பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?சுப்ஹு தொழுகையில் இமாமுடன் தொழும் போது இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளைத் தூக்காமல் நிற்கலாமா?

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு நபிவழிகளில் ஆதாரமில்லை. இச்செயல் பித்அத் ஆகும்.

இக்காரியத்தில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றி தொழுதால் அவர் குனூத் ஓதும் போது நாம் மௌனமாக நிற்கும் நிலை ஏற்படும். இதனால் தொழுகையில் தேவையில்லாத ஒரு காரியத்தைச் செய்யும் நிலை ஏற்படுகின்றது.

அத்துடன் அத்தொழுகையில் கலந்து கொண்டு மௌனமாக இருப்பதால் இந்த அனாச்சாரத்தை ஆதரிக்கும் நிலையும் உருவாகின்றது. மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் சபைகளில் ஒன்றாக இது ஆகி விடுகின்றது. தீமையைக் கண்டால் குறைந்த பட்சம் மனதால் வெறுத்து ஓதுங்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70

எனவே தொழுகையில் இமாம் ஒரு பித்அத்தான காரியத்தைச் செய்து பின்னால் உள்ளவர்களும் அந்த பித்அத்தில் பங்குகொள்ளும் நிலை ஏற்பட்டால் இவரைப் பின்பற்றித் தொழக் கூடாது. மாறாக தனியாகவோ அல்லது தனி ஜமாஅத்தாகவோ தொழுது கொள்ள வேண்டும்No comments:

Post a Comment