பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 15, 2020

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓

✅ இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும்.
 
இவ்வாறு *பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.*

உமர் (ரலி) அவர்கள்  *அறியாமைக்காலத்தில் ஒருநாள் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை செய்தார்கள்.*

இஸ்லாத்திற்கு வந்த பிறகு இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அதை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு நாள் இஃதிகாப் இருப்பது கூடும்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ رواه البخاري

நாஃபிஉ  அவர்கள் கூறுகிறார்கள் :
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறை வேற்றலாமா?)'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.*

நூல் : *புகாரி 3144*

Umar bin Al-Khattab said, *O Allah's Messenger (ﷺ)! I vowed to observe I`tikaf for one day during the Prelslamic period." The Prophet (ﷺ) ordered him to fulfill his vow*

*ஏகத்துவம்*

Thursday, May 14, 2020

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓

*🌙இனிய ரமலான்🤲*



*🎯ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓*



*🗣️கேள்வி👇🏻*



*💁🏻‍♂️? ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் இங்குள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் சரியா? ஃபித்ரா குறித்த முழு விபரத்தையும் கூற முடியுமா?*


*🗣️பதில்*



🔘ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள் மீதும் அடிமைகளுக்காக அவர்களின் எஜமானர்கள் மீதும், சிறுவர்களுக்காக அவர்களின் பொறுப்பாளர்கள் மீதும் இது கடமையாகும்.



➖➖➖➖➖➖➖➖➖➖
             *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚முஸ்லிமான அடிமை,* *சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.*


*🗣️அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*


*📚நூல்: புகாரி 1503*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.


🔘ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.


🔘நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.


 
*🎯ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்*



🔘ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.



➖➖➖➖➖➖➖➖➖➖
               *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.*


*📚நூல் : புகாரி 1395, 1496, 4347*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘“அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.


🔘இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.


🔘அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?


🔘மக்களில் உள்ள செல்வந்தர்கள், மக்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?


🔘இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.


🔘இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.


➖➖➖➖➖➖➖➖➖➖
                *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். “இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்…சுருக்கம்*


*📚நூல் : புகாரி 6979*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.


🔘எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.




*💐STAY HOME STAY SAFE💐*

Wednesday, May 13, 2020

ஃபித்ரா எப்படி திரட்டுவது?

*🌙இனிய ரமலான🤲*



*🎯ஃபித்ரா எப்படி திரட்டுவது?*



➖➖➖➖➖➖➖➖➖➖
               *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.*


*🗣️அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*


*📚நூல்: புகாரி 1503, 1509*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.


🔘 பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.


🔘பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.


🔘பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது.


🔘 பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.



➖➖➖➖➖➖➖➖➖➖
                *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.*


*📚சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.


🔘ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருள்கள் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.


🔘நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று *புகாரி 1551-வது* ஹதீஸ் கூறுகிறது.


🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.


🔘எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.




*💐STAY HOME STAY SAFE💐*

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)??

*பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓*


*லைலதுல் கத்ர் 27வது இரவா?*

*லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம்.* ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, *ரமலான் 27வது இரவுதான் என்று முடிவு செய்து பெரிய விழா வாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?* என்பதை நாம் பார்ப்போம்.

*லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி),
நூல்: *அபூதாவூத் (1178)*

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.

இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் *கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது* என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளதுபோல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றைப் பாருங்கள்.

*ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு* என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி),
நூல்: *அஹ்மத் (15466)*

இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். *லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்'* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: *புகாரி 2021*

இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை *இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: *புகாரி 2022*

இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.

இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த *இமாம் ஷாஃபி அவர்கள்,* நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். *இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?'* என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்'' என்று கூறுகிறார்கள்.

நூல்: *திர்மிதீ 722*

அதாவது *ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்'* என்று கூறியிருப்பார்கள். *இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா?* என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், *23வது இரவில் தேடுங்கள்'* என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.


*ஏகத்துவம்*

Monday, May 11, 2020

தொற்று நோய் உண்டா ?

தொற்று நோய் உண்டா
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?

பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول رواه الزهري عن أبي سلمة وسنان بن أبي سنان

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5717

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்ப வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

நடைமுறையிலும் இதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட ஒரு நோய் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின்னர் அந்த நோய் உலகில் யாருக்கும் ஏற்படுவதில்லை. சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏற்படுகிறது. நோய்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை. மாறாக இறைவன் நாடும் போது அதை ஏற்படுத்துகிறான் என்பதை இது உறுதி செய்கிறது.

மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. அந்த நோய் அந்த வீட்டில் வேறு யாருக்கும் தொற்றாமல் வேறு தெருவில் உள்ளவருக்கு தொற்றுவதைக் காண்கிறோம். தொற்றுதல் என்பது இறைவனின் நாட்டத்தைப் பொருத்தது என்பது இதிலிருந்தும் தெரிகின்றது.

இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.

حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب عن عبد الله بن عبد الله بن الحارث بن نوفل عن عبد الله بن عباس أن عمر بن الخطاب رضي الله عنه خرج إلى الشأم حتى إذا كان بسرغ لقيه أمراء الأجناد أبو عبيدة بن الجراح وأصحابه فأخبروه أن الوباء قد وقع بأرض الشأم قال ابن عباس فقال عمر ادع لي المهاجرين الأولين فدعاهم فاستشارهم وأخبرهم أن الوباء قد وقع بالشأم فاختلفوا فقال بعضهم قد خرجت لأمر ولا نرى أن ترجع عنه وقال بعضهم معك بقية الناس وأصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نرى أن تقدمهم على هذا الوباء فقال ارتفعوا عني ثم قال ادعوا لي الأنصار فدعوتهم فاستشارهم فسلكوا سبيل المهاجرين واختلفوا كاختلافهم فقال ارتفعوا عني ثم قال ادع لي من كان ها هنا من مشيخة قريش من مهاجرة الفتح فدعوتهم فلم يختلف منهم عليه رجلان فقالوا نرى أن ترجع بالناس ولا تقدمهم على هذا الوباء فنادى عمر في الناس إني مصبح على ظهر فأصبحوا عليه قال أبو عبيدة بن الجراح أفرارا من قدر الله فقال عمر لو غيرك قالها يا أبا عبيدة نعم نفر من قدر الله إلى قدر الله أرأيت لو كان لك إبل هبطت واديا له عدوتان إحداهما خصبة والأخرى جدبة أليس إن رعيت الخصبة رعيتها بقدر الله وإن رعيت الجدبة رعيتها بقدر الله قال فجاء عبد الرحمن بن عوف وكان متغيبا في بعض حاجته فقال إن عندي في هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه قال فحمد الله عمر ثم انصرف

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், 'ஷாம் நாட்டிற்குப் போகலாமா?' என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப் பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன்' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5729

கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

Sunday, May 10, 2020

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா

*விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா❓*


*கீழுள்ள பதில் படுக்கை விரிப்பிற்கும் பொருந்தும்*

*ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது.* ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டு பின்னர் அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தை நான் கழுவுவேன். அந்த ஆடையோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 229

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! *ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?* என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரீ 307

*எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்) ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுது கொள்வார்கள்.*

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : தாரமீ 1773
__________________

*ஏகத்துவம்*

Friday, May 8, 2020

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

❓ *நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?*

✅ *அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது.* எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. *மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.*

*அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்*. அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் *6:103*

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான்.* எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி),
நூல்: *புகாரி 3234*

*மஸ்ரூக் பின் அஜ்தஉ* அறிக்கின்றார் :

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார்.* இறைவனோ *கண்கள் அவனைப் பார்க்காது* என்று கூறுகின்றான் 
(அல்குர்ஆன் *6:103*). 

மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, *அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்*’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: *புகாரி 7380*

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்,

*வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை*. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

*நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?* என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, *அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?* எனக் கூறினார்கள்.

நூல்: *முஸ்லிம் 261*

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.* இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

திருக்குர்ஆன் *53:13*

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *தாம் கண்டது ஜிப்ரீல் (அலை)* அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் *அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது* என்று பதிலளித்தார்கள்.

நூல்: *புகாரி 3235*

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.
____________
    
ஏகத்துவம்