*பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா❓*
✅ *உடனே தொழக் கூடாது.*
நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. *வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள்* என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள்.
நூல் : *அஹ்மது 22041*
மேற்கண்ட ஹதீஸில் *கடமையான தொழுகை தொழுத பின் உபரியாக தொழ நாடினால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையாமல் இடம் மாறிக் கொள்ள வேண்டும்.* அல்லது
*ஏதேனும் பேசி விட்டு அதே இடத்தில் தொழ வேண்டும்* என்று கூறப்படுகிறது. இதற்கான காரணமும் இந்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
அதாவது *இரண்டும் ஒரே தொழுகை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது* என்பது தான் அந்தக் காரணம்.
*தொழுகையுடன் சம்மந்தமில்லாத காரியத்தைச் செய்தல், அல்லது அதிக இடைவெளி கொடுத்தல், அல்லது தஸ்பீஹ் திக்ரு செய்தல் போன்றவற்றால் பிரித்து விட்டால் அதே இடத்தில் தொழலாம்.*
உடனே உபரித் தொழுகை தொழக்கூடியவர்கள் யாரிடமாவது பேசிவிட்டோ, அல்லது இடம் மாறியோ தொழலாம்.
___________
*ஏகத்துவம்*
No comments:
Post a Comment