பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, February 22, 2018

ஒவ்வொரு_உம்ராவையும்_முடித்தபிறகு_இஹ்ராமிலிருந்து_விடுபட_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#ஒவ்வொரு_உம்ராவையும்_முடித்தபிறகு_இஹ்ராமிலிருந்து_விடுபட_வேண்டுமா?

#அல்லது_விடுபடாமலே_தொடர்ந்து_பல_உம்ராக்கள்_செய்யலாமா?

#இஹ்ராமிலிருந்து_விடுபட்டு_மீண்டும்_இஹ்ராம்_கட்ட_வேண்டும்_என்றால்_எங்கிருந்து_இஹ்ராம்_கட்ட_வேண்டும்?

#அதாவது_ஒரே_பயணத்தில்_மீண்டும்_உம்ரா_செய்தால்_இஹ்ராம்_எங்கு_கட்டுவது?

#பதில்: #ஆயிஷா_பள்ளிக்கு_சென்று_கட்டவேண்டும்.

உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும்.

இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. அதாவது அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தானாகவே உம்ராவிலிருந்து, இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுகின்றார்.

ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல்: புகாரி 1529

ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.

மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி 319

வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1788

நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது.

Tuesday, February 6, 2018

ஹஜ்ஜில்_மார்க்கத்திற்கு_முரணான_விஷயங்களை_சுட்டிக்_காட்டக்கூடாதா

#ஹஜ்_உம்ரா

#ஹஜ்ஜில்_மார்க்கத்திற்கு_முரணான_விஷயங்களை_சுட்டிக்_காட்டக்கூடாதா?

இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா?

#பதில்

முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:197

எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.  எனினும், எதனையும் மிகவும் மென்மையான முறையில் புரியும் படி எடுத்துச் சொல்லித் தடுப்பதே சிறந்த முறையாகும். இல்லையெனில் நன்மைக்கு பதில், தீமையில் தான் முடியும்.

தாயாருக்காக_ஹஜ்ஜுக்குச்_செல்ல_இயலாத_பட்சத்தில்_உம்ரா_செய்யலாமா

#ஹஜ்_உம்ரா

#தாயாருக்காக_ஹஜ்ஜுக்குச்_செல்ல_இயலாத_பட்சத்தில்_உம்ரா_செய்யலாமா?

ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.

#பதில்

பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.

“என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?” ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது” என்றார்கள்.

நூல்: புகாரி 1582, 7315

அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.

ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது” என்றேன். “உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி (852)

பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.

இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது.

ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை.

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் “லப்பைக்க அன் ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் “இல்லை” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

Monday, February 5, 2018

தல்பியாவை_ஒருவர்_சொல்லிக்கொடுக்க_மற்றவர்கள்_அதைத்_தொடர்ந்து_கூட்டாகச்_சொல்லலாமா

#ஹஜ்_உம்ரா

#தல்பியாவை_ஒருவர்_சொல்லிக்கொடுக்க_மற்றவர்கள்_அதைத்_தொடர்ந்து_கூட்டாகச்_சொல்லலாமா? அதேபோல் ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா?

#பதில்

அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை.

முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலüத்தார்கள்.

நூல்: புகாரி 970

இந்த ஹதீஸின் அடிப்படையில் அவரவர் சொல்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள். ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் சொல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். அவரவர் சொல்லும் போது அது கூட்டாகச் சொல்வதாகத் தான் அமையும். எனவே இது தவறில்லை.

ஹரமில்_பாபு_பனீ_ஷைபா_வழியாக_நுழைவது_

#ஹஜ்_உம்ரா

#ஹரமில்_பாபு_பனீ_ஷைபா_வழியாக_நுழைவது_சுன்னத்_என்பதை_அறிந்திருக்கிறேன். #சிலர்_பாபுஸ்ஸலாம்_வழியாக_நுழைவது_சுன்னத்_என்கிறார்கள். #பாபு_பனீ_ஷைபா_என்பதும்_பாபுஸ்ஸலாம்_என்பதும்_ஒன்றா?

#பதில்

இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும்.

Friday, February 2, 2018

ஹரம்_ஷரீஃபில்_நுழைந்த_பிறகு

#ஹஜ்_உம்ரா

#ஹரம்_ஷரீஃபில்_நுழைந்த_பிறகு_தஹிய்யதுல்_மஸ்ஜித்_தொழுதுவிட்டு_தவாஃபை_ஆரம்பிக்கலாமா? #அல்லது_முதல்_அமலே_தவாஃபில்_தான்_ஆரம்பிக்க_வேண்டுமா?

#பதில்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2334, 1603

நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.

Thursday, February 1, 2018

தொழுவதற்கு_தடை_செய்யப்பட்ட_3_நேரங்களில்_ஹரம்_ஷரீஃபில்_தொழுவதற்க

#ஹஜ்_உம்ரா

#தொழுவதற்கு_தடை_செய்யப்பட்ட_3_நேரங்களில்_ஹரம்_ஷரீஃபில்_தொழுவதற்கு_தடை_இல்லை_என்பது_சரியா? #மஸ்ஜிதுந்_நபவியில்_தொழுவதற்கும்_அந்த_விதிவிலக்கு_உண்டா?

#பதில்

அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875

தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது.