பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 8, 2020

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

❓ *நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?*

✅ *அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது.* எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. *மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.*

*அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்*. அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் *6:103*

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான்.* எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி),
நூல்: *புகாரி 3234*

*மஸ்ரூக் பின் அஜ்தஉ* அறிக்கின்றார் :

*முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார்.* இறைவனோ *கண்கள் அவனைப் பார்க்காது* என்று கூறுகின்றான் 
(அல்குர்ஆன் *6:103*). 

மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, *அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்*’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: *புகாரி 7380*

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்,

*வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை*. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

*நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?* என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, *அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?* எனக் கூறினார்கள்.

நூல்: *முஸ்லிம் 261*

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.* இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

திருக்குர்ஆன் *53:13*

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *தாம் கண்டது ஜிப்ரீல் (அலை)* அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் *அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது* என்று பதிலளித்தார்கள்.

நூல்: *புகாரி 3235*

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.
____________
    
ஏகத்துவம்

கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா?

*கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா?*

கொரோனா நோய் பரவலால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன.

பொருளாதார நெருக்கடி, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்த பிரச்சனைகள், நோய்க்கு எதிராக அரசு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை முயற்சித்து வந்தாலும் நோயின் தாக்கம்  பெருமளவு குறையாதது என பல சிக்கல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இவற்றுக்கிடையில் கொரோனா நோயின் தாக்கம் சமகாலத்தில் மார்க்க ரீதியாகவும் பல புதிய நிலைகளுக்கு தீர்வு காணும் அவசியத்தை ஏற்படுத்துகிறது.

வீட்டில் ஜூமுஆ தொழுவது குறித்த விஷயத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

தற்போது சவூதி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை ஓரளவு தளர்த்தி உள்ளார்கள். அதே நேரம் நோயின் தாக்கமும் முழுமையாக குறையவில்லை.

முன்பு அறவே பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை நடைபெறாதிருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் அதிக கூட்டமில்லாமல் கூட்டுத் தொழுகை நிறைவேற்றி வருகின்றனர்.

ஆனால் நோயின் தாக்கம் முழுமையாக குறையாத காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு சமூக விலகலை கடைபிடித்து தொழுக வேண்டும் என்று கூறி அதை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அவ்வாறான தொழுகை நடைபெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதால் இது மார்க்கத்தின் அடிப்படையில் சரியா? இவ்வாறு இடைவெளி விட்டு ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா? என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.

அப்படி தொழுவோர் இரண்டு விதத்தில் தவறிழைக்கின்றார்கள்.

சிரமத்தை மார்க்கம் விரும்பவில்லை

வணக்க வழிபாட்டின் பெயரால் நம்மை நாமே வருத்திக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கவில்லை.

பயணத்தில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகை வழங்கப்படுவதும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நேரத்தில் தயம்மும் செய்ய அனுமதி வழங்கப்படுவதும் வணக்கத்தின் பெயரால் சிரமம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

வணக்க வழிபாட்டின் பெயரால் சிரமத்தை நமக்கு நாமே தேடிக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை பின்வரும் நபிமொழியும் கூறுகின்றன.

‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)

புகாரி – 39.

அல்லாஹ் எளிதையே நாடுவதாக திருக்குர்ஆனும் கூறுகின்றது.

*இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.*

(அல்குர்ஆன் 22 : 78)

*அல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.*

(அல்குர்ஆன் 2 : 185)

வெளியில் சுற்றி திரிவதும் கூட்டாக ஒரு இடத்தில் ஒன்று கூடுவதும் கொரோனா நோய் பரவ காரணமாக அமைந்து விடுகின்றது என்ற அடிப்படையிலேயே பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தாமல் வீடுகளில் தொழுகை நடத்தி வருகிறோம்.

(அரபு நாடுகளிலும் இவ்வாறே கூறிவருகிறார்கள்.)

இன்று வரை நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. கூட்டாக சேர்ந்து தொழுவதில் நோய் தாக்கும் அபாயம் இன்றளவும் இருக்கவே செய்கிறது. அந்த அச்சம் இன்னும் விலகவில்லை.

