பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

திருக்குர்ஆன் கேள்வி பதில்

திருக்குர்ஆன் கேள்வி பதில்


கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?

பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?

பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?

பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?

பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?

பதில் : வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?

பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?

பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?

பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?

பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?

பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?

பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?

பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?

பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?

பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?

பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?

பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?

பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?

பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?

பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?

பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?

பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?

பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன் 16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?

பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)

--> Q/A Dheengula Penmani Feb 2010

26 comments:

  1. அழகான, சாலிகான மணைவி அமைய ஓத வேண்டிய சூரா இருக்கின்றதா? அது எந்த சூரா? அதை எப்பொழுது ஓத வேண்டும்?

    ReplyDelete
  2. அழகான, சாலிகான மணைவி அமைய ஓத வேண்டிய சூரா இருக்கின்றதா? அது எந்த சூரா? அதை எப்பொழுது ஓத வேண்டும்?

    ReplyDelete
  3. மனிதர்கள் நன்மையை அடைய அவசரபடுவது போன்று அல்லாஹ்வும் தீங்கிளைக்க அவசரப்பட்டால் என்ன ஆகும் என்று அல்லாஹ் கூறுகிறான்??

    ReplyDelete
    Replies
    1. وَلَوْ يُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَـقُضِىَ اِلَيْهِمْ اَجَلُهُمْ‌ فَنَذَرُ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
      நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
      (அல்குர்ஆன் : 10:11)

      Delete
  4. உஸாமா பின் ஸைத் றழி அவர்கள் காபிரான ஒருவரை அவர் கலிமா மொழிந்த பின் கொலை செய்தார்.இதனை கண்டித்து இறங்கிய குர்ஆன் வசனம் எது?

    ReplyDelete
  5. உலகில் முதலில் நடந்த பெரும்பாவம் எது?

    உலகில் முதல் குர்பானி எது

    உலகில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அமல் எது?

    ReplyDelete
  6. குர்ஆனில் எந்த ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் இரண்டாக பிரித்திருக்கிறான்

    ReplyDelete
  7. மணமான பட்டணம் என அல்லாஹ் கூறியது எது?

    ReplyDelete
    Replies
    1. 1.
      வியாபாரிகள் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கேள்விப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கேரள மன்னர் யார்?

      Delete
    2. சேரமான் பெருமானி

      Delete


  8. 1 .எதனை சகித்து கொள்ள மாட்டோம் என்று பனு இஸ்ராயீல் சமுதாயத்தினர் மூஸா நபியிடத்தில் கூறினர் ?

    2 . யூதர்களும், கிறித்தவர்களும் எது வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று நபியை பார்த்து அல்லாஹ் கூறுகிறான்?

    *முதல் பாகம்*

    ReplyDelete
  9. அல்லாஹ் தன் திருமறையில் சத்தியம் செய்யும் மரங்கள் எவை
    அதன் சிறப்பு என்ன

    ReplyDelete
  10. *SMJ FAMILY* வழங்கும் இஸ்லாமிய கேள்வி பதில்

    ''தான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பகைமை கொள்வேன்'' என கூறிய யஹூதி யார்?

    ReplyDelete
  11. அருள்களின் சூறா (சூறாத்துந் நிஃமா) என்று அழைக்கப்படுகின்ற சூறா எது???

    ReplyDelete
  12. Allah ku bayanthal kidaikum bakkiyam mundeu athu enna?

    ReplyDelete
  13. எந்த நபியின் திருமணத்தை பற்றியும், அவர் கொடுத்த மஹரை பற்றியும்
    அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்?

    ReplyDelete
  14. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தால் என்ன தண்டை

    ReplyDelete
  15. நபி ஸல் அவர்கள் இறுதியாக ஓதிய துஆ என்ன?

    ReplyDelete
  16. அல்-குர்ஆனிலிருந்து)_*

    பள்ளிவாசலை நிர்வகிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க கூடாது?

    ReplyDelete
  17. கஃபாவை முன்னோக்கி தொழுத முதல் நபித்தோழர் யார்? Pls reply soon

    ReplyDelete
  18. பயனுள்ள அறிவை கற்கும் சபையை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்?

    ReplyDelete