பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, September 4, 2025

குரானில் உள்ள சில து ஆக்களை ஸஜ்தாவில் ஓதினால் குரான் வசனத்தை ஓதியதாக ஆகுமா?

ஸஜ்தாவில் குரான் வசனங்களை ஓதக்கூடாது எனும் ஹதிஸ் உள்ளது.

அதே வேளையில் ஸஜ்தா என்பது இறைவனிடம் பிரார்த்திக்க ஏற்ற இடம் என்றும் ஹதீஸ் உள்ளது.

இந்த நிலையில் குரானில் உள்ள சில து ஆக்களை ஸஜ்தாவில் ஓதினால் குரான் வசனத்தை ஓதியதாக ஆகுமா?

எல்லா செயல்களும் எண்ணங்களைக் கொண்டே இருக்கின்றன. என்ற நபிமொழி (புகாரி: 01) அடிப்படையில்

ஸஜ்தாவில் குரானில் உள்ள சில பிரார்த்தனைகளை து ஆ என்ற அடிப்படையில் ஓதினால் அது கூடும்.

அதே வேளையில் அவற்றை வசனமாக ஓதினால் அது கூடாது.

உதாரணமாக:

குல் ரப்பி ஸித்னீ இல்மா என்று ஒரு வசனம் உள்ளது. இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா என்று கூறுவீராக என்பது இதன் பொருள்.

இப்போது ஒருவர் குல் ரப்பி ஸித்னீ இல்மா என்று சொன்னால் அவர் இவ்வசனத்தை ஓதியவராக ஆவார்.

இதில் குல் (சொல்வீராக) என்பதைத் தவிர்த்து விட்டு ரப்பி ஸித்னீ இல்மா என்று கூறினால் இவர் அவ்வசனத்தை ஓதவில்லை. அவ்வசனத்தை செயல்படுத்தி பிரார்த்தனை செய்கிறார் என்று ஆகும். 

அதாவது இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா என்று துஆ செய்துள்ளார் என்று தான் இதை எடுத்துக் கொள்வோம்.

இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா என்று சொல்வீராக

என்பதற்கும்

இறைவா எனக்கு கல்வியை அதிகமாக்கித் தா

என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

அதனால் தான் ஸஜ்தாவில் குர்ஆன் வசனத்தை அப்படியே ஓதாமல் பிரார்த்தனைக்குரிய வாசகத்தை ஒருவர் ஓதினால் அது பிழை ஆகாது.

No comments:

Post a Comment