பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 29, 2017

பள்ளிக்கு சென்று ஜும்ஆ தொழுகையை பெண்கள் தொழலாமா

🏰🏰

பள்ளிக்கு சென்று ஜும்ஆ தொழுகையை பெண்கள் தொழலாமா??

🌹பதில்:🌹

தொழுகையை பொறுத்தவரை ஈமான் கொண்ட ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
நபியவர்கள் காலத்தில் ஆண்களும்,பெண்களும் பள்ளிக்கு சென்று தொழக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கு செல்ல பெண்கள் அனுமதி கேட்டால் அதை தடைசெய்யக்கூடாது என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

இத்தகைய நிலையில் தாராளமாக பெண்கள் பள்ளிக்கு சென்று தொழலாம். ஜும்அவை பொறுத்தவரை பெண்களுக்கு கட்டாய கடமை இல்லை. பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும்.

பொதுவாக ஜும்ஆத் தொழுகையைப் பள்ளியில் தான் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்று கூறினார்கள்.

பெண்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தால் ஜும்ஆ தொழுகையே லுஹருக்கு பதிலாக போதுமானதாகும். வீட்டில் தொழுதால் லுஹர் தொழுகை அவர்களுக்குக் கடமையாகும். பள்ளிக்கு வருகின்ற விசயத்தில் தான் பெண்களுக்குச் சலுகை உள்ளது. ஜும்ஆ என்ற தொழுகை லுஹர் தொழுகைக்குப் பகரமாக தரப்பட்டுள்ளதால் ஜும்ஆ தொழுகையை பெண்கள் நிரைவேற்றினால் அவர்கள் லுஹர் தொழக் கூடாது.

அவர்கள் தாமாக விரும்பி ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டால் அவர்கள் கடமையைத் தான் நிறைவேற்றுகிறார்கள்.

🍁ஆதாரங்கள்:🍁

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : அபூதாவூத் 901

1580. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி கூறியதாவது:
நான் வெள்ளிக்கிழமை அன்று ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களுடைய சகோதரியிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அம்ராவின் சகோதரி அம்ராவைவிட (வயதில்) மூத்தவராயிருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 7. ஜும்ஆ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

நூல் : முஸ்லிம் (754)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (751)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமாக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுவேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல் : புகாரி (707)

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

No comments:

Post a Comment