ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ ஏற்றக் கொள்ளப்படுமா ?
கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது.
தப்ரானியின் அறிவிப்பு : 1
المعجم الكبير - (8 / 169)
7713 - حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم عن عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர் - தப்ரானீ, பாகம் :8 பக்கம் :169
தப்ரானியின் அறிவிப்பு : 2
المعجم الكبير - (8 / 171)
7719 - حدثنا أحمد بن المعلى الدمشقي ثنا هشام بن عمار ثنا الوليد بن مسلم ثنا عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة : عن النبي صلى الله عليه و سلم قال : : تفتح أبواب السماء ويستجاب دعاء المسلم عند إقامة الصلاة وعند نزول الغيث وعند زحف الصوف وعند رؤية الكعبة
பைஹகீயின் ஸுனனுல் குப்ரா அறிவிப்பு :
سنن البيهقي الكبرى - (3 / 360)
6252 - أخبرنا أبو نصر بن قتادة أنبأ أبو محمد عبد الله بن أحمد بن سعد الحافظ ثنا محمد بن إبراهيم البوشنجي ثنا الهيثم بن خارجة أبو أحمد ثنا الوليد بن مسلم عن عفير بن معدان ثنا سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
இந்த மூன்று இடங்களிலும் உஃபைஃர் பின் மஃதான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அனைத்த அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று சொல்லப்பட்டவர்.
الجرح والتعديل - (7 / 36)
195 - عفير بن معدان الحضرمي الحمصى أبو عائذ المؤذن روى عن عطاء وسليم بن عامر روى عنه الوليد بن مسلم وبقية وابو اليمان ويحيى بن صالح الوحاظى سمعت ابى يقول ذلك، حدثنا عبد الرحمن قال ذكره ابى عن اسحاق بن منصور عن يحيى بن معين انه قال عفير بن معدان لا شئ. نا عبد الرحمن حدثنى ابى قال سمعت دحيما يقول عفير بن معدان ليس بشئ لزم الرواية عن سليم بن عامر، وشبهه بجعفر بن الزبير وبشر بن نمير، نا عبد الرحمن قال سألت ابى عن عفير بن معدان فقال هو ضعيف الحديث يكثرالرواية عن سليم بن عامر عن ابى امامة عن النبي صلى الله عليه وسلم بالمناكير ما لا اصل له لا يشتغل بروايته.
உஃபைஃர் பின் மஃதான் என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன், துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர்.அபூஹாத்திம் அவர்கள் இவர் பலவீனமானவர், இவர் சுலைம் பின் ஆமிர், அபூஉமாமா ஆகியோர் வழியாக மறுக்கப்படவேண்டிய அடிப்படையில்லாத செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே கஅபத்துல்லாஹ்வை பார்க்கும் போது துஆ ஏற்கப்படும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.
No comments:
Post a Comment