#ஹஜ்_உம்ரா
#ஹஜ்ருல்_அஸ்வத்தை_முத்தமிடும்_போது_தக்பீர்_கூற_வேண்டுமா?
#நேரடியாக_முத்தமிட_வாய்ப்பு_கிடைத்தால்_அப்போதும்_தக்பீர்_சொல்லித்_தான்_முத்தமிடவேண்டுமா? #சைகை_செய்வதற்கு_மட்டும்தான்_தக்பீரா? #இடது_அல்லது_வலது_எந்த_கையால்_வேண்டுமானாலும்_சைகை_செய்துக்_கொள்ளலாமா?
#பதில்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1613
ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல்: புகாரி 426
நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.
No comments:
Post a Comment