பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, June 15, 2014

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?


வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணிதுவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது போல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.
"நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் ; அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)
நூல்: புகாரி 5363
வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

நூல் : அஹ்மத் 23756, 24176, 25039
முஸ்லிம்கள் இதையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் உரையையும் கேட்கவும்

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?


இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவர்களுடைய நிய்யத்தும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பதல்ல. இமாமுடைய தொழுகை கடமையானதாகவும் பின்பற்றி தொழுபவரின் தொழுகை நபிலாகவும் இருக்கலாம். அது போன்று இமாமுடைய தொழுகை அஸராகவும் பின்பற்றித் தொழுபவரின் தொழுகை லுஹராகவும் இருக்கலாம். இவ்வாறு இருவருடைய தொழுகையும் வேறுபடுவதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.
முஆத் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு இமாமாக இருந்தார்கள். அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழுகையை தொழுது விட்டு பிறகு தமது கூட்டத்தாருக்கு ஏற்கனவே தாம் தொழுத தொழுகையை தொழுவிப்பார்கள். இதை நபியவர்கள் ஆட்சேபணை செய்யவில்லை.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு)  முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (முஆத் (ரலி) அவர்களிடடம்) "(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ்
நூல் :புகாரி 701
முஆத் ரலி அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழும் போதே அவர்களின் கடமை நிறைவேறிவிடுகிறது. பிறகு அதே தொழுகையை தம் கூட்டத்தாருக்கு இமாமாக நின்று தொழுவிக்கிறார் என்றால் இரண்டாவதாக தாம் தொழுவிக்கும் தொழுகை அவருக்கு உபரியாக ஆகிவிடுகிறது.
இந்நிலையில் நபிலான தொழுகையை தொழும் இமாமை (முஆத் ரலி அவர்களை) பின்பற்றி  அவர்களது கூட்டாத்தார்கள் கடமையான தொழுகை தொழுதுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
இது நபியவர்களின் கவனத்திற்கு வந்த போது முஆத் (ரலி) நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழுவிப்பதை கண்டித்தார்களே தவிர இவ்வாறு இமாமத் செய்வது கூடாது என்று கண்டிக்கவில்லை. எனவே இமாமுடைய தொழுகையும் பின்பற்றுபவர்களின் தொழுகையும் வேறுபடுவதற்கு நபிகளாரின் அங்கீகாரம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் இது போன்ற நிகழ்வு நபிகளாரின் முன்னிலையில் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
நூல்கள் :  திர்மிதி (204) அபூதாவூத் 487
நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கும் ஒருவரை தாமதமாக வந்த ஒருவருடன் தொழுமாறு நபிகள் நாயகம் கூறுகிறார்கள். இங்கும் இருவருடைய தொழுகையும் வேறுபடுகிறது. ஒருவருக்கு கடமையாகவும் மற்றவருக்கு நபிலாகவும் அமைகிறது.
எனவே இமாம் மற்றும் பின்பற்றுபவருடைய தொழுகைகள் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு நபியவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் அனுமதி உள்ளதால் இரவுத் தொழுகையை தொழும் இமாமுடன் சேர்ந்து கொண்டு ஒருவர் இஷா தொழுகையை தொழலாம். அது அனுமதிக்கப்பட்டதாகும்.
மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கஙளையும் வாசிக்கவும்

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்தில் இருந்து வந்த கல்லா

 
ஹஜ்ருல் அஸ்வத் கல் தொடர்பாக பலவீனமான ஹதீஸ்கள் நிறைய இருந்தாலும் ஆதாரப்பூர்வமான செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய பாவங்கள் அதை கருப்பாக்கி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ (803)

இந்த செய்தியில் இடம்பெறும் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நல்லவர் என்றாலும் கடைசி காலத்தில் அவர் மூளை குழம்பிவிட்டது. எனவே அவர் மூளைகுழம்பிய காலத்திற்கு முன்பாக கேட்டவரின் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் மூளைகுழம்பிய பின்னர் கேட்ட செய்தியாக இருந்தால் அந்த செய்தி ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது ஹதீஸ்கலையின் விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில் அதா பின் ஸாயிப் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவிக்கிறார். இவர் அதா விடம் முளைகுழம்பிய பின்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. 

