பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, June 15, 2014

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்தில் இருந்து வந்த கல்லா

 
ஹஜ்ருல் அஸ்வத் கல் தொடர்பாக பலவீனமான ஹதீஸ்கள் நிறைய இருந்தாலும் ஆதாரப்பூர்வமான செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய பாவங்கள் அதை கருப்பாக்கி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ (803)

இந்த செய்தியில் இடம்பெறும் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நல்லவர் என்றாலும் கடைசி காலத்தில் அவர் மூளை குழம்பிவிட்டது. எனவே அவர் மூளைகுழம்பிய காலத்திற்கு முன்பாக கேட்டவரின் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் மூளைகுழம்பிய பின்னர் கேட்ட செய்தியாக இருந்தால் அந்த செய்தி ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது ஹதீஸ்கலையின் விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில் அதா பின் ஸாயிப் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவிக்கிறார். இவர் அதா விடம் முளைகுழம்பிய பின்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. 

ஹஜ்ருல் அஸ்வதும் மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : திர்மிதீ (804)

இச்செய்தியில் இடம்பெறும் ரஜா அபூயஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.(நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 208)
இந்தசெய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பின்வரும் செய்திகள் ஆதாரப்பூர்வனமானதாகும்.
 
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: நஸாயீ (2886)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் ஸாயிப் என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸலமா என்பவராவார். இவர் அதா முளைகுழம்பியதற்கு முன்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
இந்த செய்தி அதா நல்ல நிலையில் இருந்தபோது கேட்டதால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதே! மேலும் பின்வரும் நபிமொழியும் ஆதாரப்பூர்வமானதே!

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் (13434)

ஒரு பயணத்தில் உம்ரா செய்து முடித்தவர் மீண்டும் உம்ரா செய்யலாமா?

ஒரு பயணத்தில் உம்ரா செய்து முடித்தவர் மீண்டும் உம்ரா செய்யலாமா?


ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதம் சில அடிப்படைகளை புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்ககளையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடைசெய்யவில்லை.
ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்கு போதுமானது.
46 حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ رواه البخاري
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலிரி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திரிருந்து) அவருடைய குரரின் எதிரொரி செவியில் ஒரித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் ளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குன அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பகரிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்றார்கள்.
 அவர் "இதைத் தவிர வேறு(தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், "இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர'' என்றார்கள்.
 அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்' என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  "அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.
நூல் :புகாரி 46
கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை நபிகளார் நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது.
இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதை தெளிவுபடுத்துகிறான்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)
ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாக பேசும் போது நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன் என்று நன்மைகளை கூடதலாக செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
1463 حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سِنَانٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الْحَجُّ فِي كُلِّ سَنَةٍ أَوْ مَرَّةً وَاحِدَةً قَالَ بَلْ مَرَّةً وَاحِدَةً فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ قَالَ أَبُو دَاوُد هُوَ أَبُو سِنَانٍ الدُّؤَلِيُّ كَذَا قَالَ عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ جَمِيعًا عَنْ الزُّهْرِيِّ و قَالَ عُقَيْلٌ عَنْ سِنَانٍ رواه ابوداود
அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (1463)
எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் படுத்த முடியாது.

ஹஜ் செய்பவர் நபிகளாரின் கப்ரை ஸிராத் செய்தே ஆக வேண்டுமா?

ஹஜ் செய்பவர் நபிகளாரின் கப்ரை ஸிராத் செய்தே ஆக வேண்டுமா?


ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.
கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய அமல்களை மட்டும் செய்தாலே ஹஜ் முழுமையாக நிறைவேறிவிடும். இந்த இடங்களில் செய்ய வேண்டிய அமல்களைத்தான் நபிகளார் நமக்கு கூறியுள்ளார்கள். இது தவிர ஹஜ்ஜில் வேறு இடங்களுக்கு சென்று எந்த அமலையும் செய்யுமாறு நபிகளார் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்யாதவர் நபிகளாôரை வெறுத்தவராவார் என்று செய்தி சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
الكامل في ضعفاء الرجال - (7 / 14)
 ثنا على بن إسحاق ثنا محمد بن محمد بن النعمان بن شبل حدثني جدي حدثني مالك عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرنى فقد جفانى
யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா - இப்னு அதீ, பாகம் :7, பக்கம் : 14)
இச்செய்தியில் இடம்பெறும் அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டி சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்.
المجروحين - (3 / 73)
النعمان بن شبل: من أهل البصرة، يروى عن أبى عوانة ومالك أخبرنا عنه الحسن بن سفيان، يأتي عن الثقات بالطامات، وعن الاثبات بالمقلوبات.
அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் பஸரா பகுதியைச் சார்ந்தவர். இவர் நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி அவர்) வழியாக பிரமாண்டமான செய்திகளை அறிவிப்பவர். மேலும் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றி நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை) அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் :3, பக்கம் : 73
இதைப் போன்று பின்வரும் செய்தியையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة
யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸியாரத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தியின் தரத்தைப் பற்றி இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள் :
المجموع شرح المهذب - (8 / 277(
)فرع (مما شاع عند العامة في الشام في هذه الازمان المتأخرة ما يزعمه بعضهم ان رسول الله صلى الله عليه وسلم قال (من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة) وهذا باطل ليس هو مرويا عن النبي صلى الله عليه وسلم ولا يعرف في كتاب صحيح ولا ضعيف بل وضعه بعض الفجرة
சிரியா நாட்டில் பொதுமக்கள் மத்தியில் பிற்காலத்தில் இந்த விசயம் பரவியுள்ளது : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸிராத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன். இது பொய்யான செய்தியாகும். இது நபி (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமான, பலவீனமான செய்திகளில் கூட இது அறியப்படவில்லை. மாறாக இது சில கெட்டவர்கள் இட்டுக்கட்டியதாகும்.
நூல் : அல்மஜ்மூவு, பாகம் :8, பக்கம் : 277
لسان الميزان - (2 / 4)
حدثنا النعمان بن هارون ثنا أبو سهل بدر بن عبد الله المصيصي ثنا الحسن بن عثمان الزيادي ثنا عمار بن محمد ثنا خالي سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه
யார் ஹஜ் செய்து என் கப்ரை ஸியாரத் செய்து, போர் செய்து பைத்துல் மக்திஸில் தொழுதிருந்தால் அவர் மீது கடமையாக்கிய (எ)தையும் (மறுமையில்) அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: லிஸானுல் மீஸான், பாகம் : 2, பக்கம் :4)
இந்த செய்தியில் இடம்பெறும் பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யும் எந்த தகவலும் இல்லை. மேலும் இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
ميزان الاعتدال في نقد الرجال - (2 / 8)
 1137 ( 1548 ) بدر بن عبد الله أبو سهل المصيصي عن الحسن بن عثمان الزيادي بخبر باطل وعنه النعمان بن هارون
பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவர் ஹஸன் பின் உஸ்மான் என்பவர் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்.
நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 8
سنن الدارقطني - (2 / 278)
2695 - ثنا الْقَاضِي الْمَحَامِلِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ , نا مُوسَى بْنُ هِلَالٍ الْعَبْدِيُّ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  யிمَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِيஞீ
யார் என் கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி), நூல் : தாரகுத்னீ, பாகம் :2, பக்கம் :278
இந்த செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவரின் நம்பத் தன்மை உறுதி செய்யப்படாதவராவார்.
الجرح والتعديل - (8 / 166)
734 - موسى بن هلال العبدى البصري روى عن هشام بن حسان سمعت ابى يقول ذلك قال أبو محمد وروى عن عبد الله العمرى روى عنه أبو بجير محمد بن جابر المحاربي ومحمد بن اسماعيل الاحمسي وابو امية الطرسوسى محمد بن ابراهيم. حدثنا عبد الرحمن قال سألت ابى عنه فقال: مجهول.
மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவர் யாரெனஅறியப்படாதவர் ஆவார்.
நூல் ; அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் :8, பக்கம் : 166
நபி (ஸல்) அவர்கள் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானதாகும்.

ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ ஏற்றக் கொள்ளப்படும் என்று கூறுகிறார்களோ இது உண்மையா?

ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ ஏற்றக் கொள்ளப்படுமா ?



கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது.
தப்ரானியின் அறிவிப்பு : 1
المعجم الكبير - (8 / 169)
7713 - حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم عن عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர் - தப்ரானீ, பாகம் :8 பக்கம் :169
தப்ரானியின் அறிவிப்பு : 2
المعجم الكبير - (8 / 171)
 7719 - حدثنا أحمد بن المعلى الدمشقي ثنا هشام بن عمار ثنا الوليد بن مسلم ثنا عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة : عن النبي صلى الله عليه و سلم قال : : تفتح أبواب السماء ويستجاب دعاء المسلم عند إقامة الصلاة وعند نزول الغيث وعند زحف الصوف وعند رؤية الكعبة
பைஹகீயின் ஸுனனுல் குப்ரா அறிவிப்பு :
سنن البيهقي الكبرى - (3 / 360)
 6252 - أخبرنا أبو نصر بن قتادة أنبأ أبو محمد عبد الله بن أحمد بن سعد الحافظ ثنا محمد بن إبراهيم البوشنجي ثنا الهيثم بن خارجة أبو أحمد ثنا الوليد بن مسلم عن عفير بن معدان ثنا سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
இந்த மூன்று இடங்களிலும் உஃபைஃர் பின் மஃதான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அனைத்த அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று சொல்லப்பட்டவர்.
الجرح والتعديل - (7 / 36)
195 - عفير بن معدان الحضرمي الحمصى أبو عائذ المؤذن روى عن عطاء وسليم بن عامر روى عنه الوليد بن مسلم وبقية وابو اليمان ويحيى بن صالح الوحاظى سمعت ابى يقول ذلك، حدثنا عبد الرحمن قال ذكره ابى عن اسحاق بن منصور عن يحيى بن معين انه قال عفير بن معدان لا شئ. نا عبد الرحمن حدثنى ابى قال سمعت دحيما يقول عفير بن معدان ليس بشئ لزم الرواية عن سليم بن عامر، وشبهه بجعفر بن الزبير وبشر بن نمير، نا عبد الرحمن قال سألت ابى عن عفير بن معدان فقال هو ضعيف الحديث يكثرالرواية عن سليم بن عامر عن ابى امامة عن النبي صلى الله عليه وسلم بالمناكير ما لا اصل له لا يشتغل بروايته.
உஃபைஃர் பின் மஃதான் என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன், துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர்.அபூஹாத்திம் அவர்கள் இவர் பலவீனமானவர், இவர் சுலைம் பின் ஆமிர், அபூஉமாமா ஆகியோர் வழியாக மறுக்கப்படவேண்டிய அடிப்படையில்லாத செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே கஅபத்துல்லாஹ்வை பார்க்கும் போது துஆ ஏற்கப்படும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஷபே பராத்

ஷபே பராத் அன்று தஸ்பீஹ் தொழுகை தொழுவதும் பள்ளிவாசலிருந்து கூட்டமாக மண்ணறைக்கு சென்று 
துஆச் செய்வதும் மார்க்கத்தில் உள்ளதா?

*********************************************************************************************************************************


நபிகளார் சில தினங்களில் சில சிறப்பு வணக்க முறைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்கள். குறிப்பாக லைலத்துல் கத்ர் அன்றும் கிரகணம் ஏற்படும் போதும் மழையில்லாத போதும் நபிகளார் சில சிறப்பு வணக்க முறைகளைக் கூறியுள்ளார்கள். ஆனால் ஷஅபான் 15 அன்று சிறப்பு வணக்கங்கள் எதையும் நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

மண்ணறைக்குச் சென்று துஆச் செய்வதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். ஆனால் அந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அந்தச் செய்தியைப் பதிவு செய்த ஆசிரியரே அதன் இறுதியில் கூறியுள்ளார்.

