பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, June 14, 2014

குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்குமா ?

குபா பள்ளிவாசலி உம்ரா செய்த நன்மை கிடைக்குமா ?


298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي
குபா பள்ளிவாச-ல் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ர-லி ), நூல் : திர்மிதீ (298)
இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் : 662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423), முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373) ஷ‚அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1, பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அபுல் அப்ரத் என்பவரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் பட்டியி-லி ல் இடம்பெறச் செய்துள்ளார்கள். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலி -ல் இடம்பெறச் செய்வது இப்னுஹிப்பான் அவர்களின் பழக்கமாகும். எனவே இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை மட்டும் வைத்து அவரை நம்பகமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவதில்லை. எனவே இப்னுஹிப்பான் அவர்களின் இந்தக் கருத்து கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.
இந்தச் செய்தியை சிலர் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் அபுல் அப்ரத் என்ற பெயரில் வேறு ஒரு நபர் இருந்துள்ளார்.
இன்னொருவரின் பெயர் அபுல் அப்ரத் அல்ஹாரிஸி இவருடைய உண்மையான பெயர் ஸியாத் என்பதாகும். இமாம் திர்மிதி அவர்களும் அபுல் அப்ரத் என்ற பெயரில் இருக்கும் இன்னொரு நபரை விளங்காமல் இச்செய்தியில் இடம்பெறும் யாரென தெரியாத அபுல் அப்ரத் என்பவரை யாரென அறியப்பட்ட அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்று எண்ணிக் கொண்டார்கள்.      (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் :2, பக்கம் :236)
அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்பவரின் பெயர் ஸியாத் ஆகும் என்ற கருத்தை இமாம் தாரகுத்னீ, அபூஅஹ்மத் ஹாகிம், அபூபிஷ்ர் அத்தூலாபீ ஆகியோர் உட்பட பலர் கூறியுள்ளனர். மேலும் (குபா பள்ளியின் சிறப்பு தொடர்பான செய்தியில் இடம்பெற்றிருக்கும்) அபூஅப்ரத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற கருத்தே அறியப்பட்ட செய்தியாகும். இவரை பெயர் அறியப்படாதவர் பட்டிய-லி லேயே ஹாகிம், இப்னு அபிஹாத்தம், இப்னுஹிப்பான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இமாம் ஹாகிம் அவர்கள் இவரின் பெயர் மூஸா பின் சுலைம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)
எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
இதே கருத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ர-லி ) அவர்கள் வழியாகவும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது.
15414 حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ بِقُبَاءٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ يَقُولُ قَالَ أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ يَعْنِي مَسْجِدَ قُبَاءٍ فَيُصَلِّيَ فِيهِ كَانَ كَعَدْلِ عُمْرَةٍ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَذَكَرَ مِثْلَهُ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ قَالَ حَدَّثَنَا حَاتِمٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْكَرْمَانِيُّ فَذَكَرَ مَعْنَاهُ رواه احمد
யார் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்காக சென்று அங்கு தொழுவாரோ அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி -), நூல் :அஹ்மத் (15414)
இதே கருத்தில் ஹாகிம் (பாகம்:3, பக்கம் : 13), இப்னு ஹிப்பான் (பாகம் :4, பக்கம் :507), ஷ‚அபுல் ஈமான் (பாகம் : 6, பக்கம் : 69) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
சில அறிவிப்புகளில் ஒருவர் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்குச் சென்று நான்கு ரக்அத் தொழுதால் அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியில் முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவராவார்.
முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவரல்லாமல் மூஸா பின் உபைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் இவருக்குப் பின்னால்
இடம்பெற்ற யூசுஃப் பின் தஹ்மான் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம் :1, பக்கம் :199, மீஸானுல் இஃதிதால், பாகம்:4, பக்கம் : 467 )
குபா பள்ளியின் சிறப்பைப் பற்றி கஅப் பின் உஜ்ரா (ர-லி ) அவர்கள் வழியாகவும் இடம்பெற்றுள்ளது.
المعجم الكبير (19/ 146)  319 - حدثنا إبراهيم بن دحيم الدمشقي حدثني أبي ثنا يحيى بن يزيد بن عبد الملك النوفلي عن أبيه عن سعد بن إسحاق بن كعب بن عجرة عن أبيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم قال : ( من توضأ فأسبغ الوضوء ثم عمد إلى مسجد قباء لا يريد غيره ولم يحمله على الغدو إلا الصلاة في مسجد قباء فصلى فيه أربع ركعات يقرأ في كل ركعة بأم القرآن كان له مثل أجر المعتمر إلى بيت الله )
யார் உளூச் செய்து பின்னர் குபா பள்ளிவாசலுக்காகவே சென்று அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு ரக்அத்திலும் உம்முல் குர்ஆன் (சூரத்துல் பாத்திஹா) ஓதி நான்கு ரக்அத் தொழுதால் இறையில்லம் (கஅபத்துல்லாஹ்வில்) உம்ரா செய்த நன்மையை பெற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ர-லி ), 
நூல் : தப்ரானி- கபீர் (பாகம் : 19, பக்கம் : 146)
இச்செய்தியில் யஹ்யா பின் யஸீத் பின் அப்துல் மாலி க் அந்நவ்ஃபலி  என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.
(நூல் : அல்ஜர்ரஹ் வத்தஃதீல், பாகம் :9, பக்கம் : 279)
குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் வரும் செய்தி அனைத்தும் பலவீனமானதாக இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற நபிவழியின் அடிப்படையில் தொழுது கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
 அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ர-லி ), நூல் : புகாரி (444)
மேலும் நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை அன்று குபா பள்ளிவாசலுக்குச் சென்றுவருவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.
அப்துல்லாஹ் பின் தீனார் அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி -),  நூல் : புகாரி (1193)

No comments:

Post a Comment