சொர்க்கத்தில் நபிமார்களை திருமணம் செய்ய இயலுமா? நபி(ஸல்) அவர்களை நாம் திருமணம் செய்ய கூடாதென்று சொல்கிறார்களே இது உண்மையா? இது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமா? மற்ற நபி மார்களுக்கும் இது பொருந்துமா? ஆதாரத்தோடு விளக்கவும்.
🌹பதில்:🌹
சொர்க்கத்தில் நபிமார்களை திருமணம் செய்வது தொடர்பாக குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த வித ஆதாரமும் கிடையாது,. ஆண்களுக்கு சுவனத்தில் துணை இருப்பது போல் பெண்களுக்கும் உண்டு! ஈமான் கொண்டுள்ள நிலையில் கணவன்,மனைவி ஆகிய இருவரும் சுவனத்தில் ஒன்று சேர விரும்பினால் அங்கும் அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம்.
அதே வேளையில் மறைவான விஷயமாக இருக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியாது. மறுமை நாளில் அன்னை மர்யம்(அலை) அவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களின் துணையாக இருப்பார்கள் என்ற செய்தி ஆதாரமற்றதாகும். ஆனால் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மறுமையில் நபி(ஸல்) அவர்களது மனைவியாக இருப்பார்கள் என ஹதீஸ்களில் காணலாம்.
நாம் குர்ஆனிலும்,ஹதீஸிலும் நபிமார்களை திருமணம் செய்ய முடியும் என்று எந்த வித ஆதாரமும் இல்லை,செய்ய முடியாது என்ற சான்றுகளும் இல்லை. ஆனால் அல்லாஹ் நமக்கு மறுமையில் கொடுக்கும் துணைகள் நாம் பொருத்திக்கொள்ளும் வகையிலும்,சிறந்த ஒன்றாகவும் இருக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை!
அதே போன்று நாம் நபிமார்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள்... ஆகியோருடன் இருக்க விரும்பினால் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டுமென அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள்தான் மிகச்சிறந்த நண்பர்களும் கூட.. அப்படிப்பட்டவர்களுடன் மறுமையில் ஒன்றாக இருக்க அதிகமதிகமான நன்மைகளை இவ்வுலகில் விதைத்து மறுமையில் அறுவடை செய்வோம்.. இன் ஷா அல்லாஹ்!
🍁ஆதாரங்கள்:🍁
الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)
– لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ ﴿50:35﴾
50:35. அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ
54. இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.
திருக்குர்ஆன் 44:54
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
35. அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 56:35
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 33:35
அல்லாஹுதஆலா கூறுகிறான்: “யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின் தொடர்ந்தார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளை (சொர்க்கத்தில் ஒன்று) சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்கு பிணையாக்கப்பட்டவனாவான்.” - அல்குர்ஆன்: 52:21
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4:69
மேலும் ஆயிஷா (ரலி) அவர்களே கூறுவது: ஜிப்ரீல்(அலை) அவர்கள நபி(ஸல்) அவர்களிடத்தில் பச்சைப் பட்டுத் துணியில் என்னுடைய வடிவத்தைக் கொண்டு வந்து இது இவ்வுலகிலும் மறு உலகிலும் உமது மனைவி என்று கூறியுள்ளார்கள்.
நூல்: திர்மிதி 3880, இப்னு ஹிப்பான் 7094, பஸ்ஸார் 225)
🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵
🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵
No comments:
Post a Comment