பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 3, 2025

நெருக்கடி & துன்பம் & கவலைஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ


💞 நெருக்கடி & துன்பம் & கவலை
ஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ 💞

| துஆ தொடர் : 19 |

💟 சோதனைகள் ஏற்படும் போது ஓதும் அழகிய துஆ :

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ

‘ அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த அய்னின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த ’

பொருள் : யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை!

(நூல் : அபூதாவூத் : 3/959 : Eng Ref)

 اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

‘ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ’

பொருள் : நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்!

(அல்குர்ஆன் : 2 : 156)

• மிகவும் அழகிய அர்த்தம் உள்ள துஆ ஆனால் நம்முடைய சமூகம் இந்த துஆவை மரண செய்தி கேட்டால் மட்டும் ஓதுகிறார்கள்!

• ஆனால் அல்லாஹ் கஷ்டம் சோதனை வந்தால் இந்த துஆவை ஓத சொல்லி உள்ளான்!

💟 நபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ :

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏

‘ லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன் ’

பொருள் : உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்!

(அல்குர்ஆன் : 21 : 87 & 88)

• நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் நெருக்கடியான சூழ்நிலை கேட்ட அழகிய துஆ இந்த துஆவை கேட்ட பின்பு தான் அல்லாஹ் அவர்களை துன்பத்தில் இருந்து விடு வித்தான்!

💟 நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின் போது கேட்ட அழகிய துஆ : 

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

‘ லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் ’

பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை!

(நூல் : புகாரி : 6346)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

‘ அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா உஷ்ரிகு பிஹி ஷைஆ ’

பொருள் : அல்லாஹ் அல்லாஹ் தான் எனது இறைவன் அவனுக்கு நான் எதையும் இணைவைக்க மாட்டேன்!

(நூல் : அபூதாவூத் : 1525)

💟 நெருக்கடியான நிலையில் ஓத வேண்டிய அழகிய துஆ :

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

‘ யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு ’

பொருள் : என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன்!

(நூல் : திர்மிதி : 3524)

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment