பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 15, 2017

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் ‎தொழுமாறு கூறப்பட்டுள்ளதே! ‎விளக்கவும்.‎

கே. அப்துர்ரஹ்மான், புதுக்கல்லூரி, ‎சென்னை.‎

பதில்

குர்ஆன் ஹதீஸ் பற்றிய ஞானம் ‎இல்லாததால், "கடமையான ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை' என்ற தவறான ‎தீர்ப்பை அந்தப் பத்திரிகையில் ‎கூறியுள்ளார்கள். குர்ஆன் ஹதீஸ் ‎தேவையில்லை, மத்ஹபுகள் கூறும் ‎தீர்ப்பைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் ‎என்று கூறுவதால் ஏற்படும் மிக ‎மோசமான விளைவு இது! மத்ஹபுகளைப் ‎பின்பற்றுவது தவறான கொள்கை ‎என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு!‎

மத்ஹபுகளைப் பொறுத்த வரை ‎இன்றைய நவீன யுகத்தில் ஏற்படும் ‎பிரச்சனைகளுக்கு அவற்றின் மூலம் தீர்வு ‎சொல்ல இயலாது. இந்தக் காலத்தில் ‎ஏற்படும் பிரச்சனையை அப்போதே ‎சிந்தித்து,தீர்வு சொல்வது ‎சாத்தியமில்லை.‎

ஆனால் குர்ஆன் ஹதீஸ் எக்காலத்திற்கும் ‎ஏற்றவை! மனிதனைப் படைத்த ‎அல்லாஹ்வினாலும், மனித ‎சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக ‎அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களாலும் சொல்லப்பட்ட ‎செய்திகள் அவை என்பதால் இறுதி நாள் ‎வரை ஏற்படும் எல்லாப் ‎பிரச்சனைகளுக்கும் அவற்றில் நிச்சயமாக ‎தீர்வு இருக்கும்! அவற்றை ஆய்வு ‎செய்தால் அந்தத் தீர்வை நாம் அடைய ‎முடியும்.‎

‎"இரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்று ‎அழைக்கப்படும் நார்வே நாட்டைப் ‎பற்றியோ அல்லது இது போன்ற ஏனைய ‎துருவப் பகுதிகளைப் பற்றியோ ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் ‎அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் ‎என்ன செய்ய வேண்டும்? என்பதைக் ‎கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் ‎நீங்கள் குறிப்பிடும் தஜ்ஜால் குறித்த ‎செய்தியாகும்.‎

صحيح مسلم

7560 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِىُّ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ الطَّائِىِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ حَتَّى ظَنَنَّاهُ فِى طَائِفَةِ النَّخْلِ فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا فَقَالَ « مَا شَأْنُكُمْ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ حَتَّى ظَنَنَّاهُ فِى طَائِفَةِ النَّخْلِ. فَقَالَ « غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِى عَلَيْكُمْ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِى عَلَى كُلِّ مُسْلِمٍ إِنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُهُ طَافِئَةٌ كَأَنِّى أُشَبِّهُهُ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالاً يَا عِبَادَ اللَّهِ فَاثْبُتُوا ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ « أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ « لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ ». قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا إِسْرَاعُهُ فِى الأَرْضِ قَالَ « كَالْغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ فَيَأْتِى عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ فَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ فَيَأْمُرُ السَّمَاءَ فَتُمْطِرُ وَالأَرْضَ فَتُنْبِتُ فَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ أَطْوَلَ مَا كَانَتْ ذُرًا وَأَسْبَغَهُ ضُرُوعًا وَأَمَدَّهُ خَوَاصِرَ ثُمَّ يَأْتِى الْقَوْمَ فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ قَوْلَهُ فَيَنْصَرِفُ عَنْهُمْ فَيُصْبِحُونَ مُمْحِلِينَ لَيْسَ بِأَيْدِيهِمْ شَىْءٌ مِنْ أَمْوَالِهِمْ وَيَمُرُّ بِالْخَرِبَةِ فَيَقُولُ لَهَا أَخْرِجِى كُنُوزَكِ. فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ النَّحْلِ ثُمَّ يَدْعُو رَجُلاً مُمْتَلِئًا شَبَابًا فَيَضْرِبُهُ بِالسَّيْفِ فَيَقْطَعُهُ جَزْلَتَيْنِ رَمْيَةَ الْغَرَضِ ثُمَّ يَدْعُوهُ فَيُقْبِلُ وَيَتَهَلَّلُ وَجْهُهُ يَضْحَكُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِىَّ دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأَسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلاَّ مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِى حَيْثُ يَنْتَهِى طَرْفُهُ فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ فَيَقْتُلُهُ ثُمَّ يَأْتِى عِيسَى ابْنَ مَرْيَمَ قَوْمٌ قَدْ عَصَمَهُمُ اللَّهُ مِنْهُ فَيَمْسَحُ عَنْ وُجُوهِهِمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِى الْجَنَّةِ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللَّهُ إِلَى عِيسَى إِنِّى قَدْ أَخْرَجْتُ عِبَادًا لِى لاَ يَدَانِ لأَحَدٍ بِقِتَالِهِمْ فَحَرِّزْ عِبَادِى إِلَى الطُّورِ. وَيَبْعَثُ اللَّهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَمُرُّ أَوَائِلُهُمْ عَلَى بُحَيْرَةِ طَبَرِيَّةَ فَيَشْرَبُونَ مَا فِيهَا وَيَمُرُّ آخِرُهُمْ فَيَقُولُونَ لَقَدْ كَانَ بِهَذِهِ مَرَّةً مَاءٌ. وَيُحْصَرُ نَبِىُّ اللَّهُ عِيسَى وَأَصْحَابُهُ حَتَّى يَكُونَ رَأْسُ الثَّوْرِ لأَحَدِهِمْ خَيْرًا مِنْ مِائَةِ دِينَارٍ لأَحَدِكُمُ الْيَوْمَ فَيَرْغَبُ نَبِىُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ فَيُرْسِلُ اللَّهُ عَلَيْهُمُ النَّغَفَ فِى رِقَابِهِمْ فَيُصْبِحُونَ فَرْسَى كَمَوْتِ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ يَهْبِطُ نَبِىُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى الأَرْضِ فَلاَ يَجِدُونَ فِى الأَرْضِ مَوْضِعَ شِبْرٍ إِلاَّ مَلأَهُ زَهَمُهُمْ وَنَتْنُهُمْ فَيَرْغَبُ نَبِىُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى اللَّهِ فَيُرْسِلُ اللَّهُ طَيْرًا كَأَعْنَاقِ الْبُخْتِ فَتَحْمِلُهُمْ فَتَطْرَحُهُمْ حَيْثُ شَاءَ اللَّهُ ثُمَّ يُرْسِلُ اللَّهُ مَطَرًا لاَ يَكُنُّ مِنْهُ بَيْتُ مَدَرٍ وَلاَ وَبَرٍ فَيَغْسِلُ الأَرْضَ حَتَّى يَتْرُكَهَا كَالزَّلَفَةِ ثُمَّ يُقَالُ لِلأَرْضِ أَنْبِتِى ثَمَرَتَكِ وَرُدِّى بَرَكَتَكِ.

‎"அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ‎தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் ‎வாழ்வான்?'' என்று நாங்கள் கேட்டோம். ‎அதற்கு அவர்கள், "அவன் பூமியில் ‎நாற்பது நாட்கள் தங்குவான். அன்று ஒரு ‎நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு ‎நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு ‎நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய ‎நாட்கள் அனைத்தும் உங்களது இந்த ‎நாட்களைப் போலவும் இருக்கும்'' என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ‎ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு ‎நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை ‎எங்களுக்குப் போதுமானதா?'' என்று ‎நாங்கள் கேட்டோம். "அவ்வாறல்ல! ‎அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டுக் ‎கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ‎‎(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)‎

அறிவிப்பவர் : நவாஸ் பின் ஸம்ஆன் ‎‎(ரலி)‎

நூல் : முஸ்லிம் 5629

இந்தச் செய்தியின் அடிப்படையில் பகல் ‎முழுவதும் சூரியன் இருக்கும் போது ‎24 மணி நேரங்களை ஒரு நாள் என்ற அடிப்படையில் கணித்து அதன்படி தொழுகை நேரங்களக் கணக்கிட்டு தொழ வேண்டும்.‎

Source: www.onlinepj.com

No comments:

Post a Comment