பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, January 14, 2018

ஜகாத்_கொடுக்கப்பட்ட_பொருளுக்கு_மீண்டும்_ஜகாத

ஜகாத்_கொடுக்கப்பட்ட_பொருளுக்கு_மீண்டும்_ஜகாத்_கொடுக்கத்_தேவை_இல்லை_என்று_எந்த_அறிஞராவது_கூறி இருக்கிறாரா?

#பதில்:

#தவறான_கேள்வி.

இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் இல்லையென்றால் அது ஒரு போதும் மார்க்க அங்கீகாரத்தைப் பெறாது.

உலகில் உள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாக அது இருந்தாலும் சரியே. நீ குர்ஆன் ஹதீஸை கடைப்பிடித்தாயா? என்று தான் இறைவன் மறுமையில் நம்மிடம் கேட்பான். அறிஞர்கள் கூறிய கருத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று கேட்க மாட்டான்.

குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை அறிஞர்களின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தினால் நீ ஏன் இதைப் பின்பற்றினாய்? என்று தான் இறைவன் மறுமையில் கேட்பான். எனவே கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. அப்படியிருக்க அறிஞர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதற்காக கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினால் இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.

ஸகாத் விஷயத்தில் நம்முடைய இந்த நிலைபாட்டை மறுப்பவர்கள் நமக்கு முன் ஒரு அறிஞர் கூட இந்தக் கருத்தை கூறவே இல்லை என்று பேசி வருகின்றனர். இவர்களின் இந்த வாதம் சத்தியத்தை அறிய உதவாது என்றாலும் இது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே ஸகாத் கடமை என்ற சட்டத்தை அனைத்து செல்வங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது நமது நிலைபாடு.

நமக்கு முன்னால் வாழ்ந்த சில அறிஞர்கள் அனைத்து செல்வங்களுக்கும் இவ்வாறு கூறாவிட்டாலும் சில விஷயங்களில் நமது கருத்தையே கூறியுள்ளனர்.

உரிமையாளரால் தீனி போடப்பட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஸகாத் உண்டு என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆபரணங்களுக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்படும் கால்நடைகளுக்கும் ஒரு முறை ஸகாத் கொடுத்துவிட்டால் மறு தடவை கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கும் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது சட்ட ஆய்வு நூலில் ஸகாத்துடைய பாடத்தில் பதிவு செய்துள்ளார்.

(பாகம் : 6 பக்கம் : 47)

அணியப்படும் ஆபரணங்களில் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தத் தகவல் பைஹகீயில் 7331 வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டதில்லை என்ற வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

No comments:

Post a Comment