பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, April 30, 2014

பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா!!!!!!

பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா!!!!!!


என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு

உறவினர்கள் வீட்டில் நடை பெற்ற பிறந்த நாள் விழாவிற்குப் போகவில்லை. அவர்கள் நமது வீட்டிற்கு அனுப்பும் கேக் மற்றும் சாப்பாடு, பதார்த்தங்கள் சாப்பிடலாமா?

பதில் :

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் ளகருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை ஒருவர் தரும் போது வாங்கக் கூடாது.

மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1495

தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

Friday, March 14, 2014

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?
அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமாதொப்பி போடாமல்தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா?
எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக் கூடாது என்பதை மார்க்கம்தெளிவுபடுத்தியுள்ளதுஇதற்கு மார்க்கம் கூறும் அளவுகோல் எந்த பள்ளிகளுக்குப்பொருந்துகிறதோ அந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது.
நம்முடைய பகுதியில் மார்க்கம் அங்கீகரித்த பள்ளிவாசல்கள் இருந்தால் அங்கு சென்றுதொழுகையை நிறைவேற்ற முடியும்கடமையான தொழுகையைப் பள்ளியில்நிறைவேற்றுவது இந்தச் சூழ்நிலையில் தான் நம் மீது கடமையாகும்.
நம் பகுதியில் பள்ளிவாசல்கள் எதுவும் இல்லாவிட்டால் அல்லது தொழதடைசெய்யப்பட்ட பள்ளிகள் மட்டும் இருந்தால் இது கடமையான தொழுகையைப்பள்ளியில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையாகும்இது போன்ற நிலையில்உள்ளவர்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.
இவர்கள் பள்ளியில் தொழ வேண்டும் என்று நினைக்கின்றனர்ஆனால் அதற்கானவாய்ப்பு இல்லைஎண்ணத்திற்கு நற்கூலி வழங்கப்படும் என்ற அடிப்படையில்பள்ளியில் தொழுத நன்மை இவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் அனுமதிக்ப்பட்ட பள்ளிவாசல்கள் இல்லை என்பதைக் காரணமாகக்கூறிக்கொண்டு தடைசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று விடக்கூடாது.
மார்க்கம் தடைசெய்த காரியத்தைச் செய்து நன்மையைச் சம்பாதிக்க முடியாதுஅப்படிச்செய்தால் அந்தச் செயலுக்கு நன்மை கிடைக்காததோடு மார்க்க வரம்பை மீறிய குற்றம்ஏற்படும்.
ஒருவர் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தவருடையசெல்வத்தைத் திருடி தர்மம் செய்தால் இவர் நன்மை செய்தவராக மாட்டார்திருட்டுக்குற்றத்தைச் செய்த பாவியாகி விடுவார்.
எனவே மார்க்க உத்தரவுகளை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும்.மார்க்கம் தடை செய்த விஷயங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட வேண்டும்.
7288 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள் :
நான் எதை (செய்யுங்கள் என்றோசெய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்)உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டுவிடுங்கள்உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம்அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்கேள்வி கேட்டதும், அவர்களுடன்கருத்து வேறுபாடு கொண்டதும் தான்ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்குநான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்ஒன்றைச்செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச்செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (லி)
நூல் : புகாரி (7288)
தொழக்கூடாத பள்ளிவாசல் குறித்து அறிந்திட

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா?

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ ச�


சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம்.
744 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (832)
இறைவனிடம் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது சஜ்தா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகைக்கு உள்ளே தான் கியாம் (நிற்றல்) ருகூவு (குனிதல்) போன்ற நிலைகள் இருக்கின்றன. எனவே தொழுகையில் நாம் செய்யும் சஜ்தாவைப் பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள் என்பதை இந்த வார்த்தைப் பிரயோகத்தில் இருந்து அறியலாம்.
வேறொரு ஹதீஸில் தொழுகையில் உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
738 عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّتَارَةَ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ فَقَالَ فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (824)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியே தனியாக சஜ்தா செய்து பிரார்த்தித்தாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன.
1290حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا يُوسُفُ الْمَاجِشُونُ حَدَّثَنِي أَبِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَإِذَا رَكَعَ قَالَ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَإِذَا رَفَعَ قَالَ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَإِذَا سَجَدَ قَالَ اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) நிமிர்ந்ததும், "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா பைனஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது'' (இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்கிடையே இருப்பவை நிரம்ப, இதன் பின்னர் நீ நாடியவை நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.
அவர்கள் சஜ்தா செய்யும் போது, "அல்லாஹும்ம லக்க சஜத்து. வ பிக்க ஆமன்த்து. வ லக்க அஸ்லம்து. சஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க சம்அஹு வ பஸரஹு. தபாரக்கல்லாஹு அஹ்சனுல் காலிக்கீன்'' (இறைவா! உனக்கே சிரம்பணிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து வடிவமைத்து அதில் காதையும் கண்ணையும் திறந்து வைத்த(இறை)வனுக்கு முன் என் முகம் பணிந்தது. படைப்பாளர்களில் மிக மேலானவனான அல்லாஹ் பாக்கியம் மிக்கவன் என்று கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் (1419)
எனவே தொழுகைக்கு உள்ளே சஜ்தாவில் அதிகமாக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். சஜ்தாவை மட்டும் தனியாக செய்து பிரார்த்தனை செய்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை.