பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, June 24, 2020

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா?

தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா?

அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே அப்படியானால் அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை என்ற ஹதீஸ் பலவீனமானதா?

ரிஸானா, இலங்கை
ஆதம் (அலை) அவர்களை தன்னுடைய தோற்றத்தில் அல்லாஹ் படைத்துள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

صحيح البخاري

6227 - حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ، النَّفَرِ مِنَ المَلاَئِكَةِ، جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த பின் நீங்கள் சென்று, அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அது தான் உங்களது முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும் என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி  என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) வரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை படைப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6227

என்னை அல்லாஹ் தன் சாயலில் படைத்தான் என்று ஆதம் (அலை) அவர்கள் கூறி இருந்தால் ஆதம் (அலை) அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்கள் என்ற கருத்து அதனுள் அடங்கி இருக்கும்.

இது ஆதம் (அலை) அவர்களின் கூற்று அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாகத் தான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தால் தான் இப்படிச் சொல்லி இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவித்துக் கொடுத்தால் அதனடிப்படையில் இதைச் சொல்ல முடியும்.

அல்லாஹ்வை நான் உட்பட யாரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருப்பதால் அல்லாஹ்வைப் பார்த்துவிட்டு இப்படிக் கூறினார்கள் என்று கருத முடியாது.

இதன் மூலம் அல்லாஹ்வின் தோற்றமும், ஆதம் (அலை) அவர்களின் தோற்றமும் நூறு சதவிகிதம் ஒன்று என புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனைப் போன்று யாரும் கிடையாது, அவனுக்கு எந்த வகையிலும் ஒப்புவமை இல்லை என குர்ஆன் சொல்கிறது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42 : 11

அவனுக்கு நிகராக யாருமில்லை

No comments:

Post a Comment