பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். மார்க்க கேள்வி பதில்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன?

தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

கன்னி கழிந்த பெண்ணை, அவளது உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடமும் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! கன்னியின் அனுமதி எப்படி? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே (சம்மதம்) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5136

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)

நூல் : புகாரி 5138

எனவே உங்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்கும், மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் பெற்றோர்கள் நிர்பந்தப்படுத்தினால் இத்திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என அவர்களிடம் நீங்கள் நேரடியாகவே கூறலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஜமாஅத்தார்களிடம் முறையிடலாம்.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment