பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, June 21, 2020

நமது இடத்தை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா❓*

*நமது இடத்தை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா❓*

நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் *வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும்.*

5:2 நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! *பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.*

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் *அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!* நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

*(திருக்குர்ஆன் 2:278,279)*

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து *வட்டியைத் தடை செய்து விட்டான்.* தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

*(திருக்குர்ஆன் 2:275)*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள்*. மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : *முஸ்லிம் 3258*

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். *யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அதில் பரகத் செய்கிறான்*.(ஹதீஸின் சுருக்கம்)

நூல்: *அஹ்மது (19398)*

*தவறான முறையில் பொருளை ஈட்டுவதால் இறைவனின் அன்பை விட்டும் அவனின் அருளை விட்டும் தூரமானவர்களாக மாறி நகரவாதிக ளாக நாம் மாற வேண்டிய நிலை ஏற்படும்.*

ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ *வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.*

No comments:

Post a Comment