*வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கலாமா❓*
*கூடாது*
நாட்களில் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்தது என்றாலும் அன்றைய தினத்தை மட்டும் தேர்வு செய்து நோன்பு நோற்கக் கூடாது.
*வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா?* என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், *ஆம்* என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அப்பாத் (ரலி)
நூல்: *புகாரி 1984*
*வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது இதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக் கிழமை நோன்பு நோற்கலாகாது* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: *புகாரி 1985*
*வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா?* என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அப்படியானால் *நோன்பை விட்டு விடு* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுவைரிய்யா (ரலி)
நூல்: *புகாரி 1986*
*வெள்ளிக்கிழமையுடன் இன்னொரு நாள் சேர்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும்.* அவ்வாறு இல்லாமல் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றவர்கள் அதை முறித்து விட வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
*ஏகத்துவம்*
No comments:
Post a Comment