பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, September 4, 2025

மவ்லித் ஓதுவதை ஆதரித்து பேசுகிற பெரும்பாலன மவ்லவிகள்

மவ்லித் ஓதுவதை ஆதரித்து பேசுகிற பெரும்பாலன மவ்லவிகள், மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகிற புரோகிதர்கள். 

அவர்கள் பிற மதங்களில் புரோகிதம் செய்வதற்காக இருக்கின்ற குருக்களை போலவே.  

பிறர் வீடுகளுக்கு சென்று காசு வாங்கிக்கொண்டு மவ்லிது ஓதிவிட்டு உங்களுக்கு பரகத் வரும் என்று சொல்லிவிட்டு வருவார்கள்.  ஆனால், ஒருபோதும் தங்கள் வீடுகளில் யாரையும் அழைத்து காசு கொடுத்து ஓத வைக்க மாட்டார்கள்.  மவ்லிது பெயரால் இவர்கள் யாருக்கும் விருந்து கொடுக்க மாட்டார்கள்.  பிறரை மட்டும் விருந்து கொடுக்க சொல்லி சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

புரோகிதம் செய்கிறவர்களில் இவர்கள் மகா கேவலமானவர்கள்.  சிலை வணக்க புரோகிதர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்காது. 

பொது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதே இவர்களின் வேலை.  

பொது மக்களே, எங்கள் வீட்டில் மவ்லிதுகளை நாங்களே ஓதிக்கொள்கிறோம் என்று ஒரு முறை சொல்லிப்பாருங்கள். அப்போது தெரியும் இந்த மவ்லவிகளுக்கு நபியின் மீது பிரியம் இருந்ததா அல்லது சல்லியின் மீது பிரியம் இருந்ததா என்று! 

உங்களை ஏமாற்றி வழிகெடுப்பதே இந்த புரோகித மவ்லவிகளுக்கு வேலை.

ஸுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்தை படிப்பதும் அதை நம்புவதும் ஒருவனை இஸ்லாமை விட்டு வெளியேற்றி விடும்.

நீங்கள் ஏன், மவ்லிது வைபவங்களில் ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளை புறக்கனித்தீர்கள்? 

நபியின் மீது கவிதை பாட என்று அவர்கள் பிறந்த மாதத்தை முடிவு செய்ய உங்களுக்கு ஏதும் வஹ்யி வந்ததா? 

ரமழான் நோன்பு மாதம், துல் ஹஜ் ஹஜ் மாதம் என்று இஸ்லாம் மார்க்கம் கற்று கொடுத்துள்ளது. 

ரபீவுல் அவ்வல் இது மவ்லித் மாதம் என்று உங்களுக்கு எந்த மார்க்கம் கற்று கொடுத்தது? அல்லது எந்த இமாம் கற்றுக்கொடுத்தார்கள்? 

அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்! மக்களை வழிகெடுக்காதீர்கள்!!

- முஃப்தி உமர் ஷரிஃப் காசிமி

No comments:

Post a Comment