பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 13, 2014

ஜமாஅத்துக்கு செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

ஜமாஅத்துக்கு செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா?
கரீம்
பதில்
கடமையான தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். எந்த விதக் காரணமும் இல்லாமல் வீட்டில் தொழுதால் அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
785 عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ رواه إبن ماجه
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் (பாங்கு) அழைப்பைச் செவியுற்று காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : இப்னு மாஜா (785)
462حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْأَصَمِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقَهَا عَلَيْهِمْ قُلْتُ لِيَزِيدَ بْنِ الْأَصَمِّ يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا قَالَ صُمَّتَا أُذُنَايَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذَكَرَ جُمُعَةً وَلَا غَيْرَهَا رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : 
விறகுக் கட்டுகளைத் திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்விதக் காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தி விட நான் எண்ணியதுண்டு.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவுத் (462)
ஜமாஅத் தொழுகைக்கு வராமல் இருப்பது நயவஞ்சகரின் தன்மை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : புகாரி (657)
(ஜமாஅத்திற்குப் போகாமல்) தன் வீட்டிலேயே தங்கியிருந்து இன்னார் தொழுவது போல் உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபிவழியை விட்டவராவீர்கள்.  உங்கள் நபிவழியை விட்டீர்களானால் நீங்கள் வழிகெட்டுப் போய் விடுவீர்கள். எந்த ஒரு மனிதரும் அழகுற உலூச் செய்து இந்தப் பள்ளிகள் ஏதேனும் ஒன்றை நோக்கி வருகின்ற போது, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதி ஓர் அந்தஸ்தை உயர்த்தி அதன் மூலம் ஒரு தீமையை அழிக்காமல் இருப்பதில்லை.  நன்கு அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர இந்த ஜமாஅத் தொழுகைக்கு வேறு யாரும் வராமல் இருப்பது கிடையாது.  ஒருவர், இரண்டு பேரின் கைத்தாங்கலாக (பள்ளிக்கு) கொண்டு வரப்பட்டு வரிசையில் நிறுத்தப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), 
நூல் : முஸ்லிம் (1046)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு.  என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  
நூல் : புகாரி 644, 7224
இதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப் படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது.  நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்பவர்களை தண்டிக்க நினைக்கும் அளவிற்கு இது பாவச்செயல் என்பதும் தெளிவாகின்றது.
வீட்டில் தொழ அனுமதிக்கப்பட்டவர்கள்
எந்தக் காரணமும் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல சோம்பல் பட்டு வீட்டில் தொழுவதையே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தடை செய்கின்றன.
உடல் பாதிப்புகளால் பள்ளிக்கு வர இயலாதவர்கள் வீட்டில் தொழுதுகொள்ளலாம். இத்தகையவர்கள் வீட்டில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாமும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தொழுதுள்ளனர்.
688 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்த படியே தொழுதார்கள். (அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உட்காருங்கள்' என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்த போது, இமாம் பின் பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள்.
நூல் புகாரி 688
ஒருமாத காலம் மனைவியருடன் நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்ததாலும் நோய்வாய்ப்பட்டிருந்ததாலும் ஒரு மாத காலம் வீட்டில் தொழுதுள்ளனர் என்பதை மேற்கண்ட ஹதீஸில் இருந்து அறியலாம். இது குறித்து புகாரி 1113, 1236 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.
667حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلَّى فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنْ الْبَيْتِ فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
கண் பார்வையிழந்த இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்துபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "அல்லாஹ்வின் தூதரே! (சில நாட்களில்) இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக் கொள்வேன்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, "(உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்கள்?'' எனக் கேட்டார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு பகுதியைக் சுட்டிக் காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்
அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி-)
 நூல் : புகாரி (667)
670حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ إِنِّي لَا أَسْتَطِيعُ الصَّلَاةَ مَعَكَ وَكَانَ رَجُلًا ضَخْمًا فَصَنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ فَبَسَطَ لَهُ حَصِيرًا وَنَضَحَ طَرَفَ الْحَصِيرِ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الْجَارُودِ لِأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى قَالَ مَا رَأَيْتُهُ صَلَّاهَا إِلَّا يَوْمَئِذٍ رواه البخاري
அன்சாரிகளில் ஒருவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) "என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை'' என்று கூறினார்- (ஏனெனில்) அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். எனவே, அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தம் இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவருடைய இல்லத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்த போது) நபி (ஸல்) அவர்களுக்காகப் பாயொன்றை விரித்து (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்''
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (670)
கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கு காரணம் இருக்க வேண்டும். இந்தக் காரணம் நிர்பந்தமான நிலைகளாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை.
ஒருவரை சந்திக்கச் செல்லுதல் தொழில் போன்ற மார்க்கம்  அனுமதித்த விஷயங்களுக்காக வீட்டில் தொழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவ்வாறு தொழுவது தவறல்ல. இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
1054و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ وَأَبُو الرَّبِيعِ كِلَاهُمَا عَنْ عَبْدِ الْوَارِثِ قَالَ شَيْبَانُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا فَرُبَّمَا تَحْضُرُ الصَّلَاةُ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ ثُمَّ يُنْضَحُ ثُمَّ يَؤُمُّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا وَكَانَ بِسَاطُهُمْ مِنْ جَرِيدِ النَّخْلِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்சை மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (1169)
477حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  
நூல் : புகாரி (477)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யப்பட்ட காரியத்துடன் அனுமதிக்கப்பட்ட காரியத்தை ஒப்பிட்டு பேச மாட்டார்கள். மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைத்தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.