அத்தகைய அச்சம் பூரணமாக விலகாத நிலையிலும் கூட்டமாக ஒன்று திரண்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று சொல்லப்படும் போதும் அதை அலட்சியம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதில்லை.

வணக்க வழிபாட்டினை நிறைவேற்றுவதில் சிரமம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நோய் பரவும் அச்சம் முழுமையாக விலகும் வரை வீடுகளிலேயே தொழ மார்க்கத்தில் அனுமதி உண்டு எனும் போது அதை பயன்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை.

ஆனால் தற்போது சவூதி உள்ளிட்ட நாடுகளில் செய்யப்படும் இச்செயல் எப்படியாவது பள்ளியில் தொழ வேண்டும் என்று முனைப்பு காட்டி சிரமத்தை வரவழைத்துக் கொள்வதாக அமைந்திருக்கின்றது.

ஒன்று கூடினால் நோய் பரவும் வாய்ப்பு உண்டு என்று கூறிக்கொண்டே தொழுகையில் ஒன்று கூடுவோம் என்று சொல்வது இவர்கள் செய்யும் முதல் தவறாகும்.

அடுத்து அவ்வாறு வந்த பிறகு ஸஃப்பில் நாங்கள் இடைவெளி விட்டு நிற்போம் என்பதும் ஏற்புடையதாக இல்லை.

இடைவெளி விட்டு நிற்பது பொதுவான வணிக வளாகங்களுக்கும் கடைவீதிகளுக்கும் வேண்டுமானால் பொருந்திப் போகலாம்.

தொழுகை எனும் வணக்க வழிபாட்டில் இது சரியான முறையாக தெரியவில்லை.

தொழுயை நிறைவேற்றுவதில் ஸஃப்புக்கு என்று சொல்லப்பட்ட முறையை சரியாக பேணுவது அவசியமானதாகும். அந்த முறையை சீர்குலைப்பது சரியான செயலல்ல.

ஏனெனில் கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகையில் ஸஃப்பின் ஒழுங்கு முறை சரியாக பேணப்பட வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரி (723), முஸ்லிம் (741)

உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: புகாரி (717), முஸ்லிம் (744)

ஸஃப்பில் இடைவெளி விடப்படும் போது அதில் ஷைத்தான் நுழைகிறான் என்று நபிகள் நாயகம் கண்டிக்கின்றார்கள். (நஸாயீ (806)

பின்வரும் நபிமொழி ஸஃப்பில் இடைவெளி விட்டு தொழுபவரின் தொழுகை செல்லாது எனுமளவு கண்டனத்தை பதிவு செய்கிறது.

مسند أحمد ط الرسالة (29/ 532)

18004 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَقَالَ: ” يُعِيدُ الصَّلَاةَ “

வரிசைகளுக்குப் பின்னால் (இடைவெளியை நிரப்பாமல்) தனியாகத் தொழுத ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் தொழுகையை மீண்டும் தொழுவார் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : வாபிஸா (ரலி) நூல் : அஹ்மத் 18004

இந்த அளவு வலிமையாக சொல்லப்பட்ட ஸஃப்பின் ஒழுங்கை சரியாக பேணாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு தொழுவது இன்னொரு பிழையாகும். இச்செயல் ஸஃப்புக்கென்று சொல்லப்பட்ட முறையை மாற்றுவதை போல அமைந்துள்ளது.

நோயின் காரணத்தினால் தான் இவ்வாறு செய்யப்படுகிறது என்று கூறி இதை நியாயப்படுத்துவதும் சரியல்ல.

நோயின் காரணத்தினால் மார்க்கம் என்ன சலுகையை வழங்குகின்றதோ அதை அப்படியே அதன் வடிவம் மாற்றாமல் பயன்படுத்துவதில் தவறில்லை.

ஒரு நோயாளி நான்கு ரக்அத் தொழுகையை நின்று தொழ முடியாது என்று சொல்லும் போது அவர் அமர்ந்து தொழ மார்க்கத்தில் அனுமதி உண்டு.

அதுவே நான் நோயாளி எனவே நான்கு ரக்அத்தை இரண்டாக சுருக்கி தொழுது கொள்கிறேன் என்று சொன்னால் அதை சரிகாண இயலுமா?

