பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 3, 2025

அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கும் மவ்லிதுப் பிரியர்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கும் மவ்லிதுப் பிரியர்கள்.

லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் எடுத்துரைக்கிறது. 

லைலத்துல் கத்ர் இரவுகளிலேயே மிகச் சிறப்பு மிக்கதாகும். அந்த இரவில்தான் அல்லாஹ் திருமறைக் குர்ஆனை அருளினான். அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அந்த அரவு பரக்கத் மிகுந்ததாகும். அந்த இரவில்தான் வானவர்கள் இறைவனின் ஆணைப்படி செயல் திட்டத்துடன் இறங்குகின்றனர். அந்த இரவு அமைதி நிறைந்த இரவாகும். 

அல்லாஹ் கூறுகிறான் : 

بسم الله الرحمن الرحيم
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5) سورة القدر

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
1. இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். 2. மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?  3. மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.  4. அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர்.  5. அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.
அல்குர்ஆன் அத்தியாயம் 97

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا حَضَرَ رَمَضَانُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَدْ جَاءَكُمْ رَمَضَانُ، شَهْرٌ مُبَارَكٌ، افْتَرَضَ اللهُ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ، فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا، فَقَدْ حُرِمَ "(رواه أحمد 7148)

இரமலான் மாதம் வந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மக்களே!) இரமலான் உங்களிடம் வந்துவிட்டது. அது பாக்கியம் நிறைந்த மாதமாகும். அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில்தான் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. அதில்தான் நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. அதில்தான் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அம்மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். அதனுடைய நன்மை யாருக்குத் தடுக்கப்படுகிறதோ அவர் (பெரும் பாக்கியங்கள்) தடுக்கப்பட்டவராவார். 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (7148)

லைலத்துல் கத்ர் இரவு பரக்கத் (பாக்கியம்) நிறைந்தது என்பதை பின்வரும் திருமறை வசனம் எடுத்துரைக்கிறது. 

وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (4) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (5) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (6)44
தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக!  பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம்.  அதில்தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது நமது ஆணைப்படியே (பிரிக்கப்படுகிறது.) நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். (இது) உமது இறைவனின் அருளாகும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன். 

(அல்குர்ஆன் 44 : 2 -6)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (رواه البخاري 2024)

(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

அறிவிப்பவர்  : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2024)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நபிமொழிகளும், திருமறை வசனங்களும் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை எடுத்துரைக்கிறது. அதற்கு நிகரான எந்த ஒரு இரவோ, நாளோ இல்லை என்பதை அந்த ஆதாரங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 

ஆனால் “திருஜனன விழா” என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத மீலாது அனாச்சாரங்களை மார்க்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள பரேலவிகள் அதை நியாயப்படுத்துவதற்காக அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக துணிந்து பொய்யுரைத்துள்ளனர். 

ஆம்! 

ஆயிரம் லைலத்துல் கத்ரு இரவை விட சிறந்தது நபிகளார் பிறந்த தினம் 

எனக்கு குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளனர். 

நபிகளார் எந்த நாளில் பிறந்தார்கள் என்பதற்கே உறுதியான எந்தச் சான்றும் இல்லை. 

வரலாற்று நூற்களில் பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக இடம் பெற்றுள்ளது. 

அவ்வாறு இருக்கையில் நபிகளாரின் பிறந்த தினம் ஆயிரம் லைலத்துல் கத்ரு இரவை விடச் சிறந்தது என்று இவர்களுக்கு அறிவித்தது யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வாழும் போது ஒரு நாள் கூட மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடியது கிடையாது.

நபிகள் நாயகத்தை உயிரினும் மேலாய் நேசித்த அருமை ஸஹாபாக்களும் இப்படி ஒரு தினத்தை கொண்டாடியது கிடையாது.

அவர்களெல்லாம் அறியாத ஒரு தினத்தையும் , சிறப்பையும் இந்த மவ்லிதுப் பிரியர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கும் இவர்கள் பின்வரும் இறைவசனங்களில் கூறப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனித்துப் பார்த்து, பாவமன்னிப்புக் கோரி தங்களை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் மிகப் பெரும் கேட்டைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

அல்லாஹ் கூறுகிறான். 

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (21)6

அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள். 
(அல்குர்ஆன் 6 : 21)

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أُولَئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ (18)11

அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட மிக அநியாயக்காரன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்பு நிறுத்தப்படுவார்கள். “தமது இறைவன்மீது பொய்யுரைத்தவர்கள் இவர்கள்தான்!” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள்மீது உள்ளது.
(அல்குர்ஆன் 11 : 18)

قَالَ لَهُمْ مُوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنِ افْتَرَى (61)20

“உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறாதீர்கள்! அவ்வாறு செய்தால் அவன் உங்களைத் துன்புறுத்தி அடியோடு அழித்து விடுவான். புனைந்து கூறுபவன் நஷ்டமடைந்து விட்டான்” என அவர்களிடம் மூஸா கூறினார்.
( அல்குர்ஆன் 20 : 61)

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْكَافِرِينَ (68)29

அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட, அல்லது தன்னிடம் உண்மை வந்தபோது அதைப் பொய்யெனக் கூறுபவனைவிட மிகவும் அநியாயக்காரன் யார்? இறைமறுப்பாளர்களுக்குரிய தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

(அல்குர்ஆன் 29 : 68)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் மீது  யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்''

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (3)

இது போன்ற வழிகேடுகளில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!

No comments:

Post a Comment