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களைப் படுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா? நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)

நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதீ எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858

இந்தச் செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இது ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

670 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ رواه الترمذي

இந்தச் செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின் அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர் என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை. இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ தமிழ்ஹதீஸ் எண் : 670

இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாக எடுத்துரைத்த இந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம் மறைத்துவிட்டே இந்தச் செய்தியை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள்.

ஆதாரமற்றது என்று தெளிவான ஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா?

மேலும் அஹ்மத், இப்னுமாஜா, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர் வரிசையே இடம்பெற்றுள்ளது.

ஷபே பராஅத் தொடர்பாக விரிவான விளக்கம் பெற தீன்குலப்பெண்மணி ஆகஸ்டர் 2011 இதழை பார்வையிடுக.

http://www.onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/

பராத் இரவு பற்றி விளக்கமான காணொளி....
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_sirapu_enna/

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_iravu_undaa/#.U5tL2JSSySo

மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/onlinepj.qa

Thursday, May 8, 2014

வழிகெட்ட சலபிக் கொள்கை

விவாதத்துக்கு வராமல் ஓடி ஒளியும் வழிகெட்ட சலஃபுகளுக்கு பகிரங்க அழைப்பு....

June 13, 2012 at 9:58am
வழிகெட்ட சலபிக் கொள்கை

குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்

தமிழகத்தின் சில பகுதிகளில் சலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு ஒரு கூட்டம் அழைத்து திரிகிறது, அவர்களின் மடமையை அம்பலப்படுத்த விவாதிக்க அழைத்தால் ஓட்டம் எடுக்கிறது. எனவே அவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கும் இப்பிரசுரம் அப்பாஸ் அலி அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. சலபிக் கூட்டம் வாலாட்டும் ஊர்களில் இதை அச்சிட்டு விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்



அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக.

இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.
குர்ஆனும் நபிமொழி மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.  எனவே மனிதர்களின் சுயக் கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தியாகத்தையும் நபித்தோழர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் இன்றைக்குச் சிலர் குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம் என்ற இஸ்லாத்தின் பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். இந்த இழிசெயலைச் செய்வதற்கு இவர்கள் நபித்தோழர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நபித்தோழர்களையும் அதனைத் தொடர்ந்து சலபுக் கொள்கையில் உள்ள இமாம்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
தங்களுடைய இந்த வழிகேடான கொள்கையை நிரூபிப்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களையும் ஆதாரங்களையும் பார்த்தால் இவர்கள் மத்ஹபுவாதிகளையும் தரீக்காவாதிகளையும் மிஞ்சிவிட்டார்கள் என்பதை பொதுமக்கள் கூட அறியலாம். இவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளுக்கும் வாதங்களுக்கும் சரியான பதிலை பல வருடங்க்ளுக்கு முன்பே நாம் கொடுத்துள்ளோம், அதை முறையாக எதிர்கொள்ள திராணியில்லாமல் பொது மக்களைக் குழப்பிவருகின்றனர்.

இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்

நாம் இவர்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கும் நம்முடைய ஆதாரங்களுக்கும் பதில் சொல்லாமல் பாமர மக்களைத் தேடிச் சென்று குழப்பும் செயலைச் செய்து வருகின்றார்கள்.

எனவே இந்த நோட்டீஸின் வாயிலாக இவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு இவர்கள் சரியான பதிலை ஆதாரத்துடன் கூற வேண்டும். இதை இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வழிகேடர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் சரியான ஓரிறைக் கொள்கையாளர்களா?

ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்துபோன அல்லது உயிருடன் உள்ள ஒருவருக்கு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறிவிடுகிறான்.

தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ(3)39

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்குர்ஆன் (39 : 3)

எனவே நபித்தோழர்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் நீங்கள் ஓரிறைக் கொள்கையாளர்களா?

நீங்கள் நபிவழி நடப்பவர்களா?

தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : முஸ்லிம் (1573)

மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.

இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுப்பட்ட நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளீர்கள். அன்றைக்கு மத்ஹபுவாதிகள் தங்களுடைய வழிகேடான கொள்கைக்கு எந்த வசனங்களை ஆதாரமாக காட்டினார்களோ அதே வசனங்களை இன்றைக்கு நீங்கள் நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

இமாம்களையும், பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.  நீங்கள் அன்றைக்கு எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிராகவே உள்ளன.

இந்த அடிப்படையில் நீங்களும் மத்ஹபுவாதிகளாக இருந்து கொண்டு ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று பெயர் வைத்து குர்ஆன் ஹதீஸைக் கடைபிடிக்கும் ஏகத்துவவாதிகளைப் போல் காட்டிக்கொள்வது ஏன்?

நபித்தோழர்களுக்கு இறைச் செய்தி வந்ததா?

முஸ்லிம்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீச் செய்தியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! அல்குர்ஆன் (7 : 3)

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நீங்களும் நம்பும் போது நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று எப்படி கூறலாம்?

நபித்தோழர்கள் நபிமார்களா?

குர்ஆன் வசனத்துக்கு மற்ற குர்ஆன் வசனங்களைக் கொண்டோ அல்லது நபிமொழிகளைக் கொண்டோ விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தை ஏற்கலாம். இதனால் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தை நாம் தாண்டியவர்களாக ஆகமாட்டோம். இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாத் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கின்றது.

எந்த ஆதாரத்தையும் காட்டாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ(44)16

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். அல்குர்ஆன் (16 : 44)

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ (17) فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ (18) ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (19)75
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் (75 : 17)

குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று ஜாக் மற்றும் சலபுக் கொள்கையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

எனவே விளக்கம் என்ற பெயரில் நபித்தோழர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்கள் நபித்தோழர்களை நபிமார்களின் இடத்தில் வைத்து விட்டீர்கள்.

மார்க்கம் பாதுகாக்கப்படவில்லையா?

நபித்தோழர்கள் சிறப்புக்குரியவர்கள். மதிப்புக்குரியவர்கள் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை. 

ஏனென்றால் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் என்பதால் இந்த மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் நபித்தோழர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தாலும் அவர்கள் கூறிய மார்க்க விசயங்கள் அனைத்தும் அவர்கள் சுயமாகச் சொன்னவை அல்ல. மாறாக இறைவன் கூறியதை அப்படியே கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கூறிய மார்க்க விசயங்களில் தவறு வர வாய்ப்பில்லை.

இந்த பாதுகாப்புத் தன்மை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நபித்தோழர்களுக்கும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் மார்க்க விசயங்களில் நபித்தோழர்களிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளை நாம் சுட்டிக்காட்டினோம்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் நாம் சுட்டிக்காட்டிய செய்திகளை மறுக்காமல் அவை நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருக்கின்ற போது அவர்கள் கூறியதைக் கண்மூடிக்கொண்டு மார்க்கமாக ஏற்க வேண்டும் என்று கூறினால் இந்தக் கூற்று நம்முடைய மார்க்கத்தின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?

மார்க்கம் முழுமையாகவில்லையா?

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமை செய்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் (5 : 3)

நபித்தோழர்களின் விளக்கம் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்றால் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடைவில்லை என்று கூற வேண்டி வரும். இது குர்ஆனுக்கு எதிரான கூற்றாகும்.

உங்கள் யூகம் மார்க்கமாகுமா?

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கும். எனவே நபித்தோழர்களைப் பின்பற்றுவது தவறில்லை என்று வாதிடுகின்றீர்கள்.

மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் இவ்வாறு வாதிடுவது மடமையாக உங்களுக்குத் தெரியவில்லையா?
முத்தலாக் விசயத்தில் (முஸ்லிம் : 2932) நபி (ஸல்) அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்க உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான முடிவை எடுத்து செயல்படுத்தினார்களே. உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

தயம்மும் தொடர்பான வசனத்தையும் நபிமொழியையும் ஆதாரமாகக் கொண்டு தயம்மும் செய்யக்கூடாது என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே (புகாரி 346). இது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?

 53 : 11 வது வசனம் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்ததைப் பற்றி பேசுகிறது என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்க இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்களே (முஸ்லிம் : 284) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட விளக்கமா?

தமத்துவு முறையிலும் கிரான் முறையிலும் ஹஜ் செய்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்களே (புகாரி : 1563) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டதா?

 நீங்கள் சஹாபாக்கள் விசயத்தில் இவ்வாறு யூகம் செய்தது போல் தாபியீன்கள் தபஅ தாபியீன்கள் அதற்கு அடுத்து வந்தவர்கள் விசயத்திலும் யூகம் செய்ய முடியும்.

தாபியீன்கள் சஹாபாக்களிடமிருந்து கேட்காமல் கூறமாட்டார்கள் என்று யூகித்து தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

தபஅ தாபீயீன்கள் தாபியீன்களிடம் கேட்டிருப்பார்கள் என்று யூகித்து தபஅ தாபியீன்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?

இதனடிப்படையில் முன்னோர்கள் பெரியார்கள் இமாம்கள் ஆகியோரைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?
பட்டியல் எங்கே?

நபித்தோழர்களும் மனிதர்களே. மார்க்க விசயங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய சான்றுகளை நாம் சொல்லும்போது நாங்கள் தனித்தனி நபித்தோழரின் கருத்துக்களை ஏற்பதில்லை. அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டு எடுத்த முடிவையே ஏற்போம் என்று கூறுகின்றீர்கள்.

அப்படியானால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்பதற்கும் பெருநாள் தினத்தில் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்துடன் கூடுதலாக சில வாசகங்களை சேர்த்துச் சொல்வதற்கும் இன்னும் பல மார்க்க விசயங்களுக்கு தனித்தனி நபித்தோழர்களின் கூற்றுக்களை நீங்கள் ஆதாரமாக ஏன் காட்டுகிறீர்கள்? இவற்றை ஆதாரமாகக் கொண்டு மார்க்க சட்டங்களைக் கூறுவது ஏன்?

ஒரு மார்க்க விசயத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டதாக எந்த ஒன்றையும் உங்களால் ஒருக்காலும் காட்ட முடியாது. ஏனென்றால் நபித்தோழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடந்தனர். இவ்வாறிருக்க அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே மார்க்கத்தில் பொய் சொல்வதை முதலில் விட்டுவிடுங்கள்.

அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுக் கூறிய மார்க்க விசயங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் இல்லாத ஒன்றை கற்பனை செய்து இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மக்கள் புரிவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபியவர்களின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒரு வசனத்தை மறந்து விட்டார்கள். இந்தச் செய்தி புகாரியில் 4454 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி பல நபித்தோழர்களுக்குத் தெரியவில்லை. இது புகாரியில் 5729 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

எனவே பல நபித்தோழர்கள் செய்தால் அது மார்க்கமாகிவிடும் என்று எப்படிக் கூற முடியும்?
நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம். இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது?

எனவே வழக்கம் போல் தவ்ஹீத் ஜமாத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள். அவமதிக்கிறார்கள்  என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக.

உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள். அப்படி வந்தால் உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும்  அடிப்படை ஒன்றுதான் என்பதையும் உங்களின் நடைமுறையும் தரீக்காவதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களின் வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்க தயாராக இருக்கிறோம்
*****************************************************************************************************************************

Wednesday, April 30, 2014

பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா!!!!!!

பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா!!!!!!


என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு

உறவினர்கள் வீட்டில் நடை பெற்ற பிறந்த நாள் விழாவிற்குப் போகவில்லை. அவர்கள் நமது வீட்டிற்கு அனுப்பும் கேக் மற்றும் சாப்பாடு, பதார்த்தங்கள் சாப்பிடலாமா?

பதில் :

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் ளகருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை ஒருவர் தரும் போது வாங்கக் கூடாது.

மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1495

தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.