உட்கார்ந்து தொழ முடியாத போது படுத்துக் கொண்டு கூட தொழலாம். ஆனால் நோயின் காரணத்தால் நான்கு என்ற எண்ணிக்கையை இரண்டாக சுருக்குவது யாருக்கும் தகாது.

ஒரு நோயாளி ரமலான் நோன்பை வேறு நாள்களில் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

ஒருவர் என்னால் சுமார் 6 மணி நேரம் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் முடியாது. அதனால் காலை முதல் பகல் வரை நோன்பு நோற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அதை தவறு என்போம்.

எவை எவற்றை எவ்விதத்தில் சலுகையை பயன்படுத்திக் கொள்ள மார்க்கம் அனுமதி வழங்கியதோ அப்படி தான் சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதுவன்றி நோய் என்பதை காரணம் காட்டி வணக்க வழிபாட்டை நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல செய்ய முடியாது.

தொழுகையின் ஸஃப் விஷயமும் அவ்வாறு தான்.

பள்ளியில் வரிசைமுறையை பேணி கூட்டாக தொழுவது அல்லது வீடுகளில்  தொழுவது ஆகிய இரண்டு விஷயங்கள் உள்ளது.

இவ்விரண்டில் ஒன்று நோயை காரணம் காட்டி ஜமாஅத் தொழுகைக்கு வராமல் வீடுகளில் தொழலாம். இல்லை என்றால் பள்ளியில் ஸஃப்பை பேணி ஜமாஅத்தாக தொழலாம்.

இரண்டும் இல்லாம் பள்ளியில் ஆங்காங்கே நின்று கொண்டு ஸஃப்பின் முறையை மாற்றி தொழுவது என்பது தவறானதாகவே தோன்றுகிறது.

ஒரு புறம் கொரோனா நோய் பரவுகிறது என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் பள்ளியில் இடைவெளி விட்டு ஜமாஅத்தாக தொழுது கொள்ளலாம் என்கிறார்கள்.

நோய் பரவுகிறது என்றால் பள்ளிக்கு வர வேண்டும் என்பதில்லை. வீடுகளில் தொழுது கொள்ளலாம். பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவது என்றால் ஸஃப்பின் ஒழுங்குமுறையை சரியாக கடைபிடித்து தொழ வேண்டும்.

இரண்டும் இல்லாமல் ஸஃப்பில் இடைவெளி விட்டு தொழுவது என்பது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக தெரியவில்லை.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

தனித்து தொழுபவர் அல்லது வீடுகளில் தொழுபவர்கள் பாங்கு சொல்வது சம்பந்தமாக

*தனித்து தொழுபவர் அல்லது வீடுகளில் தொழுபவர்கள் பாங்கு சொல்வது சம்பந்தமாக👇🏿*


பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.

இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும்.

ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக வந்த நபித்தோழரைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருடன் இன்னொருவரை சேர்ந்து தொழுமாறு கட்டளையிட்டார்கள். இன்னொரு பாங்கு சொல்லுமாறு கட்டளையிடவில்லை.

இது போல் ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் தாமதமாகத் தொழும் போது அல்லது வீட்டில் தொழும் போது மீண்டும் பாங்கு சொல்லும் அவசியம் இல்லை.

அப்பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும், தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது “நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல் : புகாரி 2848

கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும், இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

1017حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அபூதாவூத் 1017

3667حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ وَعَبْدُ الْوَهَّابِ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْفِطْرَةِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ النَّارِ قَالَ فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا رواه أحمد

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மது 3667

Thursday, May 7, 2020

ஓதிப்பார்க்க மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

*ஓதிப்பார்க்க மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*
__________________________________

✅ *நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்*

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், *நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்* என்று சொன்னார்கள்.

அறி : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்),
நூல் : புகாரி 5741

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட *குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள்.* நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) *ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 4439

*ஓதிப்பார்க்கும் முறை என்ன❓*
______________________________
திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் *குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் *அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்* என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?* என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), *சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)* என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், *அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’* என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். 