ஹஜ்ருல் அஸ்வதும் மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : திர்மிதீ (804)

இச்செய்தியில் இடம்பெறும் ரஜா அபூயஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.(நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 208)
இந்தசெய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பின்வரும் செய்திகள் ஆதாரப்பூர்வனமானதாகும்.
 
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: நஸாயீ (2886)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் ஸாயிப் என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸலமா என்பவராவார். இவர் அதா முளைகுழம்பியதற்கு முன்னர் கேட்டதாகும். (நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
இந்த செய்தி அதா நல்ல நிலையில் இருந்தபோது கேட்டதால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதே! மேலும் பின்வரும் நபிமொழியும் ஆதாரப்பூர்வமானதே!

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் (13434)

ஒரு பயணத்தில் உம்ரா செய்து முடித்தவர் மீண்டும் உம்ரா செய்யலாமா?

ஒரு பயணத்தில் உம்ரா செய்து முடித்தவர் மீண்டும் உம்ரா செய்யலாமா?


ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதம் சில அடிப்படைகளை புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்ககளையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடைசெய்யவில்லை.
ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்கு போதுமானது.
46 حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ رواه البخاري
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலிரி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திரிருந்து) அவருடைய குரரின் எதிரொரி செவியில் ஒரித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் ளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குன அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பகரிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்றார்கள்.
 அவர் "இதைத் தவிர வேறு(தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், "இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர'' என்றார்கள்.
 அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்' என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  "அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.
நூல் :புகாரி 46
கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை நபிகளார் நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது.
இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதை தெளிவுபடுத்துகிறான்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)
ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாக பேசும் போது நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன் என்று நன்மைகளை கூடதலாக செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
1463 حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سِنَانٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الْحَجُّ فِي كُلِّ سَنَةٍ أَوْ مَرَّةً وَاحِدَةً قَالَ بَلْ مَرَّةً وَاحِدَةً فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ قَالَ أَبُو دَاوُد هُوَ أَبُو سِنَانٍ الدُّؤَلِيُّ كَذَا قَالَ عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ جَمِيعًا عَنْ الزُّهْرِيِّ و قَالَ عُقَيْلٌ عَنْ سِنَانٍ رواه ابوداود
அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (1463)
எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் படுத்த முடியாது.

ஹஜ் செய்பவர் நபிகளாரின் கப்ரை ஸிராத் செய்தே ஆக வேண்டுமா?

ஹஜ் செய்பவர் நபிகளாரின் கப்ரை ஸிராத் செய்தே ஆக வேண்டுமா?


ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.
கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய அமல்களை மட்டும் செய்தாலே ஹஜ் முழுமையாக நிறைவேறிவிடும். இந்த இடங்களில் செய்ய வேண்டிய அமல்களைத்தான் நபிகளார் நமக்கு கூறியுள்ளார்கள். இது தவிர ஹஜ்ஜில் வேறு இடங்களுக்கு சென்று எந்த அமலையும் செய்யுமாறு நபிகளார் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்யாதவர் நபிகளாôரை வெறுத்தவராவார் என்று செய்தி சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
الكامل في ضعفاء الرجال - (7 / 14)
 ثنا على بن إسحاق ثنا محمد بن محمد بن النعمان بن شبل حدثني جدي حدثني مالك عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرنى فقد جفانى
யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா - இப்னு அதீ, பாகம் :7, பக்கம் : 14)
இச்செய்தியில் இடம்பெறும் அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டி சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்.
المجروحين - (3 / 73)
النعمان بن شبل: من أهل البصرة، يروى عن أبى عوانة ومالك أخبرنا عنه الحسن بن سفيان، يأتي عن الثقات بالطامات، وعن الاثبات بالمقلوبات.
அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் பஸரா பகுதியைச் சார்ந்தவர். இவர் நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி அவர்) வழியாக பிரமாண்டமான செய்திகளை அறிவிப்பவர். மேலும் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றி நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை) அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் :3, பக்கம் : 73
இதைப் போன்று பின்வரும் செய்தியையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة
யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸியாரத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தியின் தரத்தைப் பற்றி இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள் :
المجموع شرح المهذب - (8 / 277(
)فرع (مما شاع عند العامة في الشام في هذه الازمان المتأخرة ما يزعمه بعضهم ان رسول الله صلى الله عليه وسلم قال (من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة) وهذا باطل ليس هو مرويا عن النبي صلى الله عليه وسلم ولا يعرف في كتاب صحيح ولا ضعيف بل وضعه بعض الفجرة
சிரியா நாட்டில் பொதுமக்கள் மத்தியில் பிற்காலத்தில் இந்த விசயம் பரவியுள்ளது : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸிராத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன். இது பொய்யான செய்தியாகும். இது நபி (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமான, பலவீனமான செய்திகளில் கூட இது அறியப்படவில்லை. மாறாக இது சில கெட்டவர்கள் இட்டுக்கட்டியதாகும்.
நூல் : அல்மஜ்மூவு, பாகம் :8, பக்கம் : 277
لسان الميزان - (2 / 4)
حدثنا النعمان بن هارون ثنا أبو سهل بدر بن عبد الله المصيصي ثنا الحسن بن عثمان الزيادي ثنا عمار بن محمد ثنا خالي سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه
யார் ஹஜ் செய்து என் கப்ரை ஸியாரத் செய்து, போர் செய்து பைத்துல் மக்திஸில் தொழுதிருந்தால் அவர் மீது கடமையாக்கிய (எ)தையும் (மறுமையில்) அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: லிஸானுல் மீஸான், பாகம் : 2, பக்கம் :4)
இந்த செய்தியில் இடம்பெறும் பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யும் எந்த தகவலும் இல்லை. மேலும் இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
ميزان الاعتدال في نقد الرجال - (2 / 8)
 1137 ( 1548 ) بدر بن عبد الله أبو سهل المصيصي عن الحسن بن عثمان الزيادي بخبر باطل وعنه النعمان بن هارون
பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவர் ஹஸன் பின் உஸ்மான் என்பவர் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்.
நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 8
سنن الدارقطني - (2 / 278)
2695 - ثنا الْقَاضِي الْمَحَامِلِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ , نا مُوسَى بْنُ هِلَالٍ الْعَبْدِيُّ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  யிمَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِيஞீ
யார் என் கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி), நூல் : தாரகுத்னீ, பாகம் :2, பக்கம் :278
இந்த செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவரின் நம்பத் தன்மை உறுதி செய்யப்படாதவராவார்.
الجرح والتعديل - (8 / 166)
734 - موسى بن هلال العبدى البصري روى عن هشام بن حسان سمعت ابى يقول ذلك قال أبو محمد وروى عن عبد الله العمرى روى عنه أبو بجير محمد بن جابر المحاربي ومحمد بن اسماعيل الاحمسي وابو امية الطرسوسى محمد بن ابراهيم. حدثنا عبد الرحمن قال سألت ابى عنه فقال: مجهول.
மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவர் யாரெனஅறியப்படாதவர் ஆவார்.
நூல் ; அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் :8, பக்கம் : 166
நபி (ஸல்) அவர்கள் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானதாகும்.

ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ ஏற்றக் கொள்ளப்படும் என்று கூறுகிறார்களோ இது உண்மையா?

ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ ஏற்றக் கொள்ளப்படுமா ?



கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது.
தப்ரானியின் அறிவிப்பு : 1
المعجم الكبير - (8 / 169)
7713 - حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم عن عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர் - தப்ரானீ, பாகம் :8 பக்கம் :169
தப்ரானியின் அறிவிப்பு : 2
المعجم الكبير - (8 / 171)
 7719 - حدثنا أحمد بن المعلى الدمشقي ثنا هشام بن عمار ثنا الوليد بن مسلم ثنا عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة : عن النبي صلى الله عليه و سلم قال : : تفتح أبواب السماء ويستجاب دعاء المسلم عند إقامة الصلاة وعند نزول الغيث وعند زحف الصوف وعند رؤية الكعبة
பைஹகீயின் ஸுனனுல் குப்ரா அறிவிப்பு :
سنن البيهقي الكبرى - (3 / 360)
 6252 - أخبرنا أبو نصر بن قتادة أنبأ أبو محمد عبد الله بن أحمد بن سعد الحافظ ثنا محمد بن إبراهيم البوشنجي ثنا الهيثم بن خارجة أبو أحمد ثنا الوليد بن مسلم عن عفير بن معدان ثنا سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
இந்த மூன்று இடங்களிலும் உஃபைஃர் பின் மஃதான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அனைத்த அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று சொல்லப்பட்டவர்.
الجرح والتعديل - (7 / 36)
195 - عفير بن معدان الحضرمي الحمصى أبو عائذ المؤذن روى عن عطاء وسليم بن عامر روى عنه الوليد بن مسلم وبقية وابو اليمان ويحيى بن صالح الوحاظى سمعت ابى يقول ذلك، حدثنا عبد الرحمن قال ذكره ابى عن اسحاق بن منصور عن يحيى بن معين انه قال عفير بن معدان لا شئ. نا عبد الرحمن حدثنى ابى قال سمعت دحيما يقول عفير بن معدان ليس بشئ لزم الرواية عن سليم بن عامر، وشبهه بجعفر بن الزبير وبشر بن نمير، نا عبد الرحمن قال سألت ابى عن عفير بن معدان فقال هو ضعيف الحديث يكثرالرواية عن سليم بن عامر عن ابى امامة عن النبي صلى الله عليه وسلم بالمناكير ما لا اصل له لا يشتغل بروايته.
உஃபைஃர் பின் மஃதான் என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன், துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர்.அபூஹாத்திம் அவர்கள் இவர் பலவீனமானவர், இவர் சுலைம் பின் ஆமிர், அபூஉமாமா ஆகியோர் வழியாக மறுக்கப்படவேண்டிய அடிப்படையில்லாத செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே கஅபத்துல்லாஹ்வை பார்க்கும் போது துஆ ஏற்கப்படும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஷபே பராத்

ஷபே பராத் அன்று தஸ்பீஹ் தொழுகை தொழுவதும் பள்ளிவாசலிருந்து கூட்டமாக மண்ணறைக்கு சென்று 
துஆச் செய்வதும் மார்க்கத்தில் உள்ளதா?

*********************************************************************************************************************************


நபிகளார் சில தினங்களில் சில சிறப்பு வணக்க முறைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்கள். குறிப்பாக லைலத்துல் கத்ர் அன்றும் கிரகணம் ஏற்படும் போதும் மழையில்லாத போதும் நபிகளார் சில சிறப்பு வணக்க முறைகளைக் கூறியுள்ளார்கள். ஆனால் ஷஅபான் 15 அன்று சிறப்பு வணக்கங்கள் எதையும் நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

மண்ணறைக்குச் சென்று துஆச் செய்வதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். ஆனால் அந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அந்தச் செய்தியைப் பதிவு செய்த ஆசிரியரே அதன் இறுதியில் கூறியுள்ளார்.

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களைப் படுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா? நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)

நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதீ எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858

இந்தச் செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இது ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

670 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ رواه الترمذي

இந்தச் செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின் அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர் என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை. இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ தமிழ்ஹதீஸ் எண் : 670

இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாக எடுத்துரைத்த இந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம் மறைத்துவிட்டே இந்தச் செய்தியை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள்.

ஆதாரமற்றது என்று தெளிவான ஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா?

மேலும் அஹ்மத், இப்னுமாஜா, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர் வரிசையே இடம்பெற்றுள்ளது.

ஷபே பராஅத் தொடர்பாக விரிவான விளக்கம் பெற தீன்குலப்பெண்மணி ஆகஸ்டர் 2011 இதழை பார்வையிடுக.

http://www.onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/

பராத் இரவு பற்றி விளக்கமான காணொளி....
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_sirapu_enna/

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/barath_iravu_undaa/#.U5tL2JSSySo

மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்துகொள்ள லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/onlinepj.qa