.

வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் தேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

أَنْ تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَى طَائِفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ(156)6

''எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது; நாங்கள் அதைப்படிக்கத் தெரியாமல் இருந்தோம்'' என்றும், ''எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர் வழி பெற்றிருப்போம்'' என்றும் நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இவ்வேதத்தை அருளினோம்). உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும், நேர் வழியும் அருளும் வந்து விட்டன. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நமது வசனங்களைப் புறக்கணிப்போருக்கு அவர்கள் புறக்கணித்து வந்த காரணத்தினால் கடுமையான வேதனையை அளிப்போம்.

அல்குர்ஆன் (6 : 155)

யூதர்களும் கிரிஸ்தவர்களும் மட்டுமே வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதம்கொடுக்கப்பட்டவர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட ஏனைய நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். ''என்னைத் தவிர பொறுப்பாளர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்!'' என்று இஸ்ராயீலின் மக்களுக்கு நேர் வழிகாட்டக் கூடியதாகவும் அதை ஆக்கினோம்.

அல்குர்ஆன் (17 : 2)

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீ¬ன் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.

அல்குர்ஆன் (32 : 23)

மூஸாவுக்கு நேர் வழியைக் கொடுத்தோம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் மக்களுக்கு உடமையாக்கினோம்.

அல்குர்ஆன் (40 : 53)

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:101, 20*47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6)

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ (49)3

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (நான் அனுப்பப்பட்டுள்ளேன்)

அல்குர்ஆன் (3 : 49)

إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ(59)43

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் (43 : 59)

''இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் (61 : 6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமாஞகள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

335 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ الْعَوَقِيُّ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ ح و حَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ قَالَ أَخْبَرَنَا سَيَّارٌ قَالَ حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الْفَقِيرُ قَالَ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ وَجُعِلَتْ لِي الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَلْيُصَلِّ وَأُحِلَّتْ لِي الْمَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَأُعْطِيتُ الشَّفَاعَةَ وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளது.

1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்துகொள்ளட்டும்.) தொழுதுகொள்ளட்டும்.

3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.

5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக (நியமித்து) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக (நியமித்து) அனுப்பப் பட்டுள்ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (335)

இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது.

யூதர்களைப் பொறுத்தவரை புதிதாக ஒருவர் தங்கள் மதத்தைத் தழுவினால் அவரை தங்களுடைய மதத்தில் இணைத்துக் கொள்ள மாட்டார்கள். யூதன் என்றால் அவன் இஸ்ரவேலனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

எனவே இன்றைக்கு உள்ள யூதர்கள் இஸ்ரவேலர்களின் பரம்பையில் வருபவர்கள் என்பதால் அவர்களது பெண்களை மணமுடிக்க அனுமதியுள்ளது.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை யார் தங்களது மதத்திற்கு வந்தாலும் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள். எனவே இன்றைக்கு கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவர்களில் இஸ்ரவேலர்களின் வம்சாவழியில் வந்தவர்கள் யார்? வேறு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் யார்? என வித்தியாசப்படுத்த முடியாது.

குறிப்பாக நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களில் அநேகமானவர்கள் இஸ்ரவேலர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கிறிஸ்தவர்களில் யார் இஸ்ரவேலர் என்பது உறுதியாகத் தெரிகின்றதோ அவர்களை மட்டுமே தற்போது மணமுடித்துக் கொள்ளலாம்.

மேலும் விபரத்துக்கு இந்த ஆக்கத்தையும் பார்க்கவும் இதையும் பார்க்கவும்

08.08.2010. 11:50
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்

27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?

வேதம் கொடுக்கப்பட்டோர்' என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர் களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

அனைத்து யூதர்களும், கிறித்தவர் களும் வேதக்காரர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட ஏனைய நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன.

(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6)

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்த வர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப் பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.

'மூஸா நபியவர்கள், இஸ்ரவேலர் களுக்கு மட்டும் அனுப்பபப்படவில்லை; மாறாக, இஸ்ரவேல் அல்லாத ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்கும் அனுப்பப்பட்டார்கள். எனவே மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் உரியது அல்ல; வேதம் கொடுக்கப் பட்டோர் என்பது இஸ்ரவேலர்களை மட்டும் குறிக்காது' என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த அடிப்படையில் இன்றைய கிறித்தவர்களும் யூதர்களும் இஸ்ரவேலர் களாக இல்லாவிட்டாலும் அவர்களின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம் என்றும் கூறுகின்றனர்.

மூஸா நபியவர்கள் ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமின்றி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது உண்மையே!

ஆனால் ஃபிர்அவ்னும், அவனது கூட்டத்தினரும் அழிக்கப்படும் வரை மூஸா நபியவர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்படவில்லை. ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்பே தவ்ராத் வேதத்தை அருளினான். அவ்வாறு அருளும் போது, தவ்ராத் இஸ்ரவேலர் களுக்கு உரியது என்று கூறியே அருளினான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்ப வில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளு மாறு அனுப்பி வைத்தான். மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தி னரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அப்போதும் வேதம் அருளப் பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். அப்போதும் வேதம் அருளப் படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கன மழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போதும் வேதம் அருளப் பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப் படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போதும் வேதம் அருளப் பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம். 103வது வசனம் முதல் 141வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப் பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மூஸா நபிக்கு தவ்ராத் வழங்கப்பட்ட போது, அது இஸ்ரவேலர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதைப் பல்வேறு வசனங்களில் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

இதே போன்று ஈஸா நபிக்கு அருளப்பட்ட இஞ்சீல் வேதமும் இஸ்ரவேலர்களுக்காகவே அருளப் பட்டது என்பதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர் களுக்காக அந்த வேதங்கள் அருளப் படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே 'வேதம் கொடுக்கப்பட்டவர் களைத் திருமணம் செய்யலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம்' என்ற சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்ரவேலர்கள் அல்லாத யூத, கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப் பட்டோர் என்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.

(மேலும் விபரங்களுக்கு இதே பகுதியில் 137, 138 ஆகிய குறிப்புகளைக் காண்க.)

10.07.2009. 03:15

-------------------------------------------------------------------------------------------------------------
137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு

இவ்வசனத்தில் (5:5) குறிப்பிடப் பட்டுள்ள வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு என்பது அறுத்து உண்ணப்படும் பிராணிகளைக் குறிக்காது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.

அறுத்து உண்ணப்படாத உணவு களைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவை தாம். அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.

வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப் படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட் டுள்ளனர். அவர்களைக் கொல்வதற்காக ஆட்டிறைச்சியில் விஷம் வைத்துக் கொடுத்தனர் என்று ஏற்கத்தக்க ஹதீஸ்கள் உள்ளன (நூல்: புகாரி 2617)

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப் பட்டதை உண்ணுங்கள் என்பதிலிருந்து யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் அறுத்தவை விதிவிலக்குப் பெறுகின்றன என்பதே சரியானதாகும்.

மேலும் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் கருத முடியாது. ஏனெனில் இவ் வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டத்தில் இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். (நூல்: நஸஈ 2434)

எனவே நமக்குத் தடை செய்யப் படாத உணவுப் பொருட்களை வேதக் காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர் களையும், கிறித்தவர்களையுமே வேதக் காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர் களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப் பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.

(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவ ருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்த வர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ் வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது.

அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 27, 138 ஆகிய குறிப்புகளைக்(PJ Translated Quran) காண்க!

10.07.2009. 12:16

No comments:

Post a Comment