கடைத் தெருவில் தொழுவது தடுக்கப்பட்ட காரியமாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுவதை இதனுடன் ஒப்பிட்டு சிறப்பித்துக் கூறியிருக்க மாட்டார்கள்.
எனவே தொழில் காரணத்துக்காக பள்ளிக்குச் சென்று தொழாமல் கடையில் தொழுதால் அது தவறல்ல என்ற கருத்தை மேலுள்ள செய்தி கூறுகின்றது.. மேலும் பின்வரும் செய்திகளும் இதை உறுதி செய்கின்றன.
17217حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ فِي بَيْتِي ثُمَّ خَرَجْتُ بِأَبَاعِرَ لِي لِأُصْدِرَهَا إِلَى الرَّاعِي فَمَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي بِالنَّاسِ الظُّهْرَ فَمَضَيْتُ فَلَمْ أُصَلِّ مَعَهُ فَلَمَّا أَصْدَرْتُ أَبَاعِرِي وَرَجَعْتُ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي مَا مَنَعَكَ يَا فُلَانُ أَنْ تُصَلِّيَ مَعَنَا حِينَ مَرَرْتَ بِنَا قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي بَيْتِي قَالَ وَإِنْ رواه أحمد
பனூ தைல் குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் என்னுடைய வீட்டில் தொழுது விட்டு எனது கால்நடைகளை மேய்ப்பாளரிடம் ஒப்படைப்பதற்காக அவற்றுடன் வெளியே சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் தொழாமல் கடந்து சென்று விட்டேன். எனது கால்நடைகளை மேய்க்க விட்டுவிட்டு திரும்பினேன். (நான் தொழாமல் சென்ற) தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம் இன்னாரே நீர் நம்மைக் கடந்து சென்ற போது ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய வீட்டிலேயே தொழுது விட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் நீ ஏற்கனவே தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு வந்தால் ஜமாஅத்துடன் தொழ வேண்டும்) என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (17217)
488حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ شَابٌّ فَلَمَّا صَلَّى إِذَا رَجُلَانِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَدَعَا بِهِمَا فَجِئَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا قَالَا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا فَقَالَ لَا تَفْعَلُوا إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ بِمِنًى بِمَعْنَاهُ رواه أبو داود
யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் பருவமடைந்த சிறுவனாக இருந்த போது  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு முறை) தொழுதேன். அவர்கள் தொழுது கொண்டிருந்த போது பள்ளியின் ஒரு பகுதியில் இருவர் தொழாமல் அமர்ந்திருந்தார்கள். அவ்விருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவ்விருவரும் தங்களது தோள்புஜங்கள் நடுங்கியவாறு வந்தார்கள். நீங்கள் எங்களுடன் தொழாமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எங்கள் இருப்பிடங்களிலேயே நாங்கள் தொழுது விட்டோம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யாதீர்கள். உங்களில் ஒருவர் தனது இருப்பிடத்தில் தொழுதுவிட்டு பிறகு இமாம் (இன்னும் கடமையான தொழுகையை) தொழாமல் இருக்கும் நிலையில் அவரை வந்தடைந்தால் அவருடன் சேர்ந்து அவர் தொழட்டும். அத்தொழுகை அவருக்கு உபரியாக அமைந்து விடும்.
அபூதாவுத் (488)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை குளிர் போன்ற நேரங்களில் வீட்டில் தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். இவை நிர்பந்தமான சூழ்நிலைகள் அல்ல. இதில் மக்களுக்குச் சற்று சிரமம் இருப்பதால் இந்த அனுமதியை நபியவர்கள் வழங்குகிறார்கள்.
எனவே பள்ளிக்குச் செல்லும் போது சிரமம் ஏற்படுமானாலும் அந்தச் சிரமம் நிர்பந்தம் என்ற அளவில் இல்லாவிட்டாலும் வீட்டில் தொழ அனுமதியுண்டு என்பதை அறியலாம்.
பள்ளிக்குச் செல்வதின் சிறப்பு
காரணம் இருந்தால் வீட்டில் தொழுவது அனுமதி என்றாலும் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதே சிறப்பிற்குரியதும் அதிக நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதுமாகும்.
பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதற்கு ஏராளமான சிறப்புகளும் அதிகமான நன்மைகளும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. பள்ளி அல்லாத இடங்களில் தொழும் போது இந்த சிறப்புகளையும் நன்மைகளையும் இழக்க நேரிடும்.
27 மடங்கு நன்மைகள்
731حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَرواه البخاري
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் அறிந்த போது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமந்து கொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, "உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!'' என்று கூறினார்கள்.
புகாரி (731)
"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),
நூல் : புகாரி (645)
ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்
உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்.  ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது. 
மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆச் செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை.  "இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!'' என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : புகாரி (2119)
ஒருவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது.  ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : முஸ்லிம் (1059)
அன்சாரிகளில் ஒருவர் இருந்தார்.  பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது.  "கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.  பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறினார்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் வழங்குவானாக!'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி), 
நூல் : முஸ்லிம் (1065)
பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் காலியாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர்.  இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்களை நோக்கி, "நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!'' என்று வினவினார்கள்.  அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று கூறினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஸலமா கிளையினரே!  உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன'' என்று கூறினார்கள்.  உடனே சலமா கிளையினர் "நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'' என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), 
நூல் : முஸ்லிம் (1068) புகாரி (656)
யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு.  யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), 
நூல் : புகாரி (651)
மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும்.  ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும்.  நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : புகாரி (2891)
இரவு முழுவதும் தொழுத நன்மை
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா
நூற்கள் : முஸ்லிம், அபூதாவூத்
சொர்க்கத்தில் வீடு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் பள்ளிவாசலுக்கு  (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
புகாரி (662)

No comments:

Post a Comment