(பொருள்: *இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக*.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்),
நூல் : புகாரி 5742

*சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம்*. 

நூல்: புகாரி (5736)

*இணைவைப்பு இருக்கக்கூடாது*
________________________________

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), *அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?* என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), *நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக்
நூல் : முஸ்லிம் 4427
___________

ஏகத்துவம்

Tuesday, May 5, 2020

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா?

பதில்:  இல்லை. இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

 

و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا رواه مسلم

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.  (கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்ச மரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.
முஸ்லிம் (3157)

நபியவர்கள் காலத்தில் பயிர்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. நபியவர்கள் இந்தச் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கச் சொன்னதாகவோ இவ்வாறு செய்ய பிறருக்கு அனுமதியளித்தாகவோ எந்தச் செய்தியும் இல்லை. ஸகாத்தை மொத்த விளைச்சிலிருந்து கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்று பொதுவாகவே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

 

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
புகாரி (1483)

நபியவர்கள் காலத்தில் செலவினங்கள் குறைவாக இருந்தது. இன்றைய காலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளது. எனவே தற்போது செலவினங்களைக் கழித்து எஞ்சியதில் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுவதாக்க் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது தவறான வாதமாகும். ஏனென்றால் இன்றைக்குச் செலவினங்கள் அதிகரிப்பதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிக்கின்றது. மேலும் பயிர்கள் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றது. விளைச்சலை அதிகரிப்பதற்கு இன்றைக்கு கையாளப்படும் நவீன யுக்திகள் நபியவர்கள் காலத்தில் இல்லை.

எனவே இன்றைக்கு ஆகும் செலவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து கவனித்தால் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கக் கூடாது என்ற கருத்தே சரியானது என்பதை அறியலாம்.

மேலும் விளைச்சல் குறிப்பிட்ட அளவு இருந்தாலே அவற்றில் ஸகாத் கடமையாகும் என மார்க்கம் கூறுகின்றது. மார்க்கம் நிர்ணயித்துள்ள இந்த அளவை விட குறைவாக விளைச்சல் இருந்தால் அதில் ஸகாத் இல்லை.

 

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
“ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாஉ) தானியத்தில் ஸகாத் இல்லை.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி (1405)

ஒருவர் தனது செல்வத்தை விவசாயத்தில் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் அப்போதும் அவர் அந்த செல்வத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் (செல்வம் நிஸாபுடைய அளவை எட்டியிருந்தால்).

தனது செல்வத்தைப் பயிர்களுக்காகச் செலவிட்டால் அவருடைய பணம் விவசாயப் பொருளாக மாறுகின்றது. இப்போது இவர் விளைச்சலுக்குரிய சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே விளைச்சலில் பயிர்களுக்காக செலவிட்ட தொகையைக் கழிக்காமல் அவை மொத்தத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதே சரியானது.

ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?

ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?

திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி அவரவர் விளக்கம் கூறிக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்.

ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனது தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்.

கிலோ கணக்கில் தங்க ஆபரணத்தை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம். மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

ஒருவருக்குச் சொந்தமான குதிரை, சொந்தமான அடிமை ஆகியவற்றுக்காக ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

புகாரி 1463, 1464,

மார்ககத்தில் விதிவிலக்கு இருந்தால் இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.

ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. சுமார் 11 பவுன் தங்கம் அல்லது அதன் மதிப்புடைய ரொக்கம் ஒருவரிடம் எப்போதும் மிச்சமிருந்தால் அவர் செல்வந்தர் ஆவார். ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையரை செய்துள்ளது. இந்த வரையறை மூலம் ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 11 பவுன் நகை அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 11 பவுனுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 11 பவுனுக்கும் கீழ் குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 20 பவுன் நகை உள்ளது என்றால் இவர் அந்த 20 பவுனுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எபோதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை

*அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை*

‎5445حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ رواه البخاري

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*
*தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.*

*அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)*
*நூல் : புகாரி 5445*

*அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்கள் விஷத்தை முறிக்கின்ற அளவுக்கு ஆற்றல் கொண்டது. மனித உயிரைக் கொல்லும் எப்படிப்பட்ட விஷமாக இருந்தாலும் இந்தப் பழத்தை உண்டவருக்கு அந்த விஷம் ஒன்றும் செய்யாது என இந்தச் செய்தி கூறுகின்றது.*

*நிரூபித்துக் காட்ட வேண்டும்!*

*இந்தச் செய்தி சொர்க்கம், நரகம் போன்ற மறைவான விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.*
*மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதி பயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. உண்மையில் அஜ்வா பழத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும்.*

*இந்தச் செய்தியை நம்பக்கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள்.*

*இதை நிரூபித்துக் காட்ட இவர்களுக்கு அஜ்வா பழம், விஷம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. இவை இரண்டையும் எளிதில் வாங்கிவிட முடியும். எனவே அஜ்வா பழத்தை உண்டுவிட்டு விஷம் குடிக்க வேண்டும். இதன் பிறகு விஷம் இவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டால் இந்தச் செய்தி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.*
*இந்தச் செய்தி உண்மையானது என்பதை நிரூபிக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. அசத்தியத்தை தோலுரித்துக் காட்ட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.*

*ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும்.*
*இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.*

*இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான்.*

*உனக்கு இறைத் தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய்! மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்! என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போனான்.*

*தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.*

*திருக்குர்ஆன் 2:258*

*இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.இதே அடிப்படையில் நாமும் அஜ்வா பழம் தொடர்பான செய்தி அசத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்.*
*இது சரியான செய்தி என்று அவர்களின் வாய் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதின் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.*

*அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூற மாட்டார்கள்.*
*அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?*
*திருக்குர்ஆன் 4:87*

*தன் பெயரில் இது போன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

‎مسند أحمد بن حنبل 
‎ 16102 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عامر قال ثنا سليمان بن بلال عن ربيعة بن أبي عبد الرحمن عن عبد الملك بن سعيد بن سويد عن أبي حميد وعن أبي أسيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا سمعتم الحديث عني تعرفه قلوبكم وتلين له أشعاركم وأبشاركم وترون أنه منكم قريب فأنا أولاكم به وإذا سمعتم الحديث عني تنكره قلوبكم وتنفر أشعاركم وأبشاركم وترون أنه منكم بعيد فأنا أبعدكم منه قال
‎تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.*

*அறிவிப்பவர் : அபூ உஸைத் (ரலி)*
*நூல்: அஹ்மத் 15478*

‎ مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يُرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.*

*அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)*
*நூல்: முஸ்லிம் 1*

*எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இது போன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.*
*இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருப்பதாகும்.*
*நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.*
*நூல்: தத்ரீபுர்ராவீ*

*இந்தச் செய்தியைச் சரி காணக்கூடியவர்கள் நமது வாதங்களுக்குப் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு உளறி வருகிறார்கள்.* *இவர்களின் இந்த உளறல்களே இந்தச் செய்தி பொய்யானது என்பதை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.*
*விஷத்தை வேண்டுமென்றே குடித்தால் அஜ்வா விஷத்தை முறிக்காது.* *பாம்பு போன்ற விஷப் பிராணிகளால் நாம் விரும்பாமல் விஷம் உடம்பில் ஏறிவிட்டால் அப்போது தான் அஜ்வா வேலை செய்யும் என்று* *இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் கூறுகின்றனர்.*

*ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து முள் தானாக நமக்குக் குத்தினால், அதற்காக அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுப்போமா?* *ஒருவன் ஒரு முள்ளை எடுத்து வேண்டுமென்றே தனது காலில் குத்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுக்க முடியுமா? அதுபோல் தான் விஷப்பாம்பு தானாக நம்மைத் தீண்டினால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அஜ்வா நம்மைக் காக்கும். நாமாக திமிர் எடுத்துப்போய் விஷப்பாம்பை கடிக்க விட்டால் அல்ல.*

*இப்படி வாதிடுகின்றனர்.*
*இதில் முள் குத்தினால் வலிக்காது என்று கூறப்படவில்லை. அப்படி கூறப்பட்டால் அதையும்* *நிரூபிக்குமாறு நாம் கேட்போம். அதுவும் பொய்யானது என்று நாம் மறுப்போம். இந்த ஹதீஸில் மறுமையில் கிடைக்கும் நன்மை பற்றி பேசப்படுகிறது. அதை நிரூபிக்குமாறு கேட்க முடியாது. அது உலகில் நிரூபித்துக் காட்டும் விஷயமே அல்ல.*

*உதாரணம் காட்டுவது என்றால் இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும்.*
*துன்பத்தை நாமாக வரவழைத்துக் கொண்டால் நன்மை கிடைக்காது என்பது சரிதான். ஏனென்றால் தன்னைத் தானே நோவினைப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்த காரியத்தைச் செய்து நன்மையை அடைய முடியாது.*

*ஆனால் அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கின்றது என நம்பக்கூடியவர்களுக்கு விஷம் சாப்பிடுவது நோவினையான ஒன்றல்ல. ஏனென்றால் அஜ்வா விஷத்தினால் வரும் நோவினைகளைத் தடுத்துவிடும் வல்லமையுடையது என்று நம்புகிறார்கள். அதாவது அஜ்வா சாப்பிட்ட பின்னர் விஷம் சாதாரண உணவு என்ற நிலைமைக்கு வந்து விடுகிறது. எனவே இதைச் சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவர்கள் நம்பினால் இதை உதாரணமாகக் காட்ட முடியாது. அஜ்வாவுக்குப் பின்னர் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பினால் இவர்களும் இந்த ஹதிஸை நம்ப மறுக்கிறார்கள் என்றே பொருள்.*
*விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டிருந்தால் அஜ்வா வேலை செய்யாதாம். இல்லாவிட்டால் வேலை செய்யுமாம். என்ன அறிவிப்பூர்வமான விளக்கம்?*

*ஒருவன் விஷத்தை குடிபானம் என்று நினைத்து தவறுதலாக குடித்துவிட்டால் அப்போது அஜ்வா இவனைக் காக்கும். விஷம் என்று தெரிந்தே குடித்தால் அஜ்வா காக்காது என்று கூறுகிறார்கள். இப்போது அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மையுடன் விஷம் குடிப்பவனின் எண்ணத்தை அறிந்துகொள்ளும்* *சக்தியும் வந்துவிட்டது?*
*இப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் தான் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.*

*ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அஜ்வா ஹதீஸ் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய நாட்டத்தைப் பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க அஜ்வாவைப் பற்றியே பேசுகின்றது. அஜ்வா செய்தி ஆன்மிக அடிப்படையில் சொல்லப்படவில்லை. மருத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கின்றது.*

*நாம் அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை.* *அஜ்வாவின் ஆற்றலைப் பற்றியே சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றோம்.*
*அல்லாஹ் நாடினால்* *நெருப்பு குளிராகும். கடல் பிளக்கும். மலை தூள்தூளாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்பது உண்மை. இதனால் நெருப்பு எப்போதும்* *குளிராக இருக்கும் என்றோ கடலை எப்போதும் யார் வேண்டுமானாலும் பிளக்கச் செய்யலாம் என்று கூறுவது அறிவீனம்.*

*ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறினாலும் அவர் வேண்டுமென்றே விஷத்தைக் குடித்தாலும் விஷ முறிவு மருந்தை அவருக்குக் கொடுத்தால் அந்த மருத்து விஷத்தை முறித்துவிடும்*

*அஜ்வா விஷத்தை முறிக்கும் என்றால் மற்ற விஷ முறிவு மருந்துகள் வேலை செய்வது போல் அஜ்வாவும் வேலை செய்ய வேண்டும். மற்ற மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பது போல் அஜ்வாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.*
*இவர்கள் ஆசைப்படக் கூடிய வகையில் கேட்கிறோம். இவர்கள் அஜ்வாவை மட்டும் சாப்பிடட்டும். விஷத்தைச் சாப்பிட வேண்டாம். இவர்கள் அஜ்வாவைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் மீது நாம் விஷ ஊசியை ஏற்றுகிறோம். இவர்கள் தமாக விரும்பி விஷத்தை ஏற்றிக் கொள்ளாததால் இந்த சவாலுக்கு இவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. இதையாவது ஏற்பார்களா?*
*நாம் மனதாலும், வாயாலும் அது பொய் என்கிறோம். ஆனால் இவர்களோ வாயால் நம்பி மனதாலும் நடவடிக்கையாலும் பொய்யாக்கிக் கொண்டு உள்ளனர். இது தான் வித்தியாசம்.*

*இதை எப்படியாவது சரியான ஹதீஸ் என்று மக்களை நமப வைக்க வேண்டும் என்பதற்காக சில எதிர் வாதங்களை எடுத்து வைக்கின்றார்கள். பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டி அந்த எதிர் வாதத்தை முன்வைக்கிறார்கள்.*

‎صحيح البخاري
‎‪2276 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ [ص:93] مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّ
*நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டுவிட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்!  என்று கூறினார்கள்*

*அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)*
*நூல் : புகாரி 2276*

*மேற்கண்ட செய்தியில் தேள் கடித்த ஒருவருக்கு அல்ஹம்து சூராவை  ஓதிப் பார்த்தவுடன் அவருக்குக் குணமாகியுள்ளது. அந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஒரு தேளைப் போட்டுக் கடிக்க விடுகின்றோம்; தேள் கடித்தவுடன் அல்ஹம்து சூராவை ஓதி அந்த விஷத்தை முறிப்பீர்களா? இந்த சவாலுக்குத் தயாரா?*

*இதுதான் அவர்களின் எதிர்வாதம்.*

*மேற்கண்ட செய்தியில் தேள் கடிக்கு அல்ஹம்து சூராவைக் கொண்டு ஓதிப்பார்த்தால் ஷிஃபா (நலம்) கிடைக்கும் என்று நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.*

*இதற்கும் அஜ்வா சம்மந்தமான செய்திக்கும் பெரிய வேறுபாடு உள்ளதை இவர்கள் விளங்காத காரணத்தால் இந்த எதிர்வாதத்தை வைக்கிறார்கள்.*

*அல்ஹம்து ஓதுதல் என்பது அஜ்வா போல் உலகப் பொருள் அல்ல. ஒரு பொருளில் ஒரு தன்மை உள்ளது என்று சொன்னால் அந்தப் பொருளை முஸ்லிம் சாப்பிட்டாலும், முஸ்லிமல்லாதாவர் சாப்பிட்டாலும் அதில் உள்ள பயன் கிடைத்து விடும். பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து உள்ளது என்றால் அந்தச் சத்து கிடைப்பதற்கு இறையச்சம், விசுவாசம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.*

*ஆனால் அல்ஹம்து சூரா என்பது ஒரு உலகப் பொருள் அல்ல. அது பலனளிக்க வேண்டுமானால் அதை ஓதுபவரின் ஈமான், இறையச்சம், தூய எண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பயனளிக்கும். இதை எனவே இதை சோதித்துப் பார்க்கக் கூடாது; சவால் விடக் கூடாது.*
*ஒருவர் அல்ஹம்து ஓதி அதனால் விஷம் இறங்காவிட்டால் அவரது ஈமானில்; பலவீனம் காரணமாக பயனளிக்காமல் போய்விட்டது என்று கருத வேண்டும். அப்படி கருதும் போது அந்த ஹதீஸின் கருத்து பொய்யாகாது.*

*ஆனால் அஜ்வாவை யார் சாப்பிட்டாலும் அதற்குச் சொல்லப்பட்ட பயன் கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால் அது பொய் என்பது உறுதியாகி விடும்.*

*அஜ்வா பேரீச்சம்பழத்தில் விஷ முறிவு ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது; அப்படியானால் அதை ஆய்வு செய்து ஆய்வகத்தில் கொடுத்து சோதனை நடத்தி அதில் விஷ முறிவுத்தன்மை உள்ளதை நிரூபிக்க முடியும். அப்படியும் அவர்கள் நிரூபிக்கவில்லை.*

*அல்ஹம்து சூராவை ஓதுவதை லேபில் சோதித்துப் பார்க்க முடியாது. சோதித்துப் பார்க்கும் பொருள் அல்ல. நம்பிக்கை கொள்ளும் வணக்கமாகும்*