பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

நபிமார்களின் எண்ணிக்கை ??

? நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம்; அவர்களில் ரசூல்மார்கள் முன்னூற்றுப் பதிமூன்று பேர்; அவர்களில் ஆதம் தான் முதல் இறைத் தூதர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மர்தவைஹி, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் காணப்படும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?



இந்த ஹதீஸ் இப்னு ஹிப்பான், இப்னு மர்தவைஹி ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளதாக தப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்னு கஸீர் அவர்களின் இன்னொரு நூலான அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலில், இப்னு ஹிப்பானிலும் இப்னு மர்தவைஹியிலும் இடம் பெறும் இந்த ஹதீஸின் தரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் இப்ராஹீம் பின் ஹிஷாம் பின் யஹ்யா அல்கஸ்ஸானீ என்பவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்ராஹீம் பின் ஹிஷாம் பின் யஹ்யா அல்கஸ்ஸானீ என்பவர் பொய்யர் என்று அபூசுர்ஆ அவர்களும், அபூஹாத்தம் அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

இதே கருத்தில் இப்னு அபீஹாத்தம், முஃஜமுல் கபீர் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதில் மஆன் இப்னு ரிஃபாஆ என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் இவருடைய ஆசிரியர் அலீ பின் யஸீத், அவருடைய ஆசிரியர் காஸிம் ஆகியோரும் பலவீனமானவர்கள்.

இந்தக் கருத்தில் முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பிலும் அலீ பின் யஸீத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார்.

நபிமார்களின் எண்ணிக்கை குறித்து இடம் பெறும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே இருக்கின்றன.

குறிப்பு: பொதுவாக தப்ஸீர்களில் இடம் பெறும் செய்திகள் எல்லாமே ஆதாரப்பூர்வமானதாக இருப்பதில்லை. எனவே தப்ஸீர்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவோர் அதிலுள்ள பலவீனமான செய்திகளை அடையாளம் காட்டி வெளியிட வேண்டும்.

--> Q/A Ehathuvam Mar 07

No comments:

Post